கால அட்டவணை

சிந்திக்க சில துளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்திக்க சில துளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

எதிர்காலம்...?



     உலக்கத்தின் ஒரு பகுதி உணவு இன்றி பசி பட்டினியில் இறந்து வருகிறார்கள். மற்றொரு பகுதி பொருளாதார நெருக்கடியில் சிக்கி
தவித்து வருகிறது. சில பகுதி மக்கள் புரட்சி ஏற்பட்டு வருகிறது.


இதன் முடிவு எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

ஆப்பிரிக்கா கண்டம் :

    இங்கு வசிக்கும் மக்கள் செய்த தவறு என்ன? இவர்கள் கருப்பாக பிறந்தது தவறா? இந்த மக்களின் வாழ்க்கை பசி பட்டினியால்
உயிர் பிரிந்து வருகிறது. மனித உரிமை பற்றி வாய் கிழிய பேசுபவர்கள், இவர்கள் விசயத்தில் மட்டும் ஓர வஞ்சனை காட்டுவது ஏன்?

இவர்கள் கறுப்பினத்தவர்கள் என்ற ஒரே காரணம் தான்.

இவர்கள் நிறத்தால் கருப்பர்கள் என்று பார்க்கும் அனைவரும்.
இவர்களின் மனதால் எந்த நிறம் என்பதை பார்க்க நினைப்பது இல்லை.

அதன் விளைவு இன்று அந்த மக்கள் கடல் கொள்ளையர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள்.

புரட்சி :



     துனிசியா நாட்டில் ஆரம்பித்த மக்கள் புரட்சி , எகிப்து லிபியாவில் முடிந்து, இப்பொழுது ஏமன் மற்றும் சிரியாவில் வேகம் பிடித்து உள்ளது.

இந்த மக்களின் புரட்சிக்கு காரணம் , ஆளும் வர்க்கம் தொடர்ந்து 42 ஆண்டுகள் 32 ஆண்டுகள் என்று பதவியை தக்க வைத்து கொண்டு.
 தன் நாட்டின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த
வகையிலும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலை நம் நாட்டு அரசியல் வாதிகளுக்கும் வராது என்று யாரும் உத்திரவாதம் கொடுக்க முடியாது.

பொருளாதார நெருக்கடி :

இன்று ஐரோப்பா மற்றும் அமெரிக்கா பெரும் பொருளாதார
நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன.

கிரேக்க நாட்டில் மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் .

இத்தாலி நாட்டில் ஏற்பட்ட போராட்டம் பெரும் வன்முறையில்
 முடிந்து உள்ளது.

ஸ்பெயின் நாட்டு மக்களும் இப்பொழுது களத்தில் இறங்கி விட்டார்கள் .

அமெரிக்காவில் போராடும் மக்கள் ,அரசை பார்த்து சில கோரிக்கைகள் வைத்துள்ளார்கள்.

அவையாவன போரில் செலவு செய்த பணத்தை கொண்டுவா என்று கோஷமிடுகிறார்கள்.

வால் ஸ்ட்ரீட் என்கின்ற ஒரு பகுதி , பணக்காரர்கள் வசிக்கும் பகுதி.

அங்கு பதிக்கி வைத்துள்ள பணத்தை வெளியில் கொண்டுவா என்று கூறுகிறார்கள்.

முடிவு :

இந்த நிலைக்கு யார் காரணம்? ஆளும் வர்க்கத்தின் தவறான
முடிவுகளே காரணம்.

நாட்டு மக்களை விட தன் சுயநலமும், போலியான கவுரவமே.

இல்லாதவர்க்கு இருப்பவர்கள் கொடுத்து உதவ வேண்டும் என்கின்ற மனப்பான்மை இல்லா நிலை.

தன் தவறை மறைக்க பிறர் மீது பலி போடுவது.

இன்று உலக வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, 2012 க்கு
பிறகு உலகம் முழவதும் உணவு பற்றா குறை ஏற்படும் என்றும்,
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் என்று
கூறி வருகிறது.

முதலாளி என்கின்ற பண முதலைகளின் தவறான வழிகாட்டுதலை, ஆளும் வர்க்கம் பின்பற்றுவதே காரணம்.

நிச்சயம் இதற்கு ஒரு நாள் முடிவு உண்டு.



வெள்ளி, 21 அக்டோபர், 2011

வேடம்











மனிதா......நீ
உலகை அனுபவிக்க
காலை பகல் மாலை இரவு
என நான்காய்
தினம் பிரிகின்றாய் !

உணவை அருந்த
காலை பகல் இரவு
என மூன்றாய்
தினம் பிரிகின்றாய் !

தொல்லை காட்சியில்
வரும் சீரியலை காண
தினம் நேரம்
ஒதுக்குகின்றாய் !

உன் இடுகைக்கு வரும்
கருத்துரைக்கு மட்டும்
பதில் போட
நேரம் ஒதுக்குகிறாய் !

படைத்த என்னை
வணங்க மட்டும்
உனக்கு
நேரமில்லை !

திங்கள், 27 ஜூன், 2011

மனிதர்களே சிந்தியுங்கள்.....




     என் அருமை சகோதர சகோதரிகளே! இந்த கட்டுரை உங்களை பயமுறுத்தஅல்ல , உங்களை கொஞ்சம் சிந்திக்க வைக்க தான்.

நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளைக்கும் என்ன உணவு
உன்ன வேண்டும், என்ன உடுத்த வேண்டும், வார விடுமுறையில்
எங்கு செல்ல வேண்டும் என்று நமக்கு நாமே, சிந்தித்து
செயல்படுகிறோம்,அது நல்ல விஷயம் தான். அதே நேரேத்தில்
 நாம் எவ்வளவோ வீண்  விரயம் செய்கிறோம்.

நாம் வீண் விரயம் செய்யும் பொருள்களை மற்றும்உணவுகளை மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாமே!

நம் அண்டை வீட்டார் மூன்று வேளையும் சரியாக உண்ணுகிறார்களா என்று நமக்கு தெரியாது. அதை நாம் தெரிந்து கொள்வதும் இல்லை,
அதே நேரத்தில் நமக்கு தேவையற்ற விசயத்தில் மூக்கை நுழைத்து
நாம் விமர்சிக்கின்றோம்.

இதில் ரொம்ப கொடுமையான விஷயம் என்னவென்றால், தன் கூட
பிறந்த பிறவிகள் எப்படி வாழ்கிறார்கள் அவர்களின் வாழ்க்கைக்கு பொருளோ பணமோ தேவை உள்ளதா? என்று கூட பலர் நினைப்பது கிடையாது.

நம் பிள்ளைகள் காண்வென்டில் படித்தாலும், எத்தனையோ
பிள்ளைகள் அரசு பள்ளி கூடங்களில் கூட படிக்க வசதி இன்றி உள்ளார்கள்.

