கால அட்டவணை

அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 டிசம்பர், 2010

தோல் (LEATHER )

இன்று இந்தியாவில் ஏற்றுமதி தொழிலில் முக்கிய பங்கு, தோல் வியாபாரத்திற்கு உண்டு.

     இந்தியாவில் தயாரிக்கப்படும் தோல் பொருள்கள், ஐரோப்பா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

பொருள்கள் தயாரிப்பதற்கு தோல் எவ்வாறு பதனிடப்படுகின்றது என்று பார்ப்போம்.

தோல்கள் - இவை மூன்று வகைகளாக பிரிக்கலாம் .

1. மாட்டு தோல்

2. ஆட்டு தோல்

3. எருமை தோல்

அதிகமாக பொருள் தயாரிக்க பயன்படுவது மாட்டு தோலும் ஆட்டு தோலும் தான் .

பச்சை தோல்(RAW )

     இறைச்சி கடைகளில் இருந்து பெறப்படும் இந்த தோலை சிறு வியாபாரிகள் முதலில் உப்பிட்டு பதனிடுகிறார்கள். அதன் பின் அவற்றை மொத்த வியாபாரிகளிடம் விற்று விடுகிறார்கள்.

மாட்டு தோல் பதனிடுவதற்கு ஈரோட்டுக்கும், ஆட்டு தோல் பதனிடுவதற்கு வாணியம்பாடி, ஆம்பூர், ராணிபேட்டை போன்ற ஊர்களுக்கும், மொத்த வியாபாரிகள் எடுத்து செல்கிறார்கள்.

பதனிடும் முறை :

     முதலில் இரண்டு நாள் பெரிய தொட்டியில் ஊற வைத்து அவற்றில் உள்ள உப்புகளை அகற்றுவார்கள்.

     பிறகு மேனியில் உள்ள முடிகளையும் மற்றும் ஜவ்வுகளையும் அகற்றுவதருக்கு சில கெமிகல்களை தொட்டி (யி) ல் போட்டு மீண்டும் ஊற வைப்பார்கள்.


       நன்கு ஊறிய பிறகு அவற்றின் மீது உள்ள முடிகளையும் உள் பகுதியில் உள்ள ஜவ்வுகளையும், கட்டையின் மீது சாய்த்து வைத்து பெரிய கத்திகளால் அகற்றுவார்கள். அதன் பின் தோலை நன்கு கழுவி விட்டு. பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட டிரம்மில் போட்டு அவற்றில் கெமிக்கல் போடப்பட்டு சில மணி நேரம் அவற்றை சுற்ற விடுவார்கள். பிறகு கெமிக்கல் போடப்பட்ட தண்ணிரை அகற்றி விட்டு, டிரம்மில் தண்ணீர் மட்டும் செலுத்தி கழுவுவார்கள்.



     பிறகு அந்த தோலை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து தண்ணீர் வடிய வைப்பார்கள்.

     நான்கு நாட்களுக்கு பிறகு அவற்றை வகை பிரிப்பார்கள். இதற்கு வெட் ப்ளூ என்று கூறுவார்கள்.

வகைகள்

ஓன்று

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

ஆறு

என்று வகை படுத்துவார்கள். அவற்றில் ஓன்று, இரண்டு மற்றும் மூன்று வகைகள் சதுர அடி நல்ல விலைக்கு விற்கப்படும். நான்கு, ஐந்து மற்றும் ஆறு சதுர அடி குறைவான விலைக்கு விற்கப்படும்.

      இதன் பின் பொருள் தயாரிக்கும் நிறுவனம் அவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் அவற்றிற்கு கலர் ஏற்றுவார்கள், அந்த கலர் ஏற்றுவதற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட டிரம் பயன்படுத்துவார்கள். மேனியில் கலர் ஸ்ப்ரே மூலம் பெய்ண்ட் ஏற்றுவார்கள் .

     தோல் கோட்டுகள் தயாரிப்பதற்கு அதற்கு ஏற்றார் போல் மாற்றுவார்கள். ஷூ தயாரிப்பதற்கு அதற்கு ஏற்றார் போல் மாற்றுவார்கள்.




     இதற்கு என்று தயாரிக்கப்பட்ட இயந்திரங்களும் உண்டு. இதுவரை தோல் பொருள்கள் செய்வதற்கு எவ்வாறு பதப்படுத்த படுகிறது என்று பார்த்தோம். பொருள்கள் எவ்வாறு தயாரிக்கபடுகின்றது என்பதை பிறகு காணலாம்.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வருகையும் செய்தியும்

இனிய நண்பர்களே மற்றும் சகோதர சகோதரிகளே,

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக,

     விடுமுறை கழிந்தது, பணிக்கு திரும்பி விட்டேன். ஆனால் தாயகத்தின் தாக்கம் நெஞ்சில் தவிர்க்க முடியாத ஓன்று. நாட்டில் ஒவ்வொரு இந்தியனும் நான் வளர்ந்து உள்ளேன், நம் நாடு வளர்ந்து உள்ளது, என்கின்ற பெருமை அனைவரின் முகத்திலும்
தெரிகின்றது. இதை விட என்ன சந்தோசம் வேண்டும். அந்நிய நாட்டில் பணியாற்றும் அனைவரும் அடிகடி தாயகம் சென்று வாருங்கள். ஏன் சொல்லுகின்றேன் என்றால், தாயகத்தின் வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் வேகமாக உள்ளது. நம் ஊரிலேயே நம்மை யார் என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்கின்ற நிலை வரும் முன் காப்போம். அவை என்றும் நம் நாடு அனைவரும் நம் மக்கள். உலகமே பணம் இருந்தால் பாசம் உண்டு என்கின்ற நிலையில் சென்று கொண்டு இருக்கும் பொழுது, நம் நாடு மற்றும் விதி விலக்கா என்ன?. நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அதி வேகமாக செல்கிறார்கள்,அதில் பெரும்பான்மையானவர்கள் இளைய தலைமுறை.

பிள்ளைகள் விசயத்தில் பெரும் கவனம் செலுத்த கடமை பட்டுள்ளோம்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

எனக்கு பிடித்த ஆசிரியர்


     கல்வி இன்று பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது. எதற்கு எடுத்தாலும் பணம் ,கேள்வி கேட்டால் அதற்கு ஒரு மழுப்பல் , மீறி கேட்டால் அடுத்து வரும் பதில் ,உங்கள் பிள்ளைக்கு வேறு பள்ளியை பார்த்து கொள்ளுங்கள். ஒரு பிள்ளைக்கு கண்ணியத்தையும் கலாச்சாரத்தையும் நேர்மையையும்
ஊட்டக்கூடிய இடம் தான் பள்ளி கூடம்.
   
      ஆனால் இந்த பள்ளியில் சேர்ப்பதற்கு நன்கொடை என்ற பெயரிலே சில கையூட்டல்களை பெற்று கொண்டு தான், சேர்ப்பதற்கு அனுமதிக்கிறார்கள். இப்படி ஆரம்பிக்கும் கல்வி நம் பிள்ளைகளை எங்கு கொண்டு போய் நிறுத்தும்?.

     இது போன்ற குற்றங்களை சுட்டி காட்டும் நேரத்தில் , சில நல்ல உள்ளங்களையும் அவர்கள் கல்விக்காக ஆற்றி பணிகளையும் சுட்டி காட்ட கடமை பட்டுள்ளோம்.

     எனது ஆசிரியரும், பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற கலிபா சாஹிப் B.Sc., B.Ed., அவர்களை பற்றி அவர்களின் உதவி செய்யும் நல்ல எண்ணத்தையும் சிலவற்றை இங்கு கூற ஆசைப்படுகிறேன்.

     என்றும் சிரித்த முகம், நடந்தால் ராஜ நடை ,பேச்சில் கனிவு கலந்த கம்பீரம் இப்படிப்பட்டவர் தான் என் ஆசிரியர்.

