வீட்டிற்கு பெயரோ அன்னை இல்லம்
அன்னை இருப்பதோ அனாதை இல்லம்
தாய்.............கண்ணியத்திற்கு உரியவள்
தாய்.............கண்ணியபடுத்த வேண்டியவள்
தாய்.............பாசம் என்பது விலை மதிப்பற்றது
தாயை இன்றைய சேய்கள் எப்படி நடத்துகின்றனர்
தாயில் சிறந்த கோவிலும் இல்லை என்று யாரோ பாடினார்
நீ கோயிலாக பார்க்க வேண்டாம் ,தேவைக்கு வேண்டியதை செய்து கொடு.
இல்லையெனில் நாளை உன் குழந்தை எவ்வாறு உன்னை நடத்தும் என்று நினைத்துபார்.?
8 கருத்துகள்:
தாய்மையை ஒரு கோவிலாக ஒரு கலத்தில் நம் இந்தியா வணங்கியது. காரணம் முன்னோர்கள் அப்படி வழி நடத்தியதை, பின்னால் வந்தவர்கள் பின் தொடர்ந்தார்கள். தாய்மையின் சிறப்பைப்பற்றி புத்தகங்கள் தொடர்ந்து வெளியாயின. திரைப்படங்கள் உருவாகின. ஆனால் இன்றோ அன்பைப்பற்றியும் பாசத்தைப்பற்றியும் சொல்லிக்கொடுக்கவோ உணர்த்தவோ எதுவுமேயில்லை. அதனால்தான் தாய்மையின் பெருமையை இன்றைய தலைமுறை உணர்வதில்லை. எல்லாமே இன்று சுயநலத் தொடர்ச்சிகள்தான்.
உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி சகோதரி.
சரியாக சொன்னீர்கள் இன்றைய திரைப்படங்களில் தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு என்கின்ற பாலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை காட்டுவதில்லை, இன்று ஒருவர் குடும்பத்தோடு திரை அரங்கிற்கு சென்று பார்க்க முடியாத வகையில், திரைப்படங்கள் உள்ளன. நன்றி சகோதரி.
மிக நல்ல பதிவு சார்.
உங்களையும் அப்துல்காதர் சாரையும் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி.
சரவணகுமார் உங்கள் முதல் வருகைக்கும் ,கருத்தும் மிக்க நன்றி. உங்களை நேரில் சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி.
சகோ.இளம் தூயவன் அருமையாக நச்சென்று சொல்லிட்டீங்க.பாராட்டுக்கள்.
சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.
தாயை பற்றி அருமையான வரிகளை தொகுத்து இருக்கீஙக்.
தாய் விலை மதிப்பில்லா பொக்கிஷம் ஆச்சே.
Jaleela Kamal
சகோதரி உங்கள் முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக