வெள்ளி, 23 ஜூலை, 2010
நினைவுகள்
நாகப்பட்டினத்தில் உள்ள C S I மேல் நிலை பள்ளியில் +2 படித்து கொண்டிருந்த சமயம்,
N S S (நாட்டு நல பனி திட்டம்) பத்து நாள் கேம்ப் போயிருந்த பொழுது, எங்கள் பள்ளி
“குறிச்சி” என்ற கிராமத்தை தத்து எடுத்து, அங்கு உள்ள தெருக்களில் கன்றுகள் நடுவது, குளம் கோயில் பள்ளிகூடம்
போன்றவற்றை சுத்தம் செய்வதாக திட்டம்.
மாலை நேரங்களில் வீடு வீடாக சென்று, போஸ்ட் ஆபீசில்
சேவிங் கணக்கு எவ்வாறு தொடங்குவது என்பதை
விளக்கி அவர்களுக்கு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அவர்களை உற்சாகப் படுத்தினோம்.
அந்த மக்களோடு கலந்து பழகிய போது தான், அவர்களில் படிக்காத மேதைகள் பலரை கண்டேன்.
நான் படித்தவன் நான் நகர வாசிஎன்ற "மேதை" கள் மத்தியில் இவர்கள் படிக்காத மேதைகளாகவே
தெரிந்தார்கள்.
ஒரு நாள் அங்கு உள்ள குளத்தில் நான் குளிக்கும் போது, என் காலில் ஆழமான வெட்டு காயம் ஏற்பட்டு ரொம்ப கஷ்டமாகி விட்டது.
அந்த கிராமத்தில் டாக்டர்கள் யாரும் கிடையாது.
ஒரு பெரியவர் என்னை அவர் வீட்டிற்கு அழைத்து சென்று, காய்ந்த முந்திரிகொட்டையை இரண்டாக உடைத்து ,அதில் ஒரு பாதியை கிளிப்பால் பிடித்து விளக்கில் காட்டி சூடு படுத்தி,
அந்த பாதி மூடியில் திரண்டு வந்த திரவத்தை என் காலில் உள்ள வெட்டு காயத்தில் ஊற்றினார். சில நிமிடங்கள் வலித்தது.
காலையில் எழுந்து என் கால்களை நோக்கினேன். வலி எல்லாம் பறந்து
போய் விட்டது. மனதில் மிக்க சந்தோசம்.
மீண்டும் அந்த பெரியவரை தேடி சென்று என் நன்றியை கூறி விட்டு வந்தேன்.
வெள்ளை மனம் படைத்த அது போன்ற மனிதர்கள் ஏராளம்.
அவர்கள் மத்தியில் நாம் எங்கே? அவற்றைப் பற்றி நாம் இங்கே சிறிது சிந்திக்க கடமை பட்டு உள்ளோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
20 கருத்துகள்:
நான் தான் 1st,, எனக்கு தான் வடை சட்னி டீ.. இன்னும் என்னா? இருங்க படிச்சிட்டு வந்து...
அந்த மருத்துவ முறை எங்கள் ஊரிலும் பார்த்திருக்கிறேன்... ஆனால் நவீன மருத்துவ முறையில் அது தவறு என்று சொல்கிறார்கள்.... சரியாக தெரியவில்லை.. யாராவது விளக்கினால் நல்லா இருக்கும்... பகிர்விற்கு நன்றி நண்பரே..
எம் அப்துல் காதர் கூறியது
வாங்க பாஸ் சும்மா இருந்த என்னை எழுத வச்சதே நீங்க தான். உங்களுக்கு இல்லாமே எப்படி பாஸ், எல்லாம் உங்களுக்கு தான்
பாஸ் .
நாடோடி கூறியது...
வாங்க ஸ்டீபன், நீங்கள் சொல்வது சரி தான். சில விசயங்களில்
ஆங்கில மருத்துவத்துக்கும் சித்த மருத்துவத்துக்கும் கருத்து
வேறுபாடு காணப்படுகிறது. இதை நான் தொலைகாட்சி வாயிலாக
கண்டேன்.
நினைவுகள் அருமை. நன்றாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
வித்தியாசமான மருத்துவ செய்ல்முறைதான்.
அதை சுவையாக அளித்தீர்கள்.
செ.சரவணக்குமார் கூறியது..
வாங்க பாஸ்,கருத்துக்கு மிக்க நன்றி.
NIZAMUDEEN கூறியது..
வாங்க நிஜாம், உங்களோடு தொலைபேசியில் உரையாடியது
மிக்க மகிழ்ச்சி.
நல்ல நன்றி நவிலல் தூயவன்.
இங்கு வெளிநாடுகளிலும் எங்கள் பாட்டி வைத்தியத்தைதான் விரும்புகிறார்கள்.அதனால்தான் ஹோமியோபதி,அக்குபஞ்சர் என்று நாடிப் போகிறார்கள்.
எங்களைப்போலவே துளசி,ஓமம்.பூண்டு,மிளகு போன்ற மூலிகைகளை வேறு விதமாகப் பாவிக்கிறார்கள்.
காஞ்சோண்டி கற்றாளை இலையில் தேநீர் - ஷம்போ வரை பாவிக்கிறார்கள்.
பரவாயில்லை நினைவு வைத்து ., இப்ப அந்த நினைவு கடனை அடைச்சிட்டீங்க .
//நான் தான் 1st,, எனக்கு தான் வடை சட்னி டீ.. இன்னும் என்னா? இருங்க படிச்சிட்டு வந்து...//
இதெல்லாம் அநியாயமா தெரியல.. பக்கத்திலேயே ரெண்டு பேரும் உட்காந்துகிட்டு வடை சட்னி டீ காப்பி எல்லாம் கேக்குரது....
நன்றாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
ஹேமா கூறியது...
வாங்க சகோதரி, சரியாக சொன்னிர்கள். இன்று மக்கள் ஆங்கில மருத்துவத்தை விட்டு விலகி, பழைய மருத்துவத்தின் பக்கம் திரும்ப ஆரம்பித்து உள்ளார்கள்.
ஜெய்லானி கூறியது...
வாங்க பாஸ் ,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ஜெய்லானி கூறியது...
//நான் தான் 1st,, எனக்கு தான் வடை சட்னி டீ.. இன்னும் என்னா? இருங்க படிச்சிட்டு வந்து...//
பாஸ் அது உங்களுக்காக தான் ஆர்டர் பண்ணியதாம் ,பார்சல் ரெடி.
கலாநேசன் கூறியது...
வாங்க கலாநேசன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நினைவுகள் அருமை.
நீண்ட கால நிவாரனத்திற்கு நாட்டு மருத்துவம் நல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
வாங்க அக்பர், நிச்சயமாக நாட்டு மருத்துவம் பல விசயங்களில் நன்மை தர கூடியதாக உள்ளது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
asiya omar கூறியது...
வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
மலரும் நினைவுகள் அருமை.
ஸாதிகா கூறியது...
வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக