கால அட்டவணை

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

நான் பிரதமர் ஆனால்....?

 
       ஒரு ரூபாய் சம்பளம் போதும் என கூறி, உங்கள் பணத்திற்கு உலை வைக்க மாட்டேன்.

இந்த நாட்டை ஆட்டி படைக்கும் முதலாளி எனும் பண முதலைக்கு முதல் ஆப்பு.

தேர்தலில் வெற்றி பெரும் உறுப்பினர்கள் கட்டாயம் அவைக்கு வர வேண்டும். அவை பாராளுமன்றமோ சட்ட மன்றமோ நகராட்சியோ
மூன்று முறைக்கு மேல் அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால், உறுப்பினர் பதவி பறிக்கப்படும்.

அரசுக்கு உரிய நிறுவனங்கள் அரசாங்கத்தாலேயே நிர்வகிக்கப்படும்.
தனியாருக்கு தாரை வார்க்கும் பேச்சுக்கே இடமில்லை.

அரசு அதிகாரிகள் நடவடிக்கை ரகசியமாக கண்காணிக்கப்படும்.

உழல் பெருச்சாளிகள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு அரசு வேலையில் இருந்து நீக்கப்படுவார்.

ஆதாரம் இல்லாமல் பொய் வழக்கு போடும் காவல் துறை அதிகாரிகள் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மது, சிகரெட் என்கின்ற பேச்சுக்கே இடம் கிடையாது .அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் முற்றிலும் அழிக்கப்படும்.

சூதாட்ட கிளப்களுக்கு கொடுக்கப்பட்ட லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.

தேர்தலில் போட்டி இடுபவர்கள் தேர்தலில் பணத்தை செலவு செய்ய அனுமதி கிடையாது, அரசே அவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும்.

திறப்பு விழா என்று ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது, புதிதாக
கட்டப்படும் கட்டடம் மற்றும் நிறுவனங்களும் பணி முடிந்தவுடன் உடனே திறக்கப்படும்; யாருக்காகவும் காத்திருக்காது.

சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை அவர்களே கொண்டு வந்து கொடுத்தால், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் . அந்த பணத்தில் இந்தியாவுடைய கடன்கள் அடைக்கப்படும்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை இந்திய பணத்திலேயே நிர்ணயிக்கப்படும்,அந்நிய நாட்டு பணத்திற்கு அனுமதி கிடையாது.

இந்தியாவில் இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைகளுக்கு வட்டி வழங்கப்படாது என்று சட்டத் திருத்தம் செய்யப்படும்.

மக்களின் அத்தியாவசிய பொருள்கள் குறைந்த விலையில் மட்டுமே விற்கப்படும். அதன் விலையை அரசே நிர்ணயிக்கும்.

இருபத்து ஐந்து வயதில் கட்டாயம் அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு படிக்க விரும்புபவர்கள் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படிக்கலாம். அந்த செலவை அரசே ஏற்று கொள்ளும். குடும்பத்தோடு தங்குவதற்கு வசதிகளும் செய்து கொடுக்கும்.

வெளியூரில் பணியாற்றுபவர்களுக்கு, குடும்பத்தோடு தங்கி பணியாற்ற அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

ஐம்பது வயதில் கட்டாயம் ஓய்வு மற்றும் ஓய்வு ஊதியம் வழங்கப்படும்.

இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைவரும் உழைக்க வேண்டும்.

பிள்ளைகள் உயிருடன் இருந்து பெற்றோரை கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்தால் , அவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும். அவர் அரசு உழியர் ஆக இருந்தால், பணி நீக்கம் செய்யப்படுவார்.

