இது வெளிநாட்டில் பணியாற்றும் தமிழ் மக்களின் நலன் கருதி,
என் பணியின் அனுபவத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் ,மற்றும் நம்
இந்தியாவில் உள்ள வங்கிகளில் நடைபெறும் குற்றங்களையும்,
குறைபாடுகளையும்,உங்களுக்கு இந்த இடுக்கையின் மூலமாக
தெளிவுபடுத்துகிறேன்.
வங்கி கணக்கு
இன்று இந்தியாவில் உள்ள அணைத்து வங்கிகளும் வாடிக்கையாளரின் கணக்கு எண்(அக்கௌன்ட் நம்பர்)எண்ணிக்கையை அதிக படுத்தி உள்ளனர். வங்கி பெயர் கணக்கு எண்
இந்தியன் பேங்க் 9
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 15
கனரா பேங்க் 13
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 11
ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் 11
ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் 11
கரூர் வைசியா பேங்க் 16
ஐ சி ஐ சி ஐ பேங்க் 12
சிட்டி பேங்க் 10
எச் டி எப் சி பேங்க் 14
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 10
யூனியன் பேங்க் ஆப் இந்தியா 15
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா 13
பேங்க் ஆப் பரோடா 14
பேங்க் ஆப் இந்தியா 15
விஜயா பேங்க் 15
யூ கோ பேங்க் 14
சிட்டி யூனியன் பேங்க் 17
தீனா பேங்க் 16
தமிழ்நாடு மெர்கண்டெயில் பேங்க் 15
(இதில் குறிப்பிடபடாத வங்கிகளின் விபரம் , கருத்துரையின் வாயிலாக கேட்பவர்களுக்கு விபரம் கொடுக்கப்படும்.)
வெளி நாட்டில் பணிபுரிபவர்களின் கவனத்திற்கு...
1 . நீங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பும் பணம் ,உங்கள் வங்கியில் சரியாக வரவு வைக்கபடுகிறதா என்று கவனம் செலுத்துங்கள்.
2 . மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்கள் வங்கியில் இருந்து பற்று வரவு பதிவை (statement )கேட்டு பெறுங்கள்.
3 .உங்களிடம் பற்று அட்டை (டெபிட் கார்டு ),வரவு அட்டை (கிரெடிட் கார்டு) உள்ளனவா? அவற்றை அந்நியரிடம் கொடுத்து உபயோகிக்காதீர்கள்.
4 .உங்கள் வங்கி கணக்கு பற்றிய சந்தேகங்களை வங்கி அதிகாரிகளிடம்
மட்டுமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
குறைபாடுகளும் குற்றங்களும்
வங்கியில் பணியாற்றும் பெருபான்மையான ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் கூறுவதில்லை.
அனைத்து வங்கிகளிலும் கணக்கு (அக்கௌன்ட்) இலக்கம் மாற்றப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும், பெருபான்மையான வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கபடவில்லை.
பற்று அட்டை (டெபிட் கார்டு) முறை புழக்கத்தில் வந்து நீண்ட நாட்கள் ஆகியும் சில வாடிக்கையளர்களுக்கு கேட்டும் கொடுக்க படாமல் இழுபறி செய்கின்றனர்.
கடன் வசதி முறையை அரசாங்கம் அறிவித்தாலும், அவற்றை சில வங்கிகள் கண்டும் காணததுமாக இருக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன் ஊடகங்கள் வாயிலாக வந்த செய்திகளை பார்த்து இருப்பீர்கள், வங்கி உழியர்களே வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை கையாடல் செய்து இருப்பது,
கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில் நுட்பம் நல்ல விசயக்களுக்கும் மட்டும் அல்லாமல், தவறான விசயங்களுக்கும் பயன் படுத்த படுகிறது. இது போன்று வெளியில் வராத விஷயங்கள் ஏராளம்.
என் அருமை சகோதரர்களே நீங்கள் பாலைவன நாட்டில் வந்து
உங்கள் உறவுகளை பிரிந்து, வியர்வையை சிந்தி உழைத்த உழைப்பு, கயவர்களால் களவாட பட்டு விட கூடாது என்பதே இந்த
இடுக்கையின் நோக்கம்.
கவி.........தை
இது ஒரு பாசத்தின் வெளிபாடு மட்டும் அல்ல
இது உங்கள் மீதான நேசத்தின் வெளிபாடு.
கடி ஜோக்ஸ்
வாடிக்கையாளர் : சார்... நாகூர் மீரான் க்கு செங்கோட்டைக்கு பணம் அனுப்பனும்.
வங்கி ஊழியர் : நாகூர் மீரானுக்கு ஏன் செங்கோட்டைக்கு அனுப்பனும், என்னிடம் கொடுத்து விடுங்கள் நானும் நாகூர் தான்.
வாடிக்கையாளர் : சார்.... மணி என்கிற பெயருக்கு பணம் அனுப்பனும்.
வங்கி ஊழியர் : அவரே மணி அவருக்கு ஏன் மணி.



