கால அட்டவணை

திங்கள், 5 ஜூலை, 2010

ரயில் நிலையம்

        ரயில் நிலையம் என்றவுடன் எல்லாருக்கும் ரயில் பயணம் பற்றி தான் நினைவுக்கு வரும்.  
எனது பள்ளி விடுமுறை நாட்களில்,காலை ஒரு 7 மணிக்கு ரயில் நிலையத்திற்கு புத்தகத்தோடு செல்வேன். ரயில் நிலையத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் பழக்கமான ஆட்களாக இருப்பதால், அங்கு அமர்ந்து படிக்க எந்த தொந்தரவும் இருக்காது.





இப்படி அடிகடி ரயில் நிலையம் செல்லும் பழக்கம் அதிகமானது.


அங்கு பல நண்பர்கள்களின் பழக்கமும் கிடைத்தது. என் ஊர் சுற்றுலா தளமாக இருந்ததால், இங்கு கேரளா ஆந்திரா கர்நாடக போன்ற மாநில மக்கள் நிறைய பேர் வருவார்கள்.





     நாகூரில் இருந்து சென்னை பெங்களூர் கொல்லம் போன்ற ஊர்களுக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து உண்டு. ரயில் நிலைய கட்டிடங்கள் பழமையானதாகவே இருந்தது.


மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரயில்வே மந்திரியாக ஜாபர் ஷரிப் பதவி ஏற்றார்.

ரயில் நிலையத்திற்கும் ஒரு விடிவு காலம் பிறந்தது. அழகிய கட்டிட கலையுடன் கூடிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.


அது என் பள்ளி பருவம்

பல்வேறு மொழி பல கலாச்சாரம் இப்படி பல மக்கள் வந்து போகிறார்கள். சிலர் முகத்தை பார்க்கும் பொழுது கவலை தெரியும் ,சிலர் நடையிலேயே அவர் மனதில் உள்ள பாரம் தெரியும்.

     அந்த நேரத்திலேயே மனதில் தோன்றும் எழுத வேண்டும். வெளிவுலகிற்கு தெரிய வேண்டும். சுயநலமே வாழ்க்கையாக கொண்டு வாழ்பவர்களுக்கு, மத்தியில் எவ்வளவு மனிதர்கள் பிரச்சினையோடு வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அப்படி நினைத்து எழுதி எழுதி கிழித்த என் பள்ளி நோட்டுகள் ஏராளம்.
அங்கு அமர்ந்து இருக்கும் பொழுது மனத்திரையில் எத்தனையோ
கதை கவிதைகள் திரையிடும். அவற்றை எழுத்தால்
வடிக்க நினைத்து தோல்வி கண்டு உள்ளேன்.

     என் பள்ளி நாளில் அது எனக்கு ஒரு அமைதி
பூங்காவாக காட்சி அளித்தது.விடுமுறையில் தாயகத்திற்கு என் குடும்பத்துடன் சென்று இருந்தேன்.
அப்படியெல்லாம் அனுபவித்த அந்த ரயில் நிலையத்திற்கு,

     என் பிள்ளைகளோடு சென்று வந்தேன். என் கண்களால் நம்ப முடியவில்லை பாழடைந்த கட்டிடமாக காட்சி அளித்தது. பிராட்கேஜ் போடும் வேலை நடப்பதாகவும் ஆதலால் மூடப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். கனத்த மனத்துடன் வெளியில் வந்தேன்.

31 கருத்துகள்:

Krishnaveni சொன்னது…

oh! it looks so sad, it happens...it is life

Unknown சொன்னது…

இப்பதிவு என் கல்லூரிக் காலத்தை நினைவூட்டியது. வாழ்த்துக்கள்.

நாடோடி சொன்னது…

சில‌ நேர‌ங்க‌ளில் த‌னிமையும் சுக‌மான‌ அனுப‌வ‌ம் தான்..

அன்புடன் மலிக்கா சொன்னது…

நல்லதொரு பதிவு..

http://niroodai.blogspot.com

தூயவனின் அடிமை சொன்னது…

Krishnaveni கூறியது..

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஸாதிகா சொன்னது…

பொறுங்கள்.அடுத்த முறை விடுப்பில் வந்து உங்கள் ஊர் ரயில் நிலையத்தைப்பார்க்க்கும் பொழுது ஆச்சரியப்பட்டு போவீர்கள்.

Unknown சொன்னது…

:(

அண்ணாமலை..!! சொன்னது…

சீக்கிரமே மீண்டும் திறந்து விடுவார்கள்!
பிரிவு போலத்தானே இதுவும்!

