ஒரு ரூபாய் சம்பளம் போதும் என கூறி, உங்கள் பணத்திற்கு உலை வைக்க மாட்டேன்.
இந்த நாட்டை ஆட்டி படைக்கும் முதலாளி எனும் பண முதலைக்கு முதல் ஆப்பு.
தேர்தலில் வெற்றி பெரும் உறுப்பினர்கள் கட்டாயம் அவைக்கு வர வேண்டும். அவை பாராளுமன்றமோ சட்ட மன்றமோ நகராட்சியோ
மூன்று முறைக்கு மேல் அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால், உறுப்பினர் பதவி பறிக்கப்படும்.
அரசுக்கு உரிய நிறுவனங்கள் அரசாங்கத்தாலேயே நிர்வகிக்கப்படும்.
தனியாருக்கு தாரை வார்க்கும் பேச்சுக்கே இடமில்லை.
அரசு அதிகாரிகள் நடவடிக்கை ரகசியமாக கண்காணிக்கப்படும்.
உழல் பெருச்சாளிகள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு அரசு வேலையில் இருந்து நீக்கப்படுவார்.
ஆதாரம் இல்லாமல் பொய் வழக்கு போடும் காவல் துறை அதிகாரிகள் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
மது, சிகரெட் என்கின்ற பேச்சுக்கே இடம் கிடையாது .அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் முற்றிலும் அழிக்கப்படும்.
சூதாட்ட கிளப்களுக்கு கொடுக்கப்பட்ட லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.
தேர்தலில் போட்டி இடுபவர்கள் தேர்தலில் பணத்தை செலவு செய்ய அனுமதி கிடையாது, அரசே அவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும்.
திறப்பு விழா என்று ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது, புதிதாக
கட்டப்படும் கட்டடம் மற்றும் நிறுவனங்களும் பணி முடிந்தவுடன் உடனே திறக்கப்படும்; யாருக்காகவும் காத்திருக்காது.
சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை அவர்களே கொண்டு வந்து கொடுத்தால், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் . அந்த பணத்தில் இந்தியாவுடைய கடன்கள் அடைக்கப்படும்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை இந்திய பணத்திலேயே நிர்ணயிக்கப்படும்,அந்நிய நாட்டு பணத்திற்கு அனுமதி கிடையாது.
இந்தியாவில் இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைகளுக்கு வட்டி வழங்கப்படாது என்று சட்டத் திருத்தம் செய்யப்படும்.
மக்களின் அத்தியாவசிய பொருள்கள் குறைந்த விலையில் மட்டுமே விற்கப்படும். அதன் விலையை அரசே நிர்ணயிக்கும்.
இருபத்து ஐந்து வயதில் கட்டாயம் அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு படிக்க விரும்புபவர்கள் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படிக்கலாம். அந்த செலவை அரசே ஏற்று கொள்ளும். குடும்பத்தோடு தங்குவதற்கு வசதிகளும் செய்து கொடுக்கும்.
வெளியூரில் பணியாற்றுபவர்களுக்கு, குடும்பத்தோடு தங்கி பணியாற்ற அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
ஐம்பது வயதில் கட்டாயம் ஓய்வு மற்றும் ஓய்வு ஊதியம் வழங்கப்படும்.
இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைவரும் உழைக்க வேண்டும்.
பிள்ளைகள் உயிருடன் இருந்து பெற்றோரை கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்தால் , அவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும். அவர் அரசு உழியர் ஆக இருந்தால், பணி நீக்கம் செய்யப்படுவார்.
மக்கள் தொகை சரியாக கணக்கு எடுக்கப்பட்டு , அனைவருக்கும் அரசு வேலை கொடுக்கப்படும். [என்னது?!!! அனைவருக்கும் அரசு வேலையா?!!!!!!!
அப்படின்னா தனியார் நிறுவனங்கள், தனியார் ஊழியர்கள் - ???]
அவர்களுக்கும் அரசு உழியர்களுக்கு உள்ளது போல் செய்து கொடுக்க சட்டத் திருத்தம் செய்யப்படும்.
அரசு மருத்துவமனைகள், அரசு கல்வி கூடங்கள் அதிகரிக்கப்படும். இதன் சேவைகள் மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும். இதை வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்படும்.
இதற்கு மேல் இவர்கள் என்னை உயிருடன் விட்டு வைத்தால்....?
உலகத்தின் தலையில் கை வைப்பேன்.
முதலில் ஐக்கிய நாட்டு சபையை கலைப்பேன்.
மனித இனத்தை அழிக்க கூடிய ஆயுதங்களை அழிக்க அனைத்து நாடுகளுக்கும் அவகாசம் கொடுப்பேன்.
இந்தியாவை மையமாக கொண்டு புதிய உலக நாடுகள் சபை ஒன்றை ஆரம்பிப்பேன்.
அதில் யாருக்கும் வீட்டோ பவர் என்கின்ற பேச்சுக்கு இடமே கிடையாது.
அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் வழங்கப்படும்.
இங்கு தோலின் நிறத்தை வைத்து சலுகைகள் வழங்கப்பட மாட்டாது.
உலக மக்களுக்கு தேவையான அனைத்து பொருள்களும், அனைத்து நாடுகளிலும் ஒரே விலை நிர்ணயிக்கப்படும். இதில் ஏற்ற தாழ்வு என்கின்ற பேச்சுக்கே இடம் கிடையாது .
பெட்ரோல் மற்றும் தங்கம் இவைகளுக்கு உலகம் முழுவதும் ஒரே விலை நிர்ணயிக்கப்படும்.
நடக்குமா ........? பிரதமர் பதவி கிடைக்குமா....? உடலில்
உயிர் நிலைக்குமா.....? ஹி.....ஹி......ஹி.......சும்மா தமாஷ்.
உங்கள் பொன்னான வாக்குகளை கருத்துரையாக இட்டு செல்லவும்.