கால அட்டவணை

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

நான் பிரதமர் ஆனால்....?

 
       ஒரு ரூபாய் சம்பளம் போதும் என கூறி, உங்கள் பணத்திற்கு உலை வைக்க மாட்டேன்.

இந்த நாட்டை ஆட்டி படைக்கும் முதலாளி எனும் பண முதலைக்கு முதல் ஆப்பு.

தேர்தலில் வெற்றி பெரும் உறுப்பினர்கள் கட்டாயம் அவைக்கு வர வேண்டும். அவை பாராளுமன்றமோ சட்ட மன்றமோ நகராட்சியோ
மூன்று முறைக்கு மேல் அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால், உறுப்பினர் பதவி பறிக்கப்படும்.

அரசுக்கு உரிய நிறுவனங்கள் அரசாங்கத்தாலேயே நிர்வகிக்கப்படும்.
தனியாருக்கு தாரை வார்க்கும் பேச்சுக்கே இடமில்லை.

அரசு அதிகாரிகள் நடவடிக்கை ரகசியமாக கண்காணிக்கப்படும்.

உழல் பெருச்சாளிகள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு அரசு வேலையில் இருந்து நீக்கப்படுவார்.

ஆதாரம் இல்லாமல் பொய் வழக்கு போடும் காவல் துறை அதிகாரிகள் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மது, சிகரெட் என்கின்ற பேச்சுக்கே இடம் கிடையாது .அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் முற்றிலும் அழிக்கப்படும்.

சூதாட்ட கிளப்களுக்கு கொடுக்கப்பட்ட லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.

தேர்தலில் போட்டி இடுபவர்கள் தேர்தலில் பணத்தை செலவு செய்ய அனுமதி கிடையாது, அரசே அவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும்.

திறப்பு விழா என்று ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது, புதிதாக
கட்டப்படும் கட்டடம் மற்றும் நிறுவனங்களும் பணி முடிந்தவுடன் உடனே திறக்கப்படும்; யாருக்காகவும் காத்திருக்காது.

சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை அவர்களே கொண்டு வந்து கொடுத்தால், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் . அந்த பணத்தில் இந்தியாவுடைய கடன்கள் அடைக்கப்படும்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை இந்திய பணத்திலேயே நிர்ணயிக்கப்படும்,அந்நிய நாட்டு பணத்திற்கு அனுமதி கிடையாது.

இந்தியாவில் இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைகளுக்கு வட்டி வழங்கப்படாது என்று சட்டத் திருத்தம் செய்யப்படும்.

மக்களின் அத்தியாவசிய பொருள்கள் குறைந்த விலையில் மட்டுமே விற்கப்படும். அதன் விலையை அரசே நிர்ணயிக்கும்.

இருபத்து ஐந்து வயதில் கட்டாயம் அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு படிக்க விரும்புபவர்கள் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படிக்கலாம். அந்த செலவை அரசே ஏற்று கொள்ளும். குடும்பத்தோடு தங்குவதற்கு வசதிகளும் செய்து கொடுக்கும்.

வெளியூரில் பணியாற்றுபவர்களுக்கு, குடும்பத்தோடு தங்கி பணியாற்ற அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

ஐம்பது வயதில் கட்டாயம் ஓய்வு மற்றும் ஓய்வு ஊதியம் வழங்கப்படும்.

இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைவரும் உழைக்க வேண்டும்.

பிள்ளைகள் உயிருடன் இருந்து பெற்றோரை கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்தால் , அவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும். அவர் அரசு உழியர் ஆக இருந்தால், பணி நீக்கம் செய்யப்படுவார்.

மக்கள் தொகை சரியாக கணக்கு எடுக்கப்பட்டு , அனைவருக்கும் அரசு வேலை கொடுக்கப்படும். [என்னது?!!! அனைவருக்கும் அரசு வேலையா?!!!!!!!
அப்படின்னா தனியார் நிறுவனங்கள், தனியார் ஊழியர்கள் - ???]
அவர்களுக்கும் அரசு உழியர்களுக்கு உள்ளது போல் செய்து கொடுக்க சட்டத் திருத்தம் செய்யப்படும்.

அரசு மருத்துவமனைகள், அரசு கல்வி கூடங்கள் அதிகரிக்கப்படும். இதன் சேவைகள் மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும். இதை வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்படும்.

இதற்கு மேல் இவர்கள் என்னை உயிருடன் விட்டு வைத்தால்....?


உலகத்தின் தலையில் கை வைப்பேன்.

முதலில் ஐக்கிய நாட்டு சபையை கலைப்பேன்.

மனித இனத்தை அழிக்க கூடிய ஆயுதங்களை அழிக்க அனைத்து நாடுகளுக்கும் அவகாசம் கொடுப்பேன்.

இந்தியாவை மையமாக கொண்டு புதிய உலக நாடுகள் சபை ஒன்றை ஆரம்பிப்பேன்.

அதில் யாருக்கும் வீட்டோ பவர் என்கின்ற பேச்சுக்கு இடமே கிடையாது.

அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் வழங்கப்படும்.

இங்கு தோலின் நிறத்தை வைத்து சலுகைகள் வழங்கப்பட மாட்டாது.

உலக மக்களுக்கு தேவையான அனைத்து பொருள்களும், அனைத்து நாடுகளிலும் ஒரே விலை நிர்ணயிக்கப்படும். இதில் ஏற்ற தாழ்வு என்கின்ற பேச்சுக்கே இடம் கிடையாது .

பெட்ரோல் மற்றும் தங்கம் இவைகளுக்கு உலகம் முழுவதும் ஒரே விலை நிர்ணயிக்கப்படும்.

நடக்குமா ........? பிரதமர் பதவி கிடைக்குமா....? உடலில்

உயிர் நிலைக்குமா.....? ஹி.....ஹி......ஹி.......சும்மா தமாஷ்.

உங்கள் பொன்னான வாக்குகளை கருத்துரையாக இட்டு செல்லவும்.
வியாழன், 24 பிப்ரவரி, 2011

போட்டி

யாருக்கு போட்டி

எதற்கு இந்த போட்டி

ஏன் இந்த போட்டிமுத்தம் போட்டி.......ஆம்

காம கயவர்கள்

மனம் குளிர இந்த போட்டிஉலக அழகி போட்டி......ஆம்

உன்னவன் ரசிக்க வேண்டியதை

ஊரான் ரசிக்கின்றான்இதற்கு பெயர் போட்டியா?

ஊரை கேட்டியா?

காறி உமிழ்வாள் உன் பாட்டி.
புதன், 23 பிப்ரவரி, 2011

அறிமுகம்

     நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது நண்பர் டாக்டர் அஜீஸ் அவர்களை லண்டன்க்கு தொடர்பு கொண்டு பேசினேன் . பல விசயங்களை பேசிக்கொண்டு இருக்கும் பொழுது வலைப்பூ பற்றி பேச்சு வந்தது, என் வலைப்பூவை பற்றி அவரிடம் சொல்லும் பொழுது அவருடைய ஆங்கிலத்தில் உள்ள வலைப்பூவை என்னிடம் அறிமுகம் செய்தார். மின் அஞ்சல் மூலம் இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்குவதாக
கூறினார். நண்பர்களே உடல் ரீதியான சந்தேகங்களை நீங்களும் மின்
அஞ்சல் மூலம் கேட்டு தெளிவு பெற இந்த முகவரியை தொடர்பு கொள்ளவும்.
மின் அஞ்சல் முகவரி: drakaardu@yahoo.co.uk
வலைப்பூ: http://tamilpatients.weebly.com/index.html


ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தேவை....

யாருக்கு இல்லை........தேவை


உன்ன உணவு தேவை

உடுத்த உடை தேவை

அருந்த நீர் தேவை

சுவாசிக்க காற்று தேவை

வாழ்க்கைக்கு துணை தேவை

பாசத்திற்கு பிள்ளை தேவை

அறிவுக்கு கல்வி தேவை

அமைதிக்கு கண்ணியம் தேவை

நாட்டை ஆள அறிவு தேவை

பிறரை நேசிக்க நல்ல மனம் தேவை

ஆசைக்கு பதவி தேவை

வியாதிக்கு பணம் தேவை

ஒட்டு மொத்தத்தில் நல்ல குணம் தேவைபுதன், 16 பிப்ரவரி, 2011

இல்லை.......இல்லை......?

