கால அட்டவணை

புதன், 11 நவம்பர், 2009

செல்போன் பேசியபடி கார் ஓட்டினால் 6 மாதம் ஜெயில்

செல்போனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மத்திய அரசு புதிதாக ஒரு சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இதன்படி செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் 6 மாதம் ஜெயில் அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. மேலும் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்பட்டால் 6 மாதகாலம் டிரைவிங் உரிமம் ரத்து செய்யப்படும்.

இது தவிரவாகனம் ஓட்டும் போது செல்போனில் மெசேஜ் அனுப்புவது, வாசிப்பது போன்றவையும் குற்றமாக கருதப்படும். எனவே வழக்கம் போல் செல்போனில் மெசேஜ் அடித்த படியே வாகனம் ஓட்டுபவர்களும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.

மோட்டார் வாகன சட்டம் 183 ஏ வில் செல்போன் பேசுவோருக்கு தண்டனை அளிக்கும் வகையில் புதிய பிரிவு ஒன்றை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது சில மாநிலங்களில் போலீசார் செல்போன் வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டம் 177 பிரிவுகளின் கீழ்நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

டெல்லி போக்குவரத்து போலீசார் தற்போது வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசுவோருக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதித்து வருகிறார்கள். இனி 6 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதால் வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசு வோரின் எண்ணிக்கை பல மடங்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து பாராளுமன்ற குழுவில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா எம்.பி. வெங்கையா நாயுடு, சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் இதுகுறித்து கருத்து கூறும்போது, ஒருவர் வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசுவதால் மற்றவர்களுக்கு உயிர் இழப்பு ஏற்படுகிறது. எனவே இக்குற்றத்தை சாதாரண மானதாக கருத முடியாது.

இந்த குற்றத்தை ஒருவர் தொடர்ந்து 6 முறை செய்து போலீசில் பிடிபட்டால், அவரது டிரைவிங் உரிமத்தை 6 மாதத்திற்கு ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தால் இக்குற்றங்கள் பெருமளவில் குறையும் என்றனர்.

கருத்துகள் இல்லை: