உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையை, சமீபத்தில் துபாய் நகரில் உள்ள, "புர்ஜ் துபாய்' என்ற கட்டடம் பெற்றுள்ளது. அதற்கு போட்டியாக, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில், மிக உயரமான ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. புர்ஜ் துபாய் கட்டடத்தை விட, உயரத்தில் இந்த ஓட்டல் 36 அடி மட்டுமே குறைவு. எனினும், இந்த ஓட்டலின் உச்சியில் வைக்கப்பட இருக்கும் கடிகாரம், உலகின் மிகப் பெரிய கடிகாரம் என்ற பெருமையைப் பெற உள்ளது.
"மெக்கா கிளாக் டவர் ராயல் ஓட்டல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டலைச் சுற்றி, ஏழு உயரமான கட்டடங்கள் உள்ளன. லண்டன் பிக்பென் கடிகாரத்தை விட 4.7 மடங்கு பெரிய கடிகாரம், இந்த கட்டடத்தின் உச்சியில் வைக்கப்பட உள்ளது. இந்த ஓட்டலின் மொத்த உயரம் 1591 அடி. மொத்தம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஓட்டல் கட்டப் பட்டுள்ளது. புனித நகரமான மெக்காவில் மிகவும் ஆடம்பர, அதிக கட்டணம் கொண்ட ஓட்டல் இதுதான். இந்த ஓட்டலில், 1005 அறைகள் உள்ளன. அதில் தங்கி இருப்பவர்கள் பயணிக்க, 76 லிப்ட்கள் உள்ளன.
இந்த ஓட்டலின் இன்னொரு பகுதியில், இரண்டு ராயல் ஓட்டல்கள், ஐந்து கோல்டன் ஓட்டல்கள் உருவாக உள்ளன. அந்த ஓட்டல்கள் மிகவும் ஆடம்பரமாக இருக்கும். அதில் உலக மகா கோடீஸ்வரர்கள், துபாய் ஷேக்குகள் மட்டுமே தங்க முடியும். அந்த ஓட்டல் அறைகள், கிட்டத்தட்ட அரண்மனை போல இருக்கும் என, இந்த ஓட்டல்களை நிர்வகிக்க இருக்கும் உலகப் பிரசித்தி பெற்ற, "பெயர்மன்ட்' ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மாதம் ஓட்டல் திறக்கப் பட உள்ளது. ஜூலை மாதம் முதல், இந்த ஓட்டலின் உச்சியில் உள்ள கடிகாரம் இயங்கத் துவங்கும். ஜெர்மனி யில் தயாராகும் இந்த கடிகாரம் 147 அடி அகலம், 141 அடி உயரம் கொண்டது. கட்டடத்தின் நான்கு பக்கங்களிலும், இந்த கடிகாரம் இருக்கும். "ஹஜ்' நேரத்தில் மட்டும் மெக்காவிற்கு 40 லட்சம் பேர் வருகின்றனர்; மற்ற மாதங்களில் பல லட்சம் பேர் வருகின்றனர். எனவே, இந்த ஓட்டலுக்கு, எப்போதும் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெயிலில் வந்த செய்தி உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
21 கருத்துகள்:
நல்ல தகவல்.வாட்ச் பிரம்மாண்டம்
நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றி...
அருமையான பகிர்வு நண்பரே!!
வியப்பு ஊட்டும் செய்தி! சுவையான
தகவல்களுடன் தந்துள்ளீர்கள்!
அறிந்துகொள்ளவேண்டிய,
பயனுள்ள இடுகை.
பயனுள்ள தகவல் தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான புகைப்படங்கள்.சூப்பர்.
அறிய வேண்டிய செய்தி... புகைப்படங்கள் நல்லா இருக்கு.. பகிர்விற்கு நன்றி நண்பரே.
//இந்த மாதம் ஓட்டல் திறக்கப் பட உள்ளது. ஜூலை மாதம் முதல், இந்த ஓட்டலின் உச்சியில் உள்ள கடிகாரம் இயங்கத் துவங்கும்//
புரியலையே பாஸ். அப்ப இப்ப அது இயங்கிக் கொண்டு இருக்கா..????
படங்கள் சூப்பர்...
நல்ல பதிவு
//இந்த மாதம் ஓட்டல் திறக்கப் பட உள்ளது. ஜூலை மாதம் முதல், இந்த ஓட்டலின் உச்சியில் உள்ள கடிகாரம் இயங்கத் துவங்கும்//
இதற்குத் தான் அர்ததம் புரியவில்லை.. ரம்ஜான் மாதத்தில் என்று இருக்க வேண்டுமோ?
சி.பி.செந்தில்குமார் கூறியது...
வாங்க சி பி செந்தில் குமார், உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.
வெறும்பய கூறியது...
வாங்க வெறும்பய, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
எம் அப்துல் காதர் கூறியது...
வாங்க பாஸ், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
NIZAMUDEEN கூறியது...
வாங்க நிஜாம், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
abul bazar/அபுல் பசர் கூறியது...
வாங்க சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
asiya omar கூறியது...
வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நாடோடி கூறியது...
வாங்க ஸ்டீபன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ஜெய்லானி கூறியது...
வாங்க பாஸ், நீங்க கேட்டவுடன் எனக்கு தெரிந்த நண்பர்களை தொடர்புகொண்டு விசாரித்ததில் கெடிகார பனி முடிவடைய சிறிது தாமதம் எடுப்பதால், அவ்வாறு அறிவிப்பு என்று சொன்னார்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அ.வெற்றிவேல் கூறியது...
வாங்க சார், உங்கள் கணிப்பு சரியானது,ரம்ஜான் மாதத்தில் மக்கள் வரவு அதிகமாக உள்ளதால், கட்டிட பணி
நிறைவு பெற பெற திறந்து விட்டு கொண்டே உள்ளார்கள். கடிகார பணி முழுமையாக நிறைவு பெறாததால் ,அந்த அறிவிப்பு என்று நான் விசாரித்த வரை கிடைத்த தகவல். இந்த மொத்த கட்டிடத்தின் வருமானமும், மக்காவின் அந்த(ஹரம்) பள்ளியை நிர்வகிப்பதற்கு மட்டுமே பயன் படுத்த பட உள்ளது.
நல்ல தகவல் பகிர்வு.
ஒரு விசிட் அடிக்கலாமா தலைவரே..
செ.சரவணக்குமார் கூறியது
வாங்க சரவணகுமார், நான் ரெடி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
மணிக்கூடு இப்பபோது வேலைசெய்ய ஆரம்பித்து விட்டது.
கருத்துரையிடுக