கால அட்டவணை

வியாழன், 29 ஜூலை, 2010

துறைமுகம்

  ஆம் ஒரு நாட்டின் தொழில் துறையில் முக்கிய
 பங்கு வகிக்கும் தளம்.

     இந்த துறைமுகத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய என் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
அடைகின்றேன்.

எங்கள் ஊர் கடற்கரையில் நின்று கொன்று, நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வெளியில் நடுகடலில் நிற்கும் கப்பல்களை மட்டுமே பார்த்து ரசித்த எனக்கு, ஜித்தா துறைமுகத்தில்
வேலை கிடைத்த பொழுது, துறைமுக வேலை புதியதாகவும்
ஆர்வமாகவும் இருந்தது.

ஜித்தா துறைமுகத்தை,சிறிது உங்களுக்கு ஓர் அறிமுகம் செய்கின்றேன்.

இதன் முழு பெயர் ஜித்தா இஸ்லாமிக் போர்ட், இங்கு ஒரே நேரத்தில் 58 கப்பல்களை நிறுத்தும் வசதி உள்ளது.

சாதாரண கிளார்க் ஆக என் பணியை தொடங்கி,சீனியர் சூப்பர்வைசர் ஆக என் பணியை நிறைவு செய்தேன்.

பல அனுபவங்கள் ஒவ்வொன்றும் என் வளர்ச்சிக்கு
துணையாக இருந்தது.

ஒரு கப்பல் ஒரு நாட்டின் கடல் எல்லையை தொட்டவுடன், அதன் கேப்டன் அவர் செல்ல இருக்கும் துறைமுகத்தின் கண்ட்ரோல் அதிகாரியை தொடர்பு கொள்வார். அந்த நிமிடத்திலேயே அந்த கப்பல் எங்கிருந்து வருகிறது.அவை ஏற்றி வரும் பொருட்கள் என்ன என்பது போன்ற விவரங்கள் அனைத்து பெற்று விடுவார்கள்.
துறைமுகத்துக்கு 4 கிலோ மீட்டர் முன்பாக வந்தவுடன் அங்கு நிறுத்தப்பட்டு, துறைமுகத்தில் இருந்து டெக்போட் என்று அழைக்கப்படும் சிறிய படகுகள், அதி நவீன மோட்டார்களை கொண்டது,அவை சென்று அந்த கப்பலை அழைத்து வரும்,அதனுடன் துறைமுகத்தை சேர்ந்த பைலட்டும் இருப்பார். அதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள
இடத்தில் அந்த கப்பல் கொண்டு வந்து கட்டப்படும்.

ஆனால் அதற்கு முன்பாகவே அந்த கப்பலுக்கு உரிய ஏஜென்ட் அந்த கப்பலில் வரும் பொருள்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை
கப்பல் வருவதற்கு சில தினத்திற்கு முன்பாகவே சமர்பித்து விடுவார்கள்.

அந்த பட்டியலில் குறிப்பிடபட்டுள்ள பொருள்களை மட்டுமே அந்த துறைமுகத்தில் இறக்க அனுமதிக்கப்படும்.

இந்த விசயத்தில் UAE மற்றும் சவுதி போன்ற நாடுகளிடம் பல நவீன கருவிகள் நிறைய உள்ளது.

இவர்களால் குறிப்பிட்ட மணிகணக்கிலேயே பொருள்களை இறக்கவும் ஏற்றவும் இவர்களால் முடிகின்றது.

அதிகமான கார்களை இறக்குமதி செய்யும் நாட்டில் முன்னிலை வகிப்பது சவுதி அரேபியா மட்டுமே. ஜப்பான் கொரியா போன்ற நாடுகள் உற்பத்தி செய்யும் கார்கள். வளைகுடாவை
நம்பியே இருக்கின்றன.

தான் வந்த வேலை முடிந்தவுடன் அந்த துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற அனுமதி பெறவேண்டும்.

நம் பார்வைக்கு ஒரு கப்பல் இன்னொரு நாட்டின் உள்ளே வந்து செல்வது இலகுவாக தெரியும் , அவற்றில் எராளமான விஷயங்கள் இருக்கிறது.

என்னோடு பணியாற்றிய சகோதரர்களையும் கூற ஆசைபடுகின்றேன்.Mr. மணிகண்டன் நான் ஏற்றுமதி துறையில் கிளார்க் ஆக பணியாற்றும்
பொழுது என்னுடைய சூப்பர்வைசர் ஆக இருந்தவர் . வேலைகளை சொல்லி கொடுப்பதில் அருமையான குணம்.

சேப்டி அதிகாரி Mr.கவுஸ் மரைக்கார் நல்ல மனிதர் எந்தவித நெருக்கடிகளையும் சிரித்தே சமாளித்துவிடுவார்.

ஆப்ரேசன் செக்சன் இதனுடைய கண்ட்ரோலர் Mr.ஹமீது அன்வர் நல்ல மனிதர், வேளையில் தவறு செய்தால் அதை அவரிடம் மறைக்காமல் கூறவேண்டும் ,மறைத்தால் அவருக்கு
பிடிக்காது. அவரின் கீழ் பணி யாற்றியவர்கள் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு, அவரின் வழிகாட்டியே காரணம்.

எனக்கு பல்வேறு வகையிலும் என் வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர் இந்த ஹமீது அன்வர் அவர்கள் தான். பணியில் நேர்மையை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதில்

கவனம் செலுத்துவதில் இவரை மிஞ்ச முடியாது.

இன்னும் சில நண்பர்கள் Mr.ஹபீப் ரஹ்மான் மற்றும் Mr.ரவி இவர்களும் என்னோடு பணியாற்றிய நண்பர்கள் பலர்.