இல்லை என்று

யாருக்கும் சொல்லவில்லை

என்கிறான் அவன்அவனே கூறும் பொழுது

நாம் அப்படி

கூறலாமா என்ன?அவன் நாடினால்

நிச்சயம் நடக்கும்

அதற்கு உரிய நேரத்தில்மனிதா உன் பலமும்

உன் பலவீனமும்

இன்று பணமே...மனம் என்னும்

வார்த்தை இன்று

காற்றில் கரைகிறது........சனி, 12 பிப்ரவரி, 2011

ஆணவம் நிலைக்குமா?....

     உலகத்தை ஆள பிறந்தவன் என்று கூறி கொண்டு ஆட்டம் போட்ட அமெரிக்கா.


இன்று அந்நிய நாடுகளிடம் அடிபணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் செய்த அட்டுழியங்கள் கொஞ்சமா? . உலக முழுவதும் செய்யப்படும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் இவர்கள் நாட்டு பணத்தில் தான் அனைவரும் செய்ய வேண்டும். ஐக்கிய நாட்டு சபையை உருவாக்கியதன் குறிக்கோள் ஒன்றாக இருக்கலாம். அதன் உள் நோக்கம் வேறு, உலகத்தின் மத்தியில் அவர்கள் நடத்திய நாடகங்கள், ரொம்ப அருமையாக அரங்கேறின.

(1) மனித உயிர்களை கொல்லும் ஆயுதங்களை பெரும் அளவில் தயாரித்து, அவற்றை உலகத்தில் உள்ள நாடுகளை பயமுறுத்தி அவர்களிடம் தன் ஆயுதங்களை விற்பனை செய்வது.

(2) அதற்கு பணிய மறுக்கும் நாடுகளில், இவர்களின் கை கூலிகளை கொண்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்து , பின் அவர்களிடம் தன் ஆயுத விற்பனையை தொடங்குவது.

(3) அமெரிக்காவின் புலனாய்வு துறை மிக திறமையானது என்று
உலக அளவில் காட்டி கொள்வதற்கு, இவர்கள் செய்யும் பித்தலாட்டம், ஒவ்வொரு நாட்டினரிடம் சென்று உங்கள் நாட்டை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த போகிறார்கள் என்று கூறி பயம் முருத்துவது. எங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்று ஆணவமாக பேசுவது.

(4)அடுத்த வீட்டு பொருளுக்கு ஆசை படுவது. பெட்ரோலுக்கு ஆசை பட்டு
பாலைவனத்தில் மண்ணை கவ்வினார்கள்.

போரின் போது இவர்கள் செய்து வந்த நரி தனம் ஆப்கானிஸ்தான் மீது இவர்கள் போர்தொடுத்த பொழுது, வெட்ட வெளிச்சமானது.

இவர்கள் எந்த நாட்டின் மீது போர் தொடுக்க போகிறார்களோ, அந்த நாட்டின் பெயரை அறிவிப்பார்கள். உடனே அங்கு தொலைகாட்சி நிருபர்கள் சென்று விடுவார்கள் , நிருபர் என்கின்ற போர்வையில் இவர்களின் கைகூலிகள் (ஒற்றர்கள்) அங்கு உளவு பார்க்கும் பணிய தொடங்கி விடுவார்கள்.

பிறகு என்ன இவர்கள் நினைத்த காரியம் கச்சிதமாக முடிந்து விடும். இப்படி ஒரு கேவலமான செயலை உலகில் அரகேற்றம் செய்தவர்கள் தான் இந்த அமெரிக்கர்கள். இவர்களின் அயோக்கிய தனத்தை இன்று ஒரு இணை[ய]த்தளம் வெட்ட வெளிச்சமாக்கி கொண்டு உள்ளது. எதிர் காலத்தில் ஒரு நாட்டின் வரலாற்றை படித்து காறி துப்புவார்கள் என்று சொன்னால், அது நிச்சயமாக அமெரிக்காவின் வரலாறாகத்தான் இருக்கும்.

இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவம், இதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்க தக்கவர்கள். இதை தகர்த்த
 உண்மையான குற்றவாளிகளை இவர்களால் இதுவரை கண்டு பிடிக்க
முடியவில்லை.

நிலைமை இப்படி இருக்க ,இவர்கள் மற்ற நாட்டை பார்த்து,
உன்னை தீவிரவாதிகள் தாக்க போகிறார்கள்', என்று அறிவிப்பு விடுவது. உடனே தன் நாட்டு மக்களை யாரும் அந்த நாட்டிற்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு விடுவது.

இராக்கில் போரில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் எத்தனை பேர் மனநிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ரகசியமாக திருப்பி அனுப்பினார்கள் என்று தெரியுமா? ,இப்படி பல விசயங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போய் விட்டது.

சமீப காலமாக இவர்கள் கண்களுக்கு இந்தியாவின் வளர்ச்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. மத்திய அரசு திறமையாக செயல் படுவதால், இவர்களின் பாச்சா பலிக்கவில்லை. இன்று இவர்களின் மிரட்டலை எந்த ஒரு சிறிய நாடும் மதிப்பதில்லை.

வளைகுடா நாட்டில் கம்பீரமாக வாழ்ந்த அமெரிக்கர்கள் இன்று அஞ்சி
வாழக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பிறரை அடிமை படுத்தி வாழும் வாழ்க்கை, நிலைத்து நிற்காது. அது நாடாக
இருந்தாலும் சரி, தனி நபராக இருந்தாலும் சரி.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

சில நேரங்களில் சில மனிதர்கள்

     இவை மின் அஞ்சல் மூலம் எனக்கு வந்தது, அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இதை அனுப்பிய நண்பருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

தற்கொலை...​...?


ஏன் இந்த தற்கொலை

யாருக்காக இந்த தற்கொலைஎதற்காக இந்த தற்கொலை

இதனால் நீ சாதிக்க தான் முடியுமா?உன் தற்கொலையை

பயன் படுத்தி சாதித்தவர்கள் யார்?நீ பின்பற்றும் மார்க்கம்

உன்னை தற்கொலைக்கு அனுமதிக்கிறதா?இந்த கொலை செயலை

செய்ய தூண்டியவர்கள் யார்?இந்த செயலை

அவர்கள் செய்வார்களா?இல்லை அவர்கள்

குடும்பத்தை செய்ய அனுமதிப்பார்களா?உன்னை பயன்படுத்தி அவன்

கண்ட இலாபம் உனக்கு தெரியுமா?இதற்கு பெயர் வீரமா?

இல்லை இல்லை இது கோழையின் செயல்போராடு போராடு

நேர்மையான முறையில் போராடுஉன் உடலில் வலிமை

உள்ளவரை போராடுவெற்றி நிச்சயம்! உன்

நேர்வழிக்கு வெற்றி நிச்சயம்!!புதன், 2 பிப்ரவரி, 2011

கொடுக்கவில்லை....
மனிதா...


இறைவன் உனக்கு

எதை கொடுக்கவில்லை என்கிறாய்இந்த உலகத்தையும் அதன்

வெளிச்சத்தையும் காண

இரண்டு கண்களை கொடுத்துள்ளான்உன் தேவைகளை செய்துகொள்ள

பிறரின் தேவைக்கு உதவ

இரண்டு கைகளை கொடுத்துள்ளான்உன் விருப்பம் போல்

இந்த உலகை வலம் வர

இரண்டு கால்களை கொடுத்துள்ளான்பிறரை அன்பால் நேசிக்க

நல்ல மனதை

உன் வசம் கொடுத்துள்ளான்ஒட்டு மொத்தத்தில்

உன் உடலில் நல்ல

ஆரோக்கியத்தை கொடுத்துள்ளான்இதையெல்லாம் கொடுத்த

அவனுக்கு நீ

என்ன கொடுத்துள்ளாய்...?


என்னுடைய இந்த கவிதை தமிழ்குடும்பம்.காம் யில் பிரசுரமாகியுள்ளது  .