கால அட்டவணை

புதன், 16 ஜூன், 2010

வங்கி.......    இது வெளிநாட்டில் பணியாற்றும் தமிழ் மக்களின் நலன் கருதி,

என் பணியின் அனுபவத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் ,மற்றும் நம்

இந்தியாவில் உள்ள வங்கிகளில் நடைபெறும் குற்றங்களையும்,

குறைபாடுகளையும்,உங்களுக்கு இந்த இடுக்கையின் மூலமாக

தெளிவுபடுத்துகிறேன்.

வங்கி கணக்கு
     இன்று இந்தியாவில் உள்ள அணைத்து வங்கிகளும் வாடிக்கையாளரின் கணக்கு எண்(அக்கௌன்ட் நம்பர்)எண்ணிக்கையை அதிக படுத்தி உள்ளனர்.

வங்கி பெயர்  கணக்கு எண்

இந்தியன் பேங்க் 9


இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 15

கனரா பேங்க் 13

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 11

ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் 11

ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் 11

கரூர் வைசியா பேங்க் 16

ஐ சி ஐ சி ஐ பேங்க் 12

சிட்டி பேங்க் 10

எச் டி எப் சி பேங்க்  14

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 10

யூனியன் பேங்க் ஆப் இந்தியா   15

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா 13

பேங்க் ஆப் பரோடா   14

பேங்க் ஆப் இந்தியா 15

விஜயா பேங்க் 15

யூ கோ பேங்க் 14

சிட்டி யூனியன் பேங்க் 17

தீனா பேங்க் 16

தமிழ்நாடு மெர்கண்டெயில் பேங்க் 15

(இதில் குறிப்பிடபடாத வங்கிகளின் விபரம் , கருத்துரையின் வாயிலாக கேட்பவர்களுக்கு விபரம் கொடுக்கப்படும்.)


வெளி நாட்டில் பணிபுரிபவர்களின் கவனத்திற்கு...
1 . நீங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பும் பணம் ,உங்கள் வங்கியில் சரியாக வரவு வைக்கபடுகிறதா என்று கவனம் செலுத்துங்கள்.


2 . மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்கள் வங்கியில் இருந்து பற்று வரவு பதிவை (statement )கேட்டு பெறுங்கள்.

3 .உங்களிடம் பற்று அட்டை (டெபிட் கார்டு ),வரவு அட்டை (கிரெடிட் கார்டு) உள்ளனவா? அவற்றை அந்நியரிடம் கொடுத்து உபயோகிக்காதீர்கள்.

4 .உங்கள் வங்கி கணக்கு பற்றிய சந்தேகங்களை வங்கி அதிகாரிகளிடம்

மட்டுமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

குறைபாடுகளும் குற்றங்களும்

     வங்கியில் பணியாற்றும் பெருபான்மையான ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் கூறுவதில்லை.


     அனைத்து வங்கிகளிலும் கணக்கு (அக்கௌன்ட்) இலக்கம் மாற்றப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும், பெருபான்மையான வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கபடவில்லை.

     பற்று அட்டை (டெபிட் கார்டு) முறை புழக்கத்தில் வந்து நீண்ட நாட்கள் ஆகியும் சில வாடிக்கையளர்களுக்கு கேட்டும் கொடுக்க படாமல் இழுபறி செய்கின்றனர்.

     கடன் வசதி முறையை அரசாங்கம் அறிவித்தாலும், அவற்றை சில வங்கிகள் கண்டும் காணததுமாக இருக்கின்றனர்.

     சில மாதங்களுக்கு முன் ஊடகங்கள் வாயிலாக வந்த செய்திகளை பார்த்து இருப்பீர்கள், வங்கி உழியர்களே வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை கையாடல் செய்து இருப்பது,

 கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

     நவீன தொழில் நுட்பம் நல்ல விசயக்களுக்கும் மட்டும் அல்லாமல், தவறான விசயங்களுக்கும் பயன் படுத்த படுகிறது. இது போன்று வெளியில் வராத விஷயங்கள் ஏராளம்.

என் அருமை சகோதரர்களே நீங்கள் பாலைவன நாட்டில் வந்து

உங்கள் உறவுகளை பிரிந்து, வியர்வையை சிந்தி உழைத்த உழைப்பு, கயவர்களால் களவாட பட்டு விட கூடாது என்பதே இந்த

இடுக்கையின் நோக்கம்.


கவி.........தை

இது ஒரு பாசத்தின் வெளிபாடு மட்டும் அல்ல

இது உங்கள் மீதான நேசத்தின் வெளிபாடு.
கடி ஜோக்ஸ்


வாடிக்கையாளர் : சார்... நாகூர் மீரான் க்கு செங்கோட்டைக்கு பணம் அனுப்பனும்.

வங்கி ஊழியர் : நாகூர் மீரானுக்கு ஏன் செங்கோட்டைக்கு அனுப்பனும், என்னிடம் கொடுத்து விடுங்கள் நானும் நாகூர் தான்.வாடிக்கையாளர் : சார்.... மணி என்கிற பெயருக்கு பணம் அனுப்பனும்.

வங்கி ஊழியர் : அவரே மணி அவருக்கு ஏன் மணி.

18 கருத்துகள்:

asiya omar சொன்னது…

மிக பயனுள்ள் இடுகை. நிச்ச்யம் பின்பற்ற வேண்டியவை.பாராட்டுக்கள்.நாங்கள் கேட்டால் தான் ஸ்டேட்மென்ட் அனுப்புவாங்க,அப்படி தான் இருக்கு நிலமை,நாங்கள் நிறைய அனுபவித்து இருக்கிறோம்.