இன்றோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைகளில் இருகின்றோம்

இந்த துறைமுகத்தில் நான்ஆற்றிய பணி எனக்கு பல்வேறு சந்தர்பங்களிலும் உறுதுணையாகவே இருந்து வருகின்றது.

27 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

துறைமுகத்திற்கு பல் முகம் உண்டு போல.அருமை.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மிக அருமையான பதிவு இளம் தூயவன்.

துறைமுகங்களைப் பற்றி பல புதிய விசயங்களை அறிந்து கொண்டேன்.

இதை இன்னும் விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான தகவல்கள் சுல்தான் சார். துறைமுகங்களை பற்றியும் அதிலுள்ள பணிகள் குறித்தும் அறிந்து கொண்டேன். நல்ல தகவல்கள். இன்னும் தொடருமா?..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

அறிந்திராத விவரங்கள்,
சுவாரஸ்யமாய் இருந்தன.

ஹேமா சொன்னது…

மிக அருமையான புதுமையான அனுபவம் தூயவன்.இன்னும் இதுமாதிரித் தாங்களேன் !

தூயவனின் அடிமை சொன்னது…

asiya omar கூறியது

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

தூயவனின் அடிமை சொன்னது…

அக்பர் கூறியது..

வாங்க அக்பர், இன்னும் விரிவாக எழுத ஆசைதான், முயற்சி செய்கிறேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது..

வாங்க ஸ்டார்ஜன், நீங்களும் அக்பரும் கூறியதால் எழுவது என்று முடிவு செய்து உள்ளேன்.துறைமுகத்து வரும் கப்பல்களில் எத்தனை வகை உள்ளது, என்பதை வெளியிட ஆசை உள்ளது. இறவன் நாடினால்...

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க நிஜாம்,எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி, நிச்சயமாக.அடுத்து கப்பல்கள் பற்றி எழுதும் எண்ணம் உள்ளது.

Unknown சொன்னது…

நல்ல தகவல்கள். இன்னும் விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்

sathishsangkavi.blogspot.com சொன்னது…

மிக அருமையான பதிவு...

தூயவனின் அடிமை சொன்னது…

கலாநேசன் கூறியது...

வாங்க கலாநேசன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

Sangkavi கூறியது...

வாங்க சங்கவி, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஜெய்லானி சொன்னது…

இன்னும் கொஞ்சம் விரிவா எழுதி இருக்கலாம்..

நாடோடி சொன்னது…

ந‌ம்ம‌ ஏரியாவை ப‌ற்றி எழுதி இருக்கீங்க‌... வாழ்த்துக்க‌ள்..

Riyas சொன்னது…

உங்கள் அனுபவத்தை அழகாக பதிந்துள்ளீர்கள்.. வாசிப்பதற்குள் முடிந்துவிட்டது இன்னும் எழுதியிருக்கலாம்..
//சாதாரண கிளார்க் ஆக என் பணியை தொடங்கி,சீனியர் சூப்பர்வைசர் ஆக என் பணியை நிறைவு செய்தேன்// உங்கள் முயற்சியே எங்களைப்போன்ற இளையவர்களுக்கு பாடம்..

தூயவனின் அடிமை சொன்னது…

ஜெய்லானி கூறியது...

வாங்க பாஸ், இதன் தொடர்ச்சி கப்பல் என்ற தலைப்பில் விரைவில் எழுத உள்ளேன் .

தூயவனின் அடிமை சொன்னது…

நாடோடி கூறியது...

வாங்க ஸ்டீபன், எனக்கு ரொம்ப பிடித்த ஏரியா ஜித்தா,மீண்டும்
எனக்கு ஒரு வாய்ப்பு
கிடைத்தால் தவற விடமாட்டேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

Riyas கூறியது...

வாங்க ரியாஸ், இதன் தொடர்ச்சி கப்பல் என்ற தலைப்பில் எழுத உள்ளேன்.

jenosh jeyam சொன்னது…

இன்றோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைகளில் இருகின்றோம். என்னத்த படிச்சாலும் அங்க நட்பு இல்லாம ஒரு விடயம் இருக்குறது இல்ல. ஒழுங்கா வாசிச்சுட்டு இருந்தன். இந்த வரிகள் திடீர்னு ஒரு மாற்றத்தை உண்டாக்கி விட்டது. நானும் அடிகடி யோசிபேன், நல்ல நண்பர்களாக பழகி விட்டு அப்புறம் எப்டி பிரிந்து இருக்குறது. அதுவும் இப்டி நினைத்து கொண்டு. இது மிக பெரிய வலி இல்லையா ?

தூயவனின் அடிமை சொன்னது…

jenosh jeyam கூறியது...

வாங்க ஜெனோஷ்,நண்பர்கள் பிரிவு என்பது உண்மையில்,ரொம்ப கஷ்டமான ஓன்று,
அதன் வலி அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். உங்கள் முதல் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

jenosh jeyam சொன்னது…

என்னை வரவேற்றதுக்கு மிகவும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிக அருமையான பதிவு இளம் தூயவன்.

தூயவனின் அடிமை சொன்னது…

enosh jeyam கூறியது...

உங்க தளத்தை பார்த்தேன்,ரொம்ப சின்ன வயதிலேயே எழுத ஆரம்பித்து உள்ளீர்கள்,வாழ்த்துக்கள்.

தூயவனின் அடிமை சொன்னது…

சே.குமார் கூறியது...

வாங்க குமார், உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

jenosh jeyam சொன்னது…

ரொம்ப சின்ன வயது தான். அனால் ரொம்ப வளந்திட்டன்.
தூயவன்.