கால அட்டவணை

சனி, 14 ஆகஸ்ட், 2010

கண்ணோட்டம்

       இந்த மண்ணில் பணி புரிவதற்காக கால் பதித்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது.

      எத்தனை எத்தனை மாற்றங்கள். நான் இந்த நாட்டிற்கு வந்ததில் இருந்து, இந்த நாட்டில் கட்டப்படும் எத்தனையோ கட்டிடங்கள் பாலங்கள் விமான நிலையம் துறைமுகம் என்று புதிது புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு தலைவரும் அதற்காக வந்ததும் கிடையாது.

யாரும் தலைமை தாங்கியதும் கிடையாது.

எந்த கட்டவுட்டும் கிடையாது ,எந்த போஸ்டரும் கிடையாது எந்த ஆடம்பர விழாவும் இல்லை.

ஒவ்வொன்றும் எந்த ஒரு அறிவிப்பும் இன்றிதிறந்து விட படுகின்றது.

     சற்று பின்னோக்கி நான் பிறந்த மண்ணை நோக்கினேன். எனக்கு கருத்து தெரிந்து முதல் எத்தனையோ அரசாங்க கட்டிடங்கள் முதல் தனியார் கட்டிடங்கள் வரை யாராவது ஒரு தலைவரோ அல்லது மந்திரியோ இல்லாமல், திறக்க படுவதில்லை. இதற்காக செலவு செய்யும் பணம் சொல்வதற்கில்லை. இதில் சில தனியார் நிறுவனங்கள் தன் பண பலத்தை காட்டுவதற்கு செய்யும் செலவு என்னில் அடங்காது.

     இங்கு மன்னர் இறந்த செய்தி வந்தது கடைகள் அடைக்கபடவில்லை, அனைத்து பணிகளும் எப்பொழும் போல் நடந்து கொண்டு இருந்தது. எந்த ஒரு இடையூறும் இல்லை. ஒவ்வொரு சராசரி மனிதனை எவ்வாறு அடக்கம் செய்ய படுகின்றதோ அது போன்று மன்னருடைய உடலை அடக்கம் செய்தார்கள்.

     உலகத்தில் உள்ள பல தரப்பட்ட தலைவர்கள் எல்லாம் வந்தார்கள். இப்படி ஒரு அமைதியான எந்த ஒரு ஆர்ப்பாட்டமும்

ஆடம்பரமும் இல்லாமல் நடக்கும் சம்பவத்தை பார்த்து அசந்து போய்விட்டார்கள் .

     நம் நாட்டில் தலைவருக்கு உடல் நலம் சரியில்லை என்றாலே, களத்தில் இறங்கி விடுவார்கள். கடைகள் சூறையாடப்படும், பஸ்கள் தாக்கப்படும், நாடு முழுவதும் பணிகள் முடக்கப்படும்.

வெளியில் மட்டும் சொல்லி கொள்வோம், நாங்கள் வளர்ந்து விட்டோம், வல்லரசு ஆகி விட்டோம்.

இது போன்ற விசயங்களில் நாம் எப்பொழுது வளர போகின்றோம்?

நம் வரி பணத்தை விரையம் செய்வதை நாம் எப்பொழுது நிறுத்தப் போகின்றோம்?

நாம் அனைவரும் இந்நாட்டு மன்னர்கள் என  , என்றைக்கு முழங்கப் போகின்றோம்?

வறுமை என்கின்ற கோட்டை என்றைக்கு அழிக்க போகின்றோம்?

மேற்கத்திய கலாச்சாரத்தை பின் பற்றுவதை விட்டு, என்றைக்கு விலக போகின்றோம்?

நம் நாடு நம் மக்கள் நாம் அனைவரும் இந்தியர்கள் நம் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என்கின்ற நிலை என்றைக்கு வரும்..............?

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


.

16 கருத்துகள்:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

தாங்கள் கூறியது போன்று தான் இந்தியாவின் வ்வொரு இளைஞனும்... எதிர்பார்ப்புகளின் பின்னால் ...

நாடோடி சொன்னது…

அனைவ‌ரும் த‌ங்க‌ளுடைய‌ க‌ட‌மைக‌ள் ச‌ரிவ‌ர‌ செய்தால் க‌ண்டிப்பாக‌ விரைவில் எதிர்பார்க்க‌லாம். ந‌ம்புவோம் ந‌ட‌க்கும் என்று!!!.

ராஜவம்சம் சொன்னது…

உண்மைதான் சகோ
நாம் வெட்கப்படவேண்டிய விசயம்
இந்தப்பதிவை முடிந்தால் கொஞ்சம் நம்ம தலைமைச்செயலகத்துக்கு மெயில் அனுப்புங்களேன்.

Ahamed irshad சொன்னது…

Good post..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

// உலகத்தில் உள்ள பல தரப்பட்ட தலைவர்கள் எல்லாம் வந்தார்கள். இப்படி ஒரு அமைதியான எந்த ஒரு ஆர்ப்பாட்டமும்

ஆடம்பரமும் இல்லாமல் நடக்கும் சம்பவத்தை பார்த்து அசந்து போய்விட்டார்கள் . //

அப்படின்னா இந்தியாவைப் போலவே
மற்ற எல்லா நாட்டிலும் இப்படி
ஆடம்பரம்தான் போலிருக்கிறது.
நல்ல பின்னோக்கிய சிந்தனை.

ஜெய்லானி சொன்னது…

இதை போல நான் போடலாம் என்று இருந்தேன் . ரொமப நல்ல விஷயம் .. ஆனா அசிங்கமான உண்மை இது..நம்ம நாடு எப்ப திருந்துமோ..???

தூயவனின் அடிமை சொன்னது…

வெறும்பய கூறியது...

நாடோடி கூறியது...

ராஜவம்சம் கூறியது...

அஹமது இர்ஷாத் கூறியது

NIZAMUDEEN கூறியது...

ஜெய்லானி கூறியது...

கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றியையும், சுதந்திர தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.

ஹுஸைனம்மா சொன்னது…

நம் எல்லாரின் கனவாகவே இவை இருக்கின்றன.

தூயவனின் அடிமை சொன்னது…

ஹுஸைனம்மா கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Asiya Omar சொன்னது…

தேவையான பகிர்வு.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அதுதான் மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் உள்ள வித்தியாசம் என நினைக்கிறேன்.

இங்கு பதவி பறிபோகும் , மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறவேண்டும் என்றெல்ல்லாம் கவலை இல்லை. மேலும் விழா எடுத்தால் அது அவர்களுக்குத்தான் செலவு.

ஆனால் மக்களாட்சியில் ஆட்சி மாற்றம் இருப்பதால் மக்களிடம் தாங்கள் செய்யும் சாதனைகளை விளம்பரப்படுத்தவேண்டிய சூழல். மேலும் அடுத்து வருவோமோ என்ற பயம் அதுதான் தவறுக்கு காரணமாகிவிடுகிறது என நினைக்கிறேன்.


சுதந்திர தின வாழ்த்துகள்.

தூயவனின் அடிமை சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க அக்பர், நீங்க சொன்ன எல்லாம் சரியா தான் இருக்கும், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அண்ணாமலை..!! சொன்னது…

சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதாக யாருமே இடுகை இடவில்லை..!
சுதந்திரம் திருப்தி அளிக்கவில்லையா?
அல்லது கானல் நீராக உணர்கிறோமா??

யாமறியேன் பராபரமே!

தூயவனின் அடிமை சொன்னது…

அண்ணாமலை..!! கூறியது...

வாங்க அண்ணாமலை, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Krishnaveni சொன்னது…

Happy independence day, very nice post

தூயவனின் அடிமை சொன்னது…

Krishnaveni கூறியது...

வாங்க சகோதரி, உங்களுக்கும் என்னுடைய இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.