இளம் தூயவன் சொன்னது…

சகோதரி நிறைய பேர் அறியாமல் இருக்கிறார்கள் ,படித்தவர்களின் நிலை இப்படி என்றால், படிக்காமல் வெளி நாடு வந்து பணியாற்றுபவர்களின் நிலை மிகவும் கஷ்டம்.

எம் அப்துல் காதர் சொன்னது…

அருமையான இடுகை சார், எங்கே இருக்கீங்க.. சொல்லுங்க, சேக் ஹான்ட் பண்ணனும்.

அல்லது நானே வந்து உங்கள் கையை பிடித்து சேக் ஹான்ட் பண்ணியதாக உங்கள் கையை நீங்களே குலுக்கிக் கொள்ளுங்கள். வர்ர்ட்டா...

மனோ சாமிநாதன் சொன்னது…

புதிதாக வெளி நாடு வந்திருக்கும் பலருக்கு இது மிகவும் உபயோகமான பதிவு.
நம் நாட்டில் இருக்கும் பல சாபக்கேடுகளில் ஒன்று இந்த வங்கிகளில் பணி புரிபவர்களின் ஒழுங்கீனங்கள்! பெரிய வங்கிகளில் நேரில் போய் பணம் கட்டினாலும் உடனேயே வரவு வைக்கப்படுவதில்லை. கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை என்று பல முறை இழுத்தடிக்கிறார்கள். அந்த அளவுக்கு நம் நாட்டில் பொன்னான நேரம் விரயமாகிறது! எல்லாவற்றிற்கும் எந்த புரட்சி வந்து சரியாகுமோ தெரியவில்லை!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…

மிகத் தேவையான செய்தி... நன்றி..

இளம் தூயவன் சொன்னது…

எம் அப்துல் காதர் கூறியது
வாங்க சார் ,தொடர்ந்து என்னை ஊக்குவிப்பதில்
கவனம் செலுத்தி வருகிறீர்கள் ,கவலை படாதீர்கள்
உங்க கையாள மெடல் வாங்கிடுவேன் சார்.

இளம் தூயவன் சொன்னது…

மனோ சாமிநாதன் கூறியது...

சகோதரி உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மக்கள் சம்மந்தப்பட்ட நிறைய விஷயங்கள் எழுத ஆசை.உங்களை போன்ற மூத்த எழுத்தாளர்களின் ஊக்குவிப்பு, என்னை போன்ற சிறியவர்களுக்கு கட்டாயம் தேவை.

இளம் தூயவன் சொன்னது…

சகோதரர் பிரகாஷ் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்கள் தளத்தை பார்த்தேன் ,அருமையாக எழுத்தியுள்ளிர்கள். கருத்துகளை முடக்கி வைத்து இருப்பதால் ,கருத்து கூற முடியவில்லை.

செ.சரவணக்குமார் சொன்னது…

மிகப் பயனுள்ள பதிவு.

மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

செ.சரவணக்குமார் கூறியது
வாங்க செ சரவணகுமார் , முதலில் உங்கள் நலம் அறிய ஆவல் ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

நல்ல பதிவு.. அனைவரும் பின்பற்றக்கூடிய வழிமுறைகளை சொல்லிருக்கீங்க.. வங்கித்தகவல்கள் அருமை.. நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது
வாருங்கள் நண்பரே ,உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Riyas சொன்னது…

நல்ல பதிவு.. தொடருங்கள்

நானும் அபுதாபியிலதான்..

நேரமிருந்தால் இந்தப்பக்கமும் வாங்க,, riyasdreams.blogspot.com

இளம் தூயவன் சொன்னது…

ரியாஸ் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இறைவன் நாடினால் உங்களை வந்து சந்திக்கின்றேன்.

Krishnaveni சொன்னது…

useful post. thanks thooyavan.

இளம் தூயவன் சொன்னது…

Krishnaveni கூறியது...
Thanks...sister

அக்பர் சொன்னது…

மிக பயனுள்ள பதிவு.

நான் சென்ற மாதம் sbiல் ஒரு nri அக்கவுண்ட் தொடங்கினேன். ஏடிஎம் கார்டு மற்று இன்டெர்னெட் பேங்கிங் இரண்டும் நான் ஊருக்கு சென்றாலோ அல்லது எனது மனைவிக்கு அதாரிட்டி லெட்டர் அனுப்பினாலோ மட்டுமே தருவதாக சொன்னார்கள். செக் புக் கிடைத்து விட்டது. ஏடிஎம் கார்டு வாங்க வழி உண்டா.

இளம் தூயவன் சொன்னது…

அக்பர் கூறியது...
மிக பயனுள்ள பதிவு.

//நான் சென்ற மாதம் sbiல் ஒரு nri அக்கவுண்ட் தொடங்கினேன். ஏடிஎம் கார்டு மற்று இன்டெர்னெட் பேங்கிங் இரண்டும் நான் ஊருக்கு சென்றாலோ அல்லது எனது மனைவிக்கு அதாரிட்டி லெட்டர் அனுப்பினாலோ மட்டுமே தருவதாக சொன்னார்கள். செக் புக் கிடைத்து விட்டது. ஏடிஎம் கார்டு வாங்க வழி உண்டா.//
ஏ டி எம் கார்டு உங்கள் மனைவிக்கு அதாரிட்டி லெட்டர் அனுப்பினால் கொடுக்க வாய்புகள் உண்டு. நீங்கள் இங்கு அனுப்ப கூறினாலும் அனுப்பி வைப்பார்கள்.உங்கள் வங்கி கணக்கில் தொகை அதிகமாக இருக்குமே ஆனால், முடிந்த வரை இன்டர்நெட் பாங்கிங் சிஸ்டத்தை புறகனிக்கவும்.