கால அட்டவணை

வெள்ளி, 11 மார்ச், 2011

மருத்துவமும் அறுவை சிகிசையும்




     இன்றைய உலகம் ஆங்கில மருத்துவத்தில் பல சாதனைகளை
படைத்து இருந்தாலும், சில விசயங்களில் சரிவுகளையும் கண்டு
உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

     அனைத்து தொலைகாட்சிகளிலும் மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. இதில் சில
மருத்துவர்கள் மனம் திறந்து பேசுகிறார்கள், அவர்களை மனமார வாழ்த்துகிறேன்.

     மருத்துவ துறையில் நடக்கும் தவறுகள் நமக்கு தெரியாது. ஆனால்
மருத்துவர்களால் அறிந்து கொள்ள முடியும். அவை சமீப காலங்களாக கசிய ஆரம்பித்து உள்ளன.

     இருதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் நரம்புகளில் ஏற்படும்
அடைப்புகளால் , மாரடைப்பு ஏற்படுவதாக சொல்கிறார்கள். இந்த அடைப்புகள் கொழுப்புகளாலும் மற்றும் இனிப்பு நீர் போன்ற காரணங்களாலும் ஏற்படுவதாக சொல்கிறார்கள். அடைப்புகள் பெரிய அளவில் இருந்தால் அதற்கு ஒரே வழி, பைபாஸ் என்கின்ற அறுவை சிகிசை தான் என்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.

     மக்கள் தொலைகாட்சியில் வரும் மருத்துவர் ஐயா தெய்வநாயகம் அவர்கள் ஒரு முறை பைபாஸ் அறுவை சிகிசை பற்றி கூறும் பொழுது, அது தேவை அற்றது என்கின்ற ஒரு வார்த்தையை கூறினார். அதற்கு அவர் கூறிய விளக்கம் 'இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்வதற்கு பல வழிகள் உண்டு, ஒரு வழி அடிபட்டால், மற்ற வழிகள் மூலம் சென்று வரும் என்று கூறினார்.

     அவர் கூறிய வார்த்தை சற்று அனைவரையும் சிந்திக்க வைக்க கூடியதாகவே உள்ளது.

     இதயத்திற்கு பல சிறப்பு தன்மைகள் உண்டு என்பதை, டெக்ஸாஸ்
 சவுத் வெஸ்டர்ன் மருத்துவ பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் எலிகளின் துண்டான இதயம் மீண்டும் வளர்வதை [அடிப்படையாக வைத்து] கண்டறிந்துள்ளனர். "இதய தசை உற்பத்தி செய்யும்
புதிய சிசு வளர்சியே இதற்கு காரணம்" என தெரிவித்துள்ள ஆராட்சியாளர்கள், மனிதர்களுக்கு இத்தகைய முறை சாத்தியப்படுமா என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

     இந்த ஆராய்ச்சியின் முடிவு[வரும்போது] இதயம் சம்பந்தப்பட்ட பல
பிரச்சினைகளுக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.




19 கருத்துகள்:

Chitra சொன்னது…

You maybe interested in reading this article, related to this topic.

http://www.time.com/time/magazine/article/0,9171,919514,00.html

ஜெய்லானி சொன்னது…

யோசிக்க வேண்டிய விஷயம்தான் :-)

Unknown சொன்னது…

arumai annaa..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.இளம் தூயவன்.
நல்ல இடுகை.
நாம், கொழுப்பு அதிகம் உள்ள உணவுவகைகளையே அடிக்கடி உண்பதை தவிர்த்தும், நிறைய உடற்பயிற்சி செய்தும் வாழ்ந்தால் இந்த இதய இரத்தக்குழாய் அடைப்பு பிரச்சினை எல்லாம் வராது என்கின்றனர் மருத்துவர்கள். இது பெட்டராக தெரிகிறது.

வலையுகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

முறையான உணவு பழக்கமும்

சரியான உடற்பயிற்சிகளும் செய்தால்
இதய நோயை குனப்படுத்தி விடலாம்

சிப்ஸ தின்னுகிட்டு கிரிக்கெட்டு பாத்துக்கிட்டு இருந்த இந்த மாதிரி அறுக்க வேண்டிய நிலை தான் வரும்

ஆயிஷா அபுல். சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
பயனுள்ள பதிவு .

தூயவனின் அடிமை சொன்னது…

Chitra கூறியது...

Thanks sister.

தூயவனின் அடிமை சொன்னது…

ஜெய்லானி கூறியது...

வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

siva கூறியது...

வாங்க சிவா, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

முஹம்மத் ஆஷிக் கூறியது...

வாங்க சகோ. கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஹைதர் அலி கூறியது...

அலைக்கும் சலாம்,
வாங்க சகோ. கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஆயிஷா அபுல். கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

vanathy சொன்னது…

நல்ல பதிவு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

இதய நோயாளிகளுக்கு மிக மகிழ்ச்சி த்ரும் செய்தி!
ஆராய்ச்சி முடிவுகளுக்காக காத்திருப்போம்!

தூயவனின் அடிமை சொன்னது…

vanathy கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

அன்புடன் மலிக்கா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,

முறையான உணவு கடைபிடித்தால் இதுபோன்றவைகளிலிருந்து தப்பிக்கலாம்.

நல்ல பயனுள்ள பதிவு..

VELU.G சொன்னது…

நல்ல பதிவு

தூயவனின் அடிமை சொன்னது…

அன்புடன் மலிக்கா சொன்னது…

அலைக்கும் சலாம்,
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

VELU.G கூறியது...

வாங்க வேலு, கருத்துக்கு மிக்க நன்றி.