கால அட்டவணை

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

சிந்திக்க சில துளிகள்


என் அருமை தமிழ் சகோதர்களே


நாம் ஒவ்வொன்றும் செய்வதற்கு முன் நம்மை நாமே சில கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டும்.


1 . நாம் செய்யும் இந்த செயல், யாரையும் எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்துமா?


2 . நம் வாயில் இருந்து வரும் சொற்கள் யார்மனதையும் புண்படுத்துமா?


3 . நாம் கோபப் படும் நேரங்களில் செய்யும் சில செயல்கள்,மற்றவர்களை பாதிக்குமா?


4 . நாம் செய்யும் சில தவறுகள், தன்னை மட்டும் பாதிக்குமா அல்லது தன்னை சார்ந்தவர்களையும் பாதிக்குமா?


5 . நம் சுயநலத்துடன் செய்யும் செயல்கள் பிறரை எவ்வாறு பாதிக்கும்?


ஒவ்வொரு மனிதனும் தன்னைதானே கேள்விகள் கேட்டுக்கொண்டால், பெரும்பான்மையான தவறுகள் நடப்பது தடுக்க படுகிறது.

சனி, 24 ஏப்ரல், 2010

அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே?

பிணிக்கு மருத்துவமணை எதற்கு? சமயலறை இருக்கவே இருக்கு !!அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே? சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதோ? தொண்டைப் புண்ணுக்கு, நகச்சுற்றுக்கு, மூக்கடைப்பு, இரத்தக் கட்டு, கபத்துக்கும், வாதத்துக்கும், புண், சிரங்கு, வேனில் கட்டிக்கு, குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு,குடல் பிணிகள், பூச்சித் தொல்லை, கண் உஷ்ணத்தினால் எரிச்சல், புற்றுநோய் வராமல் தடுக்கும்அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே? சொல்லுகிறேன் கேட்டுக்கங்க. கபத்துக்கும், வாதத்துக்கும் இது ரொம்ப ரொம்ப நல்லதுங்க.பையன் விளையாடும்போது அடிபட்டுட்டான். இரத்தக் கட்டு வேற. என்ன செய்யலாம்? மஞ்சளை அரைத்துப் போடுங்க. இரண்டு அல்லது மூன்று முறை போட்டதுமே குணம் தெரியுமே? புண், சிரங்கு, வேனில் கட்டிக்கு, மஞ்சளோட கொஞ்சம் வேப்பிலையும் சேர்த்து, நீர்விட்டு மைபோல் குழைய அரைத்துப் போட்டுவர விரைவில் ஆறிவிடும். பழுத்தும் உடையாத வேனில் கட்டியை உடையவைக்க மஞ்சளையும், கார சோப்பையும் (துணிக்குப் போடும் சோப்பு) இழைத்துப் போட்டால் உடைந்து விடும்.குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு மஞ்சள் கைகண்ட மருந்து. வெந்நீரில் சிறிது பெருங்காயம், மஞ்சள் தூள் கலந்து பருகக் கொடுத்தால் இருமல் நின்றுவிடும். மூக்கடைப்பு ஏற்பட்டால் மஞ்சளைச் சுட்டு அந்தப் புகையை முகர்ந்தால் சரியாகி விடும். விரளி மஞ்சள் தூளை நல்ல எண்ணெயில் இட்டுக் காய்ச்சவும். இதைத் தேய்த்துக் குளித்தால், மூக்கில் நீர்வடிவது நின்று விடும்.வயிற்றில் இருக்கும் கிருமிகளைப் போக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. பச்சை மஞ்சளை அரைத்து சில நாட்கள் வெறும் வயிற்றில் காலை சாப்பிட்டு வந்தால் குடல் பிணிகள் தீரும். பூச்சித் தொல்லை நீங்கும்.தொண்டைப் புண்ணுக்கு மஞ்சள் தூளை பாலில் கலந்து சாப்பிட்டு வர, விரைவில் குணமாகும்.சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதோ? கவலைப் படாதீங்க, காய்ந்த மஞ்சள், வெல்லம் இரண்டையும் சமமா எடுத்துக்குங்க. அரிசி களைந்த நீர்விட்டு அரைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால், சீறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரில் வெளியேறி விடும்.நகச்சுற்றுக்கு மஞ்சள் நல்ல மருந்து. சிறிது மஞ்சள்பொடி, சுண்ணாம்பு இரண்டையும் குழைத்துப் போட்டு வந்தால் விரைவில் குணம் தெரியுமே. கண் உஷ்ணத்தினால் எரிச்சல் உண்டாகி அவதிப்பட்டால் மஞ்சள் கஷாயம் போட்டு, ஆறிய பின் அதனால் கண்களைக் கழுவி வர வேண்டும். மஞ்சள் நீரில் நனைத்த துணியால் கண்களை ஒற்றி எடுத்தாலும் நல்லது. உஷ்ணம் மற்றும் கண் சிவப்பும் கூட மாறி குணமாகி விடும்.