தன் சொந்த ஊரை பற்றி கூறும் பொழுது, எல்லோருக்கும்
ஒரு சிறு சந்தோசம் இருக்கும்.
அது போல் எங்கள் சொந்த ஊரை பற்றி எழுதுவதில்
நான் மிக பெருமை அடைகிறேன்.
நாகூர் நா+கூர் நாக்கு கூர்மை உடையவர்கள், அதாவது தமிழ்
ஆர்வலர்கள் அதிகம் உள்ள ஊர் ஆகும். அவ்வாறான
புலவர்களை கடைசியாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
எங்களுடைய ஊர் ஓர் சுற்றுலா தளம். எங்கள் ஊர் தமிழகம்
மற்றும் இலங்கை சிங்கப்பூர் மலேசியா வாழ் தமிழ்
பேசுபவர்கள் அனைவரும் அறிந்த ஊர்.
கட்டிட கலையை பறை சாற்றும் வண்ணமாக உயர்ந்த மினாரா
இங்கு உள்ளது.
இங்கு வசிக்கும் பெரும்பான்மையானவர்கள் மரைக்காயர்
மற்றும் மாலுமியார்கள் என்கின்ற வம்சா வழிகள் பற்றி சிறிது கூற
கடமை பட்டுள்ளேன்.
மரக்கலம் வாணிபம் செய்ததால் இவர்களுக்கு மறைகளைராயர் என்கின்ற
பெயர் மருவி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.பாய் மர கப்பல் முதலாளிகளாகவும்,கப்பலை இயக்குபவர்களாகவும்,இருந்ததால் இவர்களை
மாலிம் என்று அழைக்கப்பட்டனர் .
இவர்கள் பெரும்செல்வந்தர்களாக வாழ்ந்தவர்கள் . கடல் கடந்து
வாணிபம் செய்த பெருமை இவர்களுக்கு உண்டு.
ஆங்கிலேயர்கள்ஆட்சி காலத்தில் , இவர்கள் தொழில்
முழுமையாக நசுக்கப்பட்டது .
இவர்களின் நெசவு தொழிலும் முற்றிலும் அழிக்கப்பட்டது .
அந்த நேரத்தில் சில தலைவர்கள் தன் நாட்டுப்பற்றை நிரூபிக்கவும் ,
ஆங்கிலேயர் மீது உள்ள தன் வெறுப்பை வெளிபடுத்தவும், ஆங்கிலம்
படிக்க கூடாது என்று எடுத்த தவறான முடிவு , எங்கள் ஊர் மக்களை
முற்றிலும் பின் தள்ளி விட்டது.
சமிப காலங்களில் இளைய தலைமுறையின் விழிப்புணர்வால்
இன்று முன்னேறி வருகிறார்கள். இவர்கள் வரலாற்றை
புரட்டினால் நிறைய கூறிக் கொண்டே போகலாம்.
இங்கு உள்ள ஹோட்டல்களில் இரவு உணவுகள் கொத்து புரோட்டா,
மீங்கொரி, லாப்பை, ரொம்ப பிரபலமானவை.
திருமண வைபவங்களில் பிரியாணி மற்றும் ஐந்து வகை புலவு
சாப்பாடு பிரபலம்.
வெளிநாட்டு பொருள்கள் விற்பனை கடைகள் எங்கள் ஊரில் அதிகம்.
அந்த ஏரியாவை கூறும் பொழுது சிங்கப்பூர் கடைத் தெரு என்றே
அழைப்பார்கள்.
எங்கள் ஊரின் எல்லை முடிவு , புதுவை மாநில எல்லை ஆரம்பமாகிறது.
எல்லா ஊர்களுக்கும் நீர் வளம் ரொம்ப முக்கியம், எங்கள் ஊரில் கடல் ஆறு குளங்கள் மற்றும் சுவையான நிலத்தடி நீர் உள்ளது.
எங்கள் ஊரில் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால் அது சுனாமி பாதிப்பு.
புலவர்கள்:
1. ஆயுர்வேத பண்டிதர் வாப்பு மகன் மகா வித்வான் வா.குலாம் காதிறு நாவலர் .
2. பிச்சை நயினார் மகன் பாவகை வல்ல கல்விக்களஞ்சியம் முகம்மதுப் புலவர்.
