கால அட்டவணை

வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாண்டு தொடர் பதிவு 2010 - 2011

சகோதரி ஆசியா உமர் அவர்களின், தொடர் பதிவிற்கான அழைப்பை ஏற்று இந்த இடுகையை வெளியிடுகிறேன்.  

மனிதர்களில் கனவு காணாதவர்கள் இருக்க முடியாது. வாழ்க்கை இப்படி தான் வாழ வேண்டும்.என்று எனக்குநானே ,சில வட்டங்களை போட்டு கொள்வது என் பழக்கம். அன்பான மனைவி  அழகான இரண்டு பிள்ளைகள். என்மகன் 7 வகுப்பு படிக்கின்றார் , என்மகள் 2 வகுப்பு படிக்கின்றார் . இது என்னை பற்றி ஒரு அறிமுகம்.


1 . அன்பாக பேசுவது , நாமெல்லாம் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் என்ற ஒற்றுமையை கடை பிடிப்பது.

2 . சிங்கையில் பணியாற்றும் எனது நண்பர்களோடு, பல ஆண்டுகளுக்கு பிறகு தொடர்பு கொண்டது. இந்த முறை விடுமுறையில் ஊர் சென்றிந்த பொழுது,பத்து ஆண்டுகளுக்கு பிறகு,நாகூரில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் சென்று வந்தேன். ஈரோட்டு மக்களிடம் எனக்கு பிடித்தது, ஊரை சுத்தமாக வைத்து கொள்வது. இன்றும் அவர்கள் அதை கடை பிடித்து வருகிறார்கள்.

3. சும்மா வலைப் பூவில் கிறுக்கி கொண்டு இருந்த என்னை, சகோதரி ஆசியா உமர் அவர்கள், ஒரு அவார்டை கொடுத்து, என்னை எழுத ஊக்குவித்தார்கள். இன்றைக்கு இந்த வலைப் பூ என்னுடைய பொழுது போக்கு.

4. எனக்கு தெரியாமல் எனக்காக என் மனைவி வாங்கி வைத்து, எனக்கு கொடுத்த சில பரிசுகள்.

5. எனது அன்பு மகள் சுதந்திர தினத்தில் பள்ளியில் நடந்த விழாவில் பேசியது. காரைக்கால் F M ரேடியோவில் ஒளிபரப்பானது.

6. பிடித்த மனிதர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு கூற முடியாது. அன்பாக பேசுபவர்கள் அனைவரையும் பிடிக்கும். முதல் அமைச்சர் கருணாநிதியின் பேச்சு தமிழ் நடை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

7. மெஹ்ரான் பிரியாணி மசாலாவில் நான் செய்த பிரியாணி. என் வீட்டில் எல்லாருக்கும் பிடித்து விட்டது.

8. எனக்கு ரொம்ப பிடித்த இடம் ஊட்டி. என் தாய் நாட்டை மிகவும் நேசிப்பவன். ஆதலால் மற்ற நாடுகளை குறிப்பிட மனமில்லை.

9. இந்த ஆண்டில் எனது தம்பிக்கு U K நாட்டு வங்கியில் வேலை கிடைத்தது. இந்த முறை தாயகம் சென்று இருந்த போது,
பல மூதாட்டிகள் ரோட்டில் அனாதைகளாக கிடப்பதை பார்த்து என் கண்கள் கலங்கி விட்டது. நான் இறைவனிடம் அந்த நேரத்தில் கேட்டது, யாருக்கும் இந்த நிலை வேண்டாம் என்று.

10. வாழ்க்கை சாதிக்க வேண்டும் என்கின்ற எந்த நோக்கமும் கிடையாது. வாழ்க்கையில் முடிந்த வரை பிறருக்கு உதவ வேண்டும் என்கின்ற எண்ணம் என் மனதில் எப்பொழுதும் உண்டு.

25 கருத்துகள்:

Unknown சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..

தூயவனின் அடிமை சொன்னது…

கலாநேசன் கூறியது...

நன்றி சகோ, உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

ஸாதிகா சொன்னது…

சகோ மிகவும் எளிய நடையில் பதிவெழுதி மனதை டச் பண்ணி விட்டீர்கள்.வாழ்த்துக்கள்!

தூயவனின் அடிமை சொன்னது…

ஸாதிகா கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.

உங்களை பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

"மெஹ்ரான் பிரியாணி மாசாலா" சான்ஸே இல்லை :) நானும் அந்த கட்சிதான்.

பிரியாணி ரெடி பண்ணி பார்சலில் அனுப்பவும். :)

தூயவனின் அடிமை சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

நன்றி சகோ, உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் ஸ்டார்ஜனுக்கும் அனுப்பி வைத்து விடுகிறேன் பாஸ்.

ஆயிஷா சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துகள் தல!!.

ஆமா, அந்த பிரியாணி விஷயம் ...ம்ம்ம்...சொல்லவே இல்லையே!! எல்லா வீட்டிலும் ரங்ஸ்களின் நிலை இது தானா?? அது சரி!!! ஹி.. ஹி.. இது நமக்குள்ளேயே ரகசியமா(!!??!!) இருக்கட்டும்.

ஆமினா சொன்னது…

//மெஹ்ரான் பிரியாணி மசாலாவில் நான் செய்த பிரியாணி. என் வீட்டில் எல்லாருக்கும் பிடித்து விட்டது. //

அந்த மசாலா என் அண்ணா அனுப்பி வச்சாங்க சவூதியில் இருந்து... அது மட்டுமே சேர்த்து ஆம்பூர் பிரியாணீ மாதிரி இருக்குன்னு வீட்டில் ஒரே பாராட்டு மழை தான்......

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தூயவனின் அடிமை சொன்னது…

ஆயிஷா கூறியது...

வாங்க சகோதரி, உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தூயவனின் அடிமை சொன்னது…

எம் அப்துல் காதர் கூறியது...

பாஸ், இப்படி எல்லாம் நம்மல காட்டி குடுக்க கூடாது. உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தூயவனின் அடிமை சொன்னது…

ஆமினா கூறியது...

வாங்க சகோதரி, உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அதில பிரியாணி பண்ணினா, ரொம்ப நல்ல இருக்கும். சரியா சொன்னிங்க ஆம்பூர் பிரியாணி போல் இருக்கும்.

ஹேமா சொன்னது…

தூயவன்...உங்கள் இளகிய மனம் இப்படியே இருக்கட்டும்.
வாழ்த்துகள்.இனிதாய்
மகிழ்ச்சியாய் வரட்டும் 2011 !

தூயவனின் அடிமை சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

உங்களுடைய நினைவுகளை எங்களோடு பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அட நல்ல பிரியாணி சமைப்பீங்களா.. அப்ப சாப்பிட வந்திடவேண்டியதுதான். நன்றி அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னதுக்கு..

உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

தூயவனின் அடிமை சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

வாங்க பாஸ், உங்களை எப்போவும் மறக்க மாட்டேன்.உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

vanathy சொன்னது…

நல்லா இருக்கு உங்கள் பதிவு. பிரியாணி செய்வதில் பெரிய புலியா இருப்பீங்க போல இருக்கே???
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தூயவனின் அடிமை சொன்னது…

vanathy கூறியது...

வாங்க சகோதரி, ஏதோ செய்வேன், இருந்தாலும் தாய்குலங்கள் ரேஞ்சுக்கு செய்ய முடியாது. உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

cookbookjaleela சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

//பல மூதாட்டிகள் ரோட்டில் அனாதைகளாக கிடப்பதை பார்த்து என் கண்கள் கலங்கி விட்டது. நான் இறைவனிடம் அந்த நேரத்தில் கேட்டது, யாருக்கும் இந்த நிலை வேண்டாம் என்று.//---கவலைதரத்தக்க விஷயம்...

வாழ்க்கை ஒரு சக்கரம் போல...

'நாமும் இதேபோல் வயதானவராய் ஒருநாள் ஆவோம்' என்று நினைக்காதவர்கள் இப்படி முதியவர்களை தூக்கி எறிந்து விடுகின்றனர்...

தூயவனின் அடிமை சொன்னது…

Jaleela Kamal கூறியது...

மிக்க நன்றி சகோதரி. உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தூயவனின் அடிமை சொன்னது…

முஹம்மத் ஆஷிக் கூறியது...

நாமும் ஒரு நாள் இந்த நிலைக்கு தள்ளப்படலாம், என்கின்ற அச்சம் உள்ளவர்கள் தன் பெற்றோரை இப்படி விட மாட்டார்கள். இறை அச்சம் இங்கு ரொம்ப முக்கியமான ஓன்று. கருத்துக்கு மிக்க நன்றில் சகோ.
ilamthooyavan@gmail.com ஓய்வு நேரங்களில் இதில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

தூயவனின் அடிமை சொன்னது…

சிவகுமாரன் கூறியது...

வாங்க சிவகுமாரன், முதல் வருகையிலேயே T ராஜேந்தர் போல வசனத்தை பொழித்து விட்டிர்கள். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .