கால அட்டவணை

வியாழன், 6 ஜனவரி, 2011

பழமையா..............புதுமையா................?

     இன்றைய சமுதாயம் அன்றாடம் பல்வேறு புதிய புதிய நோய்களை எதிர் நோக்கி கொண்டு உள்ளது.


     ஒவ்வொரு சராசரி மனிதனிடமும் பேச்சு கொடுத்தால், ஓவ்வொருவரும் ஏதாவது ஒரு நோயை சுமந்த வண்ணமாக உள்ளார்கள். பிறக்கும் பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். நோயின்றி வாழ்க்கை இல்லை என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்கின்ற அச்சத்திற்கு மனிதர்களின் நிலை போய் கொண்டு உள்ளது.

இதற்கு யார் காரணம்?

நமக்கு நாமே வினை விதைக்கிறோமா?

இப்படி பல கேள்விகள்.

நம்மை நாமே ஏன் சற்று பின்னோக்கி பார்க்க கூடாது?

இதோ.........

மண் பாண்டகளில் உணவு சமைத்து சாப்பிட்டு வந்த நாம், அலுமினிய பாத்திரத்தையும், சில்வர் பாத்திரத்தையும் நாடியது மிக பெரிய தவறு.

பழைய உணவுகளை அடுப்பில் மட்டும் சூடு படுத்தி சாப்பிட்ட நாம், இன்று ஓவனின் உதவியை நாடுவது.

உணவுகளை குளிர் சாதனா பெட்டியில் வைத்து நீண்ட நாட்களுக்கு உண்பது.

வீட்டில் உணவு தயாரிக்க அலுப்பு பட்டு ,பாஸ்ட் புட் வாங்கி சாப்பிடுவது.

வீட்டின் அருகிலேயே சுத்தமான கறி வகைகள் கிடைக்கும் பொழுது, அதை வாங்கி உபயோகிக்காமல் பதப்படுத்தப்பட்ட கறி வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது.

காலையில் எழுந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அலுப்பு பட்டு, பிள்ளைகளை காண்வென்டில் சேர்ப்பது, அதை மற்றவர்களிடம் தன் பிள்ளை காண்வென்டில் படிப்பதாக பெருமைப்பட்டு கொள்வது.

நமது விளை நிலங்களுக்கு , அந்நிய நாட்டு உரங்களை பயன்படுத்தியது.

சிறிய நோய்களுக்கும், நாட்டு மருந்துகளை நாடாமல், முழுக்க முழுக்க ஆங்கில மருந்துகளை நாடியது.

சிறிய தலைவலிக்கு கூட மருந்தை உபயோகிப்பது .

சிறிய சிறிய வேலைகளை கூட செய்யாமல், அதற்கு வேலை ஆட்களை நியமிப்பது.

வெளியில் செல்லும் பொழுது, அருகில் உள்ள இடத்திற்கு கூட நடக்க அலுப்பு பட்டு, வாகனத்தின் உதவியை நாடுவது.

கீழ் வீட்டில் இருந்து கொண்டு , மேல் வீட்டில் உள்ளவர்களை அழைக்க கைபேசியை பயன்படுத்துவது. கைபேசியில் அதிக நேரம் பேசுவதை பெருமையாக நினைப்பது.

நம்முடைய அதிக நேரத்தை தொலைகாட்சியிலும் , கணினியிலும் பயன்படுத்துவது.

கர்ப்பம் தரித்தவுடன் சிறிய வேலைகள் கூட செய்யாமல், நடையை குறைத்து கொள்ளுதல். (இது பெண்களுக்கு சுக பிரசவம் ஏற்படாமல் தடுக்கின்றது. )

பிறந்தவுடன் தாய் பால் குடித்து வளர்ந்த நாம், நம் குழந்தைகளுக்கு புட்டி பாலை கொடுத்து வளர்க்க ஆரம்பித்து விட்டோம். இது நம் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு.

நம்மில் சிலர் ,எந்த நேரமும் வேலை வேலை என்று வீடுகளில் பெண்களும், அலுவலகத்தில் ஆண்களும் தன் எனர்ஜி தன்னை விட்டு செல்லும் வண்ணம் தன்னை தானே மறந்து உழைப்பது .

கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் சம்மந்தமான பிரச்சினைகளை, அன்றாடம் அதற்கான நேரம் ஒதுக்கி அமர்ந்து பேசி தீர்க்க முயலாமல் இருப்பது.

நம்முடைய மன கஷ்டத்தை தனக்கு தானே, மனதில் வைத்து கொண்டு வெளியில் சொல்லாமல் இருப்பது.

பருவம் அடைந்த பிள்ளைகளின் மீது, தனி கவனம் செலுத்தாமல் இருப்பது.

பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து வளர்ப்பது.

இப்படியாக சொல்லி கொண்டே போகலாம்.

நோய் அற்ற வாழ்க்கை நம் அனைவருக்கும் வேண்டும். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

நம்மால் பழைய நிலைக்கு ஏன் திரும்ப முடியாது.

முடியாது என்பது, நமக்கு நாமே சொல்லி கொள்வது.
முடியும் என்பது, நமக்கு நாமே வகுத்து கொள்வது.

வெற்றி என்பது பெற்று கொள்வது
தோல்வி என்பது கற்று கொள்வது.

25 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

நல்லா தான் சிந்திச்சிருக்கீங்க... எனினும் விஞ்ஞான உலகத்தில் இதையெல்லாம் மாற்றிக்கொள்ள முடியாது... வேண்டுமானால் குறைத்துக்கொள்ளலாம்...

மனோ சாமிநாதன் சொன்னது…

'முடியாது என்பது, நமக்கு நாமே சொல்லி கொள்வது.
முடியும் என்பது, நமக்கு நாமே வகுத்து கொள்வது. '

அருமையான‌ வ‌ரிக‌ள்.
நீங்க‌ள் எழுதியுள்ள‌‌ அத்த‌னையும் ச‌ரியான‌தே.
நம்மை நாமே பல வகைகளிலும் மாற்றிக்கொன்டால்தான் இந்த இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மனதில் நிம்மதியையும் உடலில் நலத்தையும் அடைய முடியும்!

ஜெய்லானி சொன்னது…

வசதியா வாழ பழகிய இன்றைய தலைமுறை இதுக்கு ஒத்துக்கொள்ளுமா.. கஷ்டம்தான் ...!!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இது ஒரு எக்கோ பேலன்ஸிங் சிஸ்டம் மாதிரி.

நாம் கஷ்டப்படுவதை குறைத்துக்கொண்டால் நமக்கு கஷ்டம் வரும்

நாம கஷ்டப்பட்டால் நமக்கு வருகிற கஷ்டத்தை தவிர்க்கலாம்.

("கஷ்டம்" என்பதை வேலை, உழைப்பு , கடினம் என்ற அர்த்தத்தில் வாசிக்கவும்)

ஆயிஷா அபுல். சொன்னது…

//பிறக்கும் பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.//


//பிறந்தவுடன் தாய் பால் குடித்து வளர்ந்த நாம், நம் குழந்தைகளுக்கு புட்டி பாலை கொடுத்து வளர்க்க ஆரம்பித்து விட்டோம். இது நம் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு.//

நல்ல பதிவு,உண்மையான வரிகள்.

பகிர்வுக்கு நன்றி

தூயவனின் அடிமை சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது..

வாங்க நண்பரே, குறைத்துக்கொள்ளலாம் என்று உங்கள் வாயில் இருந்து வந்ததே , அதுவே உங்களுடைய தொடக்கம். கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

மனோ சாமிநாதன் கூறியது...

வாங்க சகோதரி, நிச்சயமாக இயந்திர வாழ்க்கை, நம் வாழ்க்கை அழித்து விடும். நாம் அனைவரும் இவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும். கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஜெய்லானி கூறியது...

வாங்க பாஸ், கொஞ்சம் இளைய தலைமுறை விசயத்தில் கடினமாக தான் இருக்கும். விளக்கமாக எடுத்துரைப்பது நம் அனைவரின் கடமை அல்லவா?. கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க பாஸ், சரியா சொன்னிங்க, எனக்கு ஒரு பாடல் வரி நினைவுக்கு வருகிறது.

உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே.

கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஆயிஷா அபுல் கூறியது...

வாங்க சகோதரி,உங்கள் வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

பழமையை மறந்ததால் நான் இழந்த நன்மைகளையும்
புதுமையால் நாம் ஏற்கும் இன்னல்களையும் விரிவாய்
பட்டியலிட்டு விளக்கினீர்கள்.
தக்க தருணத்தில் ஞாபகமூட்டி, சிந்திக்கத் தூண்டிய
நல்ல கட்டுரை!

vanathy சொன்னது…

உண்மைதான். சில பெண்கள் கர்ப்பமானால் ஏதோ உலகில் யாருக்கும் கிடைக்காத ஏதோஒன்று அவர்களுக்கு நிகழ்தாப்போல பண்ணும் அலப்பறை தாங்க முடியாது. சில ஜென்மங்கள் சமையல் அறைப்பக்கமே போகாதுங்க.
நல்லா இருக்கு எல்லா கருத்துக்களும்.

