கால அட்டவணை

சனி, 22 ஜனவரி, 2011

நகரமா....................? நரகமா.............??


     என்ன தலைப்பை இப்படி போட்டு பயமுறுத்துகிறேன் என்று பார்க்க வேண்டாம். சென்னை போன்ற சிட்டியில் வாழும் நடுத்தர மக்களின் நிலையை தான் இங்கு விளக்குகிறேன்.


     எல்லாருக்கும் காலை பொழுது எத்தனை மணிக்கு தொடங்குமென்பது தெரியாது , ஆனால் சென்னைவாசிகளுக்கு 3 .00 மணிக்கு எல்லாம் தொடங்கி விடும். எழுந்ததில் இருந்து பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு உணவு, வேலைக்கு செல்லும் கணவருக்கு உணவு என்று தன் காலை வேலையை தொடங்கி, பிள்ளைகளை சீருடை அணிவித்து அவர்களை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டு விட்டு, பிறகு அலுவலகம் செல்லும் தன் கணவரை எழுப்பி அவருக்கு உரிய பணிகளை செய்து முடித்து, பிறகு பகல் உணவு தயாரிக்கும் பணியை தொடங்கி, அவை முடியும் நேரம் பள்ளியில் இருந்து திரும்பும் பிள்ளைகளை உடைகளை மாற்றி, அவர்களை டியுசன் படிக்க தயார் செய்து, அவர்களுக்கு இரவு உணவு கொடுத்து உறங்க வைக்கும் வரை பம்பரமாக சுற்றி தன் கடமையே கண்ணாக இயங்கும் குடும்ப தலைவியின் நிலை இது தான்.

     இது ஒரு புறம் இருக்க, ஊரில் இருந்து வரும் உறவினர்களிடம் சென்னையில் வசதியாக வசிப்பதாக காட்டிக்கொள்ள ,வருமானத்திற்கு மேல் (தவணைக்கு) வாங்கி போடும் டிவி, சோபா, ஃப்ரிட்ஜ் , ஏர் கண்டிஷன், பைக், கார் இப்படி வாங்கி போட்டு தன் தலையில் பாரத்தை ஏற்றி கொள்ளும் குடும்ப தலைவன்.

     ப்ரீகேஜி இந்த வகுப்பை கண்டு பிடித்தவன் யாருன்னு தெரியாது, தெரிந்தால் உங்களால் முடிந்தால் நாலு மொத்து மொத்துங்க. இதில் தன் பள்ளி வாழ்க்கையை தொடங்கி கல்லூரி படிப்பை முடிக்கும் வரை படிப்பு படிப்பு என்று, மூளையை சலவை செய்து, விளையாட கூட முடியாமல் ,எதிலும் ஓர் ஆர்வம் இல்லாமல் உறங்கி காணப்படும் பிள்ளைகள்.

சரி இப்படியெல்லாம் இயங்கி இவர்கள் என்னத்தை சாதித்தார்கள்?


இதோ பட்டியல்:1.நரம்பு தளர்ச்சி நோய்

2.கேன்சர்

3.சத்தான உணவு உண்ணாமல், உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழத்தல்.

4.சரியான நேரத்தில் உணவு அருந்தாமல், வாய்வு போன்ற தொல்லைகள் ஏற்படுதல்.

5.அதிகமாக நீர் அருந்தாமல் கல் (stone) ஏற்படுதல்.

வேலை பளு காரணமாக, ரத்த கொதிப்பு மற்றும் இனிப்பு நீர் போன்ற நோய்கள் ஏற்படுதல்.

சமீபத்தில் கிடைத்த தகவலின் படி அதிகமான இறப்பு இளைய சமுதாயமாக உள்ளது.


40 கருத்துகள்:

Chitra சொன்னது…

இதை விட தெளிவாக சொல்ல முடியாது. தாங்கள் விரித்த வலைக்குள் தாங்களே மாட்டி கொள்ளும் நிலை. :-(

இளம் தூயவன் சொன்னது…

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

எம் அப்துல் காதர் சொன்னது…

good post boss!! keep it up (he..he tamil font not working!!)

ச்சின்னப் பையன் சொன்னது…

வெட்டி பந்தாவை உதறியே ஆகணும்னுதான் நான் எப்போதும் சொல்றது!

asiya omar சொன்னது…

ஆஹா,அருமையான பகிர்வு,கரெக்டா சொன்னீங்க.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

100 க்கு 200% உண்மை. காலம் காலமாக ஆரோக்கியத்தை ஒவ்வொன்றாக இழந்துகொண்டுதான் வருகிறோம்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//தன் தலையில் பாரத்தை ஏற்றி கொள்ளும் குடும்ப தலைவன்.///


இந்த கொடுமையில இருந்து என்னைக்கு விடுதலையோ......யப்பா........

Issadeen Rilwan - Changes Do Club சொன்னது…

<< இது ஒரு புறம் இருக்க, ஊரில் இருந்து வரும் உறவினர்களிடம் சென்னையில் வசதியாக வசிப்பதாக காட்டிக்கொள்ள ,வருமானத்திற்கு மேல் (தவணைக்கு) வாங்கி போடும் டிவி, சோபா, ஃப்ரிட்ஜ் , ஏர் கண்டிஷன், பைக், கார் இப்படி வாங்கி போட்டு தன் தலையில் பாரத்தை ஏற்றி கொள்ளும் குடும்ப தலைவன். >> இதனால் தான் குடும்பத் தலைவர்கலெல்லாம் வெளீநாட்டில் காலத்தை ஓட்டுராங்க.....

NIZAMUDEEN சொன்னது…

குடும்பத் தலைவன்,
குடும்பத்தலைவி,
பிள்ளைகள்
-இவர்களுக்கு இவற்றை எண்ணிப் பார்க்க
எங்கே நேரமிருக்கிறது?
ஆனால், நீங்கள் அவற்றை எண்ணி,
அதன் விளைவுகளை பட்டியல் போட்டுக்
காட்டி, எண்ணிப் பார்த்தல் என்பது
காலத்தின் கட்டயம் என்பதை உணர்த்தும்
பதிவைப் போட்டுள்ளீர்கள். நன்றி!

இளம் தூயவன் சொன்னது…

எம் அப்துல் காதர் கூறியது...

வாங்க பாஸ், உங்கள் பக்கத்தில் இருந்து கொண்டு இப்படி எல்லாம் சொல்லவில்லை என்றால் எப்படி பாஸ்.

இளம் தூயவன் சொன்னது…

ச்சின்னப் பையன் கூறியது...

வாங்க நண்பரே, உங்கள் வலை பூவை பார்த்தேன். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க பாஸ், இப்போயெல்லாம் நம் மக்கள் ரொம்ப சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இளம் தூயவன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

வாங்க பாஸ், நிச்சயம் ஒரு நாள் விடுதலை உண்டு.

இளம் தூயவன் சொன்னது…

Issadeen Rilwan - Changes Do Club ..

வாங்க நண்பரே, வெளி நாட்டு வாழ்க்கைக்கு ஒரு நாள் முற்று புள்ளி நிச்சயம். கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ்,ஒவ்வொரு குடும்ப தலைவனும் தனக்காக தன் குடும்பத்துக்காக வாழ வேண்டும்.பிறர்க்காக வாழும் (போலியான) வாழ்க்கை தவிர்க்க வேண்டும். மனைவியின் கஷ்டத்தில் ஒவ்வொரு கணவனும் பங்கு பெற வேண்டும். கணவனின் வருமானத்தில் மனைவி குடும்பம் நடத்த கற்று கொள்ள வேண்டும். அந்த குடும்பம் நிச்சயம் சீராக சந்தோசமாக செல்லும். அந்நிய நாட்டு ஆடம்பரம் நமக்கு தேவை இல்லை என்று முடிவு எடுக்கும் நாள் வெகு விரைவில்........

ஆயிஷா அபுல் சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

பகிர்வு அருமை.சரியா சொன்னீங்க சகோ.

முஹம்மத் ஆஷிக் சொன்னது…

தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.இளம்தூயவன்.