உலக்கத்தில் பசிக்கு உணவு கூட கிடைக்காமல் எத்தைனையோ
ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன.

தேவையற்ற எத்தனையோ விசயத்திற்கு எல்லாம் பல
ஆராய்ச்சிகள் செய்ய பணத்தை கோடி கணக்கில்செலவு
செய்யும் பணக்கார நாடுகள்., அவர்களின் உணவு
பற்றாகுறைக்கு என்ன காரணம்,  அவர்களுக்கு உணவு
தங்கு தடையின்றி கிடைக்க என்ன வழி  என்று, கண்டு
பிடித்துஉதவி செய்ய கூட முன் வரவில்லை.
வளர்ந்த  நாடுகள் என்று மார்தட்டி கொள்கின்றார்கள். தன்
சுயநலத்திற்காக எவ்வளவுவேண்டுமானாலும் செலவு
செய்வார்கள்.

எந்த மதமும் சுயநலத்துடன் வாழ கற்று கொடுக்கவில்லை.
சுயநலம் என்பது நமக்கு நாமே போட்டு கொள்ளும் ஒரு வட்டம்.

 உலகத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் இயற்கை சீற்றங்கள், நம்மை
சில நொடிகள் நிலை தடுமாற வைக்கின்றன, எவ்வளவோ தொழில்
நுட்ப வசதிகளை நாம் கண்டு இருந்தாலும், இது போன்ற இயற்கை சீற்றத்தை நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது
உண்மை.காட்டு தீயினால் ஒரு பக்கம் இயற்கை வளம்
அழிந்து வருகிறது. பூகம்பத்தால் சில நகரங்கள் தரை மட்டமாகி
 வருகிறது. சுனாமியால் பல கடல் ஓரத்தில் வசிக்கும் மக்களும்
 நகரமும் அழிந்து வருகிறது.

இவை மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்டசக்திஓன்று என்பதில்
யாருக்கும் சந்தேகம் இல்லை.

இறைவனின் படைப்புகளில் மனித படைப்பு ஓர் சிறந்த படைப்பாக இருந்தாலும். சில மனிதர்கள் சில நேரங்களில் நடந்து கொள்ளும்
முறை விலங்குகளை விட கேவலமாக உள்ளது. எது கரைந்தாலும்
இந்த மனிதர்களின் மனம் கரைய மறுக்கின்றது.

ஜப்பானில் நடந்த பூகம்பம் மற்றும் சுனாமி சம்பவமும் அதை
தொடர்ந்து அணு உலை வெடிப்பும், நினைக்கும் பொழுதே மனம் பதறுகிறது. நேற்று வரை தொழில் நுட்பத்தில் கொடிகட்டி பறந்த
ஜப்பான் இன்று சின்ன பின்னமாகி உள்ளது. அந்த மக்கள் நினைத்து
கூட பார்த்து இருக்க மாட்டார்கள். நேற்று வரை எல்லா
வசதிகளையும் அனுபவித்து வந்த அந்த மக்கள், இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்.


நமக்கு நாமே பல கேள்விகளை கேட்டு கொள்ளும் நேரம் இது .
நாம் அனைவரும் இந்த மண்ணில் ஒரு நாள் மரணிக்க
கூடியவர்கள். நாம் வாழும் வாழ்க்கை சரியான வழியில் சென்று
கொண்டு உள்ளதா என்பதை பரிசோதிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

திங்கள், 21 மார்ச், 2011

டயட் (உணவு கட்டுப்பாடு)...... ஏன் ?

     சமீப காலமாக மக்களின் மத்தியில் அதாவது பேச்சில் பத்தியம் (Diet ) என்கின்ற வார்த்தை சர்வ சாதாரணமாக வெளி வருகிறது.

இந்த வார்த்தை இவர்களின் வாயில் வருவதற்கு என்ன காரணம்.?

இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றமா?

இல்லையெனில் இவர்களே இவர்களின் உடலில் நோய்களை
ஏற்படுத்தி கொள்கிறார்களா?

இப்படி பல கேள்விகள்.

மற்றொரு புறம் பத்திய உணவு பற்றி சில நிறுவனங்கள் செய்யும் விளம்பரம் ஏராளம்.

இந்த விளம்பரத்தை நம்பி உடலையும் பணத்தையும்
வீணடித்தவர்கள், ஏராளம்.

சாதரணமாக இன்றைய மனிதர்கள் உடல் எடை கூடினாலும் எடை குறைந்தாலும், இனிப்பு கூடினாலும் இனிப்பு குறைந்தாலும், பிரசர் கூடினாலும் பிரசர் குறைந்தாலும் கொழுப்பு கூடினாலும் மற்றும் குறைந்தாலும் டாக்டரிடம் ஓடுகிறார்கள், அப்படி ஒரு பயம்.

சாதரணமாக ஒவ்வொரு மனிதரின் உடலிலும் கொழுப்பு இனிப்பு
உப்பு போன்றவை நார்மலாக இருக்க கூடியது. இவைகள்
கூடும் பொழுது அல்லது குறையும் பொழுது

உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. சில நேரங்களில்
உயிருக்கே உலை வைக்க கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறது.

இதற்கு என்ன காரணம். டாக்டர்கள் பல கருத்துக்கள்
கூறினாலும் நாம் அவற்றை நம் அறிவுக்கு உட்படுத்தி
சிந்திப்பதை தவிர்க்கிறோம்.

நம் உணவை எடுத்து கொள்வோம் , சாதரணமாக ஒருவரின்
உடலுக்கு தேவையான உணவு எவ்வளவோ அதை
அருந்தினால் போதும்.

அதை விட்டு விட்டு சில உணவு பொருள்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது.

அதுவும் இலவசமாக கிடைப்பதாக இருந்தால்
சொல்லவேண்டியதில்லை.

1. சிலர் தன்னுடைய வேலைகளை கூட தானே செய்து
    கொள்வதில்லை , அதற்கு மற்றவர்களின் உதவியை நாடுவது.

2. பணியாற்றுபவர்களுக்கு பணி பளு, அதாவது தன் வலிமைக்கு
    அதிகமாக பணிகளை செய்வது.

3. ஒரே இடத்தில் உட்கார்ந்து பல மணி நேரம் தொடர்ந்து
    பணி புரிவது.

4. தொடர்ந்து ஓய்வு இன்றி உழைப்பது.

5. நம் உணவு முறையில் ஏற்படுத்திய மாற்றங்கள், அதாவது       இயற்கையான உணவு முறைகளை விட்டு விட்டு ஃபாஸ்ட்
 உணவுகளின் மோகத்திற்கு ஆளாகியது.

ஆடைகளை எடுத்து கொள்வோம்.

நாட்டுக்கு நாடு தட்ப வெப்ப நிலை மாறுபடுகிறது.

ஐரோப்பாவை எடுத்து கொண்டால், அவை குளிர் பிரதேசம்
அங்கு உள்ளவர்கள் கோட்டு அணிந்து டை கட்டினால்
அவர்களின் குளிருக்கு சரியானது.

அவற்றை இந்தியாவில் உள்ளவர்கள் அணியும் பொழுது
அவர்களின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

வளைகுடாவை எடுத்து கொண்டால் சூடான பகுதி, இங்கு வந்து பணிபுரியும் இந்தியர்கள் பல நோய்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

உதாரணமாக இனிப்பு நீர், உப்பு நீர் ,வாய்வு தொல்லை, கிட்னி செயலிழத்தல், இருதய நோய் போன்ற நோய்களை இலவசமாக பெறுகிறார்கள். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய
விஷயம் சரியான நேரத்தில் யாரும் உணவு அருந்துவது
கிடையாது. சில பேர் காலை உணவு என்பது தேவையற்ற
உணவு போல் நினைத்து அருந்துவது கிடையாது.
 பணம் பணம் பணம் இவை தான் இன்று இவர்கள் மனம்
முழுவதும் நிறைந்து உள்ளது.

குறைந்த காலத்தில் சிகரத்தின் உச்சியை தொட வேண்டும்,
அவ்வழி எவ்வழி என்பது இவர்களுக்கு முக்கியமில்லை.

இப்படி நினைத்து தன் வாழ்நாளை குறைத்து கொண்டு உள்ளார்கள்.

சிலர் சரியான வழிகாட்டுதல் இல்லாமல், காலம் போன
போக்கில் போய் கொண்டு உள்ளார்கள்.

மருத்துவர் என்பவர் உங்கள் உடலில் உள்ள பிரச்சினைகளை
உங்களிடம் கேட்டு தான் மருந்து கொடுப்பார்கள். உங்கள்
உடலில் உள்ள பிரச்சினையை முதலில் நீங்கள் தான்
அறிய முடியும்.

இயற்கையான உணவுகள் கிடைக்கும் பொழுது, அதை
விட்டு விட்டு பதப்படுத்த பட்ட உணவை நாடி செல்வது
நமக்கு நாமே கேடு விளைவித்து கொள்வதாகும்.

உதாரணத்திற்கு ஒரு கிரேனை எடுத்து கொண்டால் கூட,
அந்த கிரேனுக்கு எந்த அளவு எடை தூக்க கூடிய அளவுக்கு
எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு
தான் தூக்கும். எந்த ஒரு இயந்திரத்தை எடுத்து கொண்டாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவிற்கு தான் தன் பணியை செய்யும்.
மனிதன் மட்டும் இதற்கு அப்பாற்பட்டவனா என்ன?.

ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது, உணவுகளை குறை கூறுவது
எந்த விதத்திலும் சரியல்ல என்பது உண்மை. நாமே நமக்கு
 தீமையை விதைத்து கொள்கின்றோம்.



 

வெள்ளி, 11 மார்ச், 2011

மருத்துவமும் அறுவை சிகிசையும்




     இன்றைய உலகம் ஆங்கில மருத்துவத்தில் பல சாதனைகளை
படைத்து இருந்தாலும், சில விசயங்களில் சரிவுகளையும் கண்டு
உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

     அனைத்து தொலைகாட்சிகளிலும் மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. இதில் சில
மருத்துவர்கள் மனம் திறந்து பேசுகிறார்கள், அவர்களை மனமார வாழ்த்துகிறேன்.

     மருத்துவ துறையில் நடக்கும் தவறுகள் நமக்கு தெரியாது. ஆனால்
மருத்துவர்களால் அறிந்து கொள்ள முடியும். அவை சமீப காலங்களாக கசிய ஆரம்பித்து உள்ளன.

     இருதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் நரம்புகளில் ஏற்படும்
அடைப்புகளால் , மாரடைப்பு ஏற்படுவதாக சொல்கிறார்கள். இந்த அடைப்புகள் கொழுப்புகளாலும் மற்றும் இனிப்பு நீர் போன்ற காரணங்களாலும் ஏற்படுவதாக சொல்கிறார்கள். அடைப்புகள் பெரிய அளவில் இருந்தால் அதற்கு ஒரே வழி, பைபாஸ் என்கின்ற அறுவை சிகிசை தான் என்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.

     மக்கள் தொலைகாட்சியில் வரும் மருத்துவர் ஐயா தெய்வநாயகம் அவர்கள் ஒரு முறை பைபாஸ் அறுவை சிகிசை பற்றி கூறும் பொழுது, அது தேவை அற்றது என்கின்ற ஒரு வார்த்தையை கூறினார். அதற்கு அவர் கூறிய விளக்கம் 'இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்வதற்கு பல வழிகள் உண்டு, ஒரு வழி அடிபட்டால், மற்ற வழிகள் மூலம் சென்று வரும் என்று கூறினார்.

     அவர் கூறிய வார்த்தை சற்று அனைவரையும் சிந்திக்க வைக்க கூடியதாகவே உள்ளது.

     இதயத்திற்கு பல சிறப்பு தன்மைகள் உண்டு என்பதை, டெக்ஸாஸ்
 சவுத் வெஸ்டர்ன் மருத்துவ பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் எலிகளின் துண்டான இதயம் மீண்டும் வளர்வதை [அடிப்படையாக வைத்து] கண்டறிந்துள்ளனர். "இதய தசை உற்பத்தி செய்யும்
புதிய சிசு வளர்சியே இதற்கு காரணம்" என தெரிவித்துள்ள ஆராட்சியாளர்கள், மனிதர்களுக்கு இத்தகைய முறை சாத்தியப்படுமா என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

     இந்த ஆராய்ச்சியின் முடிவு[வரும்போது] இதயம் சம்பந்தப்பட்ட பல
பிரச்சினைகளுக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.




சனி, 12 பிப்ரவரி, 2011

ஆணவம் நிலைக்குமா?....

     உலகத்தை ஆள பிறந்தவன் என்று கூறி கொண்டு ஆட்டம் போட்ட அமெரிக்கா.


இன்று அந்நிய நாடுகளிடம் அடிபணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் செய்த அட்டுழியங்கள் கொஞ்சமா? . உலக முழுவதும் செய்யப்படும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் இவர்கள் நாட்டு பணத்தில் தான் அனைவரும் செய்ய வேண்டும். ஐக்கிய நாட்டு சபையை உருவாக்கியதன் குறிக்கோள் ஒன்றாக இருக்கலாம். அதன் உள் நோக்கம் வேறு, உலகத்தின் மத்தியில் அவர்கள் நடத்திய நாடகங்கள், ரொம்ப அருமையாக அரங்கேறின.

(1) மனித உயிர்களை கொல்லும் ஆயுதங்களை பெரும் அளவில் தயாரித்து, அவற்றை உலகத்தில் உள்ள நாடுகளை பயமுறுத்தி அவர்களிடம் தன் ஆயுதங்களை விற்பனை செய்வது.

(2) அதற்கு பணிய மறுக்கும் நாடுகளில், இவர்களின் கை கூலிகளை கொண்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்து , பின் அவர்களிடம் தன் ஆயுத விற்பனையை தொடங்குவது.

(3) அமெரிக்காவின் புலனாய்வு துறை மிக திறமையானது என்று
உலக அளவில் காட்டி கொள்வதற்கு, இவர்கள் செய்யும் பித்தலாட்டம், ஒவ்வொரு நாட்டினரிடம் சென்று உங்கள் நாட்டை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த போகிறார்கள் என்று கூறி பயம் முருத்துவது. எங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்று ஆணவமாக பேசுவது.

(4)அடுத்த வீட்டு பொருளுக்கு ஆசை படுவது. பெட்ரோலுக்கு ஆசை பட்டு
பாலைவனத்தில் மண்ணை கவ்வினார்கள்.

போரின் போது இவர்கள் செய்து வந்த நரி தனம் ஆப்கானிஸ்தான் மீது இவர்கள் போர்தொடுத்த பொழுது, வெட்ட வெளிச்சமானது.

இவர்கள் எந்த நாட்டின் மீது போர் தொடுக்க போகிறார்களோ, அந்த நாட்டின் பெயரை அறிவிப்பார்கள். உடனே அங்கு தொலைகாட்சி நிருபர்கள் சென்று விடுவார்கள் , நிருபர் என்கின்ற போர்வையில் இவர்களின் கைகூலிகள் (ஒற்றர்கள்) அங்கு உளவு பார்க்கும் பணிய தொடங்கி விடுவார்கள்.

பிறகு என்ன இவர்கள் நினைத்த காரியம் கச்சிதமாக முடிந்து விடும். இப்படி ஒரு கேவலமான செயலை உலகில் அரகேற்றம் செய்தவர்கள் தான் இந்த அமெரிக்கர்கள். இவர்களின் அயோக்கிய தனத்தை இன்று ஒரு இணை[ய]த்தளம் வெட்ட வெளிச்சமாக்கி கொண்டு உள்ளது. எதிர் காலத்தில் ஒரு நாட்டின் வரலாற்றை படித்து காறி துப்புவார்கள் என்று சொன்னால், அது நிச்சயமாக அமெரிக்காவின் வரலாறாகத்தான் இருக்கும்.

இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவம், இதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்க தக்கவர்கள். இதை தகர்த்த
 உண்மையான குற்றவாளிகளை இவர்களால் இதுவரை கண்டு பிடிக்க
முடியவில்லை.

நிலைமை இப்படி இருக்க ,இவர்கள் மற்ற நாட்டை பார்த்து,
உன்னை தீவிரவாதிகள் தாக்க போகிறார்கள்', என்று அறிவிப்பு விடுவது. உடனே தன் நாட்டு மக்களை யாரும் அந்த நாட்டிற்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு விடுவது.

இராக்கில் போரில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் எத்தனை பேர் மனநிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ரகசியமாக திருப்பி அனுப்பினார்கள் என்று தெரியுமா? ,இப்படி பல விசயங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போய் விட்டது.

சமீப காலமாக இவர்கள் கண்களுக்கு இந்தியாவின் வளர்ச்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. மத்திய அரசு திறமையாக செயல் படுவதால், இவர்களின் பாச்சா பலிக்கவில்லை. இன்று இவர்களின் மிரட்டலை எந்த ஒரு சிறிய நாடும் மதிப்பதில்லை.

வளைகுடா நாட்டில் கம்பீரமாக வாழ்ந்த அமெரிக்கர்கள் இன்று அஞ்சி
வாழக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பிறரை அடிமை படுத்தி வாழும் வாழ்க்கை, நிலைத்து நிற்காது. அது நாடாக
இருந்தாலும் சரி, தனி நபராக இருந்தாலும் சரி.





சனி, 22 ஜனவரி, 2011

நகரமா....................? நரகமா.............??


     என்ன தலைப்பை இப்படி போட்டு பயமுறுத்துகிறேன் என்று பார்க்க வேண்டாம். சென்னை போன்ற சிட்டியில் வாழும் நடுத்தர மக்களின் நிலையை தான் இங்கு விளக்குகிறேன்.


     எல்லாருக்கும் காலை பொழுது எத்தனை மணிக்கு தொடங்குமென்பது தெரியாது , ஆனால் சென்னைவாசிகளுக்கு 3 .00 மணிக்கு எல்லாம் தொடங்கி விடும். எழுந்ததில் இருந்து பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு உணவு, வேலைக்கு செல்லும் கணவருக்கு உணவு என்று தன் காலை வேலையை தொடங்கி, பிள்ளைகளை சீருடை அணிவித்து அவர்களை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டு விட்டு, பிறகு அலுவலகம் செல்லும் தன் கணவரை எழுப்பி அவருக்கு உரிய பணிகளை செய்து முடித்து, பிறகு பகல் உணவு தயாரிக்கும் பணியை தொடங்கி, அவை முடியும் நேரம் பள்ளியில் இருந்து திரும்பும் பிள்ளைகளை உடைகளை மாற்றி, அவர்களை டியுசன் படிக்க தயார் செய்து, அவர்களுக்கு இரவு உணவு கொடுத்து உறங்க வைக்கும் வரை பம்பரமாக சுற்றி தன் கடமையே கண்ணாக இயங்கும் குடும்ப தலைவியின் நிலை இது தான்.

     இது ஒரு புறம் இருக்க, ஊரில் இருந்து வரும் உறவினர்களிடம் சென்னையில் வசதியாக வசிப்பதாக காட்டிக்கொள்ள ,வருமானத்திற்கு மேல் (தவணைக்கு) வாங்கி போடும் டிவி, சோபா, ஃப்ரிட்ஜ் , ஏர் கண்டிஷன், பைக், கார் இப்படி வாங்கி போட்டு தன் தலையில் பாரத்தை ஏற்றி கொள்ளும் குடும்ப தலைவன்.

     ப்ரீகேஜி இந்த வகுப்பை கண்டு பிடித்தவன் யாருன்னு தெரியாது, தெரிந்தால் உங்களால் முடிந்தால் நாலு மொத்து மொத்துங்க. இதில் தன் பள்ளி வாழ்க்கையை தொடங்கி கல்லூரி படிப்பை முடிக்கும் வரை படிப்பு படிப்பு என்று, மூளையை சலவை செய்து, விளையாட கூட முடியாமல் ,எதிலும் ஓர் ஆர்வம் இல்லாமல் உறங்கி காணப்படும் பிள்ளைகள்.

