கால அட்டவணை

சனி, 12 பிப்ரவரி, 2011

ஆணவம் நிலைக்குமா?....

     உலகத்தை ஆள பிறந்தவன் என்று கூறி கொண்டு ஆட்டம் போட்ட அமெரிக்கா.


இன்று அந்நிய நாடுகளிடம் அடிபணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் செய்த அட்டுழியங்கள் கொஞ்சமா? . உலக முழுவதும் செய்யப்படும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் இவர்கள் நாட்டு பணத்தில் தான் அனைவரும் செய்ய வேண்டும். ஐக்கிய நாட்டு சபையை உருவாக்கியதன் குறிக்கோள் ஒன்றாக இருக்கலாம். அதன் உள் நோக்கம் வேறு, உலகத்தின் மத்தியில் அவர்கள் நடத்திய நாடகங்கள், ரொம்ப அருமையாக அரங்கேறின.

(1) மனித உயிர்களை கொல்லும் ஆயுதங்களை பெரும் அளவில் தயாரித்து, அவற்றை உலகத்தில் உள்ள நாடுகளை பயமுறுத்தி அவர்களிடம் தன் ஆயுதங்களை விற்பனை செய்வது.

(2) அதற்கு பணிய மறுக்கும் நாடுகளில், இவர்களின் கை கூலிகளை கொண்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்து , பின் அவர்களிடம் தன் ஆயுத விற்பனையை தொடங்குவது.

(3) அமெரிக்காவின் புலனாய்வு துறை மிக திறமையானது என்று
உலக அளவில் காட்டி கொள்வதற்கு, இவர்கள் செய்யும் பித்தலாட்டம், ஒவ்வொரு நாட்டினரிடம் சென்று உங்கள் நாட்டை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த போகிறார்கள் என்று கூறி பயம் முருத்துவது. எங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்று ஆணவமாக பேசுவது.

(4)அடுத்த வீட்டு பொருளுக்கு ஆசை படுவது. பெட்ரோலுக்கு ஆசை பட்டு
பாலைவனத்தில் மண்ணை கவ்வினார்கள்.

போரின் போது இவர்கள் செய்து வந்த நரி தனம் ஆப்கானிஸ்தான் மீது இவர்கள் போர்தொடுத்த பொழுது, வெட்ட வெளிச்சமானது.

இவர்கள் எந்த நாட்டின் மீது போர் தொடுக்க போகிறார்களோ, அந்த நாட்டின் பெயரை அறிவிப்பார்கள். உடனே அங்கு தொலைகாட்சி நிருபர்கள் சென்று விடுவார்கள் , நிருபர் என்கின்ற போர்வையில் இவர்களின் கைகூலிகள் (ஒற்றர்கள்) அங்கு உளவு பார்க்கும் பணிய தொடங்கி விடுவார்கள்.

பிறகு என்ன இவர்கள் நினைத்த காரியம் கச்சிதமாக முடிந்து விடும். இப்படி ஒரு கேவலமான செயலை உலகில் அரகேற்றம் செய்தவர்கள் தான் இந்த அமெரிக்கர்கள். இவர்களின் அயோக்கிய தனத்தை இன்று ஒரு இணை[ய]த்தளம் வெட்ட வெளிச்சமாக்கி கொண்டு உள்ளது. எதிர் காலத்தில் ஒரு நாட்டின் வரலாற்றை படித்து காறி துப்புவார்கள் என்று சொன்னால், அது நிச்சயமாக அமெரிக்காவின் வரலாறாகத்தான் இருக்கும்.

இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவம், இதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்க தக்கவர்கள். இதை தகர்த்த
 உண்மையான குற்றவாளிகளை இவர்களால் இதுவரை கண்டு பிடிக்க
முடியவில்லை.

நிலைமை இப்படி இருக்க ,இவர்கள் மற்ற நாட்டை பார்த்து,
உன்னை தீவிரவாதிகள் தாக்க போகிறார்கள்', என்று அறிவிப்பு விடுவது. உடனே தன் நாட்டு மக்களை யாரும் அந்த நாட்டிற்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு விடுவது.

இராக்கில் போரில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் எத்தனை பேர் மனநிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ரகசியமாக திருப்பி அனுப்பினார்கள் என்று தெரியுமா? ,இப்படி பல விசயங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போய் விட்டது.

