கால அட்டவணை

வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாண்டு தொடர் பதிவு 2010 - 2011

சகோதரி ஆசியா உமர் அவர்களின், தொடர் பதிவிற்கான அழைப்பை ஏற்று இந்த இடுகையை வெளியிடுகிறேன்.  

மனிதர்களில் கனவு காணாதவர்கள் இருக்க முடியாது. வாழ்க்கை இப்படி தான் வாழ வேண்டும்.என்று எனக்குநானே ,சில வட்டங்களை போட்டு கொள்வது என் பழக்கம். அன்பான மனைவி  அழகான இரண்டு பிள்ளைகள். என்மகன் 7 வகுப்பு படிக்கின்றார் , என்மகள் 2 வகுப்பு படிக்கின்றார் . இது என்னை பற்றி ஒரு அறிமுகம்.


1 . அன்பாக பேசுவது , நாமெல்லாம் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் என்ற ஒற்றுமையை கடை பிடிப்பது.

2 . சிங்கையில் பணியாற்றும் எனது நண்பர்களோடு, பல ஆண்டுகளுக்கு பிறகு தொடர்பு கொண்டது. இந்த முறை விடுமுறையில் ஊர் சென்றிந்த பொழுது,பத்து ஆண்டுகளுக்கு பிறகு,நாகூரில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் சென்று வந்தேன். ஈரோட்டு மக்களிடம் எனக்கு பிடித்தது, ஊரை சுத்தமாக வைத்து கொள்வது. இன்றும் அவர்கள் அதை கடை பிடித்து வருகிறார்கள்.

3. சும்மா வலைப் பூவில் கிறுக்கி கொண்டு இருந்த என்னை, சகோதரி ஆசியா உமர் அவர்கள், ஒரு அவார்டை கொடுத்து, என்னை எழுத ஊக்குவித்தார்கள். இன்றைக்கு இந்த வலைப் பூ என்னுடைய பொழுது போக்கு.

4. எனக்கு தெரியாமல் எனக்காக என் மனைவி வாங்கி வைத்து, எனக்கு கொடுத்த சில பரிசுகள்.

5. எனது அன்பு மகள் சுதந்திர தினத்தில் பள்ளியில் நடந்த விழாவில் பேசியது. காரைக்கால் F M ரேடியோவில் ஒளிபரப்பானது.

6. பிடித்த மனிதர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு கூற முடியாது. அன்பாக பேசுபவர்கள் அனைவரையும் பிடிக்கும். முதல் அமைச்சர் கருணாநிதியின் பேச்சு தமிழ் நடை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

7. மெஹ்ரான் பிரியாணி மசாலாவில் நான் செய்த பிரியாணி. என் வீட்டில் எல்லாருக்கும் பிடித்து விட்டது.

8. எனக்கு ரொம்ப பிடித்த இடம் ஊட்டி. என் தாய் நாட்டை மிகவும் நேசிப்பவன். ஆதலால் மற்ற நாடுகளை குறிப்பிட மனமில்லை.

9. இந்த ஆண்டில் எனது தம்பிக்கு U K நாட்டு வங்கியில் வேலை கிடைத்தது. இந்த முறை தாயகம் சென்று இருந்த போது,
பல மூதாட்டிகள் ரோட்டில் அனாதைகளாக கிடப்பதை பார்த்து என் கண்கள் கலங்கி விட்டது. நான் இறைவனிடம் அந்த நேரத்தில் கேட்டது, யாருக்கும் இந்த நிலை வேண்டாம் என்று.

10. வாழ்க்கை சாதிக்க வேண்டும் என்கின்ற எந்த நோக்கமும் கிடையாது. வாழ்க்கையில் முடிந்த வரை பிறருக்கு உதவ வேண்டும் என்கின்ற எண்ணம் என் மனதில் எப்பொழுதும் உண்டு.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

தோல் பொருட்கள்

     இன்று அதிகமாக ஏற்றுமதி செய்யும் தோல் பொருட்களில் தோல் ஷூ மற்றும் தோல் ஜாக்கெட் ஆகியன முதலிடம் பெறுகின்றன. தோல் பேக், தோல் பெல்ட், மணிபர்ஸ் போன்ற பொருட்களும் ஏற்றுமதியில் இடம் பெறுகின்றன.

தோல் ஜாக்கெட்
     
   இவை மாட்டு தோல் மற்றும் ஆட்டு தோல் இந்த இரண்டிலும் தயாரிக்கின்றார்கள்.



பெரிய நிறுவனங்கள் அவற்றிற்கு தேவையான தோல்களை அவர்களே தங்களுடைய சொந்த தொழிற்சாலையில் தேவைக்கு ஏற்றார் போல் தயாரித்து கொள்வார்கள், இதனால் இவர்கள் இலாபத்தை அதிகமாக பார்க்க முடிகிறது. தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லாத

சிறிய நிறுவனம், (சென்னை) பெரியமேட்டில் உள்ள தோல் விற்பனையாளர்களிடம் சென்று ,அவர்களுக்கு வேண்டிய தரத்தை உடைய தோலை கொள்முதல் செய்வார்கள்.

தோல் ஜாக்கெட் தயாரிக்க தையல் தெரிந்தவர்களும், தையல் மெஷினும் (இயந்திரமும்) முக்கியம்.இந்த நிறுவனத்தை நடத்துபவர்கள் ,தோல் பற்றி அறிந்து இருப்பது நன்று. இவர்கள் தனக்கு கிடைத்த ஆர்டருக்கு ஏற்றாற்போல் பல மாடல்களை தயாரிக்கின்றனர். இந்த தொழிலை யாரும் தொடங்கலாம்.