மஞ்சள், மிளகு இரண்டையும் சம அளவு எடுத்து விழுதாக அரைக்க வேண்டும். இந்த விழுதை மோரில் கலக்கி இளம் பெண்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்க் காலங்களில் வரும் வயிற்று உபாதை, தலைவலி எல்லாம் காணாமற் போய் விடும்.சமையலில் மஞ்சள் எவ்வளவுக்கு எவ்வளவு சேர்க்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டென்றால், இதன் மகிமை சொல்லவும் இயலுமோ?அடிபட்ட இடத்தில் இரத்தக்கட்டுடன், வீக்கமாய் இருப்பின், அரிசிமாவு, மஞ்சள், விளக்கெண்ணெய் கலந்து இரும்புக் கரண்டியிலிட்டுக் கிண்டினால் திரண்டு வரும். சூட்டுடனே, மெல்லிய துணியில் அதனை வைத்து, முடிச்சிட்டு, ஒத்தடம் கொடுத்தால், வீக்கம் குறைந்து, இரத்தக் கட்டும் குறைந்து விடும். வலிக்கு இதமாக இருக்கும்.இருமல் தொடர்ந்து தொல்லை செய்கிறதா? கவலை வேண்டாம். மஞ்சள் தூளை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் குணம் ஆகிவிடும்.தோல்நோய்கள் அண்டாது.இப்போது ஒரு அழகுசாதனக் குறிப்பு சொல்லட்டுமா?மஞ்சள், வேப்பம்பூ, வெள்ளரிக்காய் மூன் றையும் அரைத்து உட லில் பூசிக் குளித்து வந்தால் நாளடைவில் சருமம் நல்லநிறம் பெறும். அதுமட்டுமின்றி இரவு தூங்கப் போவதற்கு முன்னால் காய்ச்சிய பசும்பாலில், தேன், மஞ்சள் பொடி, சிறிது குங்குமப்பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடம்பும், முகமும் பளபள என்றாகி விடுமே!அட எங்கே போறீங்க? சமையலறையில் மஞ்சள் இருக்கான்னு பார்க்கக் கிளம்பிட்டீங்களா?தனியா தனியான்னு ஒரு சாமான். அட அதுதாங்க கொத்துமல்லி விதை. அது இல்லாம சமையலா? சரிதான் சமையலுக்கு மட்டுமா அது பயன்படுது? இதோ இப்ப பார்க்கலாமா அது இன்னும் எதுக்கெல்லாம் பயன்படுதுங்கிறத?காலைல படுக்கைய விட்டு எழுந்ததும் இலேசாய்த் தலை சுத்துது. நெற்றிப்பொட்டு இரண்டும் விண் விண்ணுனு தெறிக்குது. பித்தமா இருக்குமோ? வாந்தி வேற வரமாதிரி இருக்கா? கவலையே படாதீங்க! ஒரு டேபிள் ஸ்பூன் தனியா, சிறு இஞ்சித் துண்டு, கிஸ்மிஸ் (அதுதாங்க உலர்ந்த திராட்சை) பழம் ஐந்து எல்லாத்தையும் அம்மியில வெந்நீர் விட்டு அரைக்கணும். பிறகு வடிகட்டி, தேன் கலந்து அரை டம்ளர் குடிங்க. புத்துணர்ச்சியோட வேலைகளைப் பார்க்கத் துவங்குவீங்களே. இதை `மல்லி சொரஸம்' அப்படீன்னு சொல்வாங்க. இது அந்தக் காலத்துல பெரியவங்க கையாண்ட முறை.உஷ்ணத்தால் சில பேருக்கு பேதியாகும். கடுப்பா இருக்கும். ஏன் எரிச்சல் கூட ஏற்படும். இதுக்கு மருந்து இதோ. தனியாவைச் சிறிது எடுத்து வாணலியில் வறுத்து தூள் செய்துக்கணும். அதோட சமஅளவு சர்க்கரை கலந்து 1 ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு, கொஞ்சம் நீர் சேர்த்து சாப்பிடவும். இப்படி 3 வேளை சாப்பிட்டா பேதியும் குணமாகும். வயிற்றுவலி, எரிச்சல் எல்லாம் நீங்கி விடும்.சுக்கு மல்லி காபி. இப்பவெல்லாம் இது ரொம்பப் பேசப்படற ஒரு பானம். சுக்கைப் பொடி செய்துக்கவேணும். தனியாவை லேசா வறுத்துப் பொடி செய்து சமஅளவு இரண்டையும் கலந்து, இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பொடியோட ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைங்க. பிறகு இறக்கி வடிகட்டி பால் சேர்த்து, வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக் குடிச்சா, ஆஹா என்ன சுவை! உடம்பிற்கும் ரொம்ப நல்லது. தாகம், நாவறட்சி தீரும். உடம்பு சூட்டுக்கு, அதாவது உஷ்ண உடல்வாகு கொண்டவங்க, வெறும் தனியா கஷாயம், பால், சிறிது சீனி சேர்த்து அருந்தலாம்.