'நரகம்' என்ற உவமானம் கொஞ்சம் அதிகம் என்றாலும், நகரமயமாதல் என்பது கிட்டத்தட்ட அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது.

சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு இதில் ரொம்ப முக்கியம். மேலும், எவ்வளவோ இயற்கை விஷயங்களை இழந்துவிட்டோம்.

கிராமத்தில் கிடைக்காத பல விஷயங்கள் நகரத்தில் கிடைக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், எல்லாரும் சாப்பிட உணவு உற்பத்தியாவது கிராமத்தில்தான் என்பதை அவ்வப்போது நியாபகப்படுத்திக்கொள்வது ரொம்ப முக்கியம்.

கிராமம் ஒன்று என்று இல்லாவிட்டால்...?

இளம் தூயவன் சொன்னது…

ஆயிஷா அபுல் கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

முஹம்மத் ஆஷிக் கூறியது...

அலைக்கும் சலாம் ,
வாங்க சகோ. நகர வாழ்க்கை ஒரு இயந்திர வாழ்க்கை என்பதை தான் இங்கு சுற்றி காட்டியுள்ளேன்.

Philosophy Prabhakaran சொன்னது…

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

போளூர் தயாநிதி சொன்னது…

சரியா சொன்னீங்க சகோ.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

சித்ரா சொன்னது உண்மை நாம் விரித்த வலையிலேயே நாம் மாட்டிக் கொள்கிறோம். பகிர்வு அருமை இளம்தூயவன்

vanathy சொன்னது…

ப்ரீ கேஜி கண்டு பிடித்தவனை நானும் தேடுகிறேன். அகப்பட மாட்டேன் என்கிறான். சில அம்மாக்கள் பிள்ளைகளை இடுப்பில் தூக்கிக் கொண்டு போய் இறக்கி விடுவார்கள். பார்க்கவே கொடுமையா இருக்கும். பிள்ளைகள் அழுதாலும் கவலைப்பட மாட்டார்கள். எல்லாம் பணம் படுத்தும் பாடு.
நல்லா இருக்கு பதிவு.

ராஜவம்சம் சொன்னது…

பயனைவிட இலப்பு அதிகம் நண்பா
கிராமமே சொர்க்கம் என்று சொல்ல தோன்றுகிரது.

goma சொன்னது…

இளம் தூயவன்
அருமையாக சொல்லி அனைவரையும் சிந்திக்க வைத்து விட்டீர்கள்.

இளம் தூயவன் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது

வாங்க நண்பரே, உங்கள் வலைதளத்தை கண்டேன்,என் கருத்தையும் தெரியப்படுத்தினேன் .

இளம் தூயவன் சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது..

வாங்க சார், கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

vanathy கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

வாங்க நண்பரே, கிராமம் என்றைக்கும் சொர்க்கம் தான். அமைதி, இயற்கை காற்று, சுத்தமான குடிநீர் இப்படி பல விசயங்களை கூறிக்கொண்டே போகலாம்.

இளம் தூயவன் சொன்னது…

goma கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

ஆமினா சொன்னது…

சரியா சொன்னீங்க....

மக்களின் வாழ்க்கை இப்பொதெல்லாம் இயந்திரத்தை விடவும் மோசமாகவே மாறிவிட்டது

FARHAN சொன்னது…

இயந்திரமயமான மக்களின் நிலைமையை சிறிய பதிவில் தெளிவாக அதன் பக்க விளைவுகளுடன் பக்கவா பதிவு

Jaleela Kamal சொன்னது…

நல்ல அலசல்,

நோய்களின் பட்டியலும் மிக்கச்சரியே

இளம் தூயவன் சொன்னது…

ஆமினா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

FARHAN கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Jaleela Kamal கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

"நந்தலாலா இணைய இதழ்" சொன்னது…

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

ஹேமா சொன்னது…

உண்மைதான் தூயவன்.
சந்தோஷங்களைத் தள்ளி வைத்துவிட்டு உழைப்பு உழைப்பு.திரும்பிப் பார்த்தால் வயது ஓடிப்போயிருக்கும்.பிறகு !