கால அட்டவணை

கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூன், 2011

வாழ்ந்தேன்......



 
வாழ்ந்தேன் வாழ்ந்தேன் என்கிறாய்

எப்படி வாழ்ந்தாய்....?

உனக்காக வாழ்ந்தாயா.......?

பிறர்க்காக வாழ்ந்தாயா.....?

பெற்றோருக்கு நல்ல பிள்ளையாய் இருந்தாயா....?

மனைவிக்கு நல்ல கணவனாய் இருந்தாயா....?

உன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் இருந்தாயா....?

நாட்டுக்கு நல்ல குடி மகனாய் இருந்தாயா.....?

உன் நாவை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாயா....?

இல்லைஎன்றால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை

ஆம் என்றால் அதை நீ கூற வேண்டியது இல்லை.

சனி, 4 ஜூன், 2011

திசை மாறும் காற்று



வாசனை திரவியம் பூசி

வலம் வந்த காலம்
அதற்கு பெயர் இறந்த காலம்

நோய் வாய் பட்டு படுக்கையில்
காலை கடனை கழிக்கும் நிலை
இதற்கு பெயர் நிகழ்காலம்

உடலை துணியில் சுற்றி
நிரந்தர உறக்கம் என்பார் மண்ணறையில்
அதற்கு பெயர் எதிர்காலம்

தவறான வழியில் திரவியம் தேடி
ஈன்று எடுத்த செல்வங்களுக்கு
அள்ளி கொடுத்தாயே

இன்றோ உன்னை
திரும்பி பார்க்க
நாதியில்லை உலகத்திலே

இவையெல்லாம் மறந்து நாம்
ஆடும் ஆட்டங்கள்
எக்காலத்திற்கும் பயன் அன்று.



செவ்வாய், 31 மே, 2011

புரட்சி



மக்கள் புரட்சி
மனிதனின் உரிமைக்காக

பணத்திற்காக அல்ல
நல்ல மனதிற்காக

பணத்தை அபகரிக்க
பிணத்தை குவிக்கும் கூட்டம்

தீய வழியில் சேர்த்தாய்
தீனி இடுகிறாய் நோய்க்கு

நன்மையை தேடு
நலம் பெறுவாய்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

பாவங்கள்!!!



கண்கள் பார்கின்றன!

செவிகள் கேட்கின்றன!

உயிர் பிரியவில்லை!

செய்த செயல்கள்

விழி திரையில்!

பாவத்தின் எண்ணிக்கை

கொஞ்சமா நஞ்சமா?

மன்னிப்பு வேண்டும்

மண்ணறைக்கு செல்லும் முன்!!!





திங்கள், 28 மார்ச், 2011

விளையாட்டு!



விளையாட்டு இன்று
விலை ஆயிற்று

காணும் கண்களும்
காசும் விரயம்

வெற்றி எனும் கனவும்
விதண்டாவாத வெறுப்பும்

சொன்னாலும் புரிவதில்லை
கேட்கும் நிலையில்லை

பலன் யாருக்கு........?
பணம் யாருக்கு......?



சனி, 26 மார்ச், 2011

சுனாமி

சில நிமிடங்கள்


சிதறுண்ட நகரம்

கோர பிடியில் மக்கள்

நினைத்தேன் குலை நடுங்கியது

பிறப்பிற்கும் இறப்பிற்கும்

இடம் கொடுத்தாய்

இன்றோ உயிருக்கும் உடமைக்கும்

உலை வைக்கின்றாய்

ஏன் இந்த சோதனை

ஏகனின் சோதனை!!!

 
 

திங்கள், 14 மார்ச், 2011

அழகு



வகை எத்தனை எத்தனை

அழகு சாதனம்

தேடி தேடி பிடித்தும்

தென்படவில்லை முகத்தின் மாற்றம்

வீண் அலைச்சலும்

பண விரயமும் தான் மிச்சம்

அகத்தின் அழகை

சரி செய்தால்

முகத்தின் அழகு கூடும்

காலம் கடந்தாலும்

சில கருத்துக்கள் கடப்பதில்லை




 

செவ்வாய், 1 மார்ச், 2011

யோசி நேசி

பலரை சிரிக்க வைக்க

சிலரை அவமதிக்கிறாய்

சில லட்சத்திற்காக

பல லட்சம் மனதை

வேதனைபடுத்துகிறாய்



உனக்கே இல்லை

வாரண்டி

நீ விற்கும்

பொருளுக்கு

எதற்கு வாரண்டி



வியாழன், 24 பிப்ரவரி, 2011

போட்டி

யாருக்கு போட்டி

எதற்கு இந்த போட்டி

ஏன் இந்த போட்டி



முத்தம் போட்டி.......ஆம்

காம கயவர்கள்

மனம் குளிர இந்த போட்டி



உலக அழகி போட்டி......ஆம்

உன்னவன் ரசிக்க வேண்டியதை

ஊரான் ரசிக்கின்றான்



இதற்கு பெயர் போட்டியா?

ஊரை கேட்டியா?

காறி உமிழ்வாள் உன் பாட்டி.




ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தேவை....

யாருக்கு இல்லை........தேவை


உன்ன உணவு தேவை

உடுத்த உடை தேவை

அருந்த நீர் தேவை

சுவாசிக்க காற்று தேவை

வாழ்க்கைக்கு துணை தேவை

பாசத்திற்கு பிள்ளை தேவை

அறிவுக்கு கல்வி தேவை

அமைதிக்கு கண்ணியம் தேவை

நாட்டை ஆள அறிவு தேவை

பிறரை நேசிக்க நல்ல மனம் தேவை

ஆசைக்கு பதவி தேவை

வியாதிக்கு பணம் தேவை

ஒட்டு மொத்தத்தில் நல்ல குணம் தேவை



புதன், 16 பிப்ரவரி, 2011

இல்லை.......இல்லை......?

இல்லை என்று

யாருக்கும் சொல்லவில்லை

என்கிறான் அவன்



அவனே கூறும் பொழுது

நாம் அப்படி

கூறலாமா என்ன?



அவன் நாடினால்

நிச்சயம் நடக்கும்

அதற்கு உரிய நேரத்தில்



மனிதா உன் பலமும்

உன் பலவீனமும்

இன்று பணமே...



மனம் என்னும்

வார்த்தை இன்று

காற்றில் கரைகிறது........



ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

தற்கொலை...​...?


ஏன் இந்த தற்கொலை

யாருக்காக இந்த தற்கொலை



எதற்காக இந்த தற்கொலை

இதனால் நீ சாதிக்க தான் முடியுமா?



உன் தற்கொலையை

பயன் படுத்தி சாதித்தவர்கள் யார்?



நீ பின்பற்றும் மார்க்கம்

உன்னை தற்கொலைக்கு அனுமதிக்கிறதா?



இந்த கொலை செயலை

செய்ய தூண்டியவர்கள் யார்?



இந்த செயலை

அவர்கள் செய்வார்களா?



இல்லை அவர்கள்

குடும்பத்தை செய்ய அனுமதிப்பார்களா?



உன்னை பயன்படுத்தி அவன்

கண்ட இலாபம் உனக்கு தெரியுமா?



இதற்கு பெயர் வீரமா?

இல்லை இல்லை இது கோழையின் செயல்



போராடு போராடு

நேர்மையான முறையில் போராடு



உன் உடலில் வலிமை

உள்ளவரை போராடு



வெற்றி நிச்சயம்! உன்

நேர்வழிக்கு வெற்றி நிச்சயம்!!



புதன், 2 பிப்ரவரி, 2011

கொடுக்கவில்லை....




மனிதா...


இறைவன் உனக்கு

எதை கொடுக்கவில்லை என்கிறாய்



இந்த உலகத்தையும் அதன்

வெளிச்சத்தையும் காண

இரண்டு கண்களை கொடுத்துள்ளான்



உன் தேவைகளை செய்துகொள்ள

பிறரின் தேவைக்கு உதவ

இரண்டு கைகளை கொடுத்துள்ளான்



உன் விருப்பம் போல்

இந்த உலகை வலம் வர

இரண்டு கால்களை கொடுத்துள்ளான்



பிறரை அன்பால் நேசிக்க

நல்ல மனதை

உன் வசம் கொடுத்துள்ளான்



ஒட்டு மொத்தத்தில்

உன் உடலில் நல்ல

ஆரோக்கியத்தை கொடுத்துள்ளான்



இதையெல்லாம் கொடுத்த

அவனுக்கு நீ

என்ன கொடுத்துள்ளாய்...?


என்னுடைய இந்த கவிதை தமிழ்குடும்பம்.காம் யில் பிரசுரமாகியுள்ளது  .

