நம் மக்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகின்றனர்.
அதனால் ஏற்படும் விளைவுகளை காண்போம்.
இன்றைக்கு உலகத்தில் எந்த ஒரு புதிய வரவாக இருந்தாலும் (கார் எலக்ட்ரானிக் பொருள்கள் நவீன கட்டிடகலை) அது முதலில் வளைகுடாவின் சந்தையில் தான் இறக்கபடுகிறது.
கட்டிடகலை
நம் பகுதிகளில் இன்றைக்கு ஓடுகளில் உள்ள வீடுகளை பார்பதற்கு மிக அரிதாக உள்ளது. நம் முன்னோர்களால் கட்டப்பட்ட அந்த வீடுகள் நான்கு புறமும் தாழ்வாரம் நடுவில் முற்றம் வைத்து கட்டபட்டிருக்கும், நன்கு காற்றோட்டமாக இயற்கை காற்று உள் வரும் வண்ணம் அமைந்து இருக்கும். இன்றோ , எங்கு திரும்பினாலும் காங்க்ரிட் வீடுகள். சுவாசிக்கும் காற்று வெளியில் போகாமலும் வெளி காற்று உள் வராமலும் ,அமைந்து உள்ளது. தரையில் போடப்படும் டைல்ஸ் வகைகளால் ,கால்களில் வலி ஏற்படுகிறது. அமர்ந்து சமையல் செய்த காலம் போய், நின்று கொண்டு சமையல் செய்கிறார்கள். அதிக நேரம் நின்று கொண்டு சமையல் செய்வதால் ,கால் களில் நரம்பு சுருட்டு நோய் ஏற்படுகிறது. இயற்கையான காற்று உள்வராததால் குழந்தைளுக்கு சளி தொல்லை அதிகமாக ஏற்படுகிறது.
கார் , மோட்டர் சைக்கிள்
கார் கம்பெனிகள் இன்று போட்டி போட்டு கொண்டு தயாரிக்கும் கார் களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. மோட்டார் சைக்கிள் நிறுவனமோ ஒரு படி மேல் அதி விரைவு மோட்டார் சைக்கிள்களை தயாரித்து, இன்றைய இளைய தலைமுறையின் வாழ்க்கையில் விளையாடுகின்றது.
கைபேசி
இதை இன்று உபயோகிக்காத ஆட்கள் இல்லை என்றே சொல்லலாம். மக்களின் வாழ்க்கையில் சிறிது நேரம் கைபேசி இல்லையென்றல், அப்பப்பா என்ன புலப்பங்கள் . இன்று இதை அதிகம் உபயோகிபவர்களுக்கு செவிகளில் கேட்கும் திறன் பாதிக்கபடுகிறது.
ஓவன்
உணவு பொருள்களை இவற்றில் எளிதில் சூடுபடுத்த பயன்படுகிறது. ஆனால் இவற்றில் சூடுபடுத்துவதால் கேன்சர் போன்ற வியாதிகள் வர வாய்ப்புக்கள் அதிகம் என்று கூறுகிறார்கள்.
சிப்ஸ்
எந்த குழந்தையின் கையில் பார்த்தாலும் சிப்ஸ் பாக்கெட் . இவற்றால் குழந்தைகளுக்கு சிறு நீர் கழிப்பதில் தொந்தரவு ஏற்பட்டு ,உயிருக்கு ஆபத்து விளைவிக்கின்றது.
இப்படியே கூறி கொண்டே போகலாம்.
இவைகளை தடுக்க முடியுமா ? என்ற கேள்வி உங்களுக்கு ஏற்படலாம்.
கஷ்டமான ஓன்று தான்.
இந்த இடுக்கையின் மூலம் சிலர் சிந்தித்தாலும் ,நான் பெரும் மகிழ்ச்சி அடைவேன்.
14 கருத்துகள்:
பயனுள்ள பதிவு சார்.
சொல்ல வரும் செய்தியை தெளிவான நடையில் விவரிக்கிறீர்கள். மிக அருமை.
தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
செ.சரவணக்குமார் கூறியது...
மிக்க நன்றி செ சரவணகுமார்.
கட்டிட கலையில் ஏற்படும் அசௌ கர்யங்களை சொல்லி, மோட்டார் சைக்கிள் தயாரிப்பவர்களை எட்டி உதைத்து விட்டு, எலெக்ட்ரானிக் துறையிலும் அருவாளை வீசிட்டீங்களா..அப்ப நீங்க உண்மையான தூயவன் தான்.
சகோ,இளம் தூயவன் நல்ல இடுகை.பாராட்டுக்கள்.
எம் அப்துல் காதர் கூறியது
கட்டிட கலையில் ஏற்படும் அசௌ கர்யங்களை சொல்லி, மோட்டார் சைக்கிள் தயாரிப்பவர்களை எட்டி உதைத்து விட்டு, எலெக்ட்ரானிக் துறையிலும் அருவாளை வீசிட்டீங்களா..அப்ப நீங்க உண்மையான தூயவன் தான்.
என்னை ப்ளாக்ஸ்பாட் பக்கம் அழைத்து வந்து , என்னை எழுத தூண்டியதே நீங்கள் தான் ,உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.
asiya omar கூறியது...
சகோ,இளம் தூயவன் நல்ல இடுகை.பாராட்டுக்கள்
மிக்க மகிழ்ச்சி சகோதரி, உங்களை போன்றவர்கள் ஊக்குவிப்பதால் தான், என்னை போன்றவர்களுக்கு எழுத ஆர்வம் ஏற்படுகின்றது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் பகிர்வுக்கு நன்றி !
உங்கள் முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி.
நல்ல பதிவு.. வருக வெல்க...
அஹமது இர்ஷாத்
உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
நல்ல பயனுள்ள பதிவு.பகிர்தலுக்கு நன்றி.
ஸாதிகா கூறியது...
சகோதரி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Thanks for stopping by and your comment in my blog. interesting information.... Happy blogging
Thanks lot sister.
கருத்துரையிடுக