சரி இப்படியெல்லாம் இயங்கி இவர்கள் என்னத்தை சாதித்தார்கள்?


இதோ பட்டியல்:



1.நரம்பு தளர்ச்சி நோய்

2.கேன்சர்

3.சத்தான உணவு உண்ணாமல், உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழத்தல்.

4.சரியான நேரத்தில் உணவு அருந்தாமல், வாய்வு போன்ற தொல்லைகள் ஏற்படுதல்.

5.அதிகமாக நீர் அருந்தாமல் கல் (stone) ஏற்படுதல்.

வேலை பளு காரணமாக, ரத்த கொதிப்பு மற்றும் இனிப்பு நீர் போன்ற நோய்கள் ஏற்படுதல்.

சமீபத்தில் கிடைத்த தகவலின் படி அதிகமான இறப்பு இளைய சமுதாயமாக உள்ளது.






வியாழன், 6 ஜனவரி, 2011

பழமையா..............புதுமையா................?

     இன்றைய சமுதாயம் அன்றாடம் பல்வேறு புதிய புதிய நோய்களை எதிர் நோக்கி கொண்டு உள்ளது.


     ஒவ்வொரு சராசரி மனிதனிடமும் பேச்சு கொடுத்தால், ஓவ்வொருவரும் ஏதாவது ஒரு நோயை சுமந்த வண்ணமாக உள்ளார்கள். பிறக்கும் பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். நோயின்றி வாழ்க்கை இல்லை என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்கின்ற அச்சத்திற்கு மனிதர்களின் நிலை போய் கொண்டு உள்ளது.

இதற்கு யார் காரணம்?

நமக்கு நாமே வினை விதைக்கிறோமா?

இப்படி பல கேள்விகள்.

நம்மை நாமே ஏன் சற்று பின்னோக்கி பார்க்க கூடாது?

இதோ.........

மண் பாண்டகளில் உணவு சமைத்து சாப்பிட்டு வந்த நாம், அலுமினிய பாத்திரத்தையும், சில்வர் பாத்திரத்தையும் நாடியது மிக பெரிய தவறு.

பழைய உணவுகளை அடுப்பில் மட்டும் சூடு படுத்தி சாப்பிட்ட நாம், இன்று ஓவனின் உதவியை நாடுவது.

உணவுகளை குளிர் சாதனா பெட்டியில் வைத்து நீண்ட நாட்களுக்கு உண்பது.

வீட்டில் உணவு தயாரிக்க அலுப்பு பட்டு ,பாஸ்ட் புட் வாங்கி சாப்பிடுவது.

வீட்டின் அருகிலேயே சுத்தமான கறி வகைகள் கிடைக்கும் பொழுது, அதை வாங்கி உபயோகிக்காமல் பதப்படுத்தப்பட்ட கறி வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது.

காலையில் எழுந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அலுப்பு பட்டு, பிள்ளைகளை காண்வென்டில் சேர்ப்பது, அதை மற்றவர்களிடம் தன் பிள்ளை காண்வென்டில் படிப்பதாக பெருமைப்பட்டு கொள்வது.

நமது விளை நிலங்களுக்கு , அந்நிய நாட்டு உரங்களை பயன்படுத்தியது.

சிறிய நோய்களுக்கும், நாட்டு மருந்துகளை நாடாமல், முழுக்க முழுக்க ஆங்கில மருந்துகளை நாடியது.

சிறிய தலைவலிக்கு கூட மருந்தை உபயோகிப்பது .

சிறிய சிறிய வேலைகளை கூட செய்யாமல், அதற்கு வேலை ஆட்களை நியமிப்பது.

வெளியில் செல்லும் பொழுது, அருகில் உள்ள இடத்திற்கு கூட நடக்க அலுப்பு பட்டு, வாகனத்தின் உதவியை நாடுவது.

கீழ் வீட்டில் இருந்து கொண்டு , மேல் வீட்டில் உள்ளவர்களை அழைக்க கைபேசியை பயன்படுத்துவது. கைபேசியில் அதிக நேரம் பேசுவதை பெருமையாக நினைப்பது.

நம்முடைய அதிக நேரத்தை தொலைகாட்சியிலும் , கணினியிலும் பயன்படுத்துவது.

கர்ப்பம் தரித்தவுடன் சிறிய வேலைகள் கூட செய்யாமல், நடையை குறைத்து கொள்ளுதல். (இது பெண்களுக்கு சுக பிரசவம் ஏற்படாமல் தடுக்கின்றது. )

பிறந்தவுடன் தாய் பால் குடித்து வளர்ந்த நாம், நம் குழந்தைகளுக்கு புட்டி பாலை கொடுத்து வளர்க்க ஆரம்பித்து விட்டோம். இது நம் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு.

நம்மில் சிலர் ,எந்த நேரமும் வேலை வேலை என்று வீடுகளில் பெண்களும், அலுவலகத்தில் ஆண்களும் தன் எனர்ஜி தன்னை விட்டு செல்லும் வண்ணம் தன்னை தானே மறந்து உழைப்பது .

கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் சம்மந்தமான பிரச்சினைகளை, அன்றாடம் அதற்கான நேரம் ஒதுக்கி அமர்ந்து பேசி தீர்க்க முயலாமல் இருப்பது.

நம்முடைய மன கஷ்டத்தை தனக்கு தானே, மனதில் வைத்து கொண்டு வெளியில் சொல்லாமல் இருப்பது.

பருவம் அடைந்த பிள்ளைகளின் மீது, தனி கவனம் செலுத்தாமல் இருப்பது.

பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து வளர்ப்பது.

இப்படியாக சொல்லி கொண்டே போகலாம்.

நோய் அற்ற வாழ்க்கை நம் அனைவருக்கும் வேண்டும். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

நம்மால் பழைய நிலைக்கு ஏன் திரும்ப முடியாது.

முடியாது என்பது, நமக்கு நாமே சொல்லி கொள்வது.
முடியும் என்பது, நமக்கு நாமே வகுத்து கொள்வது.

வெற்றி என்பது பெற்று கொள்வது
தோல்வி என்பது கற்று கொள்வது.

சனி, 11 டிசம்பர், 2010

சிந்தனைக்கு சில....

நல்ல பெண்மணி

     கணவரின் வருமானத்தை கருத்தில் கொண்டு அதற்குள் அடங்குமாறு குடும்பத்தின் செலவுகளைச் சிக்கனப் படுத்தும் குடும்பத் தலைவியே மிகவும் போற்றத் தக்க நல்ல பெண்மணி.

துணிகளை பரிசோதிக்கும் முறை

     நல்ல பட்டாக இருந்தால் கை விரலை அதன் மீது வைத்து அழுத்தினால் கை ரேகைகள் துணி மீது பதிந்ததும் உடனே மறைந்து விடும். பட்டோடு வேறுவகை நூல்கள் கலந்திருந்தால் அந்த ரேகை அப்படியே இருக்கும்.