மக்கள் தொகை சரியாக கணக்கு எடுக்கப்பட்டு , அனைவருக்கும் அரசு வேலை கொடுக்கப்படும். [என்னது?!!! அனைவருக்கும் அரசு வேலையா?!!!!!!!
அப்படின்னா தனியார் நிறுவனங்கள், தனியார் ஊழியர்கள் - ???]
அவர்களுக்கும் அரசு உழியர்களுக்கு உள்ளது போல் செய்து கொடுக்க சட்டத் திருத்தம் செய்யப்படும்.

அரசு மருத்துவமனைகள், அரசு கல்வி கூடங்கள் அதிகரிக்கப்படும். இதன் சேவைகள் மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும். இதை வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்படும்.

இதற்கு மேல் இவர்கள் என்னை உயிருடன் விட்டு வைத்தால்....?


உலகத்தின் தலையில் கை வைப்பேன்.

முதலில் ஐக்கிய நாட்டு சபையை கலைப்பேன்.

மனித இனத்தை அழிக்க கூடிய ஆயுதங்களை அழிக்க அனைத்து நாடுகளுக்கும் அவகாசம் கொடுப்பேன்.

இந்தியாவை மையமாக கொண்டு புதிய உலக நாடுகள் சபை ஒன்றை ஆரம்பிப்பேன்.

அதில் யாருக்கும் வீட்டோ பவர் என்கின்ற பேச்சுக்கு இடமே கிடையாது.

அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் வழங்கப்படும்.

இங்கு தோலின் நிறத்தை வைத்து சலுகைகள் வழங்கப்பட மாட்டாது.

உலக மக்களுக்கு தேவையான அனைத்து பொருள்களும், அனைத்து நாடுகளிலும் ஒரே விலை நிர்ணயிக்கப்படும். இதில் ஏற்ற தாழ்வு என்கின்ற பேச்சுக்கே இடம் கிடையாது .

பெட்ரோல் மற்றும் தங்கம் இவைகளுக்கு உலகம் முழுவதும் ஒரே விலை நிர்ணயிக்கப்படும்.

நடக்குமா ........? பிரதமர் பதவி கிடைக்குமா....? உடலில்

உயிர் நிலைக்குமா.....? ஹி.....ஹி......ஹி.......சும்மா தமாஷ்.

உங்கள் பொன்னான வாக்குகளை கருத்துரையாக இட்டு செல்லவும்.
40 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

இதுல ஏதாவது ஒன்னு நடந்தாலும் அதுல சந்தோஷப்படுற முதல் ஆள் நாந்தான் :-))

ஜெய்லானி சொன்னது…

மனசு இந்த பதிவுக்கு மினிமம் 50 ஓட்டாவது போட சொல்லுது ஆனா ஒன்னுக்கு மேலே முடியல :-(

asiya omar சொன்னது…

நீங்க பிரதமர் ஆனால் நான் எப்படியும் ஜனாதிபதியாகிடுவேன்,ரொம்ப பெரிய கற்பனை..

ஹேமா சொன்னது…

இதெல்லாம் நடந்தா....நடந்தா....!

vanathy சொன்னது…

உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள். எல்லோரும் தூயவனுக்கே உங்கள் வோட்டுக்களை குத்துங்கப்பா.

Chitra சொன்னது…

உங்கள் பொன்னான வாக்குகளை கருத்துரையாக இட்டு செல்லவும்.


.....சரி....இலவசமாக என்ன கிடைக்கும்? ஹா,ஹா,ஹா,ஹா...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ஓட்டு போட்டாச்சு பாஸ். எப்ப ஆட்சிக்கு வரப்போறீங்க :)

சொன்னது அனைத்துமே நியாயமான வேண்டுகோள்கள். ஆனா நம்மூர்லதான் நியாயத்துக்கு மரியாதை கிடையாதே.

பேசாம இப்ப உள்ள அரசியல் வாதிகளை வெளிநாட்டுக்கு நாடு கடத்தலாம் எல்லா வசதிகளோடும்.

ஹுஸைனம்மா சொன்னது…

ஓட்டுக்கு எவ்வளவு கிடைக்கும்? :-))))

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்னைய்யா ஆச்சு உமக்கு நல்லாதானே இருந்தீர்....
பார்த்துய்யா ஆட்டோ கீட்டோ வந்துர போகுது.....

முஹம்மத் ஆஷிக் சொன்னது…

"இளம் தூயவன்... ஏந்தறு இளம்தூயவன்..."

'இலவசமா லேப்டாப் தர்றாங்கலாம்... வாங்க போலாம் வா...'

"இளம் தூயவன்... ஏந்தறு இளம்தூயவன்..."

'ஓட்டு போடுறதுக்கு இந்த தடவை ஐயாயிரம் ரூவா தரப்போராங்கலாம்...'

"இளம் தூயவன்... ஏந்தறு இளம்தூயவன்..."

'எவ்ளோ நேரம்தான் தூங்குவே... விடிஞ்சும் என்ன கனவு காண்கிறாய்...?'

"இளம் தூயவன்... ஏந்தறு இளம்தூயவன்..."

'...ஏந்திரச்சதும் முதலில் இந்தமாதிரி தூக்கத்திலே புலம்பறதை உடனடியா நிருத்த, ஒரு நல்ல டாக்குட்டர பாக்கச்சொல்லனும்...'

....ம்ம்ம்ம்....

இளம் தூயவன் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

வாங்க பாஸ்,நிச்சயமாக அதைவிட சந்தோசம் எதுவும் இல்லை.

இளம் தூயவன் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

//மனசு இந்த பதிவுக்கு மினிமம் 50 ஓட்டாவது போட சொல்லுது ஆனா ஒன்னுக்கு மேலே முடியல :-(//

இந்த வார்த்தையே எனக்கு 50 வோட்டு கிடைத்த திருப்தி.

இளம் தூயவன் சொன்னது…

asiya omar கூறியது...

ஹா....ஹா....ஹா....சகோதரி எடுத்து கொள்ளுங்கள் காசா பணமா.

இளம் தூயவன் சொன்னது…

ஹேமா கூறியது...

நிச்சயமாக கனவில் நடக்கும்.

இளம் தூயவன் சொன்னது…

vanathy கூறியது...

சகோதரி நல்ல வேலை ஓட்ட மட்டும் போட சொன்னிங்க. ஆட்டோ வரலே?

இளம் தூயவன் சொன்னது…

Chitra கூறியது...

ஹி.....ஹி.....ஹி.....ஒட்டு போடவில்லை என்றால் பைன் போடுவோம்.

இளம் தூயவன் சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

பாஸ் நாற்காலியை தூரத்தில் இருந்தே பார்ப்போம், இல்லை என்றால் ஆட்டோ வரும்.

இளம் தூயவன் சொன்னது…

ஹுஸைனம்மா கூறியது...

ஹி...ஹி....ஹி....ஓய்வு ஊதியத்த கட் பண்ணிடுவோம்.

இளம் தூயவன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

ஹி...ஹி.....ஹி.....நமக்கே ஆட்டோ வா?

இளம் தூயவன் சொன்னது…

முஹம்மத் ஆஷிக் கூறியது...

எங்கே என் சீட்..... எங்கே என் சீட்.... என்னது கனவா?

நிலவு சொன்னது…

ப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html

NIZAMUDEEN சொன்னது…

என்னங்க இப்படியெல்லாம்
ஒரே அதிரடியா இருக்கு?
நீங்க பிரதமராகிறதுக்கு
என்னுடைய முழு ஆதரவையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.;

NIZAMUDEEN சொன்னது…

//திறப்பு விழா என்று ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது, புதிதாக
கட்டப்படும் கட்டடம் மற்றும் நிறுவனங்களும் பணி முடிந்தவுடன் உடனே திறக்கப்படும்; யாருக்காகவும் காத்திருக்காது.//

இந்த மாதிரி கூத்து எங்க ஊருல
அடிக்கடி நடக்குதுங்க...
அதனால, நீங்கதான் அடுத்த முற
பிரதமரா வரணுமுங்கோ...