தோல்  ஷூ


இந்த தொழில், நவீன தொழில் நுட்பத்தை மையமாக கொண்டது. இதை தயாரிக்க பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் அவசியம். அப்பர் தனியாகவும் லைனிங் தனியாகவும் பாட்டம் தனியாகவும்
தயாரிக்கப்பட்டு ,பிறகு மூன்றையும் ஒன்றாக இணைத்து,
ஷூவை முழுமை அடைய செய்கிறார்கள். சிறிய நிறுவனங்கள் லைனிங் மற்றும் பாட்டங்கள் தயாரித்து இவர்களுக்கு சப்ளை செய்கிறார்கள். பெரும்பான்மையான இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த தொழிலை தொடங்க அதிக முதலீடு தேவை படுகிறது. தொழில் நடத்துபவர் தோலை பற்றியும், அதன் தரம் பற்றியும் அறிந்து இருக்க வேண்டும்.


இந்த தொழிற்சாலைகளில் பேட்டன் எடுத்து கட்டிங் செய்து கொடுக்கும் மாஸ்டர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சரியான முறையில் பேட்டன் செய்து கொடுக்க வேண்டும்.


தோல் வேஸ்ட் ஆகாமல் கட்டிங் செய்து கொடுப்பது மூலம், அந்த நிறுவனம் எந்த சேதாரமும் இல்லாமல், தன்னுடைய இலாபத்தை பார்க்க முடியும். இது அல்லாமல் கட்டிங் செய்யும் போது, கழியும் சிறு சிறு தோல்களை எடுத்து அவற்றை கொண்டு ,கீ செயின்
மற்றும் சிறிய பர்ஸ் போன்ற சில பொருள்கள் செய்து பயன் அடையலாம். பெரும்பான்மையான தோல் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாட்டிற்கு அந்நிய செலவாணி கிடைக்கின்றது.

கழிவு நீர்

     சகோதரி ஹுசைனம்மா அவர்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு பற்றி விவரிக்க சொல்லி இருந்தார்கள். இந்த இடத்தில் அது பற்றி கொஞ்சம் கூற கடமை பட்டுள்ளேன். வெளியேறும் கழிவு நீரை பெரிய தொட்டியில்
சேகரித்து, அவற்றை இயந்திரத்தின் உதவியுடன் சுத்திகரித்து ,பிறகு அவற்றை அதற்கு என ஒதுக்கப்பட்ட
தொட்டியில் சேகரித்து ,அந்த தண்ணிரை மீண்டும் உபயயோகப்படுத்துகிறார்கள். சுத்திகரிப்பு நிலையத்தை
உருவாக்குவதற்கு மட்டும் இவர்களுக்கு பெரும் தொகை செலவு செய்யப்படுகிறது.


என்ன நண்பர்களே! இன்னும் நிறைய கூற வேண்டும் என்று தான் ஆசை. வேலை நிமித்தம் காரணமாக முடியவில்லை.

அவார்ட்

இந்த அவார்டை கொடுத்து ஊக்குவித்த சகோ. அப்துல் காதர் அவர்களுக்கு மிக்க நன்றி.

சனி, 18 டிசம்பர், 2010

தோல் (LEATHER )

இன்று இந்தியாவில் ஏற்றுமதி தொழிலில் முக்கிய பங்கு, தோல் வியாபாரத்திற்கு உண்டு.

     இந்தியாவில் தயாரிக்கப்படும் தோல் பொருள்கள், ஐரோப்பா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

பொருள்கள் தயாரிப்பதற்கு தோல் எவ்வாறு பதனிடப்படுகின்றது என்று பார்ப்போம்.

தோல்கள் - இவை மூன்று வகைகளாக பிரிக்கலாம் .

1. மாட்டு தோல்

2. ஆட்டு தோல்

3. எருமை தோல்

அதிகமாக பொருள் தயாரிக்க பயன்படுவது மாட்டு தோலும் ஆட்டு தோலும் தான் .

பச்சை தோல்(RAW )

     இறைச்சி கடைகளில் இருந்து பெறப்படும் இந்த தோலை சிறு வியாபாரிகள் முதலில் உப்பிட்டு பதனிடுகிறார்கள். அதன் பின் அவற்றை மொத்த வியாபாரிகளிடம் விற்று விடுகிறார்கள்.

மாட்டு தோல் பதனிடுவதற்கு ஈரோட்டுக்கும், ஆட்டு தோல் பதனிடுவதற்கு வாணியம்பாடி, ஆம்பூர், ராணிபேட்டை போன்ற ஊர்களுக்கும், மொத்த வியாபாரிகள் எடுத்து செல்கிறார்கள்.

பதனிடும் முறை :

     முதலில் இரண்டு நாள் பெரிய தொட்டியில் ஊற வைத்து அவற்றில் உள்ள உப்புகளை அகற்றுவார்கள்.

     பிறகு மேனியில் உள்ள முடிகளையும் மற்றும் ஜவ்வுகளையும் அகற்றுவதருக்கு சில கெமிகல்களை தொட்டி (யி) ல் போட்டு மீண்டும் ஊற வைப்பார்கள்.


       நன்கு ஊறிய பிறகு அவற்றின் மீது உள்ள முடிகளையும் உள் பகுதியில் உள்ள ஜவ்வுகளையும், கட்டையின் மீது சாய்த்து வைத்து பெரிய கத்திகளால் அகற்றுவார்கள். அதன் பின் தோலை நன்கு கழுவி விட்டு. பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட டிரம்மில் போட்டு அவற்றில் கெமிக்கல் போடப்பட்டு சில மணி நேரம் அவற்றை சுற்ற விடுவார்கள். பிறகு கெமிக்கல் போடப்பட்ட தண்ணிரை அகற்றி விட்டு, டிரம்மில் தண்ணீர் மட்டும் செலுத்தி கழுவுவார்கள்.



     பிறகு அந்த தோலை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து தண்ணீர் வடிய வைப்பார்கள்.

     நான்கு நாட்களுக்கு பிறகு அவற்றை வகை பிரிப்பார்கள். இதற்கு வெட் ப்ளூ என்று கூறுவார்கள்.