சமீப காலமாக இவர்கள் கண்களுக்கு இந்தியாவின் வளர்ச்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. மத்திய அரசு திறமையாக செயல் படுவதால், இவர்களின் பாச்சா பலிக்கவில்லை. இன்று இவர்களின் மிரட்டலை எந்த ஒரு சிறிய நாடும் மதிப்பதில்லை.

வளைகுடா நாட்டில் கம்பீரமாக வாழ்ந்த அமெரிக்கர்கள் இன்று அஞ்சி
வாழக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பிறரை அடிமை படுத்தி வாழும் வாழ்க்கை, நிலைத்து நிற்காது. அது நாடாக
இருந்தாலும் சரி, தனி நபராக இருந்தாலும் சரி.

16 கருத்துகள்:

asiya omar சொன்னது…

மிகச்சரியாக சொல்லீருக்கிறீர்கள்,நம் இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்காவை மட்டும் அல்ல பல நாட்டினரை ஆட்டம் காண வைத்துள்ளது,அப்துல் கலாமின் கனவு நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.தீயதை ஒதுக்கி நல்லதை மட்டும் பார்ப்போம்,விரைவில் தீயதும் ஒழியும்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//வளைகுடா நாட்டில் கம்பீரமாக வாழ்ந்த அமெரிக்கர்கள் இன்று அஞ்சி
வாழக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்//

இதை நான் எங்கள் ஹோட்டலில் கண்கூடாக காண்கிறேன்.
இதை பற்றி நானும் [[இவர்கள் பயந்து சாவது எப்படின்னு]] ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//இன்று அந்நிய நாடுகளிடம் அடிபணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது//

சைனாகாரனுக்கு நிறைய கடன் கொடுக்கணுமாம்.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பாலைவனத்தில் மண்ணை கவ்வினார்கள்//

இன்னும் பாக்கி இருக்கு மண்ணை கவ்வ....

பெயரில்லா சொன்னது…

மிகச்சரியான கூற்று தூயவன்...

NIZAMUDEEN சொன்னது…

பித்தலாட்டங்கள் மொத்தத்தையும்
கடை விரித்து கூவி விட்டீர்கள்.
அவர்களின் ஆணவம் நிலைக்காது
பாடம் கற்றுக் கொண்டு இருக்கின்றது
அமெரிக்கா! அருமை சகோ!

சந்ரு சொன்னது…

சொல்லவேண்டிய விடயத்தை மிக அழகாகச் சொல்லி இருக்கிங்க.


இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

நிலாமதி சொன்னது…

உங்கள் கண்ணோட்டத்தை அழகாய் தெளிவுபடுத்தி உள்ளீர்கள்
காலபோக்கில் உண்மைகள் வெளி வந்துகொண்டுஇருகின்றன...பகிர்வுக்கு நன்றி .

முஹம்மத் ஆஷிக் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.. சகோ.இளம்தூயவன்.
நல்ல தொகுப்பு.

///எதிர் காலத்தில் ஒரு நாட்டின் வரலாற்றை படித்து காறி துப்புவார்கள் என்று சொன்னால், அது நிச்சயமாக அமெரிக்காவின் வரலாறாகத்தான் இருக்கும்.///--அருமை...!

"Once upon a time there was a terrorist government known as United States Of America..."-ன்னுதானே அந்த வரலாறு ஆரம்பிக்கும்..?

ஹுஸைனம்மா சொன்னது…

//பிறரை அடிமை படுத்தி வாழும் வாழ்க்கை, நிலைத்து நிற்காது.//

உண்மை.

ஆயிஷா அபுல். சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

//பிறரை அடிமை படுத்தி வாழும் வாழ்க்கை, நிலைத்து நிற்காது. அது நாடாக இருந்தாலும் சரி, தனி நபராக இருந்தாலும் சரி.//


சரியாக சொன்னீர்கள் சகோ

Part Time Jobs சொன்னது…

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

vanathy சொன்னது…

very good post!

Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொன்னது…

Well written... Voicing out a relevant issue.. My wishes!

Dr.எம்.கே.முருகானந்தன் சொன்னது…

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ஒரு காலத்தில் ரோம், பிரித்தானியா என்றிருந்து இப்பொழுது அமெரிக்கா உலகின் தனித் தலைவன் போலச் செயற்படுகிறது.

விரைவில் சீனாவினதும், இந்தியாவினதும் காலம் வரப் போகிறது. அப்பொழுது எவ்வாறு இருக்கப்போகிறது உலகம்?

இளம் தூயவன் சொன்னது…

கருத்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சில பணிகளால் தனி தனியாக நன்றி சொல்ல முடியவில்லை.