கால அட்டவணை

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

கப்பல்

    இதை படிப்பதற்கு முன் இதற்கு முன் இடுக்கையை  துறைமுகம் படித்து விட்டு படித்தால் நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

தூரத்தில் நிற்கின்ற கப்பல்களையும் மற்றும் போட்டோவிலும் கண்டுகளித்த உங்களுக்கு அவற்றை பற்றி சிறிது விளக்க
கடமை பட்டுள்ளேன்.

வகைகள்

கப்பல்களை இரண்டு வகைகளாக பிரிக்கின்றார்கள்.

1 . பயணிகள் கப்பல்


இவை பயணிகள் மற்றும் அவர்களின் பொருள்களை மட்டுமே
ஏற்றி செல்ல கூடியது.

இவற்றில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும்.
மருத்துவர் முதல் நீச்சல் குளம் வரை அமைக்கப்பட்டு இருக்கும்.
அவசர தேவைக்கு ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கும் தளம் அமைக்கப்பட்டு இருக்கும்.

2 . கார்கோ கப்பல்

இவை இரண்டு வகைகளாக பிரிக்கின்றார்கள்.

1 . ஓன்று LO LO கப்பல் (LOAD ON ) என்று அழைக்கப்படும்.



இந்த கப்பலில் இரண்டு மூன்று கிரேன் வசதிகள். கொண்டது ,இந்த கிரேனின் வேலை, கப்பலில் உள்ள பொருள்களை வெளியில் எடுப்பதற்கும் , வெளியில் உள்ள பொருள்களை உள்

அடுக்குவதற்கும் பயன் படுத்தபடுகின்றது.

இந்த வகை கப்பலில் மேல் பகுதியில் மூடி திறக்கப்பட்டு ,அதன் வாயிலாக தான்
பொருள்களை ஏற்றவும் இறக்கவும் முடியும்.

2 . மற்றொண்டு RO RO கப்பல் (ROLL ON ) என்று அழைக்கப்படும்.

இந்த கப்பல் இரண்டு வகை படும் ,ஓன்று கார் கேரியர், மற்றொன்று

கண்டெய்னர் கேரியர்.

கண்டெய்னர் கேரியர்











 
 
 
 
 
 
 
 
 
இந்த கப்பலில் பெரிய வகை ரேம்ப்(இரும்பினால் அமைக்கப்பட்டு கப்பலோடு பொருத்தப்பட்டு,இருக்கும்) இருக்கும்.


இது ஹைட்ராலிக் உதவியுடன் இயக்கப்படுகின்றது.

இந்த ரேம்பின் வழியாக கப்பலின் உள்ளே ட்ரைலர்(கண்டைனர் ஏற்றும் வாகனம்) முதல் பெரிய போர்க் லிப்ட் வரை உள்ளே சென்று வரும். இந்த ரேம்பின் வழியாக தான் கண்டைனர்கள் ஏற்றும் இறக்கும் பணி நடைபெறும்.

கார் கேரியர்

இந்த கப்பல் பாக்ஸ் வடிவத்தில் காட்சி அளிக்கும். ஒரே நேரத்தில் 3000 கார்களை ஏற்றி செல்லும் வசதி உடையது.








 
 
 
 
 
 
 
 
இன்னும் பல கப்பல் தேவைக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கபட்டுள்ளது. அவற்றை கீழே காணலாம்.
 
குளிர் சாதனம் பொருத்தப்பட்ட கப்பல் (REEFER கப்பல்)
 
 
இந்த கப்பலில் பழங்கள் ஆட்டுக்கறி மாட்டுக்கறி கோழிகறி மற்றும் பதபடுத்தபட்ட உணவு பொருள்கள் அனைத்தும் இந்த கப்பலில் கொண்டு வரப்படும்.

ஆட்டு கப்பல்






ஆடுகளை மட்டும் ஏற்றும் வசதி உடையது, இதில் வேறு எந்த பொருளும் ஏற்ற முடியாது.
 
 
 
 
 
 
 
 
 
 
பல்க்( BULK) கப்பல்
 
இந்த கப்பலில் கோதுமை அரிசி பார்லி போன்றவற்றை மொத்தமாக எடுத்து வந்து
மெஷின் மூலம் உறிஞ்சி வெளியில் எடுத்து விடுவார்கள்.
 
 
 
 
 
TANKER கப்பல்
 
இந்த கப்பல் ஆயில் மற்றும் தண்ணீர் எடுத்து செல்ல பயன்படுகின்றது.





 
 
 
போர்க் கப்பல்
 
 
 
 
 
 
 
 
 
 
கடல் வழியாக வரும் எதிரிகளை தாக்குவதற்கு என்று உருவாக்கப்பட்டது, ஆனால் இன்றோ மனித சமுதாயத்தை அழிக்கும் பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 
நீர் மூழ்கி கப்பல்
 
 

அந்நிய நாட்டு போர் கப்பலை தண்ணீரில் மறைந்து சென்று
தாக்குவதற்கு உருவாக்கப்பட்டது. இது அந்த பணியை தான்
செய்கின்றதா என்பது படைத்தவனுக்கு மட்டும் தான் தெரியும்.

26 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

படிக்க சுவாரசியமா இருக்கு இன்னும் போடுங்கள்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இதுவரை அறிந்திராத புதிய தகவல்கள். நன்றி இளம் தூயவன்.

ராஜவம்சம் சொன்னது…

கப்பலைப்பற்றி நிறைய தெரிந்துவைத்துள்ளிர்

நல்லவிசயம் நன்றி.

துளசி கோபால் சொன்னது…

ரொம்ப நன்றி.

கடலும் பிடிக்கும் கப்பலும் பிடிக்கும்.

நாங்களும் கப்பல் வாங்கி இருக்கொம்லெ:-))))

http://thulasidhalam.blogspot.com/2007/07/blog-post.html

ஸாதிகா சொன்னது…

கப்பல்களின் வகைகளை விளக்கமாக அரியத்தந்தமைக்கு நன்றி!

அண்ணாமலை..!! சொன்னது…

கப்பல்கள் பற்றி மிக பயனுள்ள தகவல்கள் நண்பரே!
நன்றிகள்!

நாடோடி சொன்னது…

சுவ‌ர‌ஸ்ய‌மான‌‌ த‌க‌வ‌ல்க‌ள்.. தொட‌ர்ந்து இது போல் எழுதுங்க‌ள்..

எம் அப்துல் காதர் சொன்னது…

இப்ப கப்பலைப் பற்றி எழுதியாச்சு, எப்ப பிளைட்??

தூயவனின் அடிமை சொன்னது…

ஜெய்லானி கூறியது...

வாங்க பாஸ், முயற்சி செய்கின்றேன் . உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

அக்பர் கூறியது...

வாங்க அக்பர்,கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

வாங்க ராஜவம்சம் ,அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே ,இந்த பகிர்வின் நோக்கம் .கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

துளசி கோபால் கூறியது...

உங்கள் வலைத்தளம் பார்த்தேன் மிக்க அருமை,உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஸாதிகா கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

அண்ணாமலை..!! கூறியது..

வாங்க அண்ணாமலை, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

நாடோடி கூறியது...

வாங்க ஸ்டீபன், முயற்சி செய்கின்றேன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

எம் அப்துல் காதர் கூறியது..

வாங்க தலைவரே, வானுர்தி பற்றி நமக்கு அனுபவம் இல்லை. நம்ம தல ஜெய்லானி அண்ணாச்சியை வேண்டும் என்றால்
வழி மொழிகிறேன். கருத்துக்கு மிக்க நன்றி.

ஹேமா சொன்னது…

கப்பல் மட்டும்தான் தெரியும்.அதுவும் பார்த்தவரை.அதில இத்தனை விதம் இருக்கிறதா?புதுப் புது தகவல்கள்.
இன்னும் எதிர்பார்க்கிறோம் தூயவன்.

Riyas சொன்னது…

தெரியாத பல அருமையான தகவல்கள்.. இன்னும் தொடரட்டும்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யமான தொகுப்பு.
சேகரித்த, அனுபவம் மூலமாகக்
கண்டறிந்த தகவலகள் இன்னும்
தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

இதற்கு முந்தைய "துறைமுகம்"
இடுகையின் லிங்க்-ஐயும் இதில்
இணைக்கலாமே?

தூயவனின் அடிமை சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

தூயவனின் அடிமை சொன்னது…

Riyas கூறியது...

வாங்க ரியாஸ், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க நிஜாம், முந்தைய இடுக்கையை இணைப்பது நல்ல யோசனை தான், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

Krishnaveni சொன்னது…

interesting information...thanks Thooyavan

தூயவனின் அடிமை சொன்னது…

Krishnaveni கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

புல்லாங்குழல் சொன்னது…

வளவள என இல்லாமல் எளிய அறிமுகத்துடன் சுவையான தகவல் தொகுப்பு.

தூயவனின் அடிமை சொன்னது…

ஒ.நூருல் அமீன் கூறியது...

வாங்க சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.