     அவர் மாணவர்களை ஊக்குவிப்பதோ ஒரு தனி கலை என்றே கூற வேண்டும். ஒவ்வொரு மாணவனையும் பள்ளி உள்ளே மட்டுமின்றி வெளியிலும் கண்காணிப்பதில் அவரை மிஞ்ச முடியாது.

     அவர் தேசிய மேல் நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய பொழுது , அவரிடம் டியுசன் படித்த மாணவர்கள் ஏராளம் ,அந்த மாணவர்களில் வசதி அற்ற மாணவர்களுக்கு இலவசமாக கற்று கொடுத்தார். பாடம் நடத்தும் பொழுது சில சிறிய கதைகளை கூறி,மாணவர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து நன்கு புரியும் வண்ணம் பாடம் நடத்துவதில் கைத்தேர்ந்தவர்.

     யாருடைய மனமும் புண்படாவண்ணம் பேசுவதில் தனி திறமை என்றே சொல்ல வேண்டும். ஒரு பள்ளியை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

    எழுத்தாளர் தூயவன் அவருடைய நண்பர். தூயவனை பற்றி அவர் எங்களிடம் நிறைய கூறியுள்ளார். மாணவர்களை ஊக்குவிப்பதில் தனி கவனம் செலுத்துவார்.

     யாரிடமும் பிரதி பலன் எதிபார்க்க மாட்டார். உதவி செய் பலனை எதிபார்க்காதே என்ற பழமொழியை பின்பற்றியுள்ளார் என்றே கூறுவேன். மற்ற பள்ளியில் படிக்கும், அவருக்கு தெரிந்த மாணவர்களையும் அழைத்து அவர்களின் படிப்பு பற்றி விசாரிப்பார்.


    என் குடும்பத்தை சவுதி அரேபியா அழைத்து வர முயற்சி தொடங்கிய பொழுது,என்னுடைய மகனை தம்மாமில் உள்ள இந்தியர்களுக்கான பள்ளியில் சேர்ப்பதற்கு இந்தி தெரியாத சூழ்நிலையில் , என் மகனுக்காக அவரை அணுகி, சூழ்நிலையை விளக்கிய பொழுது,அவர் ஒரு இந்தி ஆசிரியரை அறிமுகம் செய்து வைத்து, ஒரே மாதத்தில் இந்தி உடைய பேசிக்கை கற்று கொள்ள உதவினார். எனக்கு முன்பாக அவரிடம் படித்த மாணவர்கள் எண்ணில் அடங்காது.

    மற்ற மாணவர்கள் யாரும் அவரை பற்றி எழுதி உள்ளார்களா என்று தெரியாது. எனக்கு மட்டும் அல்ல அவர் என் சகோதரர்களுக்கும் ஆசிரியர். அவருடைய நல்ல எண்ணங்களுக்கும் ,செயல்களுக்கும் இறைவன் அவருக்கு நற்கூலியை கொடுப்பானாக.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

கப்பல்

    இதை படிப்பதற்கு முன் இதற்கு முன் இடுக்கையை  துறைமுகம் படித்து விட்டு படித்தால் நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

தூரத்தில் நிற்கின்ற கப்பல்களையும் மற்றும் போட்டோவிலும் கண்டுகளித்த உங்களுக்கு அவற்றை பற்றி சிறிது விளக்க
கடமை பட்டுள்ளேன்.

வகைகள்

கப்பல்களை இரண்டு வகைகளாக பிரிக்கின்றார்கள்.

1 . பயணிகள் கப்பல்


இவை பயணிகள் மற்றும் அவர்களின் பொருள்களை மட்டுமே
ஏற்றி செல்ல கூடியது.

இவற்றில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும்.
மருத்துவர் முதல் நீச்சல் குளம் வரை அமைக்கப்பட்டு இருக்கும்.
அவசர தேவைக்கு ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கும் தளம் அமைக்கப்பட்டு இருக்கும்.

2 . கார்கோ கப்பல்

இவை இரண்டு வகைகளாக பிரிக்கின்றார்கள்.

1 . ஓன்று LO LO கப்பல் (LOAD ON ) என்று அழைக்கப்படும்.