வகைகள்

ஓன்று

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

ஆறு

என்று வகை படுத்துவார்கள். அவற்றில் ஓன்று, இரண்டு மற்றும் மூன்று வகைகள் சதுர அடி நல்ல விலைக்கு விற்கப்படும். நான்கு, ஐந்து மற்றும் ஆறு சதுர அடி குறைவான விலைக்கு விற்கப்படும்.

      இதன் பின் பொருள் தயாரிக்கும் நிறுவனம் அவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் அவற்றிற்கு கலர் ஏற்றுவார்கள், அந்த கலர் ஏற்றுவதற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட டிரம் பயன்படுத்துவார்கள். மேனியில் கலர் ஸ்ப்ரே மூலம் பெய்ண்ட் ஏற்றுவார்கள் .

     தோல் கோட்டுகள் தயாரிப்பதற்கு அதற்கு ஏற்றார் போல் மாற்றுவார்கள். ஷூ தயாரிப்பதற்கு அதற்கு ஏற்றார் போல் மாற்றுவார்கள்.




     இதற்கு என்று தயாரிக்கப்பட்ட இயந்திரங்களும் உண்டு. இதுவரை தோல் பொருள்கள் செய்வதற்கு எவ்வாறு பதப்படுத்த படுகிறது என்று பார்த்தோம். பொருள்கள் எவ்வாறு தயாரிக்கபடுகின்றது என்பதை பிறகு காணலாம்.

சனி, 11 டிசம்பர், 2010

சிந்தனைக்கு சில....

நல்ல பெண்மணி

     கணவரின் வருமானத்தை கருத்தில் கொண்டு அதற்குள் அடங்குமாறு குடும்பத்தின் செலவுகளைச் சிக்கனப் படுத்தும் குடும்பத் தலைவியே மிகவும் போற்றத் தக்க நல்ல பெண்மணி.

துணிகளை பரிசோதிக்கும் முறை

     நல்ல பட்டாக இருந்தால் கை விரலை அதன் மீது வைத்து அழுத்தினால் கை ரேகைகள் துணி மீது பதிந்ததும் உடனே மறைந்து விடும். பட்டோடு வேறுவகை நூல்கள் கலந்திருந்தால் அந்த ரேகை அப்படியே இருக்கும்.

ஜலதோஷம் நீங்க

     ஜல தோஷம் ஆரம்பமாகும் அறிகுறி தென்பட்டவுடன் ஓமத்தை இடித்து உச்சியில் அரக்கிக் குளித்தால் ஜலதோஷம் மாறி விடும்.

கேப்பையின் கீர்த்தி

     கேப்பையை மாவு ஆக்கி அதில் சிறிது பச்சரிசியைப் போட்டுக் கூழ்காய்ச்சிக் சாப்பிட்டால் சிறுநீர் தடையின்றிப் பிரியும். உடலோ குற்ரால அருவியில் குளித்ததுபோல் பூவாய் இருக்கும்.

கண் வளையம்  

     சிலருக்குக் கண்ணைச் சுற்றிலும் கருவளையம் காணப்படும். அது பலவீனம் காரணமாக ஏற்பட்டதாகும். சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் பொடியைக் குழைத்து நன்கு காய்ச்சி அதனைத் குளிப்பதற்கு முன் கண்ணைச் சுற்றிலும் தேய்த்துப் பின் பத்து நிமிடம் ஊற வைக்கவும். தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வருகையும் செய்தியும்

இனிய நண்பர்களே மற்றும் சகோதர சகோதரிகளே,

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக,

     விடுமுறை கழிந்தது, பணிக்கு திரும்பி விட்டேன். ஆனால் தாயகத்தின் தாக்கம் நெஞ்சில் தவிர்க்க முடியாத ஓன்று. நாட்டில் ஒவ்வொரு இந்தியனும் நான் வளர்ந்து உள்ளேன், நம் நாடு வளர்ந்து உள்ளது, என்கின்ற பெருமை அனைவரின் முகத்திலும்
தெரிகின்றது. இதை விட என்ன சந்தோசம் வேண்டும். அந்நிய நாட்டில் பணியாற்றும் அனைவரும் அடிகடி தாயகம் சென்று வாருங்கள். ஏன் சொல்லுகின்றேன் என்றால், தாயகத்தின் வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் வேகமாக உள்ளது. நம் ஊரிலேயே நம்மை யார் என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்கின்ற நிலை வரும் முன் காப்போம். அவை என்றும் நம் நாடு அனைவரும் நம் மக்கள். உலகமே பணம் இருந்தால் பாசம் உண்டு என்கின்ற நிலையில் சென்று கொண்டு இருக்கும் பொழுது, நம் நாடு மற்றும் விதி விலக்கா என்ன?. நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அதி வேகமாக செல்கிறார்கள்,அதில் பெரும்பான்மையானவர்கள் இளைய தலைமுறை.

பிள்ளைகள் விசயத்தில் பெரும் கவனம் செலுத்த கடமை பட்டுள்ளோம்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

பயணம்

  


     சில நாட்களாக பனி நிமித்தம் காரணமாக யாருக்கும் கருத்துரை இடமுடியவில்லை . பயண நாட்களும் நெருங்கியதால், யாருடைய வலைதளத்தையும் பார்க்க நேரமில்லை. தாயகம் செல்வது என்று நினைத்தவுடன், மனது புள்ளிமான் போல் குதித்து ஓட ஆரம்பித்து, இன்னும்
நிற்கவில்லை. உற்றார் உறவினர்களையும் காணும் சந்தோசம்,எதற்கும் நிகர் இல்லை. இது அனைவருக்கும் உரிய ஓன்று. என்னுடைய வலை தளத்திற்கு வந்து என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும், இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மற்றவை இறைவன் நாடினால்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

எனக்கு பிடித்த ஆசிரியர்


     கல்வி இன்று பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது. எதற்கு எடுத்தாலும் பணம் ,கேள்வி கேட்டால் அதற்கு ஒரு மழுப்பல் , மீறி கேட்டால் அடுத்து வரும் பதில் ,உங்கள் பிள்ளைக்கு வேறு பள்ளியை பார்த்து கொள்ளுங்கள். ஒரு பிள்ளைக்கு கண்ணியத்தையும் கலாச்சாரத்தையும் நேர்மையையும்
ஊட்டக்கூடிய இடம் தான் பள்ளி கூடம்.
   
