சனி, 26 ஜூன், 2010
அன்றும்....இன்றும்
கால சக்கரம் அதி வேகமா சுற்ற தொடங்கிவிட்டது.
வானமே எல்லை என்கின்ற அளவிற்கு, அதி உயர்ந்த கட்டிடங்கள்.
கண்டம் விட்டு கண்டம் நாங்களும் சென்று வருவோம்
என்கின்ற அளவிற்கு போட்டி.
யார் யாரை அழிப்பது என்று, போட்டி போட்டு கொண்டு
தயாரிக்கும் ஆயுதம் .
இதற்கு பெயர் அறிவியல் வளர்ச்சி என்றார்கள்.
என்னை பொறுத்தவரை இது அழிவின் வளர்ச்சியோ என்று அஞ்சுகிறேன்.
அன்று தாய் பாலை மட்டும் உணவாக உண்டு வளர்ந்த குழந்தைகள்.
இன்று புட்டி பாலை மட்டுமே உணவாக உண்டு வளர்கின்றது.
அன்றோ தாய் தன் கண் பார்வையில் குழந்தைகளை வளர்த்தாள்.
இன்றோ வளர்ப்பு தாய் கொண்டு வளர்க்கப்படுகின்றது.
அன்று தாய் தந்தையர்கள் மீது பிள்ளைகள் அதிகம் மதிப்பும் மரியாதையும் வைத்து கவனித்து வந்தார்கள்.
இன்றோ முதியவர்கள் இல்லம் நிரம்புகின்றது.
அன்று குடும்ப வாழ்க்கையை கோபுரத்தில் வைத்து பார்த்தார்கள்.
இன்றோ உயர் நீதி மன்றத்தில் வைத்து கலங்க படுத்துகிறார்கள்.
அன்று விவாகரத்து என்றால், அஞ்சுவார்கள்.
இன்றோ விவாகரத்து, ஆடையை மாற்றுவது போல் உள்ளது.
அன்று பாசத்திற்கு உரிய மக்களாக இருந்தார்கள்.
இன்றோ வேஷத்திற்கு உரிய மக்களாக இருக்கின்றார்கள்.
நம் செவிகளுக்கு அவ்வபொழுது, வந்து அடையும்
சில செய்திகள். நம் உள்ளதை உருக்குலைய வைகின்றது.
ஆம்...
30 வயதில் இருதய நோய்,
25 வயதில் கேன்சர் ,
20 வயதில் கிட்னி பைலியர்
10 வயதில் அடையலாம் தெரியாத புதிய நோய்கள்.
இவையெல்லாம் எங்கிருந்து வந்தது.
இதற்கு யார் காரணம்.
நாம் உண்ணும் உணவு சுத்தமாக உள்ளதா?
நாம் அறுந்தது நீர் சுத்தமாக உள்ளதா?
நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக உள்ளதா?
இவ்வாறு கேள்வி கணைக்களை தொடுத்து கொண்டே போகலாம்.
அன்று தன் வளர்ச்சியை மட்டும் கவனம் செலுத்திய நாடுகள்.
இன்று அடுத்தவன் வளர்ச்சியை கண்டு அகம்பாவம் பிடித்து அலைகின்றது.
யார் பெரியவன் என்கின்ற போட்டி.
படைத்தவன் இருக்கும் பொழுது,படைபினங்கலாகிய நாம் என்ன செய்ய முடியும்.
மனிதர்களுக்கு இறைவன் சிந்திக்கும் அறிவை கொடுத்தது, நல்லதை முயற்சிக்க தான். அனால் இன்றோ நயவஞ்சகத்திற்கு தான் இந்த அறிவை பயன்படுத்துகிறார்கள்.
இறைவா அருள் புரிவாய்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
22 கருத்துகள்:
பேம்பர்ஸ் - இதையும் சேர்த்துக்குங்க
சிந்தனை துளிகள் அருமை இளம் தூயவன்.
நல்லாயிருக்கு பதிவு..
வாங்க ஜமால் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
asiya omar கூறியது...
வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க ரியாஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
a must read post...nicely written words Thooyavan...great
அன்றும் இன்றும்.... அருமையாய் எழுதியிருக்கீங்க.... உங்க பாலேவர் லிஸ்ட்ல என்னை காணேம்... நான் உங்க பாலேவர் லிஸ்ட்ல ஜாயின் பண்ணிட்டேன். ஆனாலும் தெரிய மாட்டேங்குது. செக் பண்ணுங்க..
அன்றும் இன்றும்;
நீங்க சொன்னாலும் சொல்லக் கட்டியும் இனி என்றென்றும் இதே மாதிரி தான் இருக்கும்ங்க. இவைகளை செய்வது அனைத்தும் நமது சொந்த பந்தங்கள் தாங்க. இவற்றை நாம் "குற்றம் பார்க்கின் சுற்றமில்லைங்க" சொல்றத சொல்லிட்டேன். இனி நீங்க தான் உஷாரா இருக்கனுங்க. எழுதும்போது இப்படி அப்படி திரும்பி பார்த்துக் கிட்டு எழுதுங்க சார்!! வர்ர்ட்டா..
Krishnaveni கூறியது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
வாங்க ஸ்டீபன் ,என்ன பிரச்சினை என்று தெரியல செக் பண்ணுறேன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
எம் அப்துல் காதர் கூறியது...
வாங்க சார் ,நம் தமிழ் சொந்தம் பந்தம் எந்தவகையிலும் பாதிக்க பட கூடாது என்பது தான். இந்த இடுக்கையின் நோக்கம், எவ்வழி நல் வழி அவ்வழி நம் வழியாக இருக்க வேண்டும் என்பதே இந்த இளம் தூயவனின் நோக்கம்.முயற்சி திருவினையாக்கும்.
ரொம்ப நல்ல பகிர்வு சார்.
வாங்க சரவணகுமார் ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அற்புதமான பதிவு..
20 வருடங்களுக்கு முன்பு அன்பு நிறைந்த மனிதர்களே எங்கும் நிறைந்திருந்தார்கள்..
இப்போது..பணம் பணம்..பணம்..என்று பலர் மாறிவிட்டார்கள்..
அதன்விளைவே முதியோர் இல்லம்..
என்றுமே உணமையான அன்பில் உள்ள மகிழ்ச்சி எதிலும் கிடப்பதில்லை..
அன்புக்கு அடிமையான எவரும் பணத்துக்கு அடிமையாவதில்லை..
வைகறை நிலா கூறியது
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நல்ல ஒப்பிடல்கள் நண்பரே!
சற்றே எழுத்துப்பிழைகள் ..
ஆனால்,மிக உண்மையான கருத்துகள்!
அண்ணாமலை..!! கூறியது
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,அன்போடு எழுத்து பிழைகளை சுற்றி கான்பித்தற்கு மிக்க நன்றி.
நல்ல பதிவு!
அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசங்கள் சுய நலமும் மனதில் ஈரத்தன்மை காய்ந்து போனதும்தான்!
மனோ சாமிநாதன் கூறியது...
நல்ல பதிவு!
//அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசங்கள் சுய நலமும் மனதில் ஈரத்தன்மை காய்ந்து போனதும்தான்!//
சரியா சொன்னிங்க சகோதரி,நினைத்தாலே கஷ்டமாக உள்ளது. மனிதர்களின் இந்த செயல்பாடுகள் எங்கு கொண்டு போய் விடுமோ என்று தெரியவில்லை.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Excellent article.. each and every message is 100% true..
Excellent article.. each and every message is 100% true..
கருத்துரையிடுக