என் அருமை சகோதர சகோதரிகளே! இந்த கட்டுரை உங்களை பயமுறுத்தஅல்ல , உங்களை கொஞ்சம் சிந்திக்க வைக்க தான்.
நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளைக்கும் என்ன உணவு
உன்ன வேண்டும், என்ன உடுத்த வேண்டும், வார விடுமுறையில்
எங்கு செல்ல வேண்டும் என்று நமக்கு நாமே, சிந்தித்து
செயல்படுகிறோம்,அது நல்ல விஷயம் தான். அதே நேரேத்தில்
நாம் எவ்வளவோ வீண் விரயம் செய்கிறோம்.
நம் அண்டை வீட்டார் மூன்று வேளையும் சரியாக உண்ணுகிறார்களா என்று நமக்கு தெரியாது. அதை நாம் தெரிந்து கொள்வதும் இல்லை,
அதே நேரத்தில் நமக்கு தேவையற்ற விசயத்தில் மூக்கை நுழைத்து
நாம் விமர்சிக்கின்றோம்.
இதில் ரொம்ப கொடுமையான விஷயம் என்னவென்றால், தன் கூட
பிறந்த பிறவிகள் எப்படி வாழ்கிறார்கள் அவர்களின் வாழ்க்கைக்கு பொருளோ பணமோ தேவை உள்ளதா? என்று கூட பலர் நினைப்பது கிடையாது.
நம் பிள்ளைகள் காண்வென்டில் படித்தாலும், எத்தனையோ
பிள்ளைகள் அரசு பள்ளி கூடங்களில் கூட படிக்க வசதி இன்றி உள்ளார்கள்.
ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன.
தேவையற்ற எத்தனையோ விசயத்திற்கு எல்லாம் பல
ஆராய்ச்சிகள் செய்ய பணத்தை கோடி கணக்கில்செலவு
செய்யும் பணக்கார நாடுகள்., அவர்களின் உணவு
பற்றாகுறைக்கு என்ன காரணம், அவர்களுக்கு உணவு
தங்கு தடையின்றி கிடைக்க என்ன வழி என்று, கண்டு
பிடித்துஉதவி செய்ய கூட முன் வரவில்லை.
வளர்ந்த நாடுகள் என்று மார்தட்டி கொள்கின்றார்கள். தன்
சுயநலத்திற்காக எவ்வளவுவேண்டுமானாலும் செலவு
செய்வார்கள்.
சுயநலத்திற்காக எவ்வளவுவேண்டுமானாலும் செலவு
செய்வார்கள்.
எந்த மதமும் சுயநலத்துடன் வாழ கற்று கொடுக்கவில்லை.
சுயநலம் என்பது நமக்கு நாமே போட்டு கொள்ளும் ஒரு வட்டம்.
சில நொடிகள் நிலை தடுமாற வைக்கின்றன, எவ்வளவோ தொழில்
நுட்ப வசதிகளை நாம் கண்டு இருந்தாலும், இது போன்ற இயற்கை சீற்றத்தை நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது
உண்மை.காட்டு தீயினால் ஒரு பக்கம் இயற்கை வளம்
அழிந்து வருகிறது. பூகம்பத்தால் சில நகரங்கள் தரை மட்டமாகி
வருகிறது. சுனாமியால் பல கடல் ஓரத்தில் வசிக்கும் மக்களும்
நகரமும் அழிந்து வருகிறது.
உண்மை.காட்டு தீயினால் ஒரு பக்கம் இயற்கை வளம்
அழிந்து வருகிறது. பூகம்பத்தால் சில நகரங்கள் தரை மட்டமாகி
வருகிறது. சுனாமியால் பல கடல் ஓரத்தில் வசிக்கும் மக்களும்
நகரமும் அழிந்து வருகிறது.
இவை மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்டசக்திஓன்று என்பதில்
யாருக்கும் சந்தேகம் இல்லை.
இறைவனின் படைப்புகளில் மனித படைப்பு ஓர் சிறந்த படைப்பாக இருந்தாலும். சில மனிதர்கள் சில நேரங்களில் நடந்து கொள்ளும்
முறை விலங்குகளை விட கேவலமாக உள்ளது. எது கரைந்தாலும்
இந்த மனிதர்களின் மனம் கரைய மறுக்கின்றது.
ஜப்பானில் நடந்த பூகம்பம் மற்றும் சுனாமி சம்பவமும் அதை
தொடர்ந்து அணு உலை வெடிப்பும், நினைக்கும் பொழுதே மனம் பதறுகிறது. நேற்று வரை தொழில் நுட்பத்தில் கொடிகட்டி பறந்த
ஜப்பான் இன்று சின்ன பின்னமாகி உள்ளது. அந்த மக்கள் நினைத்து
கூட பார்த்து இருக்க மாட்டார்கள். நேற்று வரை எல்லா
வசதிகளையும் அனுபவித்து வந்த அந்த மக்கள், இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்.
நமக்கு நாமே பல கேள்விகளை கேட்டு கொள்ளும் நேரம் இது .
நாம் அனைவரும் இந்த மண்ணில் ஒரு நாள் மரணிக்க
கூடியவர்கள். நாம் வாழும் வாழ்க்கை சரியான வழியில் சென்று
கொண்டு உள்ளதா என்பதை பரிசோதிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
9 கருத்துகள்:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோ.இளம்தூயவன்,
மிக்க அருமையான போதொநல நோக்குடன் கூடிய சிந்தனைகளை பகிர்ந்தமைக்கு நன்றி.
நம் இந்திய FCI குடோன்களில் நம் உணவுக்கையிருப்பு அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு இருந்து கொண்டு இருப்பதாய் எங்கோ படித்தேன்.
ஆனால், அவற்றை பட்டிச்சாவினால் மரணிக்கும் இந்திய /உலக ஏழைகளுக்கு விநியோகிக்கும் மனிதநேய மனமோ அல்லது சரியான விநியோக முறையோ நம்மிடம் இல்லாதது அவமானம்.
யோசிக்க வைக்கும் பதிவுக்கு வாழ்த்துக்கள்..
சிந்திக்க வைக்கும் பகிர்வு.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அருமையா சொல்லிருக்கீங்க...நிச்சயம் நம்மை சிந்திக்க வைக்கும் பதிவு...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
Thangkalin uraththa sinthanaikku nandri!
true sayings
சிந்திக்க வைக்கும் பதிவு. நல்ல பகிர்வு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் சகோ!
தெரிந்தோ தெரியாமல் செய்யும் தவறுகளை மீட்டிப் பார்க்க வைக்கிறது பதிவு !
கருத்துரையிடுக