ஜலதோஷம் நீங்க

     ஜல தோஷம் ஆரம்பமாகும் அறிகுறி தென்பட்டவுடன் ஓமத்தை இடித்து உச்சியில் அரக்கிக் குளித்தால் ஜலதோஷம் மாறி விடும்.

கேப்பையின் கீர்த்தி

     கேப்பையை மாவு ஆக்கி அதில் சிறிது பச்சரிசியைப் போட்டுக் கூழ்காய்ச்சிக் சாப்பிட்டால் சிறுநீர் தடையின்றிப் பிரியும். உடலோ குற்ரால அருவியில் குளித்ததுபோல் பூவாய் இருக்கும்.

கண் வளையம்  

     சிலருக்குக் கண்ணைச் சுற்றிலும் கருவளையம் காணப்படும். அது பலவீனம் காரணமாக ஏற்பட்டதாகும். சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் பொடியைக் குழைத்து நன்கு காய்ச்சி அதனைத் குளிப்பதற்கு முன் கண்ணைச் சுற்றிலும் தேய்த்துப் பின் பத்து நிமிடம் ஊற வைக்கவும். தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

நற்குணம்

அடையாளங்கள்

     மனிதன் அதிகம் வெட்கப்படுபவனாக , தொல்லை செய்யாதவனாக , அதிகம் நன்மை செய்பவனாக, பேச்சைக் குறைப்பவனாக, உண்மையையே பேசுபவனாக, நற்செயல்கள் அதிகம் செய்பவனாக,

     வீண் காரியங்களை விட்டும் விலகிக் கொள்பவனாக, பெற்றோருக்கு நன்மை செய்பவனாக, உறவினருடன் சேர்ந்து வாழ்பவனாக இருக்க வேண்டும்.

    அவ்வாறே அவன் பொறுமை, நன்றி பாராட்டல்,பொருந்திக் கொள்ளல், சாந்தம்,மேன்மை,கற்பைப் பேணல், அன்பு செலுத்துதல் ஆகிய பண்புகளைக் கொண்டவனாக இருப்பது அவசியமாகும்.

     ஆனால் மனிதன் சபிப்பவனாக, திட்டுபவனாக, கோள் சொல்பவனாக, புறம் பேசுபவனாக,அவசரப்படுபவனாக, குரோதம் கொள்பவனாக, கஞ்சனாக,பொறாமை கொள்பவனாக இருக்கக் கூடாது. மலர்ந்த முகம்
காட்டுபவனாக, புன்னகை பூப்பவனாக இருக்க வேண்டும்.

பணிவு

     ஒரு மனிதன் தன்னை தாழ்த்திக் கொள்ளாமல் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு போதும் பெருமையுடன் நடந்துகொள்ளக் கூடாது.

நற்குணங்களை வளர்த்து கொள்ள சில வழிமுறைகள்


சரியான கொள்கை

     கொள்கை மிகப் பெரிய விஷயமாகும். ஒரு மனிதனின் குணநலன்கள் பெரும்பாலும், அவன் கொண்டிருக்கின்ற கொள்கை, சிந்தனை மற்றும் அவன் சார்ந்திருக்கின்றே மார்க்கம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இருக்கும்.

     கொள்கை சரியாக இருந்தால் அதன் விளைவால் குணமும் அழகானதாக இருக்கும்,சரியான கொள்கை அக்கொள்கைவாதியை வாய்மை,ஈகை ,சகிப்புத் தன்மை, வீரம் போன்ற நற்குணங்களின் பால்
தூண்டும், அது போல பொய், உலோபித்தனம்,அறியாமை,போன்ற தீய குணங்களை விட்டும் அவனை தடுக்கும்.

போராடுதல்

     நற்குணங்களை மேற்கொள்வதற்கும் தீய குணங்களை விடுவதற்கும் தன் மனதோடு யார் போராடுகின்றாரோ அவருக்கு நன்மைகள் வந்து சேரும். அவரை சூழ்ந்திருக்கும் தீமைகள் அவரை விட்டும் விலகும்.

சுயபரிசோதனை

     அதாவது தீய குணங்களை நாம் மேற்கொண்டு விட்டால் நாம் செய்தது சரிதானா என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற குணங்களின் பால் இனி திரும்பக் கூடாது
என நம் மனதைத் தூண்ட வேண்டும்.

சகிப்புத் தன்மை

     இது குணங்களிலேயே மிகக் சிறந்ததும் அறிவுடையோருக்கு மிக ஏற்றதுமாகும். சகிப்பு தன்மை என்பது கோபம் பொங்கியெழும்போது மனதைக் கட்டுபடுத்துவதாகும். ஆனால் சகிப்புத்தன்மையுடையவர்கள்
கோபப்படக் கூடாது என்பது இதன் ஷரத் அல்ல. மாறாக அவருக்கு கோபம் பொங்கியெழும்போது தனது சகிப்புத் தன்மையால் அதை அடக்கிகொள்வார்.

     சகிப்புத் தன்மையை ஒருவர் மேற்கொள்ளும்போது அவரை நேசிக்கக் கூடியவர்கள் அதிகமாவார்கள். வெறுக்கக் கூடியவர்கள் குறைந்து விடுவார்கள். மேலும் அவருடைய அந்தஸ்து உயர்ந்துவிடும்.

அறிவினர்களை விட்டு விலகியிருத்தல்

     யார் அறிவினர்களை விட்டும் விளகியிருக்கிராரோ அவர் தனது கண்ணியத்தைக் காத்துக்கொள்வார். மனத்துக்கு நிம்மதி கிடைப்பதோடு தனக்கு துன்பம் தரக்கூடியவைகளைக் கேட்பதை விட்டும் நீங்கிவிடுவார்.

கோபத்தை தவிர்த்தல்

     ஏனெனில் கோபம் உள்ளத்தை எரிகின்ற கனலாகும். இது தண்டிக்கவும் பழிவாங்கவும் தூண்டும். மனிதன் கோபப்படும்போது தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டால் தன்னுடைய கண்ணியத்தையும்
மதிப்பையும் காத்துகொள்வான்.

     என்ன நண்பர்களே ஏதோ, என்றோ படித்தது, மனத்தில் பட்டதை கூற வேண்டும் என்று தோன்றியது , அதன் விளைவு இந்த இடுக்கை.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

பணம் போட்டி பொறாமை

இன்று உலகத்தில் தொழில் போட்டியும் பொறாமையும் கொடி 
கட்டி பறந்து கொண்டு உள்ளது. எந்த நிறுவனத்தை எப்படி அழித்து ,எப்படி தான் மட்டும் முன்னேற வேண்டும் என்பதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிடம் நாம் தெரிந்து கொள்ளலாம், இவர்கள் செய்த வினை இன்று அவர்களால் தலை நிமிர முடியாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சி.