      ஆனால் இந்த பள்ளியில் சேர்ப்பதற்கு நன்கொடை என்ற பெயரிலே சில கையூட்டல்களை பெற்று கொண்டு தான், சேர்ப்பதற்கு அனுமதிக்கிறார்கள். இப்படி ஆரம்பிக்கும் கல்வி நம் பிள்ளைகளை எங்கு கொண்டு போய் நிறுத்தும்?.

     இது போன்ற குற்றங்களை சுட்டி காட்டும் நேரத்தில் , சில நல்ல உள்ளங்களையும் அவர்கள் கல்விக்காக ஆற்றி பணிகளையும் சுட்டி காட்ட கடமை பட்டுள்ளோம்.

     எனது ஆசிரியரும், பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற கலிபா சாஹிப் B.Sc., B.Ed., அவர்களை பற்றி அவர்களின் உதவி செய்யும் நல்ல எண்ணத்தையும் சிலவற்றை இங்கு கூற ஆசைப்படுகிறேன்.

     என்றும் சிரித்த முகம், நடந்தால் ராஜ நடை ,பேச்சில் கனிவு கலந்த கம்பீரம் இப்படிப்பட்டவர் தான் என் ஆசிரியர்.

     அவர் மாணவர்களை ஊக்குவிப்பதோ ஒரு தனி கலை என்றே கூற வேண்டும். ஒவ்வொரு மாணவனையும் பள்ளி உள்ளே மட்டுமின்றி வெளியிலும் கண்காணிப்பதில் அவரை மிஞ்ச முடியாது.

     அவர் தேசிய மேல் நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய பொழுது , அவரிடம் டியுசன் படித்த மாணவர்கள் ஏராளம் ,அந்த மாணவர்களில் வசதி அற்ற மாணவர்களுக்கு இலவசமாக கற்று கொடுத்தார். பாடம் நடத்தும் பொழுது சில சிறிய கதைகளை கூறி,மாணவர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து நன்கு புரியும் வண்ணம் பாடம் நடத்துவதில் கைத்தேர்ந்தவர்.

     யாருடைய மனமும் புண்படாவண்ணம் பேசுவதில் தனி திறமை என்றே சொல்ல வேண்டும். ஒரு பள்ளியை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

    எழுத்தாளர் தூயவன் அவருடைய நண்பர். தூயவனை பற்றி அவர் எங்களிடம் நிறைய கூறியுள்ளார். மாணவர்களை ஊக்குவிப்பதில் தனி கவனம் செலுத்துவார்.

     யாரிடமும் பிரதி பலன் எதிபார்க்க மாட்டார். உதவி செய் பலனை எதிபார்க்காதே என்ற பழமொழியை பின்பற்றியுள்ளார் என்றே கூறுவேன். மற்ற பள்ளியில் படிக்கும், அவருக்கு தெரிந்த மாணவர்களையும் அழைத்து அவர்களின் படிப்பு பற்றி விசாரிப்பார்.


    என் குடும்பத்தை சவுதி அரேபியா அழைத்து வர முயற்சி தொடங்கிய பொழுது,என்னுடைய மகனை தம்மாமில் உள்ள இந்தியர்களுக்கான பள்ளியில் சேர்ப்பதற்கு இந்தி தெரியாத சூழ்நிலையில் , என் மகனுக்காக அவரை அணுகி, சூழ்நிலையை விளக்கிய பொழுது,அவர் ஒரு இந்தி ஆசிரியரை அறிமுகம் செய்து வைத்து, ஒரே மாதத்தில் இந்தி உடைய பேசிக்கை கற்று கொள்ள உதவினார். எனக்கு முன்பாக அவரிடம் படித்த மாணவர்கள் எண்ணில் அடங்காது.

    மற்ற மாணவர்கள் யாரும் அவரை பற்றி எழுதி உள்ளார்களா என்று தெரியாது. எனக்கு மட்டும் அல்ல அவர் என் சகோதரர்களுக்கும் ஆசிரியர். அவருடைய நல்ல எண்ணங்களுக்கும் ,செயல்களுக்கும் இறைவன் அவருக்கு நற்கூலியை கொடுப்பானாக.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

ஆரோக்கியமும் சில குறிப்புகளும்

     நம் உணவில் சேர்த்து கொள்ளும் சில பொருள்கள் ,நமக்கு என்ன நன்மைகள் தருகின்றன என்பதை நாம் அறியாமலே இருக்கின்றோம், அதில் சில.

கறிவேப்பில்லை


1 நரைமுடி ஏற்படாமல் தடுக்கின்றது.

2 செரிமான சக்தி கருவேப்பில்லைக்கு உண்டு.

3 மல சிக்கல்களை போக்கும் தன்மை கருவேப்பில்லை உண்டு.

4 இரும்பு சத்து அதிகமாக உள்ளது.

5 மாதவிடாய் நேரங்களில் உணவில் கறிவேப்பில்லை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

நாவல் பழம்


1 சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு.

2 பசியை தூண்டும் தன்மை உண்டு.

3 நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மை உண்டு.

4 இதயத்தின் தசைகளை வழுவாக்கும் தன்மை உண்டு.

5 நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் தன்மை உண்டு.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

நற்குணம்

அடையாளங்கள்

     மனிதன் அதிகம் வெட்கப்படுபவனாக , தொல்லை செய்யாதவனாக , அதிகம் நன்மை செய்பவனாக, பேச்சைக் குறைப்பவனாக, உண்மையையே பேசுபவனாக, நற்செயல்கள் அதிகம் செய்பவனாக,

     வீண் காரியங்களை விட்டும் விலகிக் கொள்பவனாக, பெற்றோருக்கு நன்மை செய்பவனாக, உறவினருடன் சேர்ந்து வாழ்பவனாக இருக்க வேண்டும்.

