ஊட்டக்கூடிய இடம் தான் பள்ளி கூடம்.
ஆனால் இந்த பள்ளியில் சேர்ப்பதற்கு நன்கொடை என்ற பெயரிலே சில கையூட்டல்களை பெற்று கொண்டு தான், சேர்ப்பதற்கு அனுமதிக்கிறார்கள். இப்படி ஆரம்பிக்கும் கல்வி நம் பிள்ளைகளை எங்கு கொண்டு போய் நிறுத்தும்?.
இது போன்ற குற்றங்களை சுட்டி காட்டும் நேரத்தில் , சில நல்ல உள்ளங்களையும் அவர்கள் கல்விக்காக ஆற்றி பணிகளையும் சுட்டி காட்ட கடமை பட்டுள்ளோம்.
எனது ஆசிரியரும், பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற கலிபா சாஹிப் B.Sc., B.Ed., அவர்களை பற்றி அவர்களின் உதவி செய்யும் நல்ல எண்ணத்தையும் சிலவற்றை இங்கு கூற ஆசைப்படுகிறேன்.
என்றும் சிரித்த முகம், நடந்தால் ராஜ நடை ,பேச்சில் கனிவு கலந்த கம்பீரம் இப்படிப்பட்டவர் தான் என் ஆசிரியர்.
அவர் மாணவர்களை ஊக்குவிப்பதோ ஒரு தனி கலை என்றே கூற வேண்டும். ஒவ்வொரு மாணவனையும் பள்ளி உள்ளே மட்டுமின்றி வெளியிலும் கண்காணிப்பதில் அவரை மிஞ்ச முடியாது.
அவர் தேசிய மேல் நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய பொழுது , அவரிடம் டியுசன் படித்த மாணவர்கள் ஏராளம் ,அந்த மாணவர்களில் வசதி அற்ற மாணவர்களுக்கு இலவசமாக கற்று கொடுத்தார். பாடம் நடத்தும் பொழுது சில சிறிய கதைகளை கூறி,மாணவர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து நன்கு புரியும் வண்ணம் பாடம் நடத்துவதில் கைத்தேர்ந்தவர்.
யாருடைய மனமும் புண்படாவண்ணம் பேசுவதில் தனி திறமை என்றே சொல்ல வேண்டும். ஒரு பள்ளியை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர்.
எழுத்தாளர் தூயவன் அவருடைய நண்பர். தூயவனை பற்றி அவர் எங்களிடம் நிறைய கூறியுள்ளார். மாணவர்களை ஊக்குவிப்பதில் தனி கவனம் செலுத்துவார்.
யாரிடமும் பிரதி பலன் எதிபார்க்க மாட்டார். உதவி செய் பலனை எதிபார்க்காதே என்ற பழமொழியை பின்பற்றியுள்ளார் என்றே கூறுவேன். மற்ற பள்ளியில் படிக்கும், அவருக்கு தெரிந்த மாணவர்களையும் அழைத்து அவர்களின் படிப்பு பற்றி விசாரிப்பார்.
என் குடும்பத்தை சவுதி அரேபியா அழைத்து வர முயற்சி தொடங்கிய பொழுது,என்னுடைய மகனை தம்மாமில் உள்ள இந்தியர்களுக்கான பள்ளியில் சேர்ப்பதற்கு இந்தி தெரியாத சூழ்நிலையில் , என் மகனுக்காக அவரை அணுகி, சூழ்நிலையை விளக்கிய பொழுது,அவர் ஒரு இந்தி ஆசிரியரை அறிமுகம் செய்து வைத்து, ஒரே மாதத்தில் இந்தி உடைய பேசிக்கை கற்று கொள்ள உதவினார். எனக்கு முன்பாக அவரிடம் படித்த மாணவர்கள் எண்ணில் அடங்காது.
மற்ற மாணவர்கள் யாரும் அவரை பற்றி எழுதி உள்ளார்களா என்று தெரியாது. எனக்கு மட்டும் அல்ல அவர் என் சகோதரர்களுக்கும் ஆசிரியர். அவருடைய நல்ல எண்ணங்களுக்கும் ,செயல்களுக்கும் இறைவன் அவருக்கு நற்கூலியை கொடுப்பானாக.
22 கருத்துகள்:
அவருடைய நல்ல எண்ணங்களுக்கும் ,செயல்களுக்கும் இறைவன் அவருக்கு நற்கூலியை கொடுபானாக.//
ஆமீன்.
அவருடைய நல்ல எண்ணங்களுக்கும் ,செயல்களுக்கும் இறைவன் அவருக்கு நற்கூலியை கொடுபானாக.//
ஆமீன்.
நல்ல ஆசிரியர்
அதை ஞாபகமாய் எழுதும் நீங்களும் நல்ல மாணவர்தான்
அவருடைய நல்ல எண்ணங்களுக்கும் ,செயல்களுக்கும் இறைவன் அவருக்கு நற்கூலியை கொடுபானாக.//
ஆமீன்.
அதேபோல் உங்களைபோன்ற நல்ல மாணவர்களுக்கும் நற்கிருபை செய்வானாக..
நல்ல பகிர்வு சகோ..
//என்றும் சிரித்த முகம், நடந்தால் ராஜ நடை ,பேச்சில் கனிவு கலந்த கம்பீரம் இப்படிப்பட்டவர் தான் என் ஆசிரியர். //
கண்ணியமான ஆசிரியரைப் பற்றிய
இப்படியான இடுகையைப் படிக்கையில்
மனதிற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது.
தங்கள் விளக்கங்கள் படிக்கும்போது
கம்பீரமாய் ஓர் ஆசிரியர்போன்ற
ஓர் உருவம் கண்முன்னே தோன்றுவதுபோல்
ஒரு பிம்பம்.
நல்லா எழுதியிருக்கீங்க...
அவருடைய செயல்கள் கண்முன்னே விரிகிறது.. நல்ல விவரிப்பு.. :)
ராஜவம்சம் கூறியது...
வாங்க ராஜவம்சம், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வெறும்பய கூறியது...
வாங்க நண்பரே, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
VELU.G கூறியது...
வாங்க வேலு,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அன்புடன் மலிக்கா கூறியது...
வாங்க சகோதரி,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
NIZAMUDEEN கூறியது...
வாங்க நிஜாம்,இன்று உங்களை கைபேசியில் அழைத்தேன் தொடர்பு கொள்ள முடியவில்லை , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நாடோடி கூறியது..
வாங்க ஸ்டீபன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நல்ல பகிர்வு.நாகூர் தர்காஷ்ரீஃப் உள்ள கலீபா ஷாஹிபா?உங்கள் ஆசிரியர் வேறா?சி.தா சாஹிப்_(லேட்) தெரியுமா?நாகூர் செல்லும் வேளை அங்கு தான் தங்குவது வழக்கம்(செய்யது பள்ளி தெரு)அவரின் வளர்ப்பு மகன் பாவாசாபு பற்றி ஏதாவது தெரியுமா?
asiya omar கூறியது...
வாங்க சகோதரி, கலிபா சாஹிப் இருவரும் நிருவாக கமிட்டியில் இருக்கிறார்கள். இவர் நூல் கடை தெருவில் இருக்கின்றார். நீங்கள் கூறிய சி தா சாஹிப் பார்த்து இருப்பேன் ,சரியான பெயர் வேறு இருக்கலாம். இன்ஷா அல்லா பெருநாளைக்கு ஊர் செல்லலாம் என்று உள்ளேன் ,விசாரித்து வருகிறேன்.
தங்களது ஆசிரியரை பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
happy to know about your teacher, nice post, keep blogging
சிநேகிதன் அக்பர் கூறியது...
வாங்க அக்பர், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Krishnaveni கூறியது...
வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
இதுபோன்ற நல்ல மனமுடைய எண்ணற்ற ஆசிரியர்கள் அன்று இருந்தார்கள்.இன்றும் இருக்கிறார்கள்.ஆனால்,
எண்ணிக்கை சற்றுக் குறைவு என நினைக்கிறேன்!
உங்கள் குருபக்தி வியப்பு!
பள்ளி ஆசிரியரைப்பற்றி பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளீர்கள்.படிக்கவே பரவசமாக உள்ளது.இதனை ஒரு தொடர் பதிவாக பிற பதிவர்களை அழைத்திருக்கலாம்.
ஸாதிகா கூறியது...
வாங்க சகோதரி, இதுவும் நல்ல யோசனையாக உள்ளதே. முயற்சி செய்கிறேன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
maasha allah.. thanks for the great comments about kalifa sir.. really he is hero of entire nagore. we are all blessed bcoz we are his student once upon a time. thanks to almighty to allot those wonderful oppurtuinity. may allah bless kalifa sir and his family for more health and wealth. ameen
கருத்துரையிடுக