FARHAN சொன்னது…

வருங்கால இந்திய பிரதமரே வாழ்க !

இளம் தூயவன் சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், நம்ம அமைச்சரவையில் உங்களுக்கு ஒரு துறை ஒதுக்கப்படும்.

இளம் தூயவன் சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

பாஸ் நம்ம பதவி ஏற்றவுடன் , நாம் திறப்பு விழாவுக்கு போடுற வரியில் துண்டைகாணோம் துணியை காணோம் என்று ஒடுனும். அதுக்கு பிறகு யாரும் திறப்பு விழா என்கின்ற சத்தமே இருக்க கூடாது.

இளம் தூயவன் சொன்னது…

FARHAN கூறியது...
வாங்க நண்பரே,


அமைதி அமைதி என்னருமை இந்திய குடிமக்களே. .......

சி.கருணாகரசு சொன்னது…

சீக்கிரம் எழுந்திரிங்க விடிஞ்சி ரொம்ப நேரம் ஆச்சி!

சி.கருணாகரசு சொன்னது…

எங்கே நிலவிலா?

NIZAMUDEEN சொன்னது…

தலைவரே... எலக்ஷன் தேதி
அறிவிச்சிட்டாங்க...
வாங்களேன், நாமளும் 234-ல் ஏதாவது
ஒரு தொகுதியில போட்டியிட்டு,
இந்த வாக்குறுதிகள எல்லாம்
அள்ளிவிடுவோம். அப்பால நாடே
கலங்கிடுமில்ல? சீக்கிரம்
உங்க முடிவச் சொல்லுங்க, தலைவரே!

NIZAMUDEEN சொன்னது…

//வாங்க பாஸ், நம்ம அமைச்சரவையில் உங்களுக்கு ஒரு துறை ஒதுக்கப்படும்.//


முடியாது தலைவரே!
நான் கேட்கிற துறைதான்
எனக்கு வேணும்.
தருவீங்களா?

அந்நியன் 2 சொன்னது…

ஐயோ..அம்மா..இது என்ன கனவா... இல்லை வெறும் நினைவா ?

இல்லை பிரம்மையா..!! ?

கொஞ்சம் இருங்கள் உடம்பை கொஞ்சம் கிள்ளிப் பார்த்துட்டு வந்து சொல்றேன்.

மதுரை சரவணன் சொன்னது…

ithu saaththiyamaa.. iruppinum kanavaavathu nammaal ippadiyellaam kaana mudikirathuee...!vaalththukkal

இளம் தூயவன் சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...

என்னது விடிஞ்சி ரொம்ப நேரமாச்சா...? நம்ம நாட்டுக்கு விடிவு.....?

இளம் தூயவன் சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
//எங்கே நிலவிலா?//

ஹி.....ஹி......நடக்கும் ஆனா நடக்காது.

இளம் தூயவன் சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

பாஸ் உங்க சப்போட் இல்லாம ஆட்சி நடத்த முடியுமா?

இளம் தூயவன் சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

ஹி....ஹி..... நம்ம கிட்ட உள்ள எந்த துறையிலும் வருமானம் கிடைக்காது பாஸ் ஆதலால் எந்த துறையை வேண்டுமானாலும் எடுத்துகொள்ளுங்கள்.

இளம் தூயவன் சொன்னது…

அந்நியன் 2 கூறியது...

நான் கண்ட கனவு ஒரு நாள் நினைவாகும்......சும்மா தமாஷ் பண்ணாதிங்க.

இளம் தூயவன் சொன்னது…

மதுரை சரவணன் கூறியது...

மிக்க நன்றி சரவணன் ,நான் கண்ட கனவு ஒரு நாள் நினைவாகும் எனக்காக அல்ல நம் மக்களுக்காக.

ஆமினா சொன்னது…

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html