கால அட்டவணை

சனி, 7 நவம்பர், 2009

பன்றிக்காய்ச்சலை தடுக்க இந்திய உணவை வெங்காயம், பூண்டு சாப்பிடலாம் - ரஷ்ய டாக்டர்கள்

மாஸ்கோ: இந்தியாவின் மசாலாப் பொருட்களான பூண்டு, மஞ்சள், இஞ்சி, சீரகம், வெங்காயம் போன்றவை பன்றிக் காய்ச்சல், ஜலதோஷம் வராமல் தடுக்கக் கூடிய மருத்துவக் குணம் கொண்டவை என்று ரஷ்ய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மஞ்சள், இஞ்சி, சீரகம் உள்ளிட்டவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூலம் உடலில் நோய் தடுப்பு சக்தியை நன்கு பலப்படுத்தலாம் என்று மாஸ்கோ சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது மட்டுமல்லாது, வெங்காயம் மற்றும் பூண்டையும் வேகவைக்காமல் அப்படியே சாப்பிடுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் தற்போது பன்றிக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை ரஷ்யர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர். நன்றி தினகரன்

கருத்துகள் இல்லை: