கால அட்டவணை

சனி, 18 டிசம்பர், 2010

தோல் (LEATHER )

இன்று இந்தியாவில் ஏற்றுமதி தொழிலில் முக்கிய பங்கு, தோல் வியாபாரத்திற்கு உண்டு.

     இந்தியாவில் தயாரிக்கப்படும் தோல் பொருள்கள், ஐரோப்பா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

பொருள்கள் தயாரிப்பதற்கு தோல் எவ்வாறு பதனிடப்படுகின்றது என்று பார்ப்போம்.

தோல்கள் - இவை மூன்று வகைகளாக பிரிக்கலாம் .

1. மாட்டு தோல்

2. ஆட்டு தோல்

3. எருமை தோல்

அதிகமாக பொருள் தயாரிக்க பயன்படுவது மாட்டு தோலும் ஆட்டு தோலும் தான் .

பச்சை தோல்(RAW )

     இறைச்சி கடைகளில் இருந்து பெறப்படும் இந்த தோலை சிறு வியாபாரிகள் முதலில் உப்பிட்டு பதனிடுகிறார்கள். அதன் பின் அவற்றை மொத்த வியாபாரிகளிடம் விற்று விடுகிறார்கள்.

மாட்டு தோல் பதனிடுவதற்கு ஈரோட்டுக்கும், ஆட்டு தோல் பதனிடுவதற்கு வாணியம்பாடி, ஆம்பூர், ராணிபேட்டை போன்ற ஊர்களுக்கும், மொத்த வியாபாரிகள் எடுத்து செல்கிறார்கள்.

பதனிடும் முறை :

     முதலில் இரண்டு நாள் பெரிய தொட்டியில் ஊற வைத்து அவற்றில் உள்ள உப்புகளை அகற்றுவார்கள்.

     பிறகு மேனியில் உள்ள முடிகளையும் மற்றும் ஜவ்வுகளையும் அகற்றுவதருக்கு சில கெமிகல்களை தொட்டி (யி) ல் போட்டு மீண்டும் ஊற வைப்பார்கள்.


       நன்கு ஊறிய பிறகு அவற்றின் மீது உள்ள முடிகளையும் உள் பகுதியில் உள்ள ஜவ்வுகளையும், கட்டையின் மீது சாய்த்து வைத்து பெரிய கத்திகளால் அகற்றுவார்கள். அதன் பின் தோலை நன்கு கழுவி விட்டு. பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட டிரம்மில் போட்டு அவற்றில் கெமிக்கல் போடப்பட்டு சில மணி நேரம் அவற்றை சுற்ற விடுவார்கள். பிறகு கெமிக்கல் போடப்பட்ட தண்ணிரை அகற்றி விட்டு, டிரம்மில் தண்ணீர் மட்டும் செலுத்தி கழுவுவார்கள்.



     பிறகு அந்த தோலை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து தண்ணீர் வடிய வைப்பார்கள்.

     நான்கு நாட்களுக்கு பிறகு அவற்றை வகை பிரிப்பார்கள். இதற்கு வெட் ப்ளூ என்று கூறுவார்கள்.

வகைகள்

ஓன்று

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

ஆறு

என்று வகை படுத்துவார்கள். அவற்றில் ஓன்று, இரண்டு மற்றும் மூன்று வகைகள் சதுர அடி நல்ல விலைக்கு விற்கப்படும். நான்கு, ஐந்து மற்றும் ஆறு சதுர அடி குறைவான விலைக்கு விற்கப்படும்.

      இதன் பின் பொருள் தயாரிக்கும் நிறுவனம் அவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் அவற்றிற்கு கலர் ஏற்றுவார்கள், அந்த கலர் ஏற்றுவதற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட டிரம் பயன்படுத்துவார்கள். மேனியில் கலர் ஸ்ப்ரே மூலம் பெய்ண்ட் ஏற்றுவார்கள் .

     தோல் கோட்டுகள் தயாரிப்பதற்கு அதற்கு ஏற்றார் போல் மாற்றுவார்கள். ஷூ தயாரிப்பதற்கு அதற்கு ஏற்றார் போல் மாற்றுவார்கள்.




     இதற்கு என்று தயாரிக்கப்பட்ட இயந்திரங்களும் உண்டு. இதுவரை தோல் பொருள்கள் செய்வதற்கு எவ்வாறு பதப்படுத்த படுகிறது என்று பார்த்தோம். பொருள்கள் எவ்வாறு தயாரிக்கபடுகின்றது என்பதை பிறகு காணலாம்.

26 கருத்துகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

தோல் பற்றிய சுவையான தகவல்களைத்
தந்துள்ளீர்கள், இளம்தூயவன்.
தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.

Chitra சொன்னது…

Interesting facts. Thank you.

ஹுஸைனம்மா சொன்னது…

புதிய தகவலகள். இன்னும் விளக்கமாகப் படங்களுடன் சொல்லிருக்கலாம்.

தோல் பதனிடும் துறையில் நடக்கும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படுதல் முறைகள் குறித்தும் சொல்லுங்களேன்.

ஆயிஷா அபுல். சொன்னது…

நல்ல பதிவு சகோ.

அடுத்த பதிவை எதிபார்க்கிறேன்.

நானும் சென்னையில் எக்ஸ்போர்ட்
பண்ணுகிறேன்.

ஸாதிகா சொன்னது…

தோலைப்பற்றி விளக்கமாக சொன்னமைக்கு நன்றி.தொடருங்கள்,

Philosophy Prabhakaran சொன்னது…

தோல் பற்றி தெரியாத தகவல்களை தெரிய வைத்ததற்கு நன்றி...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மிக்க பயனுள்ள தகவல்கள்.

பகிர்வுக்கு நன்றி தல. தொடர்ந்து வெளியிடுங்கள்.

சவுதி பற்றிய உங்கள் கருத்துக்களையும் பதிவாக போடலாமே.

தூயவனின் அடிமை சொன்னது…

வாங்க பாஸ், நிச்சயம் எழுதுகிறேன், கருத்து மிக்க மகிழ்ச்சி.

தூயவனின் அடிமை சொன்னது…

Chitra கூறியது...

வாங்க சகோதரி,கருத்து மிக்க மகிழ்ச்சி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஹுஸைனம்மா கூறியது

வாங்க சகோதரி,கருத்து மிக்க மகிழ்ச்சி.
கழிவு நீர் சுத்தி கரிப்புக்கு, அருமையான முறையில் செயல் படுத்தப்படுகிறது.ஜெயலலிதா ஆட்சி காலத்தில்
இந்த தொழிலுக்கு கொடுத்த தொந்தரவு, எந்த ஆட்சியிலும் கிடையாது. இவற்றை நேரம் கிடைக்கும் பொழுது
விவரமாக எழுதுகிறேன்

தூயவனின் அடிமை சொன்னது…

ஆயிஷா அபுல் கூறியது..

வாங்க சகோதரி,கருத்து மிக்க மகிழ்ச்சி.
உங்கள் ஏற்றுமதி தொழில் தோல் சம்பந்தப்பட்டதா ?

தூயவனின் அடிமை சொன்னது…

ஸாதிகா கூறியது...

வாங்க சகோதரி,கருத்து மிக்க மகிழ்ச்சி.

தூயவனின் அடிமை சொன்னது…

philosophy prabhakaran கூறியது..

வாங்க நண்பரே , கருத்து மிக்க மகிழ்ச்சி.

தூயவனின் அடிமை சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது..

வாங்க பாஸ்,முன்பே நான் சவுதியை பற்றி எழுதியுள்ளேன் , தமாம் பக்கம் நேரம் கிடைக்கும் பொழு வரவும், ஸ்டார்ஜனையும் அழைத்து வாருங்கள், கருத்து மிக்க மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் சொன்னது…

சூப்பரா வந்திருக்கு!! இன்னும் கொஞ்சம் விரிவாக விவரித்து எழுதுங்கள் பாஸ்.

எம் அப்துல் காதர் சொன்னது…

(சந்தேகம் ஏதும் வந்தா உங்க பீச்சாங்கை பக்கம் தான் நான் உட்கார்ந்திருப்பேன். ஸ்ஸ்ஸ்... என்று சவுண்ட் கொடுங்க. நான் 'பிட்டை' போடுறேன். எழுதிடுங்க. சரியா!!! ஹி..ஹி..ஹி..)

Asiya Omar சொன்னது…

நல்ல தகவல்.மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

எம் அப்துல் காதர் கூறியது

பாஸ், இருந்தாலும் இவ்வளவு குசும்பு கூடாது. எப்படி..................

தூயவனின் அடிமை சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

tamilcinemablog சொன்னது…

தோல் பற்றிய தகவலுக்கு நன்றி
இவன்
http://tamilcinemablog.com/

மனோ சாமிநாதன் சொன்னது…

அனைத்தும் அறிவுப்பூர்வமான தகவல்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!

தூயவனின் அடிமை சொன்னது…

tamilcinemablog கூறியது...

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

மனோ சாமிநாதன் கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி . சகோதரி நீங்கள் தஞ்சை மாவட்டம்மா ?

Krishnaveni சொன்னது…

very informative, nicely written post, thanks sir

தூயவனின் அடிமை சொன்னது…

Krishnaveni கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் சொன்னது…

உங்களுக்கு "அவார்ட்" கொடுத் திருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!! நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html