கால அட்டவணை

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

பணம் போட்டி பொறாமை

இன்று உலகத்தில் தொழில் போட்டியும் பொறாமையும் கொடி 
கட்டி பறந்து கொண்டு உள்ளது. எந்த நிறுவனத்தை எப்படி அழித்து ,எப்படி தான் மட்டும் முன்னேற வேண்டும் என்பதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிடம் நாம் தெரிந்து கொள்ளலாம், இவர்கள் செய்த வினை இன்று அவர்களால் தலை நிமிர முடியாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சி.

தொழில் போட்டியும் பொறாமையும் எல்லா துறைகளிலும் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்தாலும் ,இன்று அந்த வியாதி இப்பொழுது மருத்துவர்களிடம் தொற்றி கொண்டது.

     சில மாதங்களாக நான் தொலைகாட்சியில் மருத்துவர்களில் கேள்வி பதில் நிகழ்ச்சியை கண்டு வருகிறேன். ஒருவருக்கு ஒருவர் மருத்துவ துறையை மாற்றி மாற்றி குறை கூறிகொள்கின்றார்கள்.

     இதில் என்ன விஷயம் என்றால், ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாது என்பதை,சித்த மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவத்தில் குனபடுத்தலாம்.

     சித்த மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவத்தில் முடியாது என்பதை ஆங்கில மருத்துவத்தில் குனபடுத்தலாம்.

     இதை ஏற்றுகொள்ளும் மனபக்குவம் தான் மருத்துவர்களிடம் குறைவாக உள்ளது.

நோயாளிக்கு மருத்துவர் கொடுக்கும் மருந்தை விட, அவர் வாயில் இருந்து வரும் அன்பான மனதிற்கு ஊக்கப்படுத்துகின்ற வார்த்தைகள், பாதி நோயை குனபடுத்துகின்றது.


      இன்று சித்த ஆயுர்வேதிக் மற்றும் அக்குபஞ்சர் போன்ற மருத்துவம்,  வளர்ந்தது வருகிறது.

     இதற்கு காரணம் ஆங்கில மருத்துவத்தால் ஏற்படும் பின் விளைவுகளே. பின் விளைவு இல்லாத எந்த மருத்துவ துறையையும் மக்கள் வரவேற்க தயாராக உள்ளார்கள்.

நல்ல மனதோடு வைத்தியம் செய்கின்றவர்கள் இருந்தாலும், பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வைத்தியம் செய்பவர்கள் தான், இன்று அதிகமாக உள்ளார்கள்.

     என் அருமை மருத்துவ சகோதரர்களே, மக்களுக்கு நன்மையை ஏற்படுத்த கூடிய ஆங்கில மருத்துவமோ, அல்லது தமிழ் மருத்துவமோ அல்லது யுனானி மருத்துவமோ அல்லது சீனர்களின் அக்குபஞ்சர் போன்ற எந்த துறையாக இருந்தாலும், பின் விளைவற்ற பலன்  மக்களுக்கு கிடைக்குமானால், அதை வரவேற்க தயங்காதிர்கள். அடுத்த மருத்துவ துறையை காட்டி மக்களை அச்சத்திற்கு உட்படுத்தாதிர்கள்.

22 கருத்துகள்:

நாடோடி சொன்னது…

ந‌ல்ல‌ விச‌ய‌ம் ந‌ண்ப‌ரே, நானும் பார்த்திருக்கிறேன் தொலைக்காட்சியில் இவ‌ர்க‌ளின் செய்கைக‌ளை.. வாழ்த்துக்க‌ள்.

தூயவனின் அடிமை சொன்னது…

நாடோடி கூறியது...

வாங்க ஸ்டீபன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

பொது மக்களுக்கு நல்லதோர் கருத்து
கூறியதோடு, மருத்துவர்களுக்கும்
அன்பான வேண்டுகோள்.
சிறப்பான இடுகை!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

இன்ட்லியில் வாக்களிக்க
இயலாதபடி
The page you were looking for doesn't exist!
என்று
வருகின்றது.

Krishnaveni சொன்னது…

nice post

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க நிஜாம், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

நீங்கள் இன்ட்லி போய் தேட வேண்டியதில்லை. என்னுடைய பக்கத்தில் கிழே உள்ள இன்ட்லி like? கிளிக் செய்தாலே நேரடியாக உள்ளே சென்று விடலாம்.

தூயவனின் அடிமை சொன்னது…

Krishnaveni கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஹுஸைனம்மா சொன்னது…

உண்மைதாங்க. மிக அரிதாகச் சில ஆங்கில மருத்துவர்கள் இயறகை மருத்துவத்தைச் சிபாரிசு செய்வதுண்டு. ஆனாலும் முயற்சித்துப் பார்ப்பதே நல்லது.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ந‌ல்ல‌ விச‌ய‌ம் ந‌ண்ப‌ரே,

தூயவனின் அடிமை சொன்னது…

ஹுஸைனம்மா கூறியது

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

வெறும்பய கூறியது...

வாங்க நண்பரே, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

//NIZAMUDEEN கூறியது...

நீங்கள் இன்ட்லி போய் தேட வேண்டியதில்லை. என்னுடைய பக்கத்தில் கிழே உள்ள இன்ட்லி like? கிளிக் செய்தாலே நேரடியாக உள்ளே சென்று விடலாம்.//

இப்படி செய்யும்போதுதான்
அப்படி வருகின்றது,
கடந்த சில இடுகைகளாகவே!
வேறு சில நண்பர்களின்
இடுகைகளில் இந்தப்
பிரச்னையில்லை.

புல்லாங்குழல் சொன்னது…

நல்ல விசயம். இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கும் போது சுருக்கமாக முடித்து விட்டீர்கள். அதுவும் கூட ஒரு அழகாக தான் இருந்தது.

தூயவனின் அடிமை சொன்னது…

வாங்க நிஜாம், என்ன பிரச்சினை என்று தெரியவில்லை, நாளை உங்களை கைபேசியில் அழைக்கின்றேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

ஒ.நூருல் அமீன் கூறியது...

வாங்க சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.
my mail id: ilamthooyavan@gmail.com

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல விசயம் இளம்தூயவன்.

எல்லா மருத்துவர்களும் இதை பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

தூயவனின் அடிமை சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது..

வாங்க அக்பர், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஜெய்லானி சொன்னது…

நம்மளை டெஸ்ட் எலியா ஆக்காம இருந்தா சரிதான்..

Unknown சொன்னது…

நல்ல பதிவு...
அமெரிக்கர்களையும்...
ஐரோப்பர்களையும்.. ஏன் பார்த்து தெரிந்துகொள்ளவேண்டும்
நம்மிடமே உள்ளது ஏராளமான வழிகள்.

தூயவனின் அடிமை சொன்னது…

ஜெய்லானி கூறியது...

வாங்க பாஸ், சரியா சொன்னிங்க, காலையில் தான் காதர் சார் இடம் சொல்லி கொண்டு இருந்தேன், நம்ம பக்கம் இன்னும் தலைவரை காணவில்லை என்று .

தூயவனின் அடிமை சொன்னது…

ஆகாயமனிதன்.. கூறியது...

வாங்க ஆகாய மனிதன், உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.