கால அட்டவணை

சனி, 7 ஆகஸ்ட், 2010

ஊனம்


     தொடர்ந்து நான்கு மாதமாக விடுமுறை என்பதே இல்லை.அலுவலக பணியாட்கள் குறைவாக இருந்ததால்,அதிக நேரம் பணி செய்ய வேண்டிய கட்டாயம். இதன் விளைவு, கண் எரிச்சல், சரியென்று மருத்துவரிடம்
சென்றேன். மருத்துவர் கண்ணுக்கு சொட்டு மருந்தும், ஒரு ஆயின்மெட்டும் கொடுத்தார்.

     இரவில் உறங்க போகும் பொழுது ஆயின்மேட்டை போட்டு கொண்டு படுத்து விட்டேன். சிறிது நேரத்தில், என் கைபேசி அழைத்தது. கண்ணை திறந்து என் கைபேசியில் அழைப்பது யாரு என்று காண முயற்சித்து ஒன்றுமே தெரியவில்லை. வெளிச்சமாக தெரிகின்றது, வேறு எதுவுமே தெரியவில்லை.

     இறைவா என்ன சோதனை என்று, தட்டு தடுமாறி போய், எல்லா விளக்குகளையும் போட்டு முயற்சி செய்கின்றேன், அப்பொழுதும் தெளிவாக தெரியவில்லை. சற்று உறங்கி எழுந்தால் தான் சரியாகும் என்பதால், உறங்கி விட்டேன்.

     ஆனால் அந்த சில நிமிடங்கள் சற்று தடுமாறியே போனேன். வாழ்க்கையில் கண் இல்லாதவர்களை சற்று நினைத்து பார்த்தேன்
நெஞ்சம் பகீர் என்றது. இறைவா யாருக்கும் இந்த நிலை வேண்டாம். என்னை அறியாமலே என் உள்ளம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தது.

    சற்று சிந்தித்து பாருங்கள் ஒரு கையை அல்லது ஒரு காலை மடக்கி கொண்டு ஒரு நாள் முழுவதும் நீங்கள் செய்ய வேண்டிய அத்தனை வேலையையும் செய்து பாருங்கள்,அதன் வலி தெரியும்.

     கண் இது ரொம்பவும் கொடுமையானது. நம் கண்ணை மூடி கொண்டு எந்த வேலையையும் செய்து முடிக்க முடியாது.

    என்னமோ தெரியவில்லை ஊனமுற்ற யாரையும் பார்த்தால், என்னை அறியாமலே அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனம் துடிக்கும். சில நபர்கள் ஊனமுற்றவர்களை வசை பாடும் பொழுது, மனத்திற்கு ரொம்ப கஷ்டமாகி விடும், உடலால் மட்டும் ஊனம் உடையவர்களை ,உள்ளதாலும் ஊனம் அடைய வழி வகுத்து  விடுகின்றார்கள்.

     இதை வாசிக்கும் அன்பு உள்ளங்களே ,மற்றும் இனிய நண்பர்களே உங்களால் அவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை என்றாலும் நீங்கள் அவர்களிடம் அன்பான முறையில் பதில் அளியுங்கள், அதுவே அவர்களின் மனத்திற்கு உரமாக அமைகின்றது.

31 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல மனசு.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல பகிர்வு...

உண்மையில் அது மிகவும் வேதனையான விஷயம்...

உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு...

Asiya Omar சொன்னது…

பெயருக்கு ஏற்ற குணம்.நல்ல சிந்தனை.

நாடோடி சொன்னது…

முற்றிலும் உண்மை ந‌ண்ப‌ரே... ந‌ம்மால் உத‌வ‌ முடிய‌வில்லை என்றாலும் தூற்றாம‌ல் இருக்க‌ வேண்டும்.. இப்ப‌ உங்க‌ க‌ண் வ‌லி எப்ப‌டி இருக்கிற‌து?

ஜெய்லானி சொன்னது…

ஒரு கஷ்டம் வரும் போதுதான் அதை பத்தி நினைக்கிறோம்.

அண்ணாமலை..!! சொன்னது…

அவர்கள் ஊனமுற்றவர்கள் கூட அல்லர்.
'மாற்றுத்திறனாளிகள்' நண்பரே!
நல்ல மனம் உங்களுடையது!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

முற்றிலும் உண்மை. நம்மை நல்லவிதமாக படைத்த இறைவனுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் காணாது.

நீங்கள் உணர்ந்தது போல் அனைவரும் உணர்ந்துவிட்டால் உலகில் சண்டை என்பதே இல்லை. ம்ம்ம். என்ன செய்ய...

தூயவனின் அடிமை சொன்னது…

கலாநேசன் கூறியது...

வாங்க கலாநேசன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

வெறும்பய கூறியது...

வாங்க வெறும்பய, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

நாடோடி கூறியது...

வாங்க ஸ்டீபன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை.

தூயவனின் அடிமை சொன்னது…

ஜெய்லானி கூறியது...

வாங்க பாஸ், வழியை அனுபவித்தால் மட்டுமே வலி தெரியும். கருத்துக்கு மிக்க நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மையில் அது மிகவும் வேதனையான விஷயம்...

ரொம்ப நல்ல மனசு , நல்ல பகிர்வு...

தூயவனின் அடிமை சொன்னது…

அக்பர் கூறியது...

வாங்க அக்பர், சரியாய் சொன்னிங்க, நிச்சயமாக இறைவனுக்கு நன்றி செலுத்த கடமை பட்டுள்ளோம், எல்லோரும் உணர்ந்தால் பிரச்சினைக்கு வேலையில்லை.

தூயவனின் அடிமை சொன்னது…

சே.குமார் கூறியது...

வாங்க சே குமார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Unknown சொன்னது…

வாழ்வில் வலிகளும் தேவை வலிகளை இதமாய் வருடும் கைகளும் தேவை

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

அன்பிற்கு மயங்காதார் யார்? அதிலும்
பார்வையற்றோர் போன்ற மாற்றுத்
திறனாளிகளிடம் நாம் அன்பு காட்டினால்
அதனால் அவர்தம் சோகங்கள்
சிறிதாவது ம(கு)றையுமே!

தொகையறா:
"இரவாமே பகலாமே நான் பார்த்ததில்லை
பால வார்த்த என் தாயை நான் கண்டதில்லை
உறவென்றும் பிரிவென்றும் எனக்கேதுமில்லை
மலர் செய்த அருளாளன் மணம் வைக்கவில்லை...

பல்லவி:
முகம் பார்க்க முடியாத குருடன் - நான்
முடிவில்லா இறைவனுக்கு பகைவன்
முகம் பார்க்க முடியாத குருடன்..."


-என்ற பார்வையற்ற ஒருவர் தன்
சோகததை வெளிப்படுத்தும்
பாடல் நினைவுக்கு வருகின்றது.

பகிர்ந்ததற்கு நன்றி இளம்தூயவன்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

"அனுபல்லவி:
அன்பென்ற வரைகோலை விரைவாக எடுத்து
அறிவென்ற மைமீது முறையோடு நனைத்து
அழகான வடிவத்தில் சிலைதன்னை படைத்து
அலங்கோலம் செய்தானே விழிரெண்டை கெடுத்து"

-இதில் சில வார்த்தைகள் மட்டும்
சரியாக நினவில்லை.

தூயவனின் அடிமை சொன்னது…

கவிப்பிரியன் கூறியது...

வாங்க கவிப்பிரியன் , உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

இரவாமே பகலாமே நான் பார்த்ததில்லை
பால வார்த்த என் தாயை நான் கண்டதில்லை
உறவென்றும் பிரிவென்றும் எனக்கேதுமில்லை
மலர் செய்த அருளாளன் மணம் வைக்கவில்லை...

அழகான வரிகள் ,சரியான நேரத்தில் அனைவரின் மனதையும் கவரும் வண்ணம் உள்ளது.
இந்த வரிகளை படிக்கும் பொழுது, எப்படி பட்ட கல் நெஞ்சக்காரர்களையும் கலங்க வைத்து விடும்.

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...
"அனுபல்லவி:

அன்பென்ற வரைகோலை விரைவாக எடுத்து
அறிவென்ற மைமீது முறையோடு நனைத்து
அழகான வடிவத்தில் சிலைதன்னை படைத்து
அலங்கோலம் செய்தானே விழிரெண்டை கெடுத்து"

இவற்றையெல்லாம் படிக்கும் பொழுது, நம்மை அறியாமலே கலங்கி போகின்றோம்

Riyas சொன்னது…

நல்ல மனிதாபிமான பதிவு..

தூயவனின் அடிமை சொன்னது…

Riyas கூறியது...

வாங்க ரியாஸ், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Krishnaveni சொன்னது…

it's true, very nice post

தூயவனின் அடிமை சொன்னது…

Krishnaveni கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அஸ்மா சொன்னது…

இளம் தூயவன்! அருமையான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். பார்வையற்றவர்களின் கஷ்டங்கள் எப்படியிருக்கும் என்று நானும் பல‌முறை வருத்தப்பட்டிருக்கேன். எல்லா ஊனங்களும் ஒவ்வொரு வகையில் கஷ்டம் என்றாலும், கண் தெரியாவிட்டால் உலகமே இருட்டாக போகுமே!

தூயவனின் அடிமை சொன்னது…

அஸ்மா கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Unknown சொன்னது…

ஒரு கண நேரத்தில் பார்வை மங்கியதே நமக்கு எவ்வளவு வலியாக இருக்கிறது.
பார்வை இல்லாதவர்கள் நிலைமையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
சிந்திக்க வைத்த,
பார்வையற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற என்னத்தை விதைத்த உங்கள் பதிவு பாராட்டுக்குறியது.

தூயவனின் அடிமை சொன்னது…

abul bazar/அபுல் பசர் கூறியது...

வாங்க சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

புல்லாங்குழல் சொன்னது…

இறைவன் அளித்த அருட்கொடைகளுக்கு யாரும் முழுமையாக நன்றி சொல்ல முடியாது.
நல்ல இடுகை.

தூயவனின் அடிமை சொன்னது…

ஒ.நூருல் அமீன் சொன்னது…

வாங்க சார், சரியான வார்த்தை, இறையச்சம் அற்று அழையும் இந்த உலகத்தை நினைத்தேன் சற்று கலங்கியே போனேன்.