அடையாளங்கள்
மனிதன் அதிகம் வெட்கப்படுபவனாக , தொல்லை செய்யாதவனாக , அதிகம் நன்மை செய்பவனாக, பேச்சைக் குறைப்பவனாக, உண்மையையே பேசுபவனாக, நற்செயல்கள் அதிகம் செய்பவனாக,
வீண் காரியங்களை விட்டும் விலகிக் கொள்பவனாக, பெற்றோருக்கு நன்மை செய்பவனாக, உறவினருடன் சேர்ந்து வாழ்பவனாக இருக்க வேண்டும்.
அவ்வாறே அவன் பொறுமை, நன்றி பாராட்டல்,பொருந்திக் கொள்ளல், சாந்தம்,மேன்மை,கற்பைப் பேணல், அன்பு செலுத்துதல் ஆகிய பண்புகளைக் கொண்டவனாக இருப்பது அவசியமாகும்.
ஆனால் மனிதன் சபிப்பவனாக, திட்டுபவனாக, கோள் சொல்பவனாக, புறம் பேசுபவனாக,அவசரப்படுபவனாக, குரோதம் கொள்பவனாக, கஞ்சனாக,பொறாமை கொள்பவனாக இருக்கக் கூடாது. மலர்ந்த முகம்
காட்டுபவனாக, புன்னகை பூப்பவனாக இருக்க வேண்டும்.
பணிவு
ஒரு மனிதன் தன்னை தாழ்த்திக் கொள்ளாமல் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு போதும் பெருமையுடன் நடந்துகொள்ளக் கூடாது.
நற்குணங்களை வளர்த்து கொள்ள சில வழிமுறைகள்
சரியான கொள்கை
கொள்கை மிகப் பெரிய விஷயமாகும். ஒரு மனிதனின் குணநலன்கள் பெரும்பாலும், அவன் கொண்டிருக்கின்ற கொள்கை, சிந்தனை மற்றும் அவன் சார்ந்திருக்கின்றே மார்க்கம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இருக்கும்.
கொள்கை சரியாக இருந்தால் அதன் விளைவால் குணமும் அழகானதாக இருக்கும்,சரியான கொள்கை அக்கொள்கைவாதியை வாய்மை,ஈகை ,சகிப்புத் தன்மை, வீரம் போன்ற நற்குணங்களின் பால்
தூண்டும், அது போல பொய், உலோபித்தனம்,அறியாமை,போன்ற தீய குணங்களை விட்டும் அவனை தடுக்கும்.
போராடுதல்
நற்குணங்களை மேற்கொள்வதற்கும் தீய குணங்களை விடுவதற்கும் தன் மனதோடு யார் போராடுகின்றாரோ அவருக்கு நன்மைகள் வந்து சேரும். அவரை சூழ்ந்திருக்கும் தீமைகள் அவரை விட்டும் விலகும்.
சுயபரிசோதனை
அதாவது தீய குணங்களை நாம் மேற்கொண்டு விட்டால் நாம் செய்தது சரிதானா என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற குணங்களின் பால் இனி திரும்பக் கூடாது
என நம் மனதைத் தூண்ட வேண்டும்.
சகிப்புத் தன்மை
இது குணங்களிலேயே மிகக் சிறந்ததும் அறிவுடையோருக்கு மிக ஏற்றதுமாகும். சகிப்பு தன்மை என்பது கோபம் பொங்கியெழும்போது மனதைக் கட்டுபடுத்துவதாகும். ஆனால் சகிப்புத்தன்மையுடையவர்கள்
கோபப்படக் கூடாது என்பது இதன் ஷரத் அல்ல. மாறாக அவருக்கு கோபம் பொங்கியெழும்போது தனது சகிப்புத் தன்மையால் அதை அடக்கிகொள்வார்.
சகிப்புத் தன்மையை ஒருவர் மேற்கொள்ளும்போது அவரை நேசிக்கக் கூடியவர்கள் அதிகமாவார்கள். வெறுக்கக் கூடியவர்கள் குறைந்து விடுவார்கள். மேலும் அவருடைய அந்தஸ்து உயர்ந்துவிடும்.