நன்றி:வாஞ்சூர் வாஞ்சூர்



Blood drive in Riyadh

By MD RASOOLDEEN ARAB NEWS
Published: Apr 23, 2010 02:06 Updated: Apr 23, 2010 02:06
RIYADH: The Riyadh chapter of Tamil Nadu Thowheed Jamaath (TNTJ), a social service organization from the southern Indian state of Tamil Nadu, will conduct on Friday a blood donation drive at King Fahd Medical City (KFMC). The drive will take place between 10:30 a.m. and 5 p.m.
TNTJ is comprised of a group of Tamil-speaking youths whose aim is to serve the people. This is the eighth such blood drive organized by the group. In the past, blood donated in Riyadh was sent to Makkah and Madinah for Haj pilgrims. The group has also collected blood in August for Indian expatriates to honor their country’s Independence Day.
The drive is open to all donors who pass a health screening. Last year, 300 people donated blood during the campaign. Lunch has been arranged for the blood donors, the spokesman said.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

மருத்துவக் குறிப்புகள்

1) பொன்மேனி தரும் குப்பைமேனி:
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு:
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி:
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை:
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு:
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு:
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி:
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்:
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்:
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்:
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு:
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி:
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி:
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு:
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு:
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு:
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல:
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு:
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு:
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்:
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை:
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர:
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை:
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்:
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக:
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்:
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்:
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு:
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ:
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி:
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர:
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு:
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு:
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு:
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க:
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர:
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு:
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்:
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ:
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை:
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது:
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்:
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர:
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர:
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர:
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு:
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு:
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு:
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய:
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு:
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற:
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க:
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய:
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு:
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக:
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு:மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக:
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக:
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க:
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு:
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு:
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு:
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர:
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும்:
நசியம்குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க:
சூரணம்கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக:
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு:ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக:
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி:
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய:
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய:
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய:
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு:
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க:
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு:
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக:
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு:
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர:
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு:
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு:
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக:
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக:
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக:
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக:
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய:
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட:
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க:
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய:
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய:
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு:
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க:
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
93) நீரிழிவு நீங்க:
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய:
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க:
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்:
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல:
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.
நன்றி :தமிழ் மருத்துவம்.ப்லொக்ச்பொட்