கால அட்டவணை

திங்கள், 31 ஜனவரி, 2011

வீழ்கிறது 30 ஆண்டு சர்வாதிகாரம்

பெயர் :ஹோஸ்னி முபாரக்


பிறந்த தேதி:4 மே 1928

ஊர் :மினுபியா

தொழில் :சர்வாதிகாரம்

இன்று உலகத்தில் உள்ள அனைத்து மீடியாக்களும் உற்று நோக்கி கொண்டுள்ளது. இந்த நாட்டின் தலைஎழுத்து எப்படி மாற போகின்றது என்று. மக்கள் புரட்சி நாளுக்கு நாள் வேகம் பிடித்த வண்ணம் உள்ளது. இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு உள்ளார் ஹோஸ்னி முபாரக்.

யார் இந்த ஹோஸ்னி முபாரக், இவரின் சுயருபம் என்ன?

இவருடைய நாட்டு மக்கள் இவரை நேசித்தார்களா?

இல்லையெனில் இவராவது நாட்டு மக்களை நேசித்தாரா?

முப்பது ஆண்டு கால ஆட்சியில் இவர் செய்தது என்ன?

இவரை யாரும் எதிர்க்க கூடாது, அவ்வாறு எதிர்ப்பவரை வளர விட கூடாது, என்பதில் தான் இவருடைய கவனமும் கவலையும் இருந்தது. நாட்டின் வளர்ச்சியை பற்றியோ, நாட்டு மக்களின் நலனை பற்றியோ இவர் எப்பொழுதுமே கவலை பட்டது கிடையாது. அமெரிக்காவின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். வளைகுடா நாட்டில் நடந்த அனைத்து போர்களுக்கும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

வளைகுடா நாட்டில் அமெரிக்காவின் பெயரை சொல்லி, அவர்களை மிரட்டி சம்பாதித்தது.

நம்பிக்கை (துரோகி) என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று கேட்பவர் இவர். காட்டி கொடுப்பது என்பது இவருக்கு கை வந்த கலை. இன்று இவருடைய கொடுங்கோல் ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க மக்கள் களம் இறங்கி உள்ளார்கள்.

அரசியல் கொலைகாரன் என்று இவருக்கு ஒரு பெயர் உண்டு. இவரை மக்கள் அடித்து விரட்டுவது முடிவாகிவிட்டது. இவருக்கு அடைக்கலம் கொடுக்க அரபு நாடுகள் மறுப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.





13 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

நியுஸில் பார்த்து அதிர்ந்து விட்டேன்,பாவம் அப்பாவி மக்கள்.

ராஜவம்சம் சொன்னது…

துனிஸியா எகிப்து அடுத்து எதுங்க?

Chitra சொன்னது…

நாட்டுக்கு நாடு, வாசப்படி போல. மக்கள் தான் பாவம்!

Philosophy Prabhakaran சொன்னது…

நாமும் அவர்களைப் போல புரட்சி செய்து எழுச்சி பெறுவோம்...

தூயவனின் அடிமை சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

வாங்க பாஸ், ஏமன் நாட்டில் தொடங்கி விட்டது, பொருத்து இருந்து பாருங்க. கருத்து மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது..

வாங்க பாஸ்,கருத்துக்கு மிக்க நன்றி.

ஆயிஷா சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

எல்லா நாட்டிலும் பிரச்சனை தான்.

அப்பாவி மக்கள் தான் பாவம்.

arasan சொன்னது…

பதிவு அசத்தல் ...
இவனுங்கள தூக்குல போடணும் பாஸ்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

ஹோஸ்னி முபாரக், தங்கத்தையெல்லாம்
எடுத்துக் கொண்டு, வேறு நாட்டுக்கு
தப்பியோடிவிட்டாராம். #வதந்தி?
இவரின் வில்லங்கங்களை, இன்னும்
விரிவாகப் போடுவீர்களா இளம்தூயவன்?

பகிர்வுக்கு நன்றி!

Krishnaveni சொன்னது…

scare to read

vanathy சொன்னது…

இவர் செப்டெம்பர் வரை அவகாசம் கேட்டிருக்கிறார். என்ன செய்யப் போகிறார்ன்னு தெரியவில்லை???

தூயவனின் அடிமை சொன்னது…

ஆயிஷா கூறியது...

அரசன் கூறியது...

NIZAMUDEEN கூறியது...

Krishnaveni கூறியது...

vanathy கூறியது...

கருத்து தெரிவித்த உங்கள் அனைவரும் மிக்க நன்றி.