அறுசுவைகளுள் இனிப்பு சுவையே முதலிடம் வகிக்கிறது. ஈக்கள், எறும்புகள் முதல் அனைத்து ஜீவராசிகளையும் சளைக்காது உண்ணச் செய்யும் சுவையே இனிப்பு சுவை. இனிப்புச் சுவையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்த இனிப்புச் சுவை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் ஈர்க்கும். ஆனால் சிலர் இந்த இனிப்பை சுவைக்க முடியாமல் நீரிழிவு நோயால் அவதிப்படுகின்றனர். இனிப்புச் சுவை உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.விசேஷ காலங்களில் பலர் வீடுகளிலும் இனிப்பு சுவை கொண்ட பண்டங்களை அதிகம் தயாரிக்கின்றனர். இனிப்பு மனித வாழ்வில் இரண்டற கலந்துள்ளது.இனிப்பு சுவை ஐம்பூதங்களில் அப்பு என்ற மண்ணும், நீரும் கொண்டது என்கின்றனர் சித்தர்கள்.வாய்க்குள் பசையுண்டாம் வாய்க்குமுடற் கின்பங்கள்தேய்வில் புலன்கள் தெளிவெய்தும்-வேய்தோளிஇன்சுவையை யீயெறும்பு மேற்கவிழை யுமிதுதின்னு மினிப்பின் சிறப்பு(மருத்துவ தனிப்பாடல்)இனிப்பு சுவையுடைய பொருளை சாப்பிடும்போது வாய்க்குள் ஒரு வகையான பசையுண்டாதலும், உடற்கு இன்பம் தரவல்லதும் இனிப்புச் சுவைதான்.சனித்தது தொட்டுயிர்க்குச் சாமிய மானஇனிப்புர மேழ்தாதுக் கீயும்-சனுப்பால்உகவியற்றும் வண்ணமொளி மெய்க்காற்றும் கேசம்அகவை புலன் பொறி யாயுள் - மிகநீரும்காழல் நச்சுங் கடிதகற்றும் ஈளையும்சாலக் குருதியுமிழ் காசநோ - யாலவத்தைகொண்டோர்க் கிதமாங் குரல்வளைப் பண்ணியளிக்கும்தொண்டை துலக்கமுறும் சுண்டியமெய் -கண்டோர்வியக்கப் பெருக்கும் மேவும் வழுவழுப்பியக்கம் உள்ளுறுப் பெங்கும் - நயமாம்தெளிவா யளவோடு தின்பவர்க்கு நாளும் எளிதிற் செரியா திது(மருத்துவத் தனிப்பாடல்)இனிப்புச் சுவை உடலுக்கு ஊக்கமும், புத்துணர்வையும் கொடுக்கும். அளவோடு தினமும் இனிப்புச் சுவை உணவை உட்கொண்டால் உடல் நன்கு பலப்படும். சிலர் அதிக குண்டாவதும் இனிப்புச் சுவையுடைய பொருட்கள் அதிகம் உண்பதால்தான்.உடல் பருக்கசிலர் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் ஒல்லியாகவே காணப்படுவார்கள். இவர்கள் தினமும் உணவில் அளவோடு இனிப்புச் சுவையுள்ள பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் உடனே தேறும்.மயக்கம், சோர்வு நீங்கதிடீர் மயக்கம், சோர்வு உண்டாவதற்கு பித்த அதிகரிப்பு ஒரு காரணம். இவர்கள் மயக்கத்தையும், சோர்வையும் போக்கும் குணம் இனிப்பு சுவைக்கு உண்டு. இவர்களுக்கு சிறிது புளிப்பு சுவை கலந்த இனிப்பு கொடுத்தால் மயக்கம், சோர்வு நீங்கும்.
நல்ல குரல்வளம் கிடைக்கஇனிப்பு சுவைக்கு குரள்வளத்தை அதிகப்படுத்தும் குணம் உண்டு. இனிப்பு சுவையானது தொண்டைக் கட்டு, இருமல் சளி இவற்றைப் போக்கும். அளவாக இனிப்பு சாப்பிட்டு வந்தால் சிறந்த குரள்வளத்தை அடைவது திண்ணம்.தாய்ப்பால் சுரக்கதாய்ப்பாலை சுரக்க வைக்கும் குணம் இனிப்பு சுவைக்கு உண்டு. இனிப்பு சுவை கொண்ட பழங்கள், உணவுப் பொருட்களை அளவோடு உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.குழந்தை வளர்ச்சிகுழந்தைகள் நன்கு வளர இனிப்புச்சுவை உதவுகிறது. இனிப்பால் உடலின் உள் உறுப்புகள் பலப்படும்.மதுர மதிகம் அருந்துவோர்க்குமலியும் நிணமும் கபமுந்தான்கதுமென் றுடலம் பெருத்துவிடும்கனலுங் குறையும் செரியாதுபொதுவில் சுரக்கும் மதுமேகம்புகல்கண் டலங்கள் புரை குழலும்விதுவின் நுதலாய்ச் சந்நியாசம்விளையு மெனவே விளம்புவரேஇனிப்பு சுவையுள்ள பொருட்களை மிகுதியாக உண்பவர்களுக்கு உடலில் கொழுப்பு மிகுதிப்படும். கபம் அதிகரிக்கும். உடல் திடீரென்று பருத்துவிடும்.இனிப்பு சுவை எளிதில் சீரணமாகாது. இதனால் இரவில் இனிப்புச் சுவை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மதுமேக நோய் என்னும் கொடிய நீரிழிவு நோயை உருவாக்குவதும் இனிப்புச்சுவைதான். இனிப்புச் சுவை அளவோடு சேர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம். நன்றி நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக