கால அட்டவணை

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

எதிர்காலம்...?



     உலக்கத்தின் ஒரு பகுதி உணவு இன்றி பசி பட்டினியில் இறந்து வருகிறார்கள். மற்றொரு பகுதி பொருளாதார நெருக்கடியில் சிக்கி
தவித்து வருகிறது. சில பகுதி மக்கள் புரட்சி ஏற்பட்டு வருகிறது.


இதன் முடிவு எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

ஆப்பிரிக்கா கண்டம் :

    இங்கு வசிக்கும் மக்கள் செய்த தவறு என்ன? இவர்கள் கருப்பாக பிறந்தது தவறா? இந்த மக்களின் வாழ்க்கை பசி பட்டினியால்
உயிர் பிரிந்து வருகிறது. மனித உரிமை பற்றி வாய் கிழிய பேசுபவர்கள், இவர்கள் விசயத்தில் மட்டும் ஓர வஞ்சனை காட்டுவது ஏன்?

இவர்கள் கறுப்பினத்தவர்கள் என்ற ஒரே காரணம் தான்.

இவர்கள் நிறத்தால் கருப்பர்கள் என்று பார்க்கும் அனைவரும்.
இவர்களின் மனதால் எந்த நிறம் என்பதை பார்க்க நினைப்பது இல்லை.

அதன் விளைவு இன்று அந்த மக்கள் கடல் கொள்ளையர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள்.

புரட்சி :



     துனிசியா நாட்டில் ஆரம்பித்த மக்கள் புரட்சி , எகிப்து லிபியாவில் முடிந்து, இப்பொழுது ஏமன் மற்றும் சிரியாவில் வேகம் பிடித்து உள்ளது.

இந்த மக்களின் புரட்சிக்கு காரணம் , ஆளும் வர்க்கம் தொடர்ந்து 42 ஆண்டுகள் 32 ஆண்டுகள் என்று பதவியை தக்க வைத்து கொண்டு.
 தன் நாட்டின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த
வகையிலும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலை நம் நாட்டு அரசியல் வாதிகளுக்கும் வராது என்று யாரும் உத்திரவாதம் கொடுக்க முடியாது.

பொருளாதார நெருக்கடி :

இன்று ஐரோப்பா மற்றும் அமெரிக்கா பெரும் பொருளாதார
நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன.

கிரேக்க நாட்டில் மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் .

இத்தாலி நாட்டில் ஏற்பட்ட போராட்டம் பெரும் வன்முறையில்
 முடிந்து உள்ளது.

ஸ்பெயின் நாட்டு மக்களும் இப்பொழுது களத்தில் இறங்கி விட்டார்கள் .

அமெரிக்காவில் போராடும் மக்கள் ,அரசை பார்த்து சில கோரிக்கைகள் வைத்துள்ளார்கள்.

அவையாவன போரில் செலவு செய்த பணத்தை கொண்டுவா என்று கோஷமிடுகிறார்கள்.

வால் ஸ்ட்ரீட் என்கின்ற ஒரு பகுதி , பணக்காரர்கள் வசிக்கும் பகுதி.

அங்கு பதிக்கி வைத்துள்ள பணத்தை வெளியில் கொண்டுவா என்று கூறுகிறார்கள்.

முடிவு :

இந்த நிலைக்கு யார் காரணம்? ஆளும் வர்க்கத்தின் தவறான
முடிவுகளே காரணம்.

நாட்டு மக்களை விட தன் சுயநலமும், போலியான கவுரவமே.

இல்லாதவர்க்கு இருப்பவர்கள் கொடுத்து உதவ வேண்டும் என்கின்ற மனப்பான்மை இல்லா நிலை.

தன் தவறை மறைக்க பிறர் மீது பலி போடுவது.

இன்று உலக வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, 2012 க்கு
பிறகு உலகம் முழவதும் உணவு பற்றா குறை ஏற்படும் என்றும்,
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் என்று
கூறி வருகிறது.

முதலாளி என்கின்ற பண முதலைகளின் தவறான வழிகாட்டுதலை, ஆளும் வர்க்கம் பின்பற்றுவதே காரணம்.

நிச்சயம் இதற்கு ஒரு நாள் முடிவு உண்டு.



வெள்ளி, 21 அக்டோபர், 2011

வேடம்











மனிதா......நீ
உலகை அனுபவிக்க
காலை பகல் மாலை இரவு
என நான்காய்
தினம் பிரிகின்றாய் !

உணவை அருந்த
காலை பகல் இரவு
என மூன்றாய்
தினம் பிரிகின்றாய் !

தொல்லை காட்சியில்
வரும் சீரியலை காண
தினம் நேரம்
ஒதுக்குகின்றாய் !

உன் இடுகைக்கு வரும்
கருத்துரைக்கு மட்டும்
பதில் போட
நேரம் ஒதுக்குகிறாய் !

படைத்த என்னை
வணங்க மட்டும்
உனக்கு
நேரமில்லை !

புதன், 19 அக்டோபர், 2011

சவுதியில் தமிழ்மணம் தடை !!

அஸ்ஸலாமு அலைக்கும்,


அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.

என் அருமை சகோதர்களே ,நம்முடைய மார்க்கம் மன்னிக்க கூடிய மார்க்கம். நாம் மன்னிப்பதால் எந்த வகையிலும் தாழ்ந்து விட மாட்டோம். இன்று தமிழ்மணம் சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

வல்ல இறைவனுக்காக மன்னித்து. அந்த தடையை யார் செய்து இருந்தாலும், மீண்டும் அந்த தளத்தை சவுதி அரேபியாவில் காண வழி செய்யுங்கள் .

மறப்போம்............மன்னிப்போம்.

இப்படிக்கு
இளம் தூயவன்

திங்கள், 17 அக்டோபர், 2011

தமிழ்மணமே மன்னிப்புகேள்

 
 
     தமிழ்மணம் நிர்வாகியின் செயலை கண்டித்து , என் வலைப்பூவை
 இனி தமிழ்மணத்தில் இணைப்பது இல்லை என்று முடிவு செய்து உள்ளேன்.   
 
இப்படிக்கு
இளம் தூயவன்