ஆமினா சொன்னது…

நம் வாழ்க்கை முறை மாறியதே பலவற்றிற்கும் காரணம்....

ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்குது சகோ

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

தங்கள் மீது சலாம் உண்டாவதாக.

அனைத்தும் நிதர்சனமான உண்மைகள்.
சிறந்தது என்று நினைத்துக்கொண்டு நம்மை நாமே தேவையின்றி பொறியில் சிக்க வைத்துக்கொண்டோம். மீளும் வழி...? சுலபமாய் சொல்லிவிட்டீர்கள்...
//முடியாது என்பது, நமக்கு நாமே சொல்லி கொள்வது.
முடியும் என்பது, நமக்கு நாமே வகுத்து கொள்வது.//-என்று அழுத்தந்திருத்தமாய்.

இந்த நாக்கு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நாம் புரோட்டின், கார்போஹைட்ரடே, ஃபாட், விட்டமின், மிநெரல்ஸ் என்று தினம் மூன்றுவேளை கலோரி கணக்கிட்டு விழுங்கிக்கொண்டு இருந்திருப்போம்... கைக்கு வாய்க்கு வேலை-மெல்லும் சிரமம் எல்லாமே மிச்சம்... சாப்பிடும் நேரம் மிச்சம்... டாய்லட்- வாரத்துக்கு ஒருமுறை போனால் கூட போதும்... கால்கிலோ மாத்திரை சாப்பிட்டிருப்போமா?

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், பழமையை மறந்தால், நம் இளமையை மறந்து விட வேண்டிய நிலை ஏற்படும். கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

vanathy கூறியது...

வாங்க சகோதரி, அவர் அவர்கள் செய்யும் செயல், அவர்களையே பாதிக்கின்றது. உணர்வார்களா? கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஆமினா கூறியது...

வாங்க சகோதரி, இன்றைக்கு அனைவரும் சிந்திக்க வேண்டிய சூழ்நிலை. கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

முஹம்மத் ஆஷிக் கூறியது...

அலைக்கும் சலாம், வாங்க சகோ. சரியா சொன்னிர்கள் , காலம் அந்த நிலையை எதிர் நோக்கி சென்று கொண்டு உள்ளது . கருத்துக்கு மிக்க நன்றி.

goma சொன்னது…

உண்மைதான்.நாம் பாதை மாறி நடக்கத்தொடங்கி எங்கோ வந்து விட்டோம்.வந்த பின் இழப்புகள் தரும் வெற்றிடம் இடிக்கின்றன, திரும்பும் வழி தெரிந்தும் திக்கு முக்காடி நிற்கிறோம்.
சிந்தித்துத் துணிந்து செயல் பட்டால்,மார்க்கம் தெரியும்

ஸாதிகா சொன்னது…

அம்மியில் மசாலா அரைத்துக்கொண்டு,ஆட்டுரலில் மாவாட்டிக்கொண்டு,கப்பியில் நீர் இரைத்து தண்ணீர் எடுத்துக்கொண்டு,கும்முட்டி அடுப்பை ஊதி ஊதி கண்களில் நீர் வடிய சமைத்துக்கொண்டு இப்பொழுதும் இருந்தோமானால் இப்பொழுது இருக்கும் இத்தனை பெண் பதிவர்கள் பதிவுலகத்திற்கு கிடைத்து இருக்க மாட்டார்கள்தானே?

புல்லாங்குழல் சொன்னது…

அருமையான சிந்தனைகள். வளர்ச்சி என்ற பெயரில் வெகு தூரம் தாண்டி வந்து விட்டோம் ஆனாலும் முடிந்த வரை பின்பற்ற முயலுவது நல்லது தான்.

தூயவனின் அடிமை சொன்னது…

goma கூறியது...

வாங்க சகோதரி, நிச்சயமாக சிந்தித்து செயல்பட்டால் நாம் நோய் இன்றி வாழலாம். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஸாதிகா கூறியது...

வாங்க சகோதரி, ரொம்ப வருத்தமாக கருத்து போட்டு இருக்கிங்க, ஏன் நெகடிவ் ஆக சிந்திக்கணும் கொஞ்சம் பாசிடிவாக சிந்திக்கலாமே.

தூயவனின் அடிமை சொன்னது…

ஒ.நூருல் அமீன் கூறியது...

வாங்க சார், நம்மை விடுங்க சார் வரும் தலைமுறையை உஷார் படுத்தலாமே. கருத்து மிக்க நன்றி.

Asiya Omar சொன்னது…

பழமையா புதுமையா என்றால் புதுமையில் பழமை தான் என் கட்சி.