கால அட்டவணை

சனி, 29 மே, 2010

3ஜி சேவை: போலீஸ் எச்சரிக்கை !‏

உங்கள் தொலைபேசியில் 3ஜி சேவையை ஏற்படுத்துகிறோம் என தொலைபேசி அழைப்பு வந்தால் அதனை அப்படியே நம்பிவிடாமல் இருக்குமாறு பொது மக்களை மாநகரப் போலீஸôர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


குற்றச் செயல்களை கட்டுப்படுத்த போலீஸôர் பல்வேறு புதிய புதிய உத்திகளை கண்டுபிடித்தாலும், குற்றங்களை இழைப்போரும் புதிய உத்திகளை கையாள தவறுவதில்லை.

இந்த நிலையில் தொலைபேசி சேவையில் தற்போது 3ஜி சேவை பிரபலமடைந்து வருகிறது. பெரும்பாலான தொலைபேசி சேவை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவையை அளிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

     எனினும், செல்போன் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் எத்தகைய போன்களில் 3ஜி சேவை அளிக்க முடியும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களாக உள்ளனர். இதனை பயன்படுத்தி சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

     முதலில் 3ஜி சேவை இல்லாத எண்களை கண்டுபிடித்து அவர்களது, வீட்டு தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களையும் சிலர் சேகரிக்கின்றனர்.

     இதன் பின், அந்தக் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு இந்த நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என தங்களை பொய்யாக அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் உங்களது தொலைபேசியில் 3 ஜி சேவை அப்லோடு செய்யப்பட உள்ளது, இதற்கான பணிகளை மேற்கொள்ள உதவியாக உங்கள் செல்போனை 2 மணி நேரத்துக்கு சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் படி சொல்கின்றனர்.

     இதன்படி சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட சமயத்தில் அந்த நபரின் வீட்டு எண்ணுக்கு தொடர்பு கொண்டு செல்போனுக்கு சொந்தக்காரரான நபரின் பெயரை குறிப்பிட்டு அவரை கடத்தி வைத்திருக்கிறோம். குறிப்பிட்டத் தொகையை கொடுத்தால் அவரை விட்டுவிடுகிறோம் என்கின்றனர்.

     இதில் பணம் கிடைக்க தாமதமானால், சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட செல்போனின் சொந்தக்காரரை அவரது மாற்று எண் மூலம் தொடர்பு கொண்டு மேலும் சில மணி நேரங்களுக்கு செல்போனை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றனர்.

     இந்தக் கால அவகாசத்துக்குள் முடிந்தவரை முயற்சித்து பணத்தை பறித்து விடுகின்றனர். அவ்வாறு முடியாத பட்சத்தில் எவ்வித தகவலும் இன்றி இந்த நபர்கள் காணாமல் போகிறார்கள்.

     சென்னையில் இது போன்ற மோசடிகள் நடக்கத் தொடங்கியுள்ளதாக போலீஸôருக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், இது தொடர்பாக புகார்கள் எதுவும் இதுவரை தங்களுக்கு வரவில்லை என்று மாநகரப் போலீஸ் கமிஷனர் தி. ராஜேந்திரன் தெரிவித்தார்.

     எனவே, தங்களது தொலைபேசி எண்ணுக்கு 3ஜி சேவை குறித்து அழைப்புகள் வரும் போது பொதுமக்கள் அவற்றை அப்படியே நம்பிவிடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

செவ்வாய், 25 மே, 2010

தாகத்தை போக்கும் நன்னாரி வேர்

     நல்ல மண் குடத்தை எடுத்துகொள்ளுங்கள் ,அவற்றின் கீழ் ஆற்று மணலை கொட்டி சாதாரண தண்ணிரை நிரப்பி ஒரு துண்டு நன்னாரி வேறை ,தண்ணிரில் போடுங்கள் . சிறிது நேரம் கழித்து குடித்து பாருங்கள். நல்லா இருந்தால் வாழ்த்துங்கள் .இல்லையென்றல் பூச்சிகொல்லி பானம் அது தாங்க (பெப்சி கோககோல )குடியுங்கள். யார் யாரோ சொன்னாக கேக்கலை ,நான் சொல்லி கேட்க்கவா போறீங்க .