செவ்வாய், 25 ஜனவரி, 2011

சுயநலம்

கலை என்ற பெயரில்

கலாச்சார அழிவு

விளம்பரம் என்ற பெயரில்
பெண்களை போதை பொருள் ஆக்கி
பெண்ணினத்தை அவமதித்தல்

போட்டி என்ற பெயரில்
மனிதனின் வாழ்க்கையோடு
விளையாடி பார்த்தல்

புகழுக்காக தன்
மானத்தையும் இழக்க
தயங்காத கூட்டம்

பணத்திற்காக பகல்
வேஷம் இடும்
பகல் கொள்ளையர்

உனக்கும் உண்டு
ஒரு நாள் இறப்பு
மறந்து விடாதே.....



சனி, 15 ஜனவரி, 2011

மன உறுதி


கண்டேன் அவனை

சோகம் படிந்த முகம்

'விரக்தியான கண்கள்;

தளர்ந்த நடை;

ஒழுங்கில்லாத உடை;

வருந்துகின்ற தோற்றம்;

எதிலுமில்லை நாட்டம்;

கேட்டேன் அவனை

நோய் என்றான்

அவன் உடலிலா

இல்லை மனதிலா?

ஓ உடலை பாதித்தால்

அது மனதை பாதிக்குமோ

அதற்கு தான் மனதில்

உறுதி வேண்டும் என்றார்களோ.....








திங்கள், 10 ஜனவரி, 2011

அச்சம்............இல்லை .........

ஓ மனிதா....

உன் மனதில் சுத்தமில்லை

உன் செயலிலில் சுத்தமில்லை

உன் வார்த்தையில் சுத்தமில்லை

புகழ் மட்டும் வாழ்க்கையில்லை

புரிபவருக்கு அதில் இடமில்லை

ஆசைக்கு எல்லையில்லை

அதற்கு ஒரு விலையில்லை

சிந்தனைக்கு இடமில்லை

பிறர் மனதில் இடமில்லை

மனிதா இந்த நிலையற்ற உலகில்

உன் ஆணவத்திற்கு எல்லையில்லை

இன்னுமா நீ மாறவில்லை? -எனில்

உனக்கு மன(தில்) நிம்மதியில்லை!

உனக்கு மனதில் அமைதியில்லை!



திங்கள், 3 ஜனவரி, 2011

தென்றல்

என் சுவாச காற்றில்

இனம் புரியா ஓர் உணர்வு

ஆம் அந்நிய மண்ணை

என் பாதம் தொட்டு விட்டது

தாயகத்தின் தென்றலை

பாலைவனத்தில் காண்பது என்பது

கானல் நீர் தானே.


விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் மனத்தில் தோன்றியதை இங்கு உங்கள் முன் வைத்துள்ளேன்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

இதயம்

தலை முதல்

கால் வரை

உன் கட்டுபாட்டில்

சிறிது சிணுங்கினால்

உடல் துவண்டுவிடும்

உன் அசைவை

நிறுத்தினால் .......

உடல் சாம் ராஜ்ஜியம்

அழிந்து விடும்.



திருமணம்

இரு மனம்

இணைந்தால்.....

அது திரு மணம்

அதுவே வாழ்வின்

நறு மனம்

இதன் விளைவு

புது மனம்



திங்கள், 26 ஜூலை, 2010

ரமலான்

வருக... வருக...


ரமலானே.....



உன் வருகைக்காக

என் விழி முதல்

செவி வரை

காத்திருக்கின்றது



என் மனதை சுத்தம் செய்ய

என் நாவை கட்டுப்படுத்த

உன்னை விட்டால் வேறு

யாரும் கிடையாது எனக்கு



வருடம் ஒரு முறை

உன் வருகை

ஒட்டுமொத்த உள்ளத்தையும்

ஒளிரச் செய்கின்றாய்

ஞாயிறு, 20 ஜூன், 2010

மனமே....

மனம்........................ஓ


அது நீ........... தானோ

கவிதை என்ற பெயரில்

கனவுகளை உருவாக்கியதோ நீ தானோ

நீ வாசிகின்றாயா......இல்லை

பிறரை நேசிக்கின்றாயா...

கற்பனை உலகில் ஓங்கி நிற்கின்றாய்

கள்ளங் கபடமற்றவர்களையும்

கவி பாட வைக்கின்றாய்

கவிதை என்ற பெயரிலே

பலரை கவிழ வைத்திருகின்றாய் .

இவை எழுத காரணம் என் நண்பர்களின் தூண்டுகோல் பல கவி மான்களை கண்ட நாகூரில் பிறந்து விட்டு கவிதை என்ற பெயரில் ஏதாவது கிறுக்கு என்றார்கள் , கவி மான்களின் பெயரை கெடு என்கிறார்கள், இவற்றில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.