தொழில் போட்டியும் பொறாமையும் எல்லா துறைகளிலும் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்தாலும் ,இன்று அந்த வியாதி இப்பொழுது மருத்துவர்களிடம் தொற்றி கொண்டது.

     சில மாதங்களாக நான் தொலைகாட்சியில் மருத்துவர்களில் கேள்வி பதில் நிகழ்ச்சியை கண்டு வருகிறேன். ஒருவருக்கு ஒருவர் மருத்துவ துறையை மாற்றி மாற்றி குறை கூறிகொள்கின்றார்கள்.

     இதில் என்ன விஷயம் என்றால், ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாது என்பதை,சித்த மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவத்தில் குனபடுத்தலாம்.

     சித்த மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவத்தில் முடியாது என்பதை ஆங்கில மருத்துவத்தில் குனபடுத்தலாம்.

     இதை ஏற்றுகொள்ளும் மனபக்குவம் தான் மருத்துவர்களிடம் குறைவாக உள்ளது.

நோயாளிக்கு மருத்துவர் கொடுக்கும் மருந்தை விட, அவர் வாயில் இருந்து வரும் அன்பான மனதிற்கு ஊக்கப்படுத்துகின்ற வார்த்தைகள், பாதி நோயை குனபடுத்துகின்றது.


      இன்று சித்த ஆயுர்வேதிக் மற்றும் அக்குபஞ்சர் போன்ற மருத்துவம்,  வளர்ந்தது வருகிறது.

     இதற்கு காரணம் ஆங்கில மருத்துவத்தால் ஏற்படும் பின் விளைவுகளே. பின் விளைவு இல்லாத எந்த மருத்துவ துறையையும் மக்கள் வரவேற்க தயாராக உள்ளார்கள்.

நல்ல மனதோடு வைத்தியம் செய்கின்றவர்கள் இருந்தாலும், பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வைத்தியம் செய்பவர்கள் தான், இன்று அதிகமாக உள்ளார்கள்.

     என் அருமை மருத்துவ சகோதரர்களே, மக்களுக்கு நன்மையை ஏற்படுத்த கூடிய ஆங்கில மருத்துவமோ, அல்லது தமிழ் மருத்துவமோ அல்லது யுனானி மருத்துவமோ அல்லது சீனர்களின் அக்குபஞ்சர் போன்ற எந்த துறையாக இருந்தாலும், பின் விளைவற்ற பலன்  மக்களுக்கு கிடைக்குமானால், அதை வரவேற்க தயங்காதிர்கள். அடுத்த மருத்துவ துறையை காட்டி மக்களை அச்சத்திற்கு உட்படுத்தாதிர்கள்.

சனி, 14 ஆகஸ்ட், 2010

கண்ணோட்டம்

       இந்த மண்ணில் பணி புரிவதற்காக கால் பதித்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது.

      எத்தனை எத்தனை மாற்றங்கள். நான் இந்த நாட்டிற்கு வந்ததில் இருந்து, இந்த நாட்டில் கட்டப்படும் எத்தனையோ கட்டிடங்கள் பாலங்கள் விமான நிலையம் துறைமுகம் என்று புதிது புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு தலைவரும் அதற்காக வந்ததும் கிடையாது.

யாரும் தலைமை தாங்கியதும் கிடையாது.

எந்த கட்டவுட்டும் கிடையாது ,எந்த போஸ்டரும் கிடையாது எந்த ஆடம்பர விழாவும் இல்லை.

ஒவ்வொன்றும் எந்த ஒரு அறிவிப்பும் இன்றிதிறந்து விட படுகின்றது.

     சற்று பின்னோக்கி நான் பிறந்த மண்ணை நோக்கினேன். எனக்கு கருத்து தெரிந்து முதல் எத்தனையோ அரசாங்க கட்டிடங்கள் முதல் தனியார் கட்டிடங்கள் வரை யாராவது ஒரு தலைவரோ அல்லது மந்திரியோ இல்லாமல், திறக்க படுவதில்லை. இதற்காக செலவு செய்யும் பணம் சொல்வதற்கில்லை. இதில் சில தனியார் நிறுவனங்கள் தன் பண பலத்தை காட்டுவதற்கு செய்யும் செலவு என்னில் அடங்காது.

     இங்கு மன்னர் இறந்த செய்தி வந்தது கடைகள் அடைக்கபடவில்லை, அனைத்து பணிகளும் எப்பொழும் போல் நடந்து கொண்டு இருந்தது. எந்த ஒரு இடையூறும் இல்லை. ஒவ்வொரு சராசரி மனிதனை எவ்வாறு அடக்கம் செய்ய படுகின்றதோ அது போன்று மன்னருடைய உடலை அடக்கம் செய்தார்கள்.

     உலகத்தில் உள்ள பல தரப்பட்ட தலைவர்கள் எல்லாம் வந்தார்கள். இப்படி ஒரு அமைதியான எந்த ஒரு ஆர்ப்பாட்டமும்

ஆடம்பரமும் இல்லாமல் நடக்கும் சம்பவத்தை பார்த்து அசந்து போய்விட்டார்கள் .

     நம் நாட்டில் தலைவருக்கு உடல் நலம் சரியில்லை என்றாலே, களத்தில் இறங்கி விடுவார்கள். கடைகள் சூறையாடப்படும், பஸ்கள் தாக்கப்படும், நாடு முழுவதும் பணிகள் முடக்கப்படும்.

வெளியில் மட்டும் சொல்லி கொள்வோம், நாங்கள் வளர்ந்து விட்டோம், வல்லரசு ஆகி விட்டோம்.

இது போன்ற விசயங்களில் நாம் எப்பொழுது வளர போகின்றோம்?

நம் வரி பணத்தை விரையம் செய்வதை நாம் எப்பொழுது நிறுத்தப் போகின்றோம்?

நாம் அனைவரும் இந்நாட்டு மன்னர்கள் என  , என்றைக்கு முழங்கப் போகின்றோம்?

வறுமை என்கின்ற கோட்டை என்றைக்கு அழிக்க போகின்றோம்?

மேற்கத்திய கலாச்சாரத்தை பின் பற்றுவதை விட்டு, என்றைக்கு விலக போகின்றோம்?

நம் நாடு நம் மக்கள் நாம் அனைவரும் இந்தியர்கள் நம் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என்கின்ற நிலை என்றைக்கு வரும்..............?

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


.

சனி, 7 ஆகஸ்ட், 2010

ஊனம்


     தொடர்ந்து நான்கு மாதமாக விடுமுறை என்பதே இல்லை.அலுவலக பணியாட்கள் குறைவாக இருந்ததால்,அதிக நேரம் பணி செய்ய வேண்டிய கட்டாயம். இதன் விளைவு, கண் எரிச்சல், சரியென்று மருத்துவரிடம்
சென்றேன். மருத்துவர் கண்ணுக்கு சொட்டு மருந்தும், ஒரு ஆயின்மெட்டும் கொடுத்தார்.

     இரவில் உறங்க போகும் பொழுது ஆயின்மேட்டை போட்டு கொண்டு படுத்து விட்டேன். சிறிது நேரத்தில், என் கைபேசி அழைத்தது. கண்ணை திறந்து என் கைபேசியில் அழைப்பது யாரு என்று காண முயற்சித்து ஒன்றுமே தெரியவில்லை. வெளிச்சமாக தெரிகின்றது, வேறு எதுவுமே தெரியவில்லை.

     இறைவா என்ன சோதனை என்று, தட்டு தடுமாறி போய், எல்லா விளக்குகளையும் போட்டு முயற்சி செய்கின்றேன், அப்பொழுதும் தெளிவாக தெரியவில்லை. சற்று உறங்கி எழுந்தால் தான் சரியாகும் என்பதால், உறங்கி விட்டேன்.

     ஆனால் அந்த சில நிமிடங்கள் சற்று தடுமாறியே போனேன். வாழ்க்கையில் கண் இல்லாதவர்களை சற்று நினைத்து பார்த்தேன்
நெஞ்சம் பகீர் என்றது. இறைவா யாருக்கும் இந்த நிலை வேண்டாம். என்னை அறியாமலே என் உள்ளம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தது.

    சற்று சிந்தித்து பாருங்கள் ஒரு கையை அல்லது ஒரு காலை மடக்கி கொண்டு ஒரு நாள் முழுவதும் நீங்கள் செய்ய வேண்டிய அத்தனை வேலையையும் செய்து பாருங்கள்,அதன் வலி தெரியும்.

     கண் இது ரொம்பவும் கொடுமையானது. நம் கண்ணை மூடி கொண்டு எந்த வேலையையும் செய்து முடிக்க முடியாது.

    என்னமோ தெரியவில்லை ஊனமுற்ற யாரையும் பார்த்தால், என்னை அறியாமலே அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனம் துடிக்கும். சில நபர்கள் ஊனமுற்றவர்களை வசை பாடும் பொழுது, மனத்திற்கு ரொம்ப கஷ்டமாகி விடும், உடலால் மட்டும் ஊனம் உடையவர்களை ,உள்ளதாலும் ஊனம் அடைய வழி வகுத்து  விடுகின்றார்கள்.

     இதை வாசிக்கும் அன்பு உள்ளங்களே ,மற்றும் இனிய நண்பர்களே உங்களால் அவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை என்றாலும் நீங்கள் அவர்களிடம் அன்பான முறையில் பதில் அளியுங்கள், அதுவே அவர்களின் மனத்திற்கு உரமாக அமைகின்றது.

வெள்ளி, 11 ஜூன், 2010

இன்றைய நவீன தொழில் நுட்பங்களும்.........அதன் விளைவுகளும்

இன்று விஞ்ஞான உலகமாக கருத்தபட்டாலும் ,


நம் மக்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகின்றனர்.

அதனால் ஏற்படும் விளைவுகளை காண்போம்.

இன்றைக்கு உலகத்தில் எந்த ஒரு புதிய வரவாக இருந்தாலும் (கார் எலக்ட்ரானிக் பொருள்கள் நவீன கட்டிடகலை) அது முதலில் வளைகுடாவின் சந்தையில் தான் இறக்கபடுகிறது.

கட்டிடகலை


நம் பகுதிகளில் இன்றைக்கு ஓடுகளில் உள்ள வீடுகளை பார்பதற்கு மிக அரிதாக உள்ளது. நம் முன்னோர்களால் கட்டப்பட்ட அந்த வீடுகள் நான்கு புறமும் தாழ்வாரம் நடுவில் முற்றம் வைத்து கட்டபட்டிருக்கும், நன்கு காற்றோட்டமாக இயற்கை காற்று உள் வரும் வண்ணம் அமைந்து இருக்கும். இன்றோ , எங்கு திரும்பினாலும் காங்க்ரிட் வீடுகள். சுவாசிக்கும் காற்று வெளியில் போகாமலும் வெளி காற்று உள் வராமலும் ,அமைந்து உள்ளது. தரையில் போடப்படும் டைல்ஸ் வகைகளால் ,கால்களில் வலி ஏற்படுகிறது. அமர்ந்து சமையல் செய்த காலம் போய், நின்று கொண்டு சமையல் செய்கிறார்கள். அதிக நேரம் நின்று கொண்டு சமையல் செய்வதால் ,கால் களில் நரம்பு சுருட்டு நோய் ஏற்படுகிறது. இயற்கையான காற்று உள்வராததால் குழந்தைளுக்கு சளி தொல்லை அதிகமாக ஏற்படுகிறது.

கார் , மோட்டர் சைக்கிள்








கார் கம்பெனிகள் இன்று போட்டி போட்டு கொண்டு தயாரிக்கும் கார் களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. மோட்டார் சைக்கிள் நிறுவனமோ ஒரு படி மேல் அதி விரைவு மோட்டார் சைக்கிள்களை தயாரித்து, இன்றைய இளைய தலைமுறையின் வாழ்க்கையில் விளையாடுகின்றது.

கைபேசி


இதை இன்று உபயோகிக்காத ஆட்கள் இல்லை என்றே சொல்லலாம். மக்களின் வாழ்க்கையில் சிறிது நேரம் கைபேசி இல்லையென்றல், அப்பப்பா என்ன புலப்பங்கள் . இன்று இதை அதிகம் உபயோகிபவர்களுக்கு செவிகளில் கேட்கும் திறன் பாதிக்கபடுகிறது.




ஓவன்


உணவு பொருள்களை இவற்றில் எளிதில் சூடுபடுத்த பயன்படுகிறது. ஆனால் இவற்றில் சூடுபடுத்துவதால் கேன்சர் போன்ற வியாதிகள் வர வாய்ப்புக்கள் அதிகம் என்று கூறுகிறார்கள்.








சிப்ஸ்



எந்த குழந்தையின் கையில் பார்த்தாலும் சிப்ஸ் பாக்கெட் . இவற்றால் குழந்தைகளுக்கு சிறு நீர் கழிப்பதில் தொந்தரவு ஏற்பட்டு ,உயிருக்கு ஆபத்து விளைவிக்கின்றது.

இப்படியே கூறி கொண்டே போகலாம்.

இவைகளை தடுக்க முடியுமா ? என்ற கேள்வி உங்களுக்கு ஏற்படலாம்.

கஷ்டமான ஓன்று தான்.

இந்த  இடுக்கையின் மூலம் சிலர் சிந்தித்தாலும் ,நான் பெரும் மகிழ்ச்சி அடைவேன்.