இந்த கப்பலில் இரண்டு மூன்று கிரேன் வசதிகள். கொண்டது ,இந்த கிரேனின் வேலை, கப்பலில் உள்ள பொருள்களை வெளியில் எடுப்பதற்கும் , வெளியில் உள்ள பொருள்களை உள்

அடுக்குவதற்கும் பயன் படுத்தபடுகின்றது.

இந்த வகை கப்பலில் மேல் பகுதியில் மூடி திறக்கப்பட்டு ,அதன் வாயிலாக தான்
பொருள்களை ஏற்றவும் இறக்கவும் முடியும்.

2 . மற்றொண்டு RO RO கப்பல் (ROLL ON ) என்று அழைக்கப்படும்.

இந்த கப்பல் இரண்டு வகை படும் ,ஓன்று கார் கேரியர், மற்றொன்று

கண்டெய்னர் கேரியர்.

கண்டெய்னர் கேரியர்











 
 
 
 
 
 
 
 
 
இந்த கப்பலில் பெரிய வகை ரேம்ப்(இரும்பினால் அமைக்கப்பட்டு கப்பலோடு பொருத்தப்பட்டு,இருக்கும்) இருக்கும்.


இது ஹைட்ராலிக் உதவியுடன் இயக்கப்படுகின்றது.

இந்த ரேம்பின் வழியாக கப்பலின் உள்ளே ட்ரைலர்(கண்டைனர் ஏற்றும் வாகனம்) முதல் பெரிய போர்க் லிப்ட் வரை உள்ளே சென்று வரும். இந்த ரேம்பின் வழியாக தான் கண்டைனர்கள் ஏற்றும் இறக்கும் பணி நடைபெறும்.

கார் கேரியர்

இந்த கப்பல் பாக்ஸ் வடிவத்தில் காட்சி அளிக்கும். ஒரே நேரத்தில் 3000 கார்களை ஏற்றி செல்லும் வசதி உடையது.








 
 
 
 
 
 
 
 
இன்னும் பல கப்பல் தேவைக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கபட்டுள்ளது. அவற்றை கீழே காணலாம்.
 
குளிர் சாதனம் பொருத்தப்பட்ட கப்பல் (REEFER கப்பல்)
 
 
இந்த கப்பலில் பழங்கள் ஆட்டுக்கறி மாட்டுக்கறி கோழிகறி மற்றும் பதபடுத்தபட்ட உணவு பொருள்கள் அனைத்தும் இந்த கப்பலில் கொண்டு வரப்படும்.

ஆட்டு கப்பல்






ஆடுகளை மட்டும் ஏற்றும் வசதி உடையது, இதில் வேறு எந்த பொருளும் ஏற்ற முடியாது.
 
 
 
 
 
 
 
 
 
 
பல்க்( BULK) கப்பல்
 
இந்த கப்பலில் கோதுமை அரிசி பார்லி போன்றவற்றை மொத்தமாக எடுத்து வந்து
மெஷின் மூலம் உறிஞ்சி வெளியில் எடுத்து விடுவார்கள்.
 
 
 
 
 
TANKER கப்பல்
 
இந்த கப்பல் ஆயில் மற்றும் தண்ணீர் எடுத்து செல்ல பயன்படுகின்றது.





 
 
 
போர்க் கப்பல்
 
 
 
 
 
 
 
 
 
 
கடல் வழியாக வரும் எதிரிகளை தாக்குவதற்கு என்று உருவாக்கப்பட்டது, ஆனால் இன்றோ மனித சமுதாயத்தை அழிக்கும் பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 
நீர் மூழ்கி கப்பல்
 
 

அந்நிய நாட்டு போர் கப்பலை தண்ணீரில் மறைந்து சென்று
தாக்குவதற்கு உருவாக்கப்பட்டது. இது அந்த பணியை தான்
செய்கின்றதா என்பது படைத்தவனுக்கு மட்டும் தான் தெரியும்.