தூயவனின் அடிமை சொன்னது…

வாங்க நாடோடி ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. follow up லிஸ்ட் செக் பண்ணினேன் கண்டு பிடிக்க முடியவில்லை.

தூயவனின் அடிமை சொன்னது…

ஆறுமுகம் முருகேசன் கூறியது

வாங்க ஆறுமுகம் முருகேசன்,உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

கலாநேசன் கூறியது

வாங்க சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

அன்புடன் மலிக்கா கூறியது...

வாங்க சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.உங்கள் தளத்தை பார்த்தேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

ஸாதிகா கூறியது

வாங்க சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

அண்ணாமலை..!! கூறியது

வாங்க சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

கவலை வேண்டாம் இளம்தூயவன்!
அகலப்பாதை போடுவதற்காகத்தானே
இப்போது இந்நிலை! மீண்டும்
அனைவருக்கும் மிக வசதி தரும்
பயன்பாட்டுடன் இன்ஷா அல்லாஹ்
வந்துவிடுமே!
நானும் இதுகுறித்து ஓர் இடுகை
போட்டிருக்கிறேன்.
ரயில் வரும் நேரமாச்சு!

தூயவனின் அடிமை சொன்னது…

வாங்க நிஜாம், ஒங்க இடுக்கையை இன்னும் படிக்கவில்லை. நிச்சயம் படிப்பேன்.உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

நிலாமதி சொன்னது…

இளம்பராய நினைவுகள் பசுமரத்தாணி போல....மறக்க முடியவில்லை. மூன்று ....ஐந்து வயதில் ,
என் தாயகத்தை விட்டுவந்த குழந்தைகளுக்கு ...எதை சொல்லி ஞாபகப்படுத்துவேன்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

உங்க பகிர்வு நல்லாருக்கு. அடுத்த தடவை ஊருக்கு போகும்போது புதுப்பொலிவுடனிருக்கும் ரயில் நிலையத்தை குழந்தைகளுக்கு காட்டுங்க.

தூயவனின் அடிமை சொன்னது…

நிலாமதி கூறியது

உங்கள் மன கஷ்டம் புரிகின்றது. நிச்சயம் ஒரு நாள், உங்கள் தாயகத்தில் உங்கள் பிள்ளைகளோடு நுளைவிர்கள்.அந்நாள் விரைவில் வர வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

அமைதிச்சாரல் கூறியது

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

செ.சரவணக்குமார் சொன்னது…

அருமையான பகிர்வு சார்.

அடுத்த விடுமுறையில் ஊருக்குச் செல்லும்போது புதுப்பிக்கப்பட்ட உங்கள் விருப்பத்திற்குரிய ரயில் நிலையத்தைப் பார்த்து மகிழ்ந்து அந்த நினைவுகளையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும்.

தூயவனின் அடிமை சொன்னது…

வாங்க சரவணகுமார், இன்று நீங்கள் தம்மாம் வருவிர்கள் என்று எதிபார்த்தேன்,ஆனால் உங்கள் கைபேசி அழைப்பு வந்தது. எல்லாம் உங்களுடைய ஊக்கங்கள் தான். வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

thanks for sharing. it sounds like rk narayana's 1 story about railway station

தூயவனின் அடிமை சொன்னது…

ராம்ஜி_யாஹூ கூறியது...

வாங்க ராம்ஜி, R K நாராயணனின் கதையை நான் படிக்கவில்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் சொன்னது…

நல்ல பதிவு!

உங்களின் சிறு வயதுப்பருவம் மனிதர்களை எடை போடுவதில் நன்றாகவே கழிந்திருக்கிறது!

உங்களின் பதிவு எனக்கும் இளம் வயதில் தடம் பதித்த பல ரயில்வே ஸ்டேஷன்களை நினைவூட்டியது. பழைய நினைவுகளின் அடையாளங்கள்! இப்படித்தான் நானும் சிறு வயதில் நான் பழகிய இடங்களை அவ்வப்போது போய்ப் பார்ப்பேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

மனோ சாமிநாதன் கூறியது...

சகோதரி, உங்களை போன்றவர்கள் ஊக்குவிப்பதால் தான் என்னை போன்றவர்களுக்கு நிறைய எழுத
வேண்டும் என்று தோன்றுகிறது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

Admin சொன்னது…

நல்ல பகிர்வு.

தூயவனின் அடிமை சொன்னது…

சந்ரு கூறியது...

வாங்க சந்ரு,உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Unknown சொன்னது…

i too feel so sad whenever i see the structure of nagore railway station. with allah's grace now we got new railway station and now its looks so nice..

தூயவனின் அடிமை சொன்னது…

Thanks Mr.Halick