வாசனை திரவியம் பூசி
வலம் வந்த காலம்
அதற்கு பெயர் இறந்த காலம்
நோய் வாய் பட்டு படுக்கையில்
காலை கடனை கழிக்கும் நிலை
இதற்கு பெயர் நிகழ்காலம்
உடலை துணியில் சுற்றி
நிரந்தர உறக்கம் என்பார் மண்ணறையில்
அதற்கு பெயர் எதிர்காலம்
தவறான வழியில் திரவியம் தேடி
ஈன்று எடுத்த செல்வங்களுக்கு
அள்ளி கொடுத்தாயே
இன்றோ உன்னை
திரும்பி பார்க்க
நாதியில்லை உலகத்திலே
இவையெல்லாம் மறந்து நாம்
ஆடும் ஆட்டங்கள்
எக்காலத்திற்கும் பயன் அன்று.
17 கருத்துகள்:
கடைசி பாரா சூப்பர்...அனாதைகளாக இருக்கும் பெற்றோர்களுக்கு கவிதை அர்பணம் ... வாழ்த்துக்கள்
சூப்பர் கவிதை. அசத்தல்.
இவையெல்லாம் மறந்து நாம்
ஆடும் ஆட்டங்கள்
எக்காலத்திற்கும் பயன் அன்று.//
உண்மையும், நிதர்சனமும் ம்ஹும்...!!!
வாழ்கையை அழகிய கவிதை வடிவில் நச்சென்று கூறிவிட்டீர்கள் ச்கோ
//தவறான வழியில் திரவியம் தேடி
ஈன்று எடுத்த செல்வங்களுக்கு
அள்ளி கொடுத்தாயே
இன்றோ உன்னை
திரும்பி பார்க்க
நாதியில்லை உலகத்திலே//
இப்பவெல்லாம் நல்ல வழியில் பொருள் சேர்த்து கொடுத்தாக்கூட யாரும் திரும்பி பார்க்க மாட்டாங்க.
நமக்குன்னு கொஞ்சம் சேர்த்து வச்சா பிற்காலத்துக்கு உதவும்.
நல்ல கருத்துள்ள கவிதை சகோ.
இன்றைய பெற்றோர்கள் கொஞ்சம் விழிப்புடன் இருக்கத் தொடங்கியிருக்கிறார்கள் தூயவன்.நல்ல கவிதை !
நல்லதொரு கவி வழங்கிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
சகோ,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? இடுகைகளை நேரம் கிடைக்கும் பொழுது வாசிக்கிறேன்.
நல்ல கருத்துடன் ஒரு கவிதை சூப்பர் தல..
மதுரை சரவணன் கூறியது...
வாங்க சரவணன், கருத்துக்கு மிக்க நன்றி.
vanathy கூறியது...
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
MANO நாஞ்சில் மனோ கூறியது..
வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.
ஹேமா கூறியது...
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
அரசன் கூறியது...
வாங்க அரசன், கருத்துக்கு மிக்க நன்றி.
asiya omar கூறியது...
வாங்க சகோதரி, நலமாக உள்ளோம் , வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நாடோடி கூறியது...
வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
கருத்துரையிடுக