அறிவினர்களை விட்டு விலகியிருத்தல்
யார் அறிவினர்களை விட்டும் விளகியிருக்கிராரோ அவர் தனது கண்ணியத்தைக் காத்துக்கொள்வார். மனத்துக்கு நிம்மதி கிடைப்பதோடு தனக்கு துன்பம் தரக்கூடியவைகளைக் கேட்பதை விட்டும் நீங்கிவிடுவார்.
கோபத்தை தவிர்த்தல்
ஏனெனில் கோபம் உள்ளத்தை எரிகின்ற கனலாகும். இது தண்டிக்கவும் பழிவாங்கவும் தூண்டும். மனிதன் கோபப்படும்போது தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டால் தன்னுடைய கண்ணியத்தையும்
மதிப்பையும் காத்துகொள்வான்.
என்ன நண்பர்களே ஏதோ, என்றோ படித்தது, மனத்தில் பட்டதை கூற வேண்டும் என்று தோன்றியது , அதன் விளைவு இந்த இடுக்கை.
26 கருத்துகள்:
பயனுள்ள அறிவுரைகள்
நல்ல கருத்துக்கள்.
நல்ல கருத்துக்கள் நண்பரே...
நீங்க ரொம்ப நல்லவரோ...
இப்போது உள்ள மனிதர்களிடம் இவையெல்லாம் தேட வேண்டியிருக்கிறது நண்பரே.. :)
கலாநேசன் கூறியது...
வாங்க கலாநேசன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
asiya omar கூறியது...
வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வெறும்பய கூறியது...
வாங்க நண்பரே, எல்லோரும் நல்லவர்கள் தான் நண்பரே, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நாடோடி கூறியது...
வாங்க ஸ்டீபன், சரியா சொன்னிங்க, பிறப்பால் எல்லோரும் நல்லவர்கள் தான், சில
சூழ்நிலை அவர்களை மாற்றி விடுகிறது.
நல்ல கருத்துக்கள் தூயவன் சார்.
செ.சரவணக்குமார் கூறியது...
வாங்க செ.சரவணக்குமார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
இவற்றை அனைவரும் பின்பற்றி
நடந்தால், உலகில் போட்டி,
பொறாமை குறைந்து, சண்டை,
சச்சரவுகள் மறைந்து,
அமைதிப் பூங்கா ஆகிவிடும்.
பயனுள்ள இடுகை!
மிக அழகான கருத்துக்கள்..
நற்குணம் மனிதனுக்கு தேவையான ஒன்று..
மிக அழகான கருத்துக்கள்..
நற்குணம் மனிதனுக்கு தேவையான ஒன்று..
NIZAMUDEEN கூறியது...
வாங்க நிஜாம், சரியா சொன்னிங்க ஒவ்வொரு மக்களும் அமைதியான வாழ்க்கை, நோய் அற்ற வாழ்க்கை வாழவே விரும்புகிறார்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Riyas கூறியது...
வாங்க ரியாஸ், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நல்ல கருத்துக்கள், அதுவும் ரமலான் மாதத்தில் பதிந்தது சிறப்பு.
சிநேகிதன் அக்பர் கூறியது...
வாங்க அக்பர், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
மனிதம் நிறைக்கும் வகையறாக்கள் இவைகள்.தூயவன் எழுத்தில் அத்தனையையும் அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.ஆனால் இத்தனையும் இருந்துவிட்டால்தான் இன்று உலகிலோ நாட்டிலோ பிரச்சனையோ கஸ்டங்களோ இல்லையே !
ஹேமா கூறியது...
வாங்க சகோதரி, நிச்சயமாக சகோதரத்துவம் ,அமைதியான வாழ்க்கை எல்லாம் அமைந்து விடும். உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி.
எதைச்சொல்ல ..? எதை விட .. அனைத்துமே அருமை தூயவன்..
தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
மிகவும் தெளிவான, அனைவரும் பின்பற்ற வேண்டிய கருத்துகள்.
ஒ.நூருல் அமீன் கூறியது...
வாங்க சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
சகிப்புத் தன்மை பற்றி சொன்ன விதை அருமை சகிப்புத் தன்மை அனைவரிடமும் இருக்க வேண்டும் நல்ல பதிவு
சௌந்தர் கூறியது...
வாங்க சௌந்தர், உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நல்ல கருத்துகள் அடங்கிய
ஒரு அருமையான இடுகை
நண்பரே!
கருத்துரையிடுக