சகோதரி ஆசியா உமர் அவர்களின், தொடர் பதிவிற்கான அழைப்பை ஏற்று இந்த இடுகையை வெளியிடுகிறேன்.
மனிதர்களில் கனவு காணாதவர்கள் இருக்க முடியாது. வாழ்க்கை இப்படி தான் வாழ வேண்டும்.என்று எனக்குநானே ,சில வட்டங்களை போட்டு கொள்வது என் பழக்கம். அன்பான மனைவி அழகான இரண்டு பிள்ளைகள். என்மகன் 7 வகுப்பு படிக்கின்றார் , என்மகள் 2 வகுப்பு படிக்கின்றார் . இது என்னை பற்றி ஒரு அறிமுகம்.
1 . அன்பாக பேசுவது , நாமெல்லாம் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் என்ற ஒற்றுமையை கடை பிடிப்பது.
2 . சிங்கையில் பணியாற்றும் எனது நண்பர்களோடு, பல ஆண்டுகளுக்கு பிறகு தொடர்பு கொண்டது. இந்த முறை விடுமுறையில் ஊர் சென்றிந்த பொழுது,பத்து ஆண்டுகளுக்கு பிறகு,நாகூரில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் சென்று வந்தேன். ஈரோட்டு மக்களிடம் எனக்கு பிடித்தது, ஊரை சுத்தமாக வைத்து கொள்வது. இன்றும் அவர்கள் அதை கடை பிடித்து வருகிறார்கள்.
3. சும்மா வலைப் பூவில் கிறுக்கி கொண்டு இருந்த என்னை, சகோதரி ஆசியா உமர் அவர்கள், ஒரு அவார்டை கொடுத்து, என்னை எழுத ஊக்குவித்தார்கள். இன்றைக்கு இந்த வலைப் பூ என்னுடைய பொழுது போக்கு.
4. எனக்கு தெரியாமல் எனக்காக என் மனைவி வாங்கி வைத்து, எனக்கு கொடுத்த சில பரிசுகள்.
5. எனது அன்பு மகள் சுதந்திர தினத்தில் பள்ளியில் நடந்த விழாவில் பேசியது. காரைக்கால் F M ரேடியோவில் ஒளிபரப்பானது.
6. பிடித்த மனிதர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு கூற முடியாது. அன்பாக பேசுபவர்கள் அனைவரையும் பிடிக்கும். முதல் அமைச்சர் கருணாநிதியின் பேச்சு தமிழ் நடை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
7. மெஹ்ரான் பிரியாணி மசாலாவில் நான் செய்த பிரியாணி. என் வீட்டில் எல்லாருக்கும் பிடித்து விட்டது.
8. எனக்கு ரொம்ப பிடித்த இடம் ஊட்டி. என் தாய் நாட்டை மிகவும் நேசிப்பவன். ஆதலால் மற்ற நாடுகளை குறிப்பிட மனமில்லை.
9. இந்த ஆண்டில் எனது தம்பிக்கு U K நாட்டு வங்கியில் வேலை கிடைத்தது. இந்த முறை தாயகம் சென்று இருந்த போது,
பல மூதாட்டிகள் ரோட்டில் அனாதைகளாக கிடப்பதை பார்த்து என் கண்கள் கலங்கி விட்டது. நான் இறைவனிடம் அந்த நேரத்தில் கேட்டது, யாருக்கும் இந்த நிலை வேண்டாம் என்று.
10. வாழ்க்கை சாதிக்க வேண்டும் என்கின்ற எந்த நோக்கமும் கிடையாது. வாழ்க்கையில் முடிந்த வரை பிறருக்கு உதவ வேண்டும் என்கின்ற எண்ணம் என் மனதில் எப்பொழுதும் உண்டு.