வியாழன், 29 ஜூலை, 2010

துறைமுகம்

  ஆம் ஒரு நாட்டின் தொழில் துறையில் முக்கிய
 பங்கு வகிக்கும் தளம்.

     இந்த துறைமுகத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய என் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
அடைகின்றேன்.

எங்கள் ஊர் கடற்கரையில் நின்று கொன்று, நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வெளியில் நடுகடலில் நிற்கும் கப்பல்களை மட்டுமே பார்த்து ரசித்த எனக்கு, ஜித்தா துறைமுகத்தில்
வேலை கிடைத்த பொழுது, துறைமுக வேலை புதியதாகவும்
ஆர்வமாகவும் இருந்தது.

ஜித்தா துறைமுகத்தை,சிறிது உங்களுக்கு ஓர் அறிமுகம் செய்கின்றேன்.

இதன் முழு பெயர் ஜித்தா இஸ்லாமிக் போர்ட், இங்கு ஒரே நேரத்தில் 58 கப்பல்களை நிறுத்தும் வசதி உள்ளது.

சாதாரண கிளார்க் ஆக என் பணியை தொடங்கி,சீனியர் சூப்பர்வைசர் ஆக என் பணியை நிறைவு செய்தேன்.

பல அனுபவங்கள் ஒவ்வொன்றும் என் வளர்ச்சிக்கு
துணையாக இருந்தது.

ஒரு கப்பல் ஒரு நாட்டின் கடல் எல்லையை தொட்டவுடன், அதன் கேப்டன் அவர் செல்ல இருக்கும் துறைமுகத்தின் கண்ட்ரோல் அதிகாரியை தொடர்பு கொள்வார். அந்த நிமிடத்திலேயே அந்த கப்பல் எங்கிருந்து வருகிறது.அவை ஏற்றி வரும் பொருட்கள் என்ன என்பது போன்ற விவரங்கள் அனைத்து பெற்று விடுவார்கள்.
துறைமுகத்துக்கு 4 கிலோ மீட்டர் முன்பாக வந்தவுடன் அங்கு நிறுத்தப்பட்டு, துறைமுகத்தில் இருந்து டெக்போட் என்று அழைக்கப்படும் சிறிய படகுகள், அதி நவீன மோட்டார்களை கொண்டது,அவை சென்று அந்த கப்பலை அழைத்து வரும்,அதனுடன் துறைமுகத்தை சேர்ந்த பைலட்டும் இருப்பார். அதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள
இடத்தில் அந்த கப்பல் கொண்டு வந்து கட்டப்படும்.

ஆனால் அதற்கு முன்பாகவே அந்த கப்பலுக்கு உரிய ஏஜென்ட் அந்த கப்பலில் வரும் பொருள்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை
கப்பல் வருவதற்கு சில தினத்திற்கு முன்பாகவே சமர்பித்து விடுவார்கள்.

அந்த பட்டியலில் குறிப்பிடபட்டுள்ள பொருள்களை மட்டுமே அந்த துறைமுகத்தில் இறக்க அனுமதிக்கப்படும்.

இந்த விசயத்தில் UAE மற்றும் சவுதி போன்ற நாடுகளிடம் பல நவீன கருவிகள் நிறைய உள்ளது.

இவர்களால் குறிப்பிட்ட மணிகணக்கிலேயே பொருள்களை இறக்கவும் ஏற்றவும் இவர்களால் முடிகின்றது.

அதிகமான கார்களை இறக்குமதி செய்யும் நாட்டில் முன்னிலை வகிப்பது சவுதி அரேபியா மட்டுமே. ஜப்பான் கொரியா போன்ற நாடுகள் உற்பத்தி செய்யும் கார்கள். வளைகுடாவை
நம்பியே இருக்கின்றன.

தான் வந்த வேலை முடிந்தவுடன் அந்த துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற அனுமதி பெறவேண்டும்.

நம் பார்வைக்கு ஒரு கப்பல் இன்னொரு நாட்டின் உள்ளே வந்து செல்வது இலகுவாக தெரியும் , அவற்றில் எராளமான விஷயங்கள் இருக்கிறது.