3. நெ.மதாறு சாகிபு நகுதா மகன் பெரும்புலவர் நெயினா மரைக்காயர் .
4. கி.அப்துல் காதிர் சாகிபு மரைக்காயர் மகன் மதுரகவி வாருதி செவத்த மரைக்காயர்.
5. இபுறாகிம் லெப்பை மரைக்காயர் மகன் இ.கிதுறு முகம்மது மரைக்காயர்
6. மீறா லெவ்வை மரைக்காயர் மகன் அல்லி மரைக்காயர்
7.முகம்மது உசேன் சாகிபு மரைக்காயர் மகன் மு.செவத்த மரைக்காயர்
8. முஆக்கின் சாகிபு நகுதா மகன் முகியுத்தீன் அப்துல் காதிறுப் புலவர்
9. செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முகம்மது சாகிபு மரைக்காயர்
10. அ.தம்பி சாகிபு மரைக்காயர் மகன் சீரியர் செவத்த மரைக்காயர்
11. பகீர் முகியித்தீன் மகன் வாஞ்சூர் பகீர்
12. யூ.சின்னத் தம்பி மரைக்காயர் மகன் யூ.சி.பக்கீர் மஸ்தான்
13. ப.கலீபா சாகிபு மகன் பகீர் முகியித்தீன்
14. முகம்மது நயினா ராவுத்தர் மகன் ‘தரகு’ நாகூர்க் கனி ராவுத்தர்
15. ஆதம் சாகிபு மகன் முகம்மது முகியுத்தீன் சாகிபு
16. தம்பி மாமா மரைக்காயர் மகன் முகம்மது அலி மரைக்காயர்
17. சி.யூசுபு மகன் வாஞ்சூர் பகீர்
18. ச.அப்துல் காதிர் நயினா மரைக்காயர் மகன் முகம்மது முஹிய்யித்தீன் மரைக்காயர்
19. மீ. செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முஹம்மது சாகிபு மரைக்காயர்
20. முகம்மது அலி மரைக்காயர் மகன் முகம்மது இமாம் கஸ்ஸாலி மரைக்காயர்
21.கோ.மு. முகம்மது நைனா மரைக்காயர் மகன் (காரைக்கால்) கோசா மரைக்காயர்.
22. சு.பகீர் முகியித்தீன்
23. செ.கமீது மஸ்தான்
24. ம.முகம்மது மீறா சாகிப் புலவர்.
25. தளவாய் ம. சின்னவாப்பு மரைக்காயர்
26. கா. பெரிய தம்பி நகுதா
27. க.காதிறு முகியித்தீன் சாகிபு
28.இ.செய்யது அகமது
29. மு.சுல்தான் மரைக்காயர்
30. வா.முகம்மது ஹூஸைன் சாஹிபு மகன் மு.ஜெய்னுல் ஆபிதீன் (புலவர் ஆபிதீன்)
31. பண்டிட் எம்.கே.எம் ஹூஸைன்
32. வா.கு. முஹம்மது ஆரிபு புலவர்
33. வா.கு.மு.குலாம் ஹ¤ஸைன் நாவலர்.
இவர்களுள் காலத்தால் முந்தியவர், முதன் முதலில் இலக்கியம் படைத்தவர் பிச்சை நயினார் மகன் முகம்மதுப் புலவர்.
ஆனால் அதிக எண்ணிக்கையிலான பல்வேறு வகைப்பட்ட இலக்கியங்கள்
படைத்தளித்தவர் வா.குலாம் காதிறு நாவலர் ஆவார்.
இவர்களை தொடர்ந்து :
தூயவன்
சொல்லரசு ஜாபர் மொய்தீன்
கவிஞர் சலீம்
சித்தி ஜுனைதா
கவிஞர் z ஜபருல்லா
நாகூர் ரூமி
அப்துல் கயூம்
ஆபிதீன்
அபுல் அமீன்
சாரு நிவேதிகா
ரவீந்தர்
காதர் ஒலி
இதய தாசன்
இன்னும் கூறிக் கொண்டே போகலாம்
எங்கள் ஊரையும் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இந்த சிறிய பதிவு.
என்னை தொடர் பதிவு அழைத்த சகோதரி ஸாதிகா அவர்ககுக்கு மிக்க நன்றி.