    அவ்வாறே அவன் பொறுமை, நன்றி பாராட்டல்,பொருந்திக் கொள்ளல், சாந்தம்,மேன்மை,கற்பைப் பேணல், அன்பு செலுத்துதல் ஆகிய பண்புகளைக் கொண்டவனாக இருப்பது அவசியமாகும்.

     ஆனால் மனிதன் சபிப்பவனாக, திட்டுபவனாக, கோள் சொல்பவனாக, புறம் பேசுபவனாக,அவசரப்படுபவனாக, குரோதம் கொள்பவனாக, கஞ்சனாக,பொறாமை கொள்பவனாக இருக்கக் கூடாது. மலர்ந்த முகம்
காட்டுபவனாக, புன்னகை பூப்பவனாக இருக்க வேண்டும்.

பணிவு

     ஒரு மனிதன் தன்னை தாழ்த்திக் கொள்ளாமல் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு போதும் பெருமையுடன் நடந்துகொள்ளக் கூடாது.

நற்குணங்களை வளர்த்து கொள்ள சில வழிமுறைகள்


சரியான கொள்கை

     கொள்கை மிகப் பெரிய விஷயமாகும். ஒரு மனிதனின் குணநலன்கள் பெரும்பாலும், அவன் கொண்டிருக்கின்ற கொள்கை, சிந்தனை மற்றும் அவன் சார்ந்திருக்கின்றே மார்க்கம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இருக்கும்.

     கொள்கை சரியாக இருந்தால் அதன் விளைவால் குணமும் அழகானதாக இருக்கும்,சரியான கொள்கை அக்கொள்கைவாதியை வாய்மை,ஈகை ,சகிப்புத் தன்மை, வீரம் போன்ற நற்குணங்களின் பால்
தூண்டும், அது போல பொய், உலோபித்தனம்,அறியாமை,போன்ற தீய குணங்களை விட்டும் அவனை தடுக்கும்.

போராடுதல்

     நற்குணங்களை மேற்கொள்வதற்கும் தீய குணங்களை விடுவதற்கும் தன் மனதோடு யார் போராடுகின்றாரோ அவருக்கு நன்மைகள் வந்து சேரும். அவரை சூழ்ந்திருக்கும் தீமைகள் அவரை விட்டும் விலகும்.

சுயபரிசோதனை

     அதாவது தீய குணங்களை நாம் மேற்கொண்டு விட்டால் நாம் செய்தது சரிதானா என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற குணங்களின் பால் இனி திரும்பக் கூடாது
என நம் மனதைத் தூண்ட வேண்டும்.

சகிப்புத் தன்மை

     இது குணங்களிலேயே மிகக் சிறந்ததும் அறிவுடையோருக்கு மிக ஏற்றதுமாகும். சகிப்பு தன்மை என்பது கோபம் பொங்கியெழும்போது மனதைக் கட்டுபடுத்துவதாகும். ஆனால் சகிப்புத்தன்மையுடையவர்கள்
கோபப்படக் கூடாது என்பது இதன் ஷரத் அல்ல. மாறாக அவருக்கு கோபம் பொங்கியெழும்போது தனது சகிப்புத் தன்மையால் அதை அடக்கிகொள்வார்.

     சகிப்புத் தன்மையை ஒருவர் மேற்கொள்ளும்போது அவரை நேசிக்கக் கூடியவர்கள் அதிகமாவார்கள். வெறுக்கக் கூடியவர்கள் குறைந்து விடுவார்கள். மேலும் அவருடைய அந்தஸ்து உயர்ந்துவிடும்.

அறிவினர்களை விட்டு விலகியிருத்தல்

     யார் அறிவினர்களை விட்டும் விளகியிருக்கிராரோ அவர் தனது கண்ணியத்தைக் காத்துக்கொள்வார். மனத்துக்கு நிம்மதி கிடைப்பதோடு தனக்கு துன்பம் தரக்கூடியவைகளைக் கேட்பதை விட்டும் நீங்கிவிடுவார்.

கோபத்தை தவிர்த்தல்

     ஏனெனில் கோபம் உள்ளத்தை எரிகின்ற கனலாகும். இது தண்டிக்கவும் பழிவாங்கவும் தூண்டும். மனிதன் கோபப்படும்போது தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டால் தன்னுடைய கண்ணியத்தையும்
மதிப்பையும் காத்துகொள்வான்.

     என்ன நண்பர்களே ஏதோ, என்றோ படித்தது, மனத்தில் பட்டதை கூற வேண்டும் என்று தோன்றியது , அதன் விளைவு இந்த இடுக்கை.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

பணம் போட்டி பொறாமை

இன்று உலகத்தில் தொழில் போட்டியும் பொறாமையும் கொடி 
கட்டி பறந்து கொண்டு உள்ளது. எந்த நிறுவனத்தை எப்படி அழித்து ,எப்படி தான் மட்டும் முன்னேற வேண்டும் என்பதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிடம் நாம் தெரிந்து கொள்ளலாம், இவர்கள் செய்த வினை இன்று அவர்களால் தலை நிமிர முடியாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சி.

தொழில் போட்டியும் பொறாமையும் எல்லா துறைகளிலும் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்தாலும் ,இன்று அந்த வியாதி இப்பொழுது மருத்துவர்களிடம் தொற்றி கொண்டது.

     சில மாதங்களாக நான் தொலைகாட்சியில் மருத்துவர்களில் கேள்வி பதில் நிகழ்ச்சியை கண்டு வருகிறேன். ஒருவருக்கு ஒருவர் மருத்துவ துறையை மாற்றி மாற்றி குறை கூறிகொள்கின்றார்கள்.

     இதில் என்ன விஷயம் என்றால், ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாது என்பதை,சித்த மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவத்தில் குனபடுத்தலாம்.