என்னோடு பணியாற்றிய சகோதரர்களையும் கூற ஆசைபடுகின்றேன்.Mr. மணிகண்டன் நான் ஏற்றுமதி துறையில் கிளார்க் ஆக பணியாற்றும்
பொழுது என்னுடைய சூப்பர்வைசர் ஆக இருந்தவர் . வேலைகளை சொல்லி கொடுப்பதில் அருமையான குணம்.

சேப்டி அதிகாரி Mr.கவுஸ் மரைக்கார் நல்ல மனிதர் எந்தவித நெருக்கடிகளையும் சிரித்தே சமாளித்துவிடுவார்.

ஆப்ரேசன் செக்சன் இதனுடைய கண்ட்ரோலர் Mr.ஹமீது அன்வர் நல்ல மனிதர், வேளையில் தவறு செய்தால் அதை அவரிடம் மறைக்காமல் கூறவேண்டும் ,மறைத்தால் அவருக்கு
பிடிக்காது. அவரின் கீழ் பணி யாற்றியவர்கள் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு, அவரின் வழிகாட்டியே காரணம்.

எனக்கு பல்வேறு வகையிலும் என் வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர் இந்த ஹமீது அன்வர் அவர்கள் தான். பணியில் நேர்மையை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதில்

கவனம் செலுத்துவதில் இவரை மிஞ்ச முடியாது.

இன்னும் சில நண்பர்கள் Mr.ஹபீப் ரஹ்மான் மற்றும் Mr.ரவி இவர்களும் என்னோடு பணியாற்றிய நண்பர்கள் பலர்.

இன்றோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைகளில் இருகின்றோம்

இந்த துறைமுகத்தில் நான்ஆற்றிய பணி எனக்கு பல்வேறு சந்தர்பங்களிலும் உறுதுணையாகவே இருந்து வருகின்றது.

வெள்ளி, 23 ஜூலை, 2010

நினைவுகள்



     நாகப்பட்டினத்தில் உள்ள C S I மேல் நிலை பள்ளியில் +2 படித்து கொண்டிருந்த சமயம்,
N S S (நாட்டு நல பனி திட்டம்) பத்து நாள் கேம்ப் போயிருந்த பொழுது, எங்கள் பள்ளி


“குறிச்சி” என்ற கிராமத்தை தத்து எடுத்து, அங்கு உள்ள தெருக்களில் கன்றுகள் நடுவது, குளம் கோயில் பள்ளிகூடம்

போன்றவற்றை சுத்தம் செய்வதாக திட்டம்.

மாலை நேரங்களில் வீடு வீடாக சென்று, போஸ்ட் ஆபீசில்

சேவிங் கணக்கு எவ்வாறு தொடங்குவது என்பதை
விளக்கி அவர்களுக்கு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அவர்களை உற்சாகப் படுத்தினோம்.

அந்த மக்களோடு கலந்து பழகிய போது தான், அவர்களில் படிக்காத மேதைகள் பலரை கண்டேன்.



நான் படித்தவன் நான் நகர வாசிஎன்ற "மேதை" கள் மத்தியில் இவர்கள் படிக்காத மேதைகளாகவே

தெரிந்தார்கள்.

ஒரு நாள் அங்கு உள்ள குளத்தில் நான் குளிக்கும் போது, என் காலில் ஆழமான வெட்டு காயம் ஏற்பட்டு ரொம்ப கஷ்டமாகி விட்டது.

அந்த கிராமத்தில் டாக்டர்கள் யாரும் கிடையாது.

ஒரு பெரியவர் என்னை அவர் வீட்டிற்கு அழைத்து சென்று, காய்ந்த முந்திரிகொட்டையை இரண்டாக உடைத்து ,அதில் ஒரு பாதியை கிளிப்பால் பிடித்து விளக்கில் காட்டி சூடு படுத்தி,

அந்த பாதி மூடியில் திரண்டு வந்த திரவத்தை என் காலில் உள்ள வெட்டு காயத்தில் ஊற்றினார். சில நிமிடங்கள் வலித்தது.

காலையில் எழுந்து என் கால்களை நோக்கினேன். வலி எல்லாம் பறந்து
போய் விட்டது. மனதில் மிக்க சந்தோசம்.

மீண்டும் அந்த பெரியவரை தேடி சென்று என் நன்றியை கூறி விட்டு வந்தேன்.

வெள்ளை மனம் படைத்த அது போன்ற மனிதர்கள் ஏராளம்.

அவர்கள் மத்தியில் நாம் எங்கே? அவற்றைப் பற்றி நாம் இங்கே சிறிது சிந்திக்க கடமை பட்டு உள்ளோம்.

திங்கள், 5 ஜூலை, 2010

ரயில் நிலையம்

        ரயில் நிலையம் என்றவுடன் எல்லாருக்கும் ரயில் பயணம் பற்றி தான் நினைவுக்கு வரும்.  
எனது பள்ளி விடுமுறை நாட்களில்,காலை ஒரு 7 மணிக்கு ரயில் நிலையத்திற்கு புத்தகத்தோடு செல்வேன். ரயில் நிலையத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் பழக்கமான ஆட்களாக இருப்பதால், அங்கு அமர்ந்து படிக்க எந்த தொந்தரவும் இருக்காது.





இப்படி அடிகடி ரயில் நிலையம் செல்லும் பழக்கம் அதிகமானது.


அங்கு பல நண்பர்கள்களின் பழக்கமும் கிடைத்தது. என் ஊர் சுற்றுலா தளமாக இருந்ததால், இங்கு கேரளா ஆந்திரா கர்நாடக போன்ற மாநில மக்கள் நிறைய பேர் வருவார்கள்.





     நாகூரில் இருந்து சென்னை பெங்களூர் கொல்லம் போன்ற ஊர்களுக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து உண்டு. ரயில் நிலைய கட்டிடங்கள் பழமையானதாகவே இருந்தது.


மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரயில்வே மந்திரியாக ஜாபர் ஷரிப் பதவி ஏற்றார்.

ரயில் நிலையத்திற்கும் ஒரு விடிவு காலம் பிறந்தது. அழகிய கட்டிட கலையுடன் கூடிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.


அது என் பள்ளி பருவம்

பல்வேறு மொழி பல கலாச்சாரம் இப்படி பல மக்கள் வந்து போகிறார்கள். சிலர் முகத்தை பார்க்கும் பொழுது கவலை தெரியும் ,சிலர் நடையிலேயே அவர் மனதில் உள்ள பாரம் தெரியும்.

     அந்த நேரத்திலேயே மனதில் தோன்றும் எழுத வேண்டும். வெளிவுலகிற்கு தெரிய வேண்டும். சுயநலமே வாழ்க்கையாக கொண்டு வாழ்பவர்களுக்கு, மத்தியில் எவ்வளவு மனிதர்கள் பிரச்சினையோடு வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அப்படி நினைத்து எழுதி எழுதி கிழித்த என் பள்ளி நோட்டுகள் ஏராளம்.
அங்கு அமர்ந்து இருக்கும் பொழுது மனத்திரையில் எத்தனையோ
கதை கவிதைகள் திரையிடும். அவற்றை எழுத்தால்
வடிக்க நினைத்து தோல்வி கண்டு உள்ளேன்.

     என் பள்ளி நாளில் அது எனக்கு ஒரு அமைதி
பூங்காவாக காட்சி அளித்தது.விடுமுறையில் தாயகத்திற்கு என் குடும்பத்துடன் சென்று இருந்தேன்.
அப்படியெல்லாம் அனுபவித்த அந்த ரயில் நிலையத்திற்கு,

     என் பிள்ளைகளோடு சென்று வந்தேன். என் கண்களால் நம்ப முடியவில்லை பாழடைந்த கட்டிடமாக காட்சி அளித்தது. பிராட்கேஜ் போடும் வேலை நடப்பதாகவும் ஆதலால் மூடப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். கனத்த மனத்துடன் வெளியில் வந்தேன்.