திங்கள், 24 மே, 2010

இந்த புலவரை உங்களுக்கு தெரியுமா?.

‘குலாம் காதிறு நாவலர்’

நாவலருக்கு பாவலரின் பாராட்டு

1896 – ஆம் ஆண்டு நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்களின் “ஆரிபு நாயகம்” என்ற நூல் யாழ்ப்பாணத்தில் ‘நூல் வெளியீடு’ செய்யப்பட்டது. அந்நூலுக்கு வாழ்த்துரையை இலங்கை பொன்னம்பலம் பிள்ளை அவர்கள் வழங்கியிருந்தார்.


அந்த வாழ்த்துரை இதுதான் :

நாகூ ரென்னும் நகர வாசன்

பாகூ ருஞ்சொல் பயின்றிடு நேசன்

பற்பல விதமாப் பகர்பிர பந்தம்

பற்பல புராணம் பழுதறச் செய்தோன்

ஆசு மதுரமும் அருஞ்சித் திரமும்

மாசு மதுரமாய் அமைந்திட வல்லோன்

தொல்காப் பியமுதல் சூழிலக் கணமும்

தொல்காப் பியமும் சூழ்ந்தினி தாய்ந்தோன்

பாவலர்க் கினிய பகர்குலாம் காதிறு

நாவல னென்னும் நற்பெயர் கொண்டோன்

குலாம் காதிறு நாவலர்


நாவலர் நூல்கள் நாட்டுடமை

     புலமைத்திரு குலாம் காதிறு நாவலர் அவர்கள் நாகூரில் 1833 -ல் பிறந்தார். தந்தையார் பெயர் வாப்பு ராவுத்தர். நாவலரவர்கள் தமிழ், ஆங்கிலம், அரபு மொழிகளில் அறிவு நிரம்பியவர். இயற்றமிழ் ஆசிரியர் வே.நாராயணசாமி பிள்ளையவர்களிடமும், பின்னர் புலவர் ஏறு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடமும் தமிழ் கற்றார். மதுரையில் தமிழ்த்திரு பாண்டித்துரை தேவர் தமிழ்ச்சங்கம் அமைத்தபோது இவர் பணியையும் அவர் பெற்றார். மதுரை தமிழ்ச்சங்கப் புலவராற்றுப்படை என்னும் நூலை எழுதி சங்கத்திலேயே அரங்கேற்றினார். மலேயா, இலங்கை சென்று தமிழும் இஸ்லாமும் பரப்பினார். யாழ்பாணத்திலும் இவர்தம் நூலொன்று அரங்கேறியது. நாகையில் சிறந்த வணிகராக இருந்த மதுரைப்பிள்ளை கூட்டிய பெரும்மன்றத்தில் ‘நாவலர்’ பட்டம் வழங்கப் பெற்றார். பெரும்புலவர் சோழவந்தான் அரசஞ்சண்முகனார் இவர்தம் இலக்கண, இலக்கியப் புலமையைப் போற்றி எழுதினார். ‘புலவர் குலமணி’ என்று பாராட்டப் பெற்றார்.

     இவர் எழுதிய நூல்கள் 24. அவற்றுள் ‘பொருந்த இலக்கணம்’ முதலிய இலக்கண நூல்களும், இலக்கியங்களும், உரைகளும், உரை நடை ஆக்க நூல்களும், சமய நூல்களாகச் சிற்றிலக்கியங்களும் உள்ளன.

     ‘புலவராற்றுப்படை’ என்னும் அவர்தம் நூல் சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் ஒரு பாட்டு போன்ற சிறப்புடையது. இவர் எழுதிய ‘அரபுத்-தமிழ் அகராதி’ குறில்லத்தக்க தமிழ்ப்பணியாகும்.

     நாகூர் முத்துப் புலவர் இயல்பான ஓட்டத்தில் செய்யுள் இயற்றும் புலமையாளர். தமிழ்த்திரு பாண்டித்துரை தேவர்பால் பேரன்பு பூண்டு அவரால் போற்றப் பெற்றவர். அவர் மேல் 51 பாடல்களும் பல தனிப் பாடல்களும் பாடியுள்ளார்.

கோவை இளஞ்சேரன் (‘நாகப்பட்டினம்’ எனும் வரலாற்று நூலிலிருந்து)

சனி, 22 மே, 2010

இரங்கல்

     என் தாயகத்தை சோகத்திற்கு உள்ளாகிய விமான விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றேன்

புதன், 19 மே, 2010

சிசேரியன் ஏன்?

     எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.

   
      ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம். ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம். இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்டபின்புதான் கவனிக்க முடியும் - கணிக்க முடியும் - அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.

     எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.
 
     பெரும்பாலோர் “முதல் தடவை சிசேரியன் செய்ததால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள்.

     முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாராலும் கணிக்க முடியாது. எனவே, முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும். பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியதாகிறது. ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

     எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.

     சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது, 10, 15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.

ஞாயிறு, 16 மே, 2010

குழந்தைக்கு சளி தொல்லையா?

      குழந்தைகளுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்சினை என்றால் அது சளி தொல்லைதான். இதனை எளிய நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்தலாம்.


    
     இந்த அவதியில் இருந்து விடுபடுவதற்கு, வீட்டில் சமையலுக்கு உபயோகப்படும் பொருட்களே போதுமானது.


     வெள்ளைப் பூண்டின் சில பற்களை பாலில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர், பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.


     இரண்டு மூன்று நாட்களுக்கு இது போன்று செய்தால், ஜலதோஷம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


     இதேபோல் மற்றொரு குறிப்பும் உள்ளது. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து உணவோடு கலந்து கொடுத்தாலும் ஜலதோஷம் நீங்கிவிடும்.

வெள்ளி, 14 மே, 2010

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

           அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.


      சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

       ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.
      ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.
    
1. சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது?

     நான் படித்த ஒரு கட்டுரையில் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75% குறையும் வரை பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உணர மாட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா?

     இது முழுக்க உண்மை. சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 70-80மூ அவற்றின் வேலைத் திறனை இழக்கும் வரை நம் அடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. அதனால் ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து மிகவும் கடினமாக உள்ளது.

2. என்றாலும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன என்று தெரிந்தால் அதை வைத்து சிலரேனும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை அறிந்து பயன் பெற உதவக் கூடுமல்லவா?

     திடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால் முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில் இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இரவில்) சிறுநீர் கழித்தல்.

     உண்மையில் சொல்லப் போனால் தங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு. இவைகளில் ஏதேனும் கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும்.

3. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமா?

     அப்படியல்ல. அது வரை சரியான அளவு அதாவது பகலில் 3-4 முறை இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு முறை சிறுநீர் கழிப்பு என்று இருந்தவர்கள் திடீரென அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முதல் காரணம் சிறுநீரக பையில் கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை அழற்சி (புண்) பெண்களுக்கு ஆண்களை விட இது இன்னும் அதிகம். இது எளிதில் குணபடுத்தக் கூடிய ஒரு சிறிய தொந்தரவு தான்.

     ஆண்களுக்கு முக்கியமாக வயதானவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி (மூத்திரக்காய்) வீக்கம் சிறுநீர் அடைப்பு காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு வரலாம். எதையும் நீங்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் இதை தெளிவு செய்து கொள்ள வேண்டும்.

     அதே போல அது வரை நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருந்த ஒருவர் காரணம் எதுவும் இல்லாமல் அடிக்கடி சோர்ந்து போவது, எளிதில் களைத்து விடுவது, கவனக் குறைவு, அதீத ஞாபக மறதி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அதற்கு சிறுநீரக செயலிழப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து முன்பே சொன்னபடி சில எளிய பரிசோதனைகள் மூலம் அதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

     இதே போல தோல் உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச்சல், பசி இல்லாமல் இருப்பது, சிறுநீரகங்கள் உள்ள இருபுற விலாஎலும்புகளின் கீழ் வலி. கணுக்கால்களுக்கு கீழ் வீக்கம் (ஆரம்பத்தில்) போன்ற அறிகுறிகள் இருந்தாலும் சிறுநீரகங்களை பரிசோதித்தல் தவறில்லை. மேலும் சிறுவயதில் (35 வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிறுநீரகங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் (எந்த வயதினரும்), அடிக்கடி சிறுநீரில் கிருமித் தாக்குதல் வருபவர்கள், சிறுநீரக கற்கள் வந்தவர்கள், குடும்பத்தில் வேறு யாருக்கேனும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் சிறுநீர்கங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் இயலும்.

4. இந்த ஆரம்ப பரிசோதனைகளத் தவிர வேறு பரிசோதனைகளும் வேண்டி வருமா?

     மேற்குறிப்பிட்ட எளிய பரிசோதனைகளில் கோளாறு இருப்பதாக தெரிய வந்தால் அதை மேலும் உறுதி செய்த கொள்ளவும் சிறுநீரக பாதிப்பின் தன்மை. கடுமை, சில சமயங்களில் முன்னேறிய சிறுநீரக பாதிப்பினால் வேறு உறுப்புக்கள் (முக்கியமாக இதயம்) பாதிப்பு என்பதை அறிய பல்வேறு சோதனைகள் தேவைப்படலாம்.

     (சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் பற்றி சிறுநீரகங்களுக்கான பரிசோதனைகள் என்ற கையேட்டில் விரிவாகக் காணலாம்)

5. சரி இந்த பரிசோதனைகளில் சிறுநீரக பாதிப்பூஃ- செயலிழப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இனி என்ன நடக்கும்.

     வெறும் சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு (சிறுநீரக ஸ்கான் செய்யும் போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்களுக்கு (சிறுநீரக நுண்தமனி அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற ஒரு பரிசோதனை தேவைப்படலாம்.

     இந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து சில மருந்துகளை குறிப்பிட்ட காலம்வரை மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்வதன் மூலம் சிலவகை சிறுநீரக வியாதிகளை முழுவதும் குணப்படுத்தவோ அல்லது நன்கு கட்டுப்படுத்தவோ முடியலாம். சிறுநீரக தாரையில் கிருமி தாக்குதல், சிறுநீரக பாதையில் கற்கள் உள்ளவர்கள் அதற்குரிய வைத்தியத்திற்கு பின்னரும் இவை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்வதால் இத்தொந்தரவுகள் மீண்டும் மீண்டும் வராமலும் அதனால் சிறுநீரகங்களின் செயல்திறன் பாதிக்கப்படாமலும் காப்பாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் சில பிரத்யேக மருந்துகளின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெருமளவு குணப்படுத்தலாம்.

6. முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் செய்ய வேண்யது என்ன?

     சிறுநீரக பாதிப்பு/செயலிழப்பு உள்ளவர்களின் சிறுநீரக பாதிப்பை பல்வேறு கட்டங்களாக பிரிக்கலாம்.

1.ஆரம்ப கட்டம் (நிலை-1) சிறுநீரக பாதிப்பு மாத்திரம் (சிறுநீரக செயலிழப்பு இல்லை) உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை, கால, உடல் வீக்கம் ஆகிய தொந்தரவுகள் இருக்கலாம்.

2. லேசான சிறுநீரக செயலிழப்பு (நிலை-2): இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு-2. மி.கி. புள்ளிக்கு கீழே). இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, ஆகார, மாற்றம், சிறுநீரக பாதிப்பு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கும் சில மருந்துகளை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் மருந்துகள், காரணங்கள் (உதாரணமாக வலி மருந்துகள், நாட்டு மருந்துகள்) ஆகியவற்றை தவிர்த்தல் ஆகிய செயல்களின் மூலம் சிறுநீரக பாதிப்பை பெருமளவு சரிசெய்யலாம் அல்லது மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தி வைக்கலாம்.

