கால அட்டவணை

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

தோல் பொருட்கள்

     இன்று அதிகமாக ஏற்றுமதி செய்யும் தோல் பொருட்களில் தோல் ஷூ மற்றும் தோல் ஜாக்கெட் ஆகியன முதலிடம் பெறுகின்றன. தோல் பேக், தோல் பெல்ட், மணிபர்ஸ் போன்ற பொருட்களும் ஏற்றுமதியில் இடம் பெறுகின்றன.

தோல் ஜாக்கெட்
     
   இவை மாட்டு தோல் மற்றும் ஆட்டு தோல் இந்த இரண்டிலும் தயாரிக்கின்றார்கள்.



பெரிய நிறுவனங்கள் அவற்றிற்கு தேவையான தோல்களை அவர்களே தங்களுடைய சொந்த தொழிற்சாலையில் தேவைக்கு ஏற்றார் போல் தயாரித்து கொள்வார்கள், இதனால் இவர்கள் இலாபத்தை அதிகமாக பார்க்க முடிகிறது. தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லாத

சிறிய நிறுவனம், (சென்னை) பெரியமேட்டில் உள்ள தோல் விற்பனையாளர்களிடம் சென்று ,அவர்களுக்கு வேண்டிய தரத்தை உடைய தோலை கொள்முதல் செய்வார்கள்.

தோல் ஜாக்கெட் தயாரிக்க தையல் தெரிந்தவர்களும், தையல் மெஷினும் (இயந்திரமும்) முக்கியம்.இந்த நிறுவனத்தை நடத்துபவர்கள் ,தோல் பற்றி அறிந்து இருப்பது நன்று. இவர்கள் தனக்கு கிடைத்த ஆர்டருக்கு ஏற்றாற்போல் பல மாடல்களை தயாரிக்கின்றனர். இந்த தொழிலை யாரும் தொடங்கலாம்.

தோல்  ஷூ


இந்த தொழில், நவீன தொழில் நுட்பத்தை மையமாக கொண்டது. இதை தயாரிக்க பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் அவசியம். அப்பர் தனியாகவும் லைனிங் தனியாகவும் பாட்டம் தனியாகவும்
தயாரிக்கப்பட்டு ,பிறகு மூன்றையும் ஒன்றாக இணைத்து,
ஷூவை முழுமை அடைய செய்கிறார்கள். சிறிய நிறுவனங்கள் லைனிங் மற்றும் பாட்டங்கள் தயாரித்து இவர்களுக்கு சப்ளை செய்கிறார்கள். பெரும்பான்மையான இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த தொழிலை தொடங்க அதிக முதலீடு தேவை படுகிறது. தொழில் நடத்துபவர் தோலை பற்றியும், அதன் தரம் பற்றியும் அறிந்து இருக்க வேண்டும்.


இந்த தொழிற்சாலைகளில் பேட்டன் எடுத்து கட்டிங் செய்து கொடுக்கும் மாஸ்டர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சரியான முறையில் பேட்டன் செய்து கொடுக்க வேண்டும்.


தோல் வேஸ்ட் ஆகாமல் கட்டிங் செய்து கொடுப்பது மூலம், அந்த நிறுவனம் எந்த சேதாரமும் இல்லாமல், தன்னுடைய இலாபத்தை பார்க்க முடியும். இது அல்லாமல் கட்டிங் செய்யும் போது, கழியும் சிறு சிறு தோல்களை எடுத்து அவற்றை கொண்டு ,கீ செயின்
மற்றும் சிறிய பர்ஸ் போன்ற சில பொருள்கள் செய்து பயன் அடையலாம். பெரும்பான்மையான தோல் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாட்டிற்கு அந்நிய செலவாணி கிடைக்கின்றது.

கழிவு நீர்

     சகோதரி ஹுசைனம்மா அவர்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு பற்றி விவரிக்க சொல்லி இருந்தார்கள். இந்த இடத்தில் அது பற்றி கொஞ்சம் கூற கடமை பட்டுள்ளேன். வெளியேறும் கழிவு நீரை பெரிய தொட்டியில்
சேகரித்து, அவற்றை இயந்திரத்தின் உதவியுடன் சுத்திகரித்து ,பிறகு அவற்றை அதற்கு என ஒதுக்கப்பட்ட
தொட்டியில் சேகரித்து ,அந்த தண்ணிரை மீண்டும் உபயயோகப்படுத்துகிறார்கள். சுத்திகரிப்பு நிலையத்தை
உருவாக்குவதற்கு மட்டும் இவர்களுக்கு பெரும் தொகை செலவு செய்யப்படுகிறது.


என்ன நண்பர்களே! இன்னும் நிறைய கூற வேண்டும் என்று தான் ஆசை. வேலை நிமித்தம் காரணமாக முடியவில்லை.

28 கருத்துகள்:

ராஜவம்சம் சொன்னது…

விளக்கத்திற்க்கு நன்றி.

புல்லாங்குழல் சொன்னது…

படங்களுடன் கூடிய விளக்கங்கள் நன்றாக உள்ளது.

தூயவனின் அடிமை சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

வாங்க ராஜவம்சம், உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஒ.நூருல் அமீன் கூறியது...

வாங்க பாஸ், உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

வலையுகம் சொன்னது…

சகோதரர் அவர்களே
இது உங்கள் துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரையா? ரொம்ப சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்
உங்களுக்கு ஒட்டும் போட்டாச்சு

Unknown சொன்னது…

தெளிவான பதிவு...இன்னும் தொடரலாமே...

ஆமினா சொன்னது…

படத்தோட கூடியவிளக்கங்கள் அருமையாக இருந்தது

தூயவனின் அடிமை சொன்னது…

ஹைதர் அலி கூறியது...

வாங்க சகோ. இந்த துறையில் எனக்கு அனுபவமும் உண்டு,நான் வெளிநாடு வருவதற்கு முன் சென்னை ஈரோடு போன்ற இடங்களில் பணியாற்றி உள்ளேன். பரவாயில்லையே கண்டு புடிச்சிட்டிங்க.மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

கலாநேசன் கூறியது...

வாங்க பாஸ், முயற்சி செய்றேன்,கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஆமினா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். சமயம் கிடைக்கும் போது மேலும் பகிருங்கள்.

ஹேமா சொன்னது…

இரண்டு பதிவுகளையும் படித்தேன் தூயவன் !

தூயவனின் அடிமை சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது..

வாங்க பாஸ், முயற்சி செய்கிறேன், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி, மிக்க சந்தோசம் ,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா சொன்னது…

அறிந்து கொள்ள வெண்டிய விபரம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ இளம்தூயவன்.

Asiya Omar சொன்னது…

நல்ல பகிர்வு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

தெளிவான குறிப்பூகள்! முழுமையான
விளக்கங்கள்! அதேசமயம் சுவையாய்
வழங்கினீர்கள். இதை, பகுதி 1,
பகுதி 2 என்று போட்டு அவ்வப்போது
அவசியம் தொடருங்கள் என்று
கேட்டுக் கொள்கிறேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

ஹுஸைனம்மா சொன்னது…

நல்ல விவரத் தொகுப்பு. நன்றி.

//கழிவு நீர் சுத்திகரிப்பு பற்றி விவரிக்க சொல்லி//

நீங்கள் இந்தத் துறையில்தான் இப்போது இருக்கிறீர்கள் என்று நினைத்துக் கேட்டேன். தோல் பதனிடும் நிறுவனங்களின் கழிவு நீர் எப்போதும் சர்ச்சைக்குள்ள விஷயமாகவே இருப்பதால் அவர்கள் தரப்பையும் தெரிந்துகொள்ளலாமே என்று கேட்டேன். முடிந்தால் எழுதுங்கள்.

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், கொஞ்சம் வேலை நிமிர்த்தம் காரணமாக உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஹுஸைனம்மா கூறியது...

வாங்க சகோதரி,நிச்சயம் கழிவு நீர் பற்றி அதை ஒரு தனி இடுக்கையாக நிச்சயம் போடுகிறேன்.கருத்துக்கு மிக்க நன்றி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர் இளம் தூயவன்...
உங்கள் துறை சார்ந்ததொரு மிக்க வித்தியாசமான கட்டுரைகள். நன்றி.

ஒவ்வொரு தடவையும் ஹஜ் பெருநாள் சமயம் குவியும் ஆட்டுத்தோல்/மாட்டுத்தோல் எல்லாம் தோல் பதனிடும் தொழிற்சாலை செல்வது தெரியும். (கேட்டுத்தெரிந்து கொள்ள நினைத்து பின் மறந்துவிடும்). தொழிற்சாலையில் அங்கே எப்படி பதனிடப்பட்டு தயாரிப்புக்கு ஏற்ற தோலாய் மாற்றப்படுகிறது என்று சென்ற கட்டுரையில் தொழிற்சாலைக்கே கூட்டிப்போய் சொல்லிக்குடுத்தது மாதிரி இருந்தது. அருமையான விளக்கம்.

ஒரு ஆட்டின் தோல் (தஞ்சை-பாபநாசத்தில்) சென்றமாதம் 90 ரூபாய்க்கு எடுத்துக்கொண்டார்களாம். அப்படியெனில், பதனிடும் செலவு போக அதில் எந்த அளவுக்கு இலாபம்?

தூயவனின் அடிமை சொன்னது…

முஹம்மத் ஆஷிக் கூறியது...

அலைக்கும் சலாம்

தோல் வியாபாரம் தூக்கினால் பெரும் லாபம், சறுக்கினால் முதலுக்கே மோசம். தோல் உடைய தரம் வெட் ப்ளூ என்கின்ற ஸ்டேஜ் வரும் பொழுது தான் தெரியும் அதனுடைய தரம். முடிகள் அகற்ற பற்று பதபடுத்த பட்ட பின்னர் தான் தோல் மேனியில் உள்ள காயங்கள் கொப்புளங்கள் அனைத்தும் தழும்புகளாக தெரியும் ,தழும்புகள் அதிகம் உள்ள தோள்கள் நல்ல விலைக்கு விற்க முடியாது. உங்களிடம் 90 ரூபாய்க்கு வாங்கிய தோல், பதப்படுத்திய பின் சில தோல்கள் 50 ரூபாய்க்கு மேல் போகாது , சில தோள்கள் நல்ல விலைக்கு போகும், தோல் வாங்குபவர்கள் தோலை பற்றி தெரிந்து இருந்தால் தான், இந்த தொழிலில் தாக்கு பிடிக்க முடியும்.
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

vanathy சொன்னது…

நல்லா இருக்கு. சுத்தமான லெதர் ஜாக்கெட் வாங்குவது அவ்வளவு சீப் இல்லை. மிகவும் காஸ்ட்லியா இருக்கும். ஷூக்களும் அதே கதை தான்.
படங்கள், விளக்கங்கள் எல்லாம் சூப்பர்.

Asiya Omar சொன்னது…

http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_29.html
உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

vanathy கூறியது...

வாங்க சகோதரி, தரத்திற்கு ஏற்ற விலை உண்டு . உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, நம்மள வம்புல மாட்டி விட்டுட்டிங்க.