ஊட்டக்கூடிய இடம் தான் பள்ளி கூடம்.
ஆனால் இந்த பள்ளியில் சேர்ப்பதற்கு நன்கொடை என்ற பெயரிலே சில கையூட்டல்களை பெற்று கொண்டு தான், சேர்ப்பதற்கு அனுமதிக்கிறார்கள். இப்படி ஆரம்பிக்கும் கல்வி நம் பிள்ளைகளை எங்கு கொண்டு போய் நிறுத்தும்?.
இது போன்ற குற்றங்களை சுட்டி காட்டும் நேரத்தில் , சில நல்ல உள்ளங்களையும் அவர்கள் கல்விக்காக ஆற்றி பணிகளையும் சுட்டி காட்ட கடமை பட்டுள்ளோம்.
எனது ஆசிரியரும், பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற கலிபா சாஹிப் B.Sc., B.Ed., அவர்களை பற்றி அவர்களின் உதவி செய்யும் நல்ல எண்ணத்தையும் சிலவற்றை இங்கு கூற ஆசைப்படுகிறேன்.
என்றும் சிரித்த முகம், நடந்தால் ராஜ நடை ,பேச்சில் கனிவு கலந்த கம்பீரம் இப்படிப்பட்டவர் தான் என் ஆசிரியர்.
அவர் மாணவர்களை ஊக்குவிப்பதோ ஒரு தனி கலை என்றே கூற வேண்டும். ஒவ்வொரு மாணவனையும் பள்ளி உள்ளே மட்டுமின்றி வெளியிலும் கண்காணிப்பதில் அவரை மிஞ்ச முடியாது.
அவர் தேசிய மேல் நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய பொழுது , அவரிடம் டியுசன் படித்த மாணவர்கள் ஏராளம் ,அந்த மாணவர்களில் வசதி அற்ற மாணவர்களுக்கு இலவசமாக கற்று கொடுத்தார். பாடம் நடத்தும் பொழுது சில சிறிய கதைகளை கூறி,மாணவர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து நன்கு புரியும் வண்ணம் பாடம் நடத்துவதில் கைத்தேர்ந்தவர்.
யாருடைய மனமும் புண்படாவண்ணம் பேசுவதில் தனி திறமை என்றே சொல்ல வேண்டும். ஒரு பள்ளியை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர்.
எழுத்தாளர் தூயவன் அவருடைய நண்பர். தூயவனை பற்றி அவர் எங்களிடம் நிறைய கூறியுள்ளார். மாணவர்களை ஊக்குவிப்பதில் தனி கவனம் செலுத்துவார்.
யாரிடமும் பிரதி பலன் எதிபார்க்க மாட்டார். உதவி செய் பலனை எதிபார்க்காதே என்ற பழமொழியை பின்பற்றியுள்ளார் என்றே கூறுவேன். மற்ற பள்ளியில் படிக்கும், அவருக்கு தெரிந்த மாணவர்களையும் அழைத்து அவர்களின் படிப்பு பற்றி விசாரிப்பார்.
என் குடும்பத்தை சவுதி அரேபியா அழைத்து வர முயற்சி தொடங்கிய பொழுது,என்னுடைய மகனை தம்மாமில் உள்ள இந்தியர்களுக்கான பள்ளியில் சேர்ப்பதற்கு இந்தி தெரியாத சூழ்நிலையில் , என் மகனுக்காக அவரை அணுகி, சூழ்நிலையை விளக்கிய பொழுது,அவர் ஒரு இந்தி ஆசிரியரை அறிமுகம் செய்து வைத்து, ஒரே மாதத்தில் இந்தி உடைய பேசிக்கை கற்று கொள்ள உதவினார். எனக்கு முன்பாக அவரிடம் படித்த மாணவர்கள் எண்ணில் அடங்காது.
மற்ற மாணவர்கள் யாரும் அவரை பற்றி எழுதி உள்ளார்களா என்று தெரியாது. எனக்கு மட்டும் அல்ல அவர் என் சகோதரர்களுக்கும் ஆசிரியர். அவருடைய நல்ல எண்ணங்களுக்கும் ,செயல்களுக்கும் இறைவன் அவருக்கு நற்கூலியை கொடுப்பானாக.