3. அதிக சிறுநீரக செயலிழப்பு (நிலை-3)- இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எலும்புகளுக்கான மருந்துகள் இவைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 6 மி.கிக்கு மேல் ஆகும் போது அடுத்த கட்ட முற்றிய சிறுநீரக செயலிழப்பில் மேற்கொள்ள சிகிச்சையான டயாலிசிஸ் சிகிச்சைக்கு தேவையான சில முன்னேற்பாடுக்களை செய்து கொள்ள வேண்டும். அவையாவன தொடர் டயாலிசிஸ் சிகிச்சைக்கு இரத்த குழாய்களிலிருந்து மீண்டும் மீண்டும் இரத்தம் எடுப்பதை எளிதாகும். இரத்த நாள இணைப்பு அறுவை சிகிச்சை (@ பிஸ்டுலா ஆபரேஷன்) செய்து கொள்ள வேண்டும். அதை சரியான சமயத்தில் செய்து கொள்ளுவதால் பின்வரும் காலத்தில் பலவித செலவுகளை வெகுவாக குறைக்கலாம். டயாலிசிஸ் சிகிச்சையில் மிக எளிதாகி விடுகின்றது. ஈரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ்-டீ என்ற வைரஸ் கிருமியிலிருந்து நம்மை பாதுகாக்கும் தடுப்பூசியையும் மருத்துகள் உங்களுக்கு பரிந்துரைப்பார் இதனால் டயாலிசிஸ் சிகிச்சையின் போது இந்த கிருமி வேறு யாரிடமிருந்தும் நமக்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

4. முற்றிலும் சிறுநீரக செயலிழப்பு (நிலை-4) இந்த கட்டத்தில் சிறுநீரகங்களின் மொத்த செயல் திறன் 10 சதவிகிதத்திற்கும் கீழே வந்து விடுகின்றது அப்போது இரத்தத்தில் கிரியேட்டின் அளவு 6-7 மி.கி க்கு. மேலும் பெரும்பாலும் இரத்த அளவும் மிகவும் குறைந்து விடும். அப்போது நமது உடலின் பல்வேறு உறுப்புக்களும் பாதிக்கப்பட்டு பல்வேறு வித உபாதைகள் வரலாம். இந்த சமயத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் மட்டுமே ஒருவர் தொடர்ந்து ஆரோக்யத்துடன் உயிர் வாழ முடியும். எனவே முன்பு கூறியிருந்தது போல இதற்கான ஏற்பாடுகளை தகுந்த நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும். அதற்குரிய காலம் வந்தவுடன் டயாலிசிஸ் சிகிச்சையை தாமதமின்றி தொடங்கி முறையாக செய்து வந்தால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த பின்னரும் கூட தொடர்ந்து நல்ல ஆரோக்யத்துடன் வாழ்வை தொடர முடியும். சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ள தகுதி உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு பதில் அந்த சிகிச்சையை முயற்சி செய்யலாம்

வியாழன், 13 மே, 2010

தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது

கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.

சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!

தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..!

அதனால் தான் என்னவோ பழங்கால தமிழ் தாய்மார் பாலூட்டும் போதும் நித்திரைக்குச் செல்லும் போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடினரோ..?!

எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அந்த நிலையில் இருந்து விலகுவது சிறப்பு என்பதை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..!

பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புதன், 5 மே, 2010

நரம்பு முடிச்சி நோய் என்றால் என்ன?

      பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால் களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அட இதுதான் வெரிகோஸ் வெயின் நோயா? இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா? உண்மைதான். இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இது அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல.







நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்குரி யது அல்ல என்பதுதான் உண்மை. தலைவலி கூட தலை போகும் பிரச்சினையாக மாறலாம். நோய் என்றால் நோய்தான். அவற்றால் ஏற்படும் விளைவுகளிலும், வேதனைகளிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். எப்படி இருந்தாலும், எந்த நோயாக இருந் தாலும் அதனைக் குணப்படுத்த முயல வேண்டும் என்பதே மருத்துவத்தின் அடிப்ப டைக் கோட்பாடாகும். அது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.






கை, கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் களுக்கு வெயின் என்றுபெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்திற்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறோம். வெரிகோஸ் வெயின் நோய் எதனால் வருகிறது ? மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித் தொங்கிய படி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின் பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது. மலச்சிக்கல் ஏற்படும் போது, இரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படு கின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. ஆக, மலச்சிக்கல் தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப் படுகிறது. அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது, ஒரே இடத்தில் கால்களை தொங்க விட்ட படியே அசைவற்று உட்கார்ந்திருப்பது போன்றவற்றாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற் கான காரணமாகும்.






இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதங்களில் இருந்து இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வு கள் இயங்க வேண்டி உள்ளது. அது இயலாமல் போகும் போது, இரத்தம் மீண்டும் கீழ்நோக் கியே செல்லத் தொடங்கும். இதனால், இரத்த நாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத் தும் வீங்கியும் காணப்படும். ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும்கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.






வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கெல் லாம் வர வாய்ப்பு அதிகம்?






அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதிய பராமரிப்பின்மை, அசை வற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண் களுக்கு வரவாய்ப்பு அதிகம். பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும். வயது முதிர்ந்தவர்களுக்கு இரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கால் பகுதிகளில் உள்ள இரத்த நாளங்களில் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களுக்கு 3 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்த நோய் வருகிறது.






அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும். பொதுவாக பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவைசிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களைவிட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.






அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டே வேலை செய்வது, அசைவற்று ஒரே இடத்தில்அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெரிகோஸ் வெயின் நோய்க்கான அறிகுறி கள் என்ன? தோலின் உட்புறத்தில் இரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும். கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல். பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படு தல். பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல். கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத் தல் (இதனை சில சமயங்களில் உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாக கருதிவிடுவது உண்டு)






வெரிகோஸ் வெயின் இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல். வருமுன் தடுக்க ?






இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்துவிட்டால் அதனை அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. மேலும் அதிகரிக் காமல் பார்த்துக்கொள்ளலாம். எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ, நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது நல்லது. தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணி யக் கூடாது. தளர்ந்த ஆடைகளையே அணிய வேண்டும். எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிகிச்சை வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் வெரி கோஸ் வெயின் புதிதாக உருவாவதைத் தடுப் பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும் வேதனைகளைக் குறைக்க முடி யும். அறுவை சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறை கள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாக பயன் கிடைக்காது. ஏனென்றால், மற்றொரு இரத்த நாளத்தின் மூலமாக இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. வெரிகோஸ் வெயின் நோய் வந்தபின்னர் அதனை அகற்றுவது கடினம் என்பதையும், வரும்முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதுமே முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்.






ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள் உட்கொள்வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையான பஞ்சகர்மா சிகிச்சையும் மிகுந்த பலனை அளிக்கின்றன. கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சினை ஆண்களுக்குத்தான் அதிகம் வரும் என்பார்கள். இது பெண்களுக்கும் ஏற்பட வாய்ப்புண்டா? ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் வருவதற்கு வாய்ப்புள்ளது. பெண் களுக்கு சுரக்கும் ஹோர்மோன்கள்தான் இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கு முக்கியக் காரண மாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரையான பெண்களுக்குத்தான் அதிகம் வருகிறது.






கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சினை என்றால் என்ன?






கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்பது, கால்களில் உள்ள நரம்புகள் புடைத்துக் கொள்வதுதான். ஆரோக்கியமான கால்களில் உள்ள நரம்புகள் இருதயத்திலிருந்து செலுத்தப்படும் இரத்தத்தை ஒரே சீராகச் செல்ல அனுமதிக்கும். அதேபோல கால்களி லிருந்து இதயத்திற்கு இரத்த ஓட்டம் சீராக நடைபெற வழி வகுக்கும். இதற்கு கால் நரம்புகளில் உள்ள வால்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை பழுதடைந்தால், நரம்பு களில் அடைப்பு ஏற்பட்டு, அவை கால் களிலேயே தங்கிவிடும். இதனால் கால்கள் பாதிக்கப்படும். அல்லது கடுமையான வலி ஏற்படுத்தும். கால் நரம்பு களில் இருந்து இரத்தம் மீண்டும் இருதயத் திற்கு செல்லாத நிலையில் கால்கள் வீக்கமடை யும்.






இவ்விதம் கால் நரம்புகளில் ரத்தம் தேங்குவதால் நரம்புகள் சுருண்டு கொள்ளும். இதைத்தான் வெரிகோஸ் வெயின் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இவர்களது கால்கள் வீக்கமடைவதுடன், நரம்புகள் சுருண்டு கொண்டிருப்பதையும் காண முடியும். இரத்தம் தேங்கி விடுவதால் நரம்புகள் கருநீல நிறத்தில் காட்சி அளிக்கும். ஆரம்ப நிலை என்றால், சிறிய அளவில் மாறுபட்ட நிறத் திலான கோடுகள் சிலந்தி வலை போன்று காட்சியளிக்கும். பெரும்பாலோர் இது வெறும் தோல் சம்பந் தப்பட்ட பிரச்னை என்று நினைக்கிறார்கள். ஆனால் இது மருத்துவ ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு நோய். நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்சினை ஏற்பட்டால் கடுமையான வலி தோன்றும். சில சமயங்களில் உடலில் மிகுந்த களைப்பு ஏற்படும். இந்நோய் மிகவும் முற்றிய நிலையில் தோலின் நிறமே மாறும். தோலின் மீது கொப்புளங்கள் தோன்றும். கால் களிலும், கணுக்கால்களிலும் கொப்புளங்கள் தோன்றும். கொப்புளங்களிலிருந்து சில சமயம் இரத்தம் வெளியேறும். சில சமயங்களில் இரத்தக் கட்டிகள் நரம்புகளில் ஏற்படக்கூட வாய்ப்புண்டு.






எத்தகைய பெண்களுக்கு கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சினை ஏற்படும்?






உடல் பருமனான பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், அதிலும் குறிப்பாக அதிக குழந்தைகள் பெறும் தாய்மார்களுக்கு இப்பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில பெண்களுக்கு கருவுற்ற காலத்திலேயே கால்களில் நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படும். குழந்தை பிறந்தவுடன் இந்த நரம்புகள் மறைந்துவிடும். ஆனால் குழந்தை பெற்ற பின்னரும் தொடரும். பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு இப்பிரச்னை இருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படாமல் தடுப்பது எப்படி?






இதைத் தடுப்பது மிகவும் கடினமானது. காரணம், மனிதர்கள் கால்களில் தானே நடக்கிறோம்? இருப்பினும் இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள சிலர் முன் கூட்டியே நடவடிக்கை எடுப்பதன் மூலம் அதைத் தடுக்க முடியும். உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத் திருத்தல். நீண்ட நேரம் நின்றபடியே பணிபுரிவதைத் தவிர்ப்பது. நார்ச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உண்பது. கால்களில் எப்போதும் காலுறை அணிவது என இப்பிரச்னை வராமல் தடுக்க முடியும்! கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வா? வேறு மாற்று வழிகள் ஏதேனும் உண்டா? இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு இல்லை. நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. காலுறை அணிதல்: நோய் ஆரம்ப நிலையில் இருப்பின், பிரத்யேகமாக தயாரிக் கப்பட்ட காலுறைகளை அணிந்து இந் நோயைக் குணப்படுத்தலாம்.






மருந்து மூலம் குணப்படுத்துதல்:






மருந்து அளித்து குணப்படுத்தும் நிலையில் சிலருக்கு இருக்கும். அத்தகையோருக்கு மருந்துகளுடன் பிரத்யேக காலுறை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும். இது உரிய பலனை அளிக்கும். இருப்பினும் கால்களில் முதலில் சுருண்ட நரம்புகளை முற்றிலுமாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லவோ, குணப்படுத்தவோ இயலாது. ஊசி மூலம் குணப்படுத்துதல்: இந்த சிகிச்சைக்கு ஸ்கெலரோதெரபி என்று பெயர். ஆனால் இந்த சிகிச்சை நீண்ட காலம் மேற்கொள்ள வேண்டியவை. இத்தகைய சிகிச்சை முறைகளை முழு அளவில் மேற் கொள்ளாவிடில் முழு அளவில் பயன் கிடைக் காது. மேலும் இத்தகைய சிகிச்சை முறைகளில் நரம்புகளில் இரத்தக்கட்டிகள் தோன்றும். சில சமயங்களில் இந்த இரத்தக் கட்டிகள் இருத யத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. அல்லது நுரையீரல் போன்ற பகுதி சிக்கலை ஏற்படுத்தலாம். அறுவை சிகிச்சை: நோயுற்ற காலில் உள்ள பழுதடைந்த நரம்புப் பகுதிகளை வெட்டி யெடுத்து நீக்கும் அறுவை சிகிச்சை முறை மிகவும் சிக்கலானது. மேலும் அறுவை சிகிச் சைக்குப் பிறகு மருந்துகள் சாப்பிட வேண்டி யிருக்கும். மருத்துவமனையில் இரண்டு வாரம் முதல் நான்கு வாரம் வரை தங்க வேண்டி யிருக்கும். லேசர் சிகிச்சை: பழுதடைந்த நரம்புகளில் லேசர் ஃபிளமென்ட் மூலம் அடைப்பது நவீன முறையாகும். இந்த சிகிச்சை முறையிலும் சில பாதக அம்சங்கள் உள்ளன. லேசர் சிகிச்சை யின் போது வெளியாகும் அதிகபட்ச வெப்பம், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத் தக் கூடும். அத்துடன் அருகிலுள்ள திசுக்களை யும் இது சேதப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு.






ரேடியோ அலை சிகிச்சை இப்புதிய முறை பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம், இந்த சிகிச்சை முறையில் வலி மிகக் குறைந்த அளவில் இருக்கும். தவிர, மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறாமல், புற நோயாளிகளைப் போல சிகிச்சை பெற்றாலே போதும். பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் மறத்துப் போவதற்கான ஊசி செலுத்தப்படும். இந்த சிகிச்சை முறையால் ரத்த அடைப்பு ஏற்படுவதில்லை. மேலும் அருகிலுள்ள திசுக்களும் பாதிக்கப்படாது. அதிக வெப்பமும் வெளியேறுவதில்லை. பாதிக்கப்பட்ட நரம்புகள் மூடப்பட்டவுடன், அருகிலுள்ள ஆரோக்கியமான நரம்புகளில் ரத்தம் பாயத் தொடங்கும். இதனால் கால்கள் பழைய நிலைக்குத் திரும்பும்.

சனி, 1 மே, 2010

Good by laptop‏

Amazing Technology from japan.... but can you guess what it is?

Look closely and guess what they could be...


Are they pens with cameras?

Any wild guesses? no clue yet?

Ladies and Gentlemen congratulations!

You 've just seen something that will replace your pc in the near future.

Here is how it works:


In the revolution of miniature computers,Scientists have made great developments with blue tooth Technology...

This is the forth coming computers you can carry within your pockets.



This "pen sort of  Instrument" produces both the monitor as well as the keyboard on any flat surfaces from where you can carry out functions you would normally do on your desktop computer.




Can any one say, "Good-Bye Laptops!"