கால அட்டவணை

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வருகையும் செய்தியும்

இனிய நண்பர்களே மற்றும் சகோதர சகோதரிகளே,

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக,

     விடுமுறை கழிந்தது, பணிக்கு திரும்பி விட்டேன். ஆனால் தாயகத்தின் தாக்கம் நெஞ்சில் தவிர்க்க முடியாத ஓன்று. நாட்டில் ஒவ்வொரு இந்தியனும் நான் வளர்ந்து உள்ளேன், நம் நாடு வளர்ந்து உள்ளது, என்கின்ற பெருமை அனைவரின் முகத்திலும்
தெரிகின்றது. இதை விட என்ன சந்தோசம் வேண்டும். அந்நிய நாட்டில் பணியாற்றும் அனைவரும் அடிகடி தாயகம் சென்று வாருங்கள். ஏன் சொல்லுகின்றேன் என்றால், தாயகத்தின் வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் வேகமாக உள்ளது. நம் ஊரிலேயே நம்மை யார் என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்கின்ற நிலை வரும் முன் காப்போம். அவை என்றும் நம் நாடு அனைவரும் நம் மக்கள். உலகமே பணம் இருந்தால் பாசம் உண்டு என்கின்ற நிலையில் சென்று கொண்டு இருக்கும் பொழுது, நம் நாடு மற்றும் விதி விலக்கா என்ன?. நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அதி வேகமாக செல்கிறார்கள்,அதில் பெரும்பான்மையானவர்கள் இளைய தலைமுறை.

பிள்ளைகள் விசயத்தில் பெரும் கவனம் செலுத்த கடமை பட்டுள்ளோம்.

18 கருத்துகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

//வருகை// -வருக, நல்வரவு!
//செய்தி// -ஊர் செய்திகள்பற்றி உடனே பதிவு போடுங்க!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க சார். நல்வரவு!! வரும்போது ஹல்வா குலாப்ஜான் தம்ரோட்டு ஏதும் வாங்கி வந்தீங்களா?? அது நாகூர் பேமஸ் ஆச்சே அதன் கேட்டேன்!! கொண்டு வந்தா தான் எடுத்து வந்திருப்பீங்களே. அங்க இங்க பார்த்தேன் பையை ஏதும் காணலியே. ஹி..ஹி.. நீங்க எம்புட்டு நல்லவரு!!

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது

வாங்க நிஜாம் ,நிச்சயம் எழுதுகிறேன். நாளை கைபேசில் உங்களை தொடர்பு கொள்கிறேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

எம் அப்துல் காதர் கூறியது..

வாங்க சார் வாங்க, உங்களுக்கு இல்லாமலா, என்ன வேணும் சொல்லுங்க. எப்படி.............

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்வரவு சார். அப்புறம் ஊர்ல இருந்து வாங்கிட்டு வந்ததெல்லாம் அப்துல்காதர் சாருக்கு மட்டும்தானா? நாங்களும் இருக்கோம் சார்.

ஊர் அனுபவங்களைப் பதிவிடுங்கள்.

Asiya Omar சொன்னது…

வாங்க சகோ.இளம் தூயவன் ஊர் பயணம்,கொண்டாட்டங்கள்,லீவு நாட்கள் அருமையாக இருந்திருக்கும்.

அஸ்மா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்! வாங்க சகோ, أهلا وسهلا :) நல்லவிதமாக இரண்டு பெருநாட்களையும் கழித்துவிட்டு வந்திருப்பீர்கள். அல்ஹம்துலில்லாஹ், சந்தோஷம்! ரெஸ்ட் எடுத்துட்டு தொடருங்க.

தூயவனின் அடிமை சொன்னது…

செ.சரவணக்குமார் கூறியது

வாங்க சரவணகுமார் ,ஹா.. ஹா.. உங்களுக்கு இல்லையென்று சொல்ல முடியுமா ? எடுத்துங்க.

தூயவனின் அடிமை சொன்னது…

asiya omar கூறியது...

ஆமாம் சகோதரி, இந்த முறை நீண்ட விடுமுறையும் எடுத்து கொண்டேன். பிள்ளைகளின் நட்பு ஒரு பிரியா நட்பு. என்னோடு அவர்கள் சவுதியில் இருந்த காலத்திலும் அவர்களுக்காக ஒதுக்கும் நேரமும் அதிகம்.

தூயவனின் அடிமை சொன்னது…

அஸ்மா கூறியது...

அலைக்கும் சலாம்....

ஆமாம் சகோதரி,பெருநாளை குடும்பத்துடன் கொண்டாடுவது, ஒரு பெரிய சந்தோசம்.

Riyas சொன்னது…

வந்தாச்சா நலம்தானே...

தூயவனின் அடிமை சொன்னது…

Riyas கூறியது...

வந்தாச்சு நலமே...............

ஹேமா சொன்னது…

வந்தாச்சா...இளம் தூயவன்.சுகம்தானே !

தூயவனின் அடிமை சொன்னது…

வாங்க ஹேமா,வந்தாச்சி மிக்க நலம்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

எனது மனநிலையை அப்படியே பிரதிபலித்தது உங்கள் எழுத்து.

நல்வரவு. :)

ஸாதிகா சொன்னது…

வாங்க இளம் தூயவன்.தொடர்ந்து உற்சாகமாக பதிவிடுங்கள்.ஆங்காங்கே ஊருக்கு சென்று திரும்பிய சக பதிவர்களின் உள்ளக்குமுறல்கள் நெகிழசெய்கின்றன.

தூயவனின் அடிமை சொன்னது…

வாங்க அக்பர், நம் இருவரின் மன குமுறல்கள் ஒன்றாக உள்ளது.

தூயவனின் அடிமை சொன்னது…

ஸாதிகா கூறியது...

வாங்க சகோதரி, நிச்சயம் எழுதுகிறேன், ஊரில் இருந்து திரும்பும் அனைவரின் மன நிலையம் ஒன்றாக உள்ளது.