     சித்த மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவத்தில் முடியாது என்பதை ஆங்கில மருத்துவத்தில் குனபடுத்தலாம்.

     இதை ஏற்றுகொள்ளும் மனபக்குவம் தான் மருத்துவர்களிடம் குறைவாக உள்ளது.

நோயாளிக்கு மருத்துவர் கொடுக்கும் மருந்தை விட, அவர் வாயில் இருந்து வரும் அன்பான மனதிற்கு ஊக்கப்படுத்துகின்ற வார்த்தைகள், பாதி நோயை குனபடுத்துகின்றது.


      இன்று சித்த ஆயுர்வேதிக் மற்றும் அக்குபஞ்சர் போன்ற மருத்துவம்,  வளர்ந்தது வருகிறது.

     இதற்கு காரணம் ஆங்கில மருத்துவத்தால் ஏற்படும் பின் விளைவுகளே. பின் விளைவு இல்லாத எந்த மருத்துவ துறையையும் மக்கள் வரவேற்க தயாராக உள்ளார்கள்.

நல்ல மனதோடு வைத்தியம் செய்கின்றவர்கள் இருந்தாலும், பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வைத்தியம் செய்பவர்கள் தான், இன்று அதிகமாக உள்ளார்கள்.

     என் அருமை மருத்துவ சகோதரர்களே, மக்களுக்கு நன்மையை ஏற்படுத்த கூடிய ஆங்கில மருத்துவமோ, அல்லது தமிழ் மருத்துவமோ அல்லது யுனானி மருத்துவமோ அல்லது சீனர்களின் அக்குபஞ்சர் போன்ற எந்த துறையாக இருந்தாலும், பின் விளைவற்ற பலன்  மக்களுக்கு கிடைக்குமானால், அதை வரவேற்க தயங்காதிர்கள். அடுத்த மருத்துவ துறையை காட்டி மக்களை அச்சத்திற்கு உட்படுத்தாதிர்கள்.

சனி, 14 ஆகஸ்ட், 2010

கண்ணோட்டம்

       இந்த மண்ணில் பணி புரிவதற்காக கால் பதித்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது.

      எத்தனை எத்தனை மாற்றங்கள். நான் இந்த நாட்டிற்கு வந்ததில் இருந்து, இந்த நாட்டில் கட்டப்படும் எத்தனையோ கட்டிடங்கள் பாலங்கள் விமான நிலையம் துறைமுகம் என்று புதிது புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு தலைவரும் அதற்காக வந்ததும் கிடையாது.

யாரும் தலைமை தாங்கியதும் கிடையாது.

எந்த கட்டவுட்டும் கிடையாது ,எந்த போஸ்டரும் கிடையாது எந்த ஆடம்பர விழாவும் இல்லை.

ஒவ்வொன்றும் எந்த ஒரு அறிவிப்பும் இன்றிதிறந்து விட படுகின்றது.

     சற்று பின்னோக்கி நான் பிறந்த மண்ணை நோக்கினேன். எனக்கு கருத்து தெரிந்து முதல் எத்தனையோ அரசாங்க கட்டிடங்கள் முதல் தனியார் கட்டிடங்கள் வரை யாராவது ஒரு தலைவரோ அல்லது மந்திரியோ இல்லாமல், திறக்க படுவதில்லை. இதற்காக செலவு செய்யும் பணம் சொல்வதற்கில்லை. இதில் சில தனியார் நிறுவனங்கள் தன் பண பலத்தை காட்டுவதற்கு செய்யும் செலவு என்னில் அடங்காது.

     இங்கு மன்னர் இறந்த செய்தி வந்தது கடைகள் அடைக்கபடவில்லை, அனைத்து பணிகளும் எப்பொழும் போல் நடந்து கொண்டு இருந்தது. எந்த ஒரு இடையூறும் இல்லை. ஒவ்வொரு சராசரி மனிதனை எவ்வாறு அடக்கம் செய்ய படுகின்றதோ அது போன்று மன்னருடைய உடலை அடக்கம் செய்தார்கள்.

     உலகத்தில் உள்ள பல தரப்பட்ட தலைவர்கள் எல்லாம் வந்தார்கள். இப்படி ஒரு அமைதியான எந்த ஒரு ஆர்ப்பாட்டமும்

ஆடம்பரமும் இல்லாமல் நடக்கும் சம்பவத்தை பார்த்து அசந்து போய்விட்டார்கள் .

     நம் நாட்டில் தலைவருக்கு உடல் நலம் சரியில்லை என்றாலே, களத்தில் இறங்கி விடுவார்கள். கடைகள் சூறையாடப்படும், பஸ்கள் தாக்கப்படும், நாடு முழுவதும் பணிகள் முடக்கப்படும்.

வெளியில் மட்டும் சொல்லி கொள்வோம், நாங்கள் வளர்ந்து விட்டோம், வல்லரசு ஆகி விட்டோம்.

இது போன்ற விசயங்களில் நாம் எப்பொழுது வளர போகின்றோம்?

நம் வரி பணத்தை விரையம் செய்வதை நாம் எப்பொழுது நிறுத்தப் போகின்றோம்?

நாம் அனைவரும் இந்நாட்டு மன்னர்கள் என  , என்றைக்கு முழங்கப் போகின்றோம்?

வறுமை என்கின்ற கோட்டை என்றைக்கு அழிக்க போகின்றோம்?

மேற்கத்திய கலாச்சாரத்தை பின் பற்றுவதை விட்டு, என்றைக்கு விலக போகின்றோம்?

நம் நாடு நம் மக்கள் நாம் அனைவரும் இந்தியர்கள் நம் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என்கின்ற நிலை என்றைக்கு வரும்..............?

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

உலகின் மிகப் பெரிய மெக்கா கடிகாரம் !‏

    

     உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையை, சமீபத்தில் துபாய் நகரில் உள்ள, "புர்ஜ் துபாய்' என்ற கட்டடம் பெற்றுள்ளது. அதற்கு போட்டியாக, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில், மிக உயரமான ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. புர்ஜ் துபாய் கட்டடத்தை விட, உயரத்தில் இந்த ஓட்டல் 36 அடி மட்டுமே குறைவு. எனினும், இந்த ஓட்டலின் உச்சியில் வைக்கப்பட இருக்கும் கடிகாரம், உலகின் மிகப் பெரிய கடிகாரம் என்ற பெருமையைப் பெற உள்ளது.

"மெக்கா கிளாக் டவர் ராயல் ஓட்டல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டலைச் சுற்றி, ஏழு உயரமான கட்டடங்கள் உள்ளன. லண்டன் பிக்பென் கடிகாரத்தை விட 4.7 மடங்கு பெரிய கடிகாரம், இந்த கட்டடத்தின் உச்சியில் வைக்கப்பட உள்ளது. இந்த ஓட்டலின் மொத்த உயரம் 1591 அடி. மொத்தம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஓட்டல் கட்டப் பட்டுள்ளது. புனித நகரமான மெக்காவில் மிகவும் ஆடம்பர, அதிக கட்டணம் கொண்ட ஓட்டல் இதுதான். இந்த ஓட்டலில், 1005 அறைகள் உள்ளன. அதில் தங்கி இருப்பவர்கள் பயணிக்க, 76 லிப்ட்கள் உள்ளன.

இந்த ஓட்டலின் இன்னொரு பகுதியில், இரண்டு ராயல் ஓட்டல்கள், ஐந்து கோல்டன் ஓட்டல்கள் உருவாக உள்ளன. அந்த ஓட்டல்கள் மிகவும் ஆடம்பரமாக இருக்கும். அதில் உலக மகா கோடீஸ்வரர்கள், துபாய் ஷேக்குகள் மட்டுமே தங்க முடியும். அந்த ஓட்டல் அறைகள், கிட்டத்தட்ட அரண்மனை போல இருக்கும் என, இந்த ஓட்டல்களை நிர்வகிக்க இருக்கும் உலகப் பிரசித்தி பெற்ற, "பெயர்மன்ட்' ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மாதம் ஓட்டல் திறக்கப் பட உள்ளது. ஜூலை மாதம் முதல், இந்த ஓட்டலின் உச்சியில் உள்ள கடிகாரம் இயங்கத் துவங்கும். ஜெர்மனி யில் தயாராகும் இந்த கடிகாரம் 147 அடி அகலம், 141 அடி உயரம் கொண்டது. கட்டடத்தின் நான்கு பக்கங்களிலும், இந்த கடிகாரம் இருக்கும். "ஹஜ்' நேரத்தில் மட்டும் மெக்காவிற்கு 40 லட்சம் பேர் வருகின்றனர்; மற்ற மாதங்களில் பல லட்சம் பேர் வருகின்றனர். எனவே, இந்த ஓட்டலுக்கு, எப்போதும் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெயிலில் வந்த செய்தி உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

சனி, 7 ஆகஸ்ட், 2010

ஊனம்


     தொடர்ந்து நான்கு மாதமாக விடுமுறை என்பதே இல்லை.அலுவலக பணியாட்கள் குறைவாக இருந்ததால்,அதிக நேரம் பணி செய்ய வேண்டிய கட்டாயம். இதன் விளைவு, கண் எரிச்சல், சரியென்று மருத்துவரிடம்
சென்றேன். மருத்துவர் கண்ணுக்கு சொட்டு மருந்தும், ஒரு ஆயின்மெட்டும் கொடுத்தார்.

     இரவில் உறங்க போகும் பொழுது ஆயின்மேட்டை போட்டு கொண்டு படுத்து விட்டேன். சிறிது நேரத்தில், என் கைபேசி அழைத்தது. கண்ணை திறந்து என் கைபேசியில் அழைப்பது யாரு என்று காண முயற்சித்து ஒன்றுமே தெரியவில்லை. வெளிச்சமாக தெரிகின்றது, வேறு எதுவுமே தெரியவில்லை.

     இறைவா என்ன சோதனை என்று, தட்டு தடுமாறி போய், எல்லா விளக்குகளையும் போட்டு முயற்சி செய்கின்றேன், அப்பொழுதும் தெளிவாக தெரியவில்லை. சற்று உறங்கி எழுந்தால் தான் சரியாகும் என்பதால், உறங்கி விட்டேன்.

     ஆனால் அந்த சில நிமிடங்கள் சற்று தடுமாறியே போனேன். வாழ்க்கையில் கண் இல்லாதவர்களை சற்று நினைத்து பார்த்தேன்
நெஞ்சம் பகீர் என்றது. இறைவா யாருக்கும் இந்த நிலை வேண்டாம். என்னை அறியாமலே என் உள்ளம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தது.

    சற்று சிந்தித்து பாருங்கள் ஒரு கையை அல்லது ஒரு காலை மடக்கி கொண்டு ஒரு நாள் முழுவதும் நீங்கள் செய்ய வேண்டிய அத்தனை வேலையையும் செய்து பாருங்கள்,அதன் வலி தெரியும்.

     கண் இது ரொம்பவும் கொடுமையானது. நம் கண்ணை மூடி கொண்டு எந்த வேலையையும் செய்து முடிக்க முடியாது.

    என்னமோ தெரியவில்லை ஊனமுற்ற யாரையும் பார்த்தால், என்னை அறியாமலே அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனம் துடிக்கும். சில நபர்கள் ஊனமுற்றவர்களை வசை பாடும் பொழுது, மனத்திற்கு ரொம்ப கஷ்டமாகி விடும், உடலால் மட்டும் ஊனம் உடையவர்களை ,உள்ளதாலும் ஊனம் அடைய வழி வகுத்து  விடுகின்றார்கள்.

     இதை வாசிக்கும் அன்பு உள்ளங்களே ,மற்றும் இனிய நண்பர்களே உங்களால் அவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை என்றாலும் நீங்கள் அவர்களிடம் அன்பான முறையில் பதில் அளியுங்கள், அதுவே அவர்களின் மனத்திற்கு உரமாக அமைகின்றது.

விருது

      அவ்வபொழுது இவ்வாறு கொடுத்து எங்களை ஊக்குவிக்கும் சகோதரி ஆசியா உமர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

இதயம்

தலை முதல்

கால் வரை

உன் கட்டுபாட்டில்

சிறிது சிணுங்கினால்

உடல் துவண்டுவிடும்

உன் அசைவை

நிறுத்தினால் .......

உடல் சாம் ராஜ்ஜியம்

அழிந்து விடும்.



திருமணம்

இரு மனம்

இணைந்தால்.....

அது திரு மணம்

அதுவே வாழ்வின்

நறு மனம்

இதன் விளைவு

புது மனம்



ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

கப்பல்

    இதை படிப்பதற்கு முன் இதற்கு முன் இடுக்கையை  துறைமுகம் படித்து விட்டு படித்தால் நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

தூரத்தில் நிற்கின்ற கப்பல்களையும் மற்றும் போட்டோவிலும் கண்டுகளித்த உங்களுக்கு அவற்றை பற்றி சிறிது விளக்க
கடமை பட்டுள்ளேன்.

வகைகள்

கப்பல்களை இரண்டு வகைகளாக பிரிக்கின்றார்கள்.

1 . பயணிகள் கப்பல்


இவை பயணிகள் மற்றும் அவர்களின் பொருள்களை மட்டுமே
ஏற்றி செல்ல கூடியது.

இவற்றில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும்.
மருத்துவர் முதல் நீச்சல் குளம் வரை அமைக்கப்பட்டு இருக்கும்.
அவசர தேவைக்கு ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கும் தளம் அமைக்கப்பட்டு இருக்கும்.

2 . கார்கோ கப்பல்

இவை இரண்டு வகைகளாக பிரிக்கின்றார்கள்.

1 . ஓன்று LO LO கப்பல் (LOAD ON ) என்று அழைக்கப்படும்.



இந்த கப்பலில் இரண்டு மூன்று கிரேன் வசதிகள். கொண்டது ,இந்த கிரேனின் வேலை, கப்பலில் உள்ள பொருள்களை வெளியில் எடுப்பதற்கும் , வெளியில் உள்ள பொருள்களை உள்

அடுக்குவதற்கும் பயன் படுத்தபடுகின்றது.

இந்த வகை கப்பலில் மேல் பகுதியில் மூடி திறக்கப்பட்டு ,அதன் வாயிலாக தான்
பொருள்களை ஏற்றவும் இறக்கவும் முடியும்.

2 . மற்றொண்டு RO RO கப்பல் (ROLL ON ) என்று அழைக்கப்படும்.

இந்த கப்பல் இரண்டு வகை படும் ,ஓன்று கார் கேரியர், மற்றொன்று

கண்டெய்னர் கேரியர்.

கண்டெய்னர் கேரியர்











 
 
 
 
 
 
 
 
 
இந்த கப்பலில் பெரிய வகை ரேம்ப்(இரும்பினால் அமைக்கப்பட்டு கப்பலோடு பொருத்தப்பட்டு,இருக்கும்) இருக்கும்.


இது ஹைட்ராலிக் உதவியுடன் இயக்கப்படுகின்றது.

இந்த ரேம்பின் வழியாக கப்பலின் உள்ளே ட்ரைலர்(கண்டைனர் ஏற்றும் வாகனம்) முதல் பெரிய போர்க் லிப்ட் வரை உள்ளே சென்று வரும். இந்த ரேம்பின் வழியாக தான் கண்டைனர்கள் ஏற்றும் இறக்கும் பணி நடைபெறும்.

கார் கேரியர்

இந்த கப்பல் பாக்ஸ் வடிவத்தில் காட்சி அளிக்கும். ஒரே நேரத்தில் 3000 கார்களை ஏற்றி செல்லும் வசதி உடையது.








 
 
 
 
 
 
 
 
இன்னும் பல கப்பல் தேவைக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கபட்டுள்ளது. அவற்றை கீழே காணலாம்.
 
குளிர் சாதனம் பொருத்தப்பட்ட கப்பல் (REEFER கப்பல்)
 
 
இந்த கப்பலில் பழங்கள் ஆட்டுக்கறி மாட்டுக்கறி கோழிகறி மற்றும் பதபடுத்தபட்ட உணவு பொருள்கள் அனைத்தும் இந்த கப்பலில் கொண்டு வரப்படும்.

ஆட்டு கப்பல்






ஆடுகளை மட்டும் ஏற்றும் வசதி உடையது, இதில் வேறு எந்த பொருளும் ஏற்ற முடியாது.
 
 
 
 
 
 
 
 
 
 
பல்க்( BULK) கப்பல்
 
இந்த கப்பலில் கோதுமை அரிசி பார்லி போன்றவற்றை மொத்தமாக எடுத்து வந்து
மெஷின் மூலம் உறிஞ்சி வெளியில் எடுத்து விடுவார்கள்.
 
 
 
 
 
TANKER கப்பல்
 
இந்த கப்பல் ஆயில் மற்றும் தண்ணீர் எடுத்து செல்ல பயன்படுகின்றது.





 
 
 
போர்க் கப்பல்
 
 
 
 
 
 
 
 
 
 
கடல் வழியாக வரும் எதிரிகளை தாக்குவதற்கு என்று உருவாக்கப்பட்டது, ஆனால் இன்றோ மனித சமுதாயத்தை அழிக்கும் பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 
நீர் மூழ்கி கப்பல்
 
 

அந்நிய நாட்டு போர் கப்பலை தண்ணீரில் மறைந்து சென்று
தாக்குவதற்கு உருவாக்கப்பட்டது. இது அந்த பணியை தான்
செய்கின்றதா என்பது படைத்தவனுக்கு மட்டும் தான் தெரியும்.