எங்கள் வங்கியில் பணம் அனுப்ப வரிசையில் நின்ற
ஒரு வாடிக்கையாளரின் புலம்பல், என் செவிகளுக்கு
எட்டியதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.
வெளிநாடு செல்ல
ஏஜென்ட் இடம்
நின்றேன் வரிசையில்
மருத்துவ பரிசோதனைக்கு
மருத்துவ மனையில்
நின்றேன் வரிசையில்
விமானத்தில் பயணிக்க
சக பயணிகளோடு
நின்றேன் வரிசையில்
காலையில் வேலைக்கு செல்ல
நிறுவன வாகனத்திற்காக
நின்றேன் வரிசையில்
மாதம் முடிந்தது
ஊதியத்தை பெற
நின்றேன் வரிசையில்
குடும்பத்தை நினைத்தேன்
இப்பொழுது வங்கியில்
நிற்கின்றேன் வரிசையில்......
16 கருத்துகள்:
இது என்ன கவிதைய இல்ல கதைய சொல்லுங்க...
உண்மைதான் நண்பரே... இந்த புலம்பல்கள் அதிகம் பார்க்க முடியும்..
rk guru கூறியது...
வாங்க R K குரு, இது கவிதையல்ல ,ஒரு நபரின் புலம்பல்.உண்மை சம்பவம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நாடோடி கூறியது...
வாங்க ஸ்டீபன், என்னால் முடிந்த வரை , சிலரின் குறைகளை இங்கு வெளி உலகிற்கு தெரிவிக்க முயல்கின்றேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ம்,, ஆமா சரியான புலம்பல்தானே சார் :)
ஆறுமுகம் முருகேசன் கூறியது
வாங்க ஆறுமுகம் முருகேசன், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியாது. முடிந்த வரை, பிறர் அறிந்து கொள்ளும் வண்ணம் செய்யலாம்.
நல்லா சொல்லியிருக்கீங்க சார்.
மத்தபடி நீங்கதான் வரிசையிலயே நிக்க விடுறதில்லையே. வந்தா கடகடன்னு முடிச்சு அனுப்பிடுறீங்களே.(நல்ல சர்வீஸ்னு சொன்னேன் சார்)
உண்மையத்தான் சொல்லிருக்காரு அந்த நபர். அதை நீங்கள் கவிதையில் வடித்தது அழகாக உள்ளது.
வாங்க சரவணகுமார், எங்களால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுகிறோம், சில நேரங்களில் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடுகின்றது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.
வாங்க ஸ்டார்ஜன், கவலையில்லா மனிதர் இல்லை ,அவருக்கு அந்த நேரத்தில் ஆறுதல் என்னால் கூறமுடியவில்லை.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
சொர்க்கமா..?
நரகமா..?
தெரியவில்லை..!
நிற்கிறேன் வரிசையில்!
இங்கயுமா?
:)
அண்ணாமலை..!! கூறியது
வாங்க அண்ணாமலை, அதுக்கும் வரிசை தான், மக்கள் தொகை எல்லையை தாண்டி கொண்டு உள்ளது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
this is the fact...nicely written
Krishnaveni கூறியது
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
புலம்பல் என்றபோதும் உண்மையிலும் உண்மை..
அன்புடன் மலிக்கா கூறியது...
